-
Topics
-
Posts
-
தி ஹேக்: ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனப் படுகொலை செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசின் ஆலோசகரான ஆன் சான் சூகி நேரில் ஆஜராகியுள்ளார். மியான்மரில் வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக அறிவித்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். அதைத் தவிர 7.40 லட்சம் பேர் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டதாக மியான்மர் மீது புகார் கூறப்பட்டது. ஐ.நா. குழுவும் 'இது இனப் படுகொலை' என அறிவித்தது. ஆப்பிரிக்க நாடான காம்பியா இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மியான்மர் சார்பில் வாதிட அரசின் ஆலோசகரான ஆன் சான் சூகி நேரில் ஆஜராகி உள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சூகி மனித உரிமைக்காக போராடியவர் என்ற பெருமையை பெற்றிருந்தார். ரோஹிங்கா முஸ்லிம்கள் விவகாரத்தில் அவர் அமைதி காப்பதுடன் அதற்கு ஆதரவாக இருப்பதால் சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த வழக்கில் காம்பியா தரப்பில் வாதங்கள் துவங்கியுள்ளன. சூகி இன்று தன் வாதத்தை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2431297
-
தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட கோனாம்பேடு பகுதியில் ஏராளமான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தற்போது ஓரளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் இப்பகுதியில் உள்ள குளங்களில் சிலர் சட்டவிரோதமாக டேங்கர் லாரிகள் கொண்டு தண்ணீரை திருடி அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கான நீராதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதையடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளன. எனவே கோனாம்பேடு பகுதிகளில் உள்ள குளங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்கவும், ஆக்கிர மிப்புக்களை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு அந்த கிராம பொது நல சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்பு வந்த போது, தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாகவும், தண்ணீரை தேக்கி வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், தற்போது விழித்து கொள்ளவில்லை என்றால் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547836
-
மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி என்றார் பாரதி... சுதந்திர தாகம், மானுட உயர்வு, கண்ணம்மாவிடம் காதல்... என உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை அள்ளித் தெளித்தவர் அந்த முண்டாசுக்கவி. தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக விஸ்வரூபமெடுத்த பாரதி, வாழ்க நீ எம்மான் என்று காந்தியைப் போற்றிய தமது பேனாவால், வெள்ளையர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து கவிதைகள் படைத்தார்.பாஞ்சாலி சபதத்தையும் தேசிய விடுதலை கீதமாக பாடியது பாரதியின் தனிச்சிறப்பு. பாரதி ஒரு ஆன்மீகக் கவியாக பலருக்குத் தெரியலாம். கண்ணன் பாடல்கள் அதற்கு ஒரு காரணம். கண்ணனை குழந்தையாக, தாயாக, சேவகனாக, நண்பனாக, வழிகாட்டியாக நினைத்து பாடல்கள் புனைந்தவர் பாரதியார். பாரதி ஒரு தீர்க்கதரிசி... அதனால்தான் சுதந்திரத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்தி முழங்கினார்.. தமிழ் இலக்கியத்திற்கு புதுக்கவிதை, ஹைகூ, சிறுகதை என நவீன வடிவம் கொடுத்தவரும் பாரதிதான்....சங்க கால புலவர்கள் பிடியில் இருந்த புரியாத தமிழை, மக்களுக்கான எளிய தமிழாக மாற்றிய சுடர் மிகும் அறிஞராக பாரதி திகழ்ந்தார்.. பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மீனவர் பிரச்சினை, இலங்கை மலையகத் தமிழர் துன்பங்கள், இதழியல், கேலிச்சித்திரம் என தமது காலத்திற்கு முன்னே சென்று சிந்தித்த பாரதி இன்றும் தமிழக மக்களுக்கு ஒரு அழியா சொத்துதான். இளம் வயதிலேயே காலமான போதும் காலா வா உன்னைக் காலால் மிதிக்கிறேன் என்ற பாரதியின் கவிதை வரிகள் மரணத்தை வென்று இன்றும் உயிர்த்திருக்கிறது. https://www.polimernews.com/dnews/92299/மகாகவி-பாரதிக்கு-இன்று-138வதுபிறந்தநாள்..!
-
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்படவில்லை - அரசாங்கம், அரச சார்பு ஊடகங்கள் ஊடகங்கள் மூலம் முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதுடன், அவரது வீட்டை சுற்றி வளைத்து முற்றுகையிட்டும் அருவருப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த போதிலும், பாதிக்கப்பட்டவரும் அவரது சுவிஸ் தூதரகமும் சதித்திட்டம் தீட்டுவதாக செய்தி வெளியிட்டு அரசாங்கத்தின் தேவையை சில முக்கிய ஊடகங்கள் பூர்த்தி செய்கின்றன. அவர் கொழும்பில் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டு, சிஐடியின் அதிகாரியான நிஷாந்தா சில்வா தனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கு எப்படிச் சென்றார் என்று கேள்வி எழுப்பினார். ராஜபக்ஷ ஆட்சியின் கடத்தல்கள், காணாமல் போனவர்கள், படுகொலைகள் மற்றும் பிற பழிவாங்கல்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய நிலைமைக்கு பயந்து அந்த அதிகாரி தப்பி ஓடிவிட்டார் என்பது தெளிவாகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றாலும், சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட சம்பவமானது; சிஐடி அதிகாரியின் அச்சங்கள் நியாயமானது என்பதை வெளிப்படுத்துகிறது. தூதரக ஊழியரை வெள்ளை வானில் கடத்தியமைக்கு வெளியுறவு அமைச்சகம் பொறுப்பேற்க வேண்டும் என்று சுவிஸ் வெளியுறவுத்துறை செயலர் பாஸ்கல் பிரிஸ்வில்லி கூறுகிறார் https://poovaraasu.blogspot.com/2019/12/blog-post_74.html?fbclid=IwAR3X0DIeLm-QlqQyK4a0aXrH4hU-QKh84ZcfNsht7VPH_HthOgyeFnEyn3g
-
இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். http://valampurii.lk/valampurii/content.php?id=20105&ctype=news
-