• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
கிருபன்

``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்!"... வெளியானது `பிளாக் ஹோல்'-ன் முதல் புகைப்படம்!

Recommended Posts

4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் அந்தக் கதையின் ஆரம்பத்துக்கு ஆண்டுக்கு கணக்கைக் கிட்டத்தட்டவாவது போட்டுக்கொள்ளலாம்

யுவால் நோவா ஹராரி எழுதிய “சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு” எனும் புத்தகத்தை வாங்கிப்படியுங்கள் அல்லது கிண்டிலில் தரவிறக்கிப் படியுங்கள். பல திறப்புக்கள் கிடைக்கும்😀

 

வரலாற்றின் வரலாறு

 • 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் பருப்பொருளும் ஆற்றலும் தோன்றுகின்றன. இயற்பியல் பிறக்கிறது. அணுக்களும் மூலக்கூறுகளும் தோன்றுகின்றன. வேதியியல் பிறக்கிறது.
 • 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவாகிறது.
 • 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோன்றுகின்றன. உயிரியல் பிறக்கிறது.
 • 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றுகின்றனர்.
 • 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஹோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கற்கருவிகள் உருவாக்கப்படுகின்றன.
 • 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினம் ஆப்பிரிக்காவிலிருந்து யுரேசியாவிற்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் உருவாகின்றன.
 • 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நியான்டர்தால் இனத்தினர் ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் தோன்றுகின்றனர்.
 • 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நெருப்பின் அன்றாடப் பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது.
 • 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது.
 • 70,000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவுப் புரட்சி மலர்கிறது. மொழி கண்டுபிடிக்கப்படுகிறது. வரலாறு உதயமாகிறது. ஹோமோ சேப்பியன்ஸ் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரவுகின்றனர்.
 • 45,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் ஆஸ்திரேலியாவில் குடியேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன.
 • 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியான்டர்தால் இனத்தினர் பூண்டோடு அழிகின்றனர்.
 • 16,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் அமெரிக்காவில் குடியேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன.
 • 13,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ ஃபுளோரெசியென்சிஸ் என்ற இன்னொரு மனித இனம் பூண்டோடு அழிகிறது. மனித இனங்களில் ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டுமே எஞ்சி இருக்கிறது.
 • 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் புரட்சி மலருகிறது. உணவுக்காகத் தாவரங்கள் பயிரிடப்படுகின்றன. விலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டு வீடுகளிலும் வயல்களிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன. நிரந்தரக் குடியேற்றம் தொடங்குகிறது.
 • 5,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மன்னராட்சி, பேச்சு மொழியின் எழுத்து வடிவம், பணம் ஆகியவை தோன்றுகின்றன. ‘பல கடவுளர்’ கோட்பாட்டை உள்ளடக்கிய மதங்கள் தலைதூக்குகின்றன.
 • 4,250 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் முதல் பேரரசரான சார்கானின் அக்கேடியப் பேரரசு உதயமாகிறது.
 • 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. உலகளாவிய பணம் பிறப்பெடுக்கிறது. ‘மனிதகுல நன்மைக்கான’ உலகளாவிய அரசியலமைப்பு என்ற பிரகடனத்துடன் பாரசீகப் பேரரசு முளைக்கிறது. ‘அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்கும்’ நோக்கத்துடன் இந்தியாவில் புத்தமதம் தோற்றுவிக்கப்படுகிறது.
 • 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஹான் பேரரசும், மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோமானியப் பேரரசும் தோன்றுகின்றன. கிறித்தவ மதம் தோற்றுவிக்கப்படுகிறது.
 • 1,400 ஆண்டுகளுக்கு முன்புஇஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுகிறது.
 • 500 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் புரட்சி மலருகிறது. மனிதகுலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றத் தொடங்குகிறது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கின்றனர், பெருங்கடல்களை வெற்றி கொள்ளத் தொடங்குகின்றனர். ஒன்றிணைந்த வரலாற்றுக் களமாக உலகம் மாறுகிறது. முதலாளித்துவம் தலைதூக்குகிறது.
 • 200 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்புரட்சி வெடிக்கிறது. குடும்பமும் சமூகமும் புறக்கணிக்கப்பட்டு, நாடும் சந்தையும் அவற்றின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன. தாவரங்களும் விலங்குகளும் பெரும் எண்ணிக்கையில் பூண்டோடு அழிகின்றன.
 • தற்போது பூமி என்ற கோளின் எல்லையை மனிதர்கள் கடக்கின்றனர். அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் இருத்தலை அச்சுறுத்துகின்றன. இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையால் அன்றி நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உயிரினங்கள் உருவாவது அதிகரிக்கிறது.
 • எதிர்காலத்தில் நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உருவாக்கப்படும் படைப்புகள் வாழ்வின் அடிப்படைக் கோட்பாடாக மாறப் போகின்றன. ஹோமோ சேப்பியன்ஸின் இடத்தை அதிமனிதர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப் போகின்றனர்.
 •  
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கோடிகளின்  கணக்குகளெல்லாம் யாரால் நிறுவப்பட்டன??? இலங்கையில் தமிழினத்தின் வரலாற்றையே ஒவ்வொரு ஆய்வாளர்களும் ஒவ்வொன்றாக எழுதுகின்றனர்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தக் கோடிகளின்  கணக்குகளெல்லாம் யாரால் நிறுவப்பட்டன??? இலங்கையில் தமிழினத்தின் வரலாற்றையே ஒவ்வொரு ஆய்வாளர்களும் ஒவ்வொன்றாக எழுதுகின்றனர்.

கிருபன் சொன்ன போது நான் நம்பவில்லை! இப்ப புரிகிறது, நிச்சயமாக வெட்டி வேலை தான்! 😁

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, tulpen said:

55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள கருந்துளையை துல்லியமாக படம் பிடித்தான் ஒருவன்.  சனிக்கிரகம் தன்னைப்பிடித்துவிடும் என்ற பயத்தில் இப்போதும்  எண்ணெய் எரித்துக்கொண்டிருக்கிறான் இன்னொருவன்.

நிலாவில் இறங்கி  என்ன நன்மையை பூமிக்கு பகிர்ந்தீர்கள்?
பார்க்க முடியாத அந்த கறுப்பு வளையத்தை கண்டு பிடித்து பூமிக்கு என்ன செய்யப்போகின்றீர்கள்?

இருக்கும் பூமியில்.....
சக இனத்திற்கு தன் உரிமையை பகிர்ந்தளிக்க முடியாத இனம்.
வறுமையால் வாடும் மக்களுக்கு உணவளிக்க மறுக்கும் பணக்கார உலகம்.
ஒரு துளி தண்ணீருக்காக அவலப்படும் மக்கள்.
மழை தரும் காடுகளை அழித்து பூமியை வரட்சியாக்கும் உலகம்.
உடலுக்கு கெடுதல் தரும் அன்றாட உபயோக பொருட்களை தயாரிக்கும் மனிதா?????
அந்த கருவருவளையத்தை கண்டு பிரமிப்பதேன்?
 

Share this post


Link to post
Share on other sites

பிரியா7, உங்கள் கருத்து அனேகமாக அகற்றப் பட்டு விடும் என நினைக்கிறேன்! ஆனால், மற்றவர்களுக்கு உங்கள் முட்டாள்தனம் தொற்றி விடாமல் இருக்க பதில் தருகிறேன்: இந்தப் பேப்பருக்கு 50 இற்கு மேற்பட்ட எழுத்தாளர்கள், ஏனெனில் இது பல குழுக்களின் கூட்டு முயற்சி. அந்த ஐம்பது பேரில் சிலர் இந்தியர்கள்! அவர்கள் தமிழ் நாட்டில் தான் இருக்க வேண்டுமென்றில்லை, இந்தியர்கள் விஞ்ஞானிகளாக உலகம் பூராவும் பணி செய்வது வெகு சாதாரணமான விடயம்! நுனிப் புல் மேயாமல் ஒரு தடவை போய் வாசித்து விளங்கி விட்டு எழுதுங்கள்: உலகின் எட்டு இடங்களில் இருந்து எடுக்கப் பட்ட அளவீடுகளின் அடிப்படையில் ஒரு அல்கோரிதம் பயன் படுத்தி அமைக்கப் பட்ட படம் இது, உங்கள் ஸ்மார்ட் போனில் எடுக்கப் பட்ட செல்fபி அல்ல! நீங்கள் சொன்ன இன்ரர்னெற்றை விடப் பழைய படங்கள் உங்கள் போன்ற அரைவேக்காடுகள் சூரிய கிரகணத்தை போட்டோ எடுத்து இணையத்தில் போட்டிருக்கும் படங்கள் மட்டுமே! 

https://iopscience-event-horizon.s3.amazonaws.com/article/10.3847/2041-8213/ab0ec7/The_Event_Horizon_Telescope_Collaboration_2019_ApJL_875_L1.pdf 

Share this post


Link to post
Share on other sites

 

 

Quote

 

வரலாற்றின் வரலாறு

 • 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் பருப்பொருளும் ஆற்றலும் தோன்றுகின்றன. இயற்பியல் பிறக்கிறது. அணுக்களும் மூலக்கூறுகளும் தோன்றுகின்றன. வேதியியல் பிறக்கிறது.
 • 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவாகிறது.
 • 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோன்றுகின்றன. உயிரியல் பிறக்கிறது.
 • 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றுகின்றனர்.
 • 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஹோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கற்கருவிகள் உருவாக்கப்படுகின்றன.
 • 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினம் ஆப்பிரிக்காவிலிருந்து யுரேசியாவிற்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் உருவாகின்றன.
 • 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நியான்டர்தால் இனத்தினர் ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் தோன்றுகின்றனர்.
 • 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நெருப்பின் அன்றாடப் பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது.
 • 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது.
 • 70,000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவுப் புரட்சி மலர்கிறது. மொழி கண்டுபிடிக்கப்படுகிறது. வரலாறு உதயமாகிறது. ஹோமோ சேப்பியன்ஸ் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரவுகின்றனர்.
 • 45,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் ஆஸ்திரேலியாவில் குடியேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன.
 • 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியான்டர்தால் இனத்தினர் பூண்டோடு அழிகின்றனர்.
 • 16,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் அமெரிக்காவில் குடியேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன.
 • 13,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ ஃபுளோரெசியென்சிஸ் என்ற இன்னொரு மனித இனம் பூண்டோடு அழிகிறது. மனித இனங்களில் ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டுமே எஞ்சி இருக்கிறது.
 • 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் புரட்சி மலருகிறது. உணவுக்காகத் தாவரங்கள் பயிரிடப்படுகின்றன. விலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டு வீடுகளிலும் வயல்களிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன. நிரந்தரக் குடியேற்றம் தொடங்குகிறது.
 • 5,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மன்னராட்சி, பேச்சு மொழியின் எழுத்து வடிவம், பணம் ஆகியவை தோன்றுகின்றன. ‘பல கடவுளர்’ கோட்பாட்டை உள்ளடக்கிய மதங்கள் தலைதூக்குகின்றன.
 • 4,250 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் முதல் பேரரசரான சார்கானின் அக்கேடியப் பேரரசு உதயமாகிறது.
 • 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. உலகளாவிய பணம் பிறப்பெடுக்கிறது. ‘மனிதகுல நன்மைக்கான’ உலகளாவிய அரசியலமைப்பு என்ற பிரகடனத்துடன் பாரசீகப் பேரரசு முளைக்கிறது. ‘அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்கும்’ நோக்கத்துடன் இந்தியாவில் புத்தமதம் தோற்றுவிக்கப்படுகிறது.
 • 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஹான் பேரரசும், மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோமானியப் பேரரசும் தோன்றுகின்றன. கிறித்தவ மதம் தோற்றுவிக்கப்படுகிறது.
 • 1,400 ஆண்டுகளுக்கு முன்புஇஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுகிறது.
 • 500 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் புரட்சி மலருகிறது. மனிதகுலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றத் தொடங்குகிறது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கின்றனர், பெருங்கடல்களை வெற்றி கொள்ளத் தொடங்குகின்றனர். ஒன்றிணைந்த வரலாற்றுக் களமாக உலகம் மாறுகிறது. முதலாளித்துவம் தலைதூக்குகிறது.
 • 200 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்புரட்சி வெடிக்கிறது. குடும்பமும் சமூகமும் புறக்கணிக்கப்பட்டு, நாடும் சந்தையும் அவற்றின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன. தாவரங்களும் விலங்குகளும் பெரும் எண்ணிக்கையில் பூண்டோடு அழிகின்றன.
 • தற்போது பூமி என்ற கோளின் எல்லையை மனிதர்கள் கடக்கின்றனர். அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் இருத்தலை அச்சுறுத்துகின்றன. இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையால் அன்றி நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உயிரினங்கள் உருவாவது அதிகரிக்கிறது.
 • எதிர்காலத்தில் நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உருவாக்கப்படும் படைப்புகள் வாழ்வின் அடிப்படைக் கோட்பாடாக மாறப் போகின்றன. ஹோமோ சேப்பியன்ஸின் இடத்தை அதிமனிதர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப் போகின்றனர்.

 

 

கண்ணுக்கு முன்னாலை நடந்ததுக்கே சாட்சி கேக்கிற விண்ணான உலகத்திலை..........

பல்லாயிரம் வருசத்துக்கு முன்னாலை நடந்ததையெல்லாம் கண்ணாலை பாத்த மாதிரியே சொல்லுதுகள் உந்த அகண்ட அகழ் ஆராச்சி அறிவாளிகள்.:24_stuck_out_tongue:

 •  

Share this post


Link to post
Share on other sites

இவையும் நிலவுக்கு போய் படம் எடுக்கப்போயினமாம்....
1....2....3......ரெடி......ஆக்ஸன்...😊

D35bp_RX4AArMfJ.jpg

😃......:grin:....

Share this post


Link to post
Share on other sites

சுவாரசியமான    பின்னூட்டங்கள்        போய்க்கொண்டிருக்கின்றன 
கரும்  துளை  பற்றி   படித்தவர்  ஐன்ஸ்டீன்  100 வருடங்களுக்கு  முன்னர்   இப்போதைய  நவீன  கருவிகளின்  துணை  ( அபோது  ஒரு  மொபைல்  போன்  கூட  இருக்கவில்லை ) இல்லாமலேயே  வெறும்  கணித  மாதிரிகளின்  அடிப்படையில்  பிரேரித்திருந்தார்  .
அவர்    அந்த  நேரம்    பிரேரித்திருந்த  படியே    தற்போதைய  கண்டுபிடிப்பின்  உறுதிப்பாடு   அமைத்திருப்பது   கவனத்தில்  கொள்ளக்  கூடியது .
திண்ணை  வாசிகள்   இடைக்கிடை  திண்ணையை  விட்டு  வெளியேயும்    வந்து   ஊர்  உலகத்தில  என்ன  நடக்குது  என்று  ஒரு  அலசல்  செய்து  விட்டு  பின்னூட்டம்    விடலாமே  . போகும்  போக்கில்  பின்னூட்டங்களை  தவிர்ப்பது  திண்ணையின்  தரத்தை  மேம்படுத்த  உதவக்  கூடும்  என்பது  எனது  பணிவான  அபிப்பிராயம் 
பால்ய  நண்பன்  ராஜ் சிவா, எழுத்தாளர்  சுஜாதாவிற்கு  அடுத்தபடியாக   விஞ்ஞான      விடயங்களை      எல்லோரும்  புரிந்து  கொள்ளக்  கூடிய  மாதிரி  எழுதிக்  கொண்டு  வரும்  பிரபல எழுத்தாளர்  .  தமிழ்  நாட்டில்  அவரின்  நூல்கள்  பல  பிரசுரம்  ஆகியிருக்கின்றன  ( நிலவுக்குப்  போனவன் , இறந்த  பின்பும்  இருக்கின்றோமா  etc )
அவர்  நேற்று    இந்த  விடயம்  பற்றி  பதிவிட்டுருந்ததை   இங்கே   இணைத்து  விடுகிறேன்  ( அவரின்  அனுமதி  இல்லாமலே  – அவரிடம்  பின்பு   சொல்லிக்  கொள்வேன் )
…   சாமான்யன் 

************************************************************************************
நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும், ஐன்ஸ்டைனும்

 

 


உங்களால் இதை நம்ப முடிகிறதா? உங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பா அதாவது உங்கள் பூட்டன், தன் இளமைக் காலத்தில், அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சொன்னால், அது எவ்வளவு பழமையானதாக உங்களுக்குத் தோன்றும். இன்றைய உலகின் அனைத்து நவீனக் கருவிகளையும் கைக்கொண்டிருக்கும் நீங்கள், இயற்கையை மட்டுமே துணையாகக் கொண்டிருந்த, அந்தப் பூட்டனின் சாதனையை ஒரு ஏளனச் சிரிப்புடனே பார்ப்பீர்கள். அவரிடம் என்ன இருந்திருக்கும்? கணணி இல்லை. மொபைல் போன் இல்லை. எதுவுமே இல்லை. இருந்ததெல்லாம் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமே! அந்தக் காலத்தைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்? அப்படியான ஒரு காலத்தில், கிட்டத்தட்ட நூற்றி நான்கு வருடத்திற்கு முன்னர், 1915ம் ஆண்டு அல்பேர்ட் ஐன்ஸ்டைன் என்னும் ஒருவர், வெறும் கணிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, விண்வெளிபற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். அப்போது, அவரிடம் கணணி இருக்கவில்லை. கால்குலேட்டர் இருக்கவில்லை தொலைக்காட்சியும் இருக்கவில்லை. இன்றுபோல உடனுக்குடன் சொல்லிவிடக்கூடிய மீடியாக்களும் இல்லை. தன் மூளையில் விண்வெளிபற்றிய எண்ணங்களைப் படமாகச் சித்தரித்துக் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அந்தக் கோட்ப்பாடு உருவாக்கினார். விண்வெளியிலிருக்கும் அதி எடைகொண்ட பொருளானது அந்த விண்வெளியில் ஒரு குழியை உருவாக்கும் என்றார். அதுவே, எல்லையில்லா எடைகொண்டு அந்தப் பொருள் இருந்துவிட்டால், ஏற்படும் குழியானது, ஒருமைப் புள்ளியொன்றை அடையும் வரை ஆழமாகிச் செல்லும். அந்தக் குளியிலிருந்து ஒளிகூடத் தப்பிச்செல்ல முடியாது என்றார்.

இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழியை நாம் உருவாக்க வேண்டுமென்றால், எங்கே உருவாக்க முடியும்? பூமியின் மண் தரையில் ஒரு குழியை உருவாக்க முடியும். எந்தவொரு திடமான பொருளிலும், ஏதோவொரு விதத்தில் நம்மால் குழியை உருவாக்கிவிட முடியும். கடல் நீரில் ஒரு குழியை உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? அதைக உங்களால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. ஆனால், ஒரு கப்பலைக் கடலில் விடும்போது, அது நிற்குமிடத்தில், அதன் எடைக்கேற்ப தண்ணீர் குழிகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். தண்ணீரில் நம்மால் குழியை உருவாக்க முடியுமா? முடியுமென்றுதானே தோன்றுகிறது. கப்பல்களின் எடை அதிகரிப்புக்கு ஏற்ப அது ஏற்படுத்தும் குழியும் ஆழமாக இருக்கும். இதே அடிப்படையில், விண்வெளியிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார். இப்படி அவர் சொன்னதை எவராலும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாம் பார்ப்பது வானம். வானத்தில் நட்சத்திரங்கள். அப்படி இப்படியென்று நினைத்துக் கொண்டிருக்கையில், அங்கே வானம் என்ற ஒன்று இல்லை. இருப்பது, இரப்பர் பாய்போன்ற ஒன்றுதான். அந்தப் பாயிலேயே, நட்சத்திரம் போன்றவை இருக்கின்றன. அவை, அந்தப் பாயில் பெருங்குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார். “என்ன, விண்வெளியில் குழியா? அது எப்படிச் சாத்தியம்? பூமியில் குழி இருப்பது சரி. ஏன் கடலில் கப்பல் குழி ஏற்படுத்துகிறது என்பதும் சரிதான். ஆனால், விண்வெளியில் குழியை எப்படி ஏற்படுத்த முடியும்? இவரென்ன இரப்பர் பாய், மென் சவ்வு, அது இது என்று சொல்கிறாரே! எந்தப் பாயையும் நாம் காணவில்லையே!” என்று சொல்லி திகைத்து நின்றது உலகம். அத்துடன் ஐன்ஸ்டைன் சொன்ன இன்னொன்றையும் கேட்டு அறிவியல் உலகமே பதைத்துப் போனது. 350 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கொண்டிருந்த ஒன்றை இல்லையென்று சொல்கிறாரே இவர் என்று தடுமாறியது.

1680ம் ஆண்டளவுகளில், ஐசாக் நியூட்டனால் புவியீர்ப்புவிசைக்கான புரட்சிகரக் கருதுகோள் வெளியிடப்பட்டது. அந்தக் கருதுகோளையே மாற்றிச் சொன்னார் ஐன்ஸ்டைன். ஐசாக் நியூட்டன் சொல்லியிருந்த புவியீர்ப்புவிசைபற்றிய கோட்பாட்டையே நம்பிவந்தவர்களுக்கு, ஐன்ஸ்டைன் தடைக்கல் போட்டார். மேலே சொன்னதுபோல, அதி எடைகொண்ட ஒவ்வொரு பொருளும் விண்வெளியில் ஏற்படுத்தும் குழிவே, அப்பொருளை நோக்கிய ஈர்ப்பை உருவாக்குகிறது என்றார். உதாரணமாகப் பூமியானது, விண்வெளியில் ஏற்படுத்தியிருக்கும் குழிவின் வளைவுக்குள் அகப்பட்டுக்கொண்ட சந்திரன், அந்தக் குழியினுள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுவே பூமிக்கும், சந்திரனுக்குமான ஈர்ப்புக்கான காரணம். இதுபோலவே, சூரியன் ஏற்படுத்தியிருக்கும் பெருங்குழியில், பூமி உட்பட ஏனைய ஏழு கோள்களும் அகப்பட்டபடி சூரியனைச் சுற்றுகின்றன. நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கொள்கைக்கு மாற்றாக ஐன்ஸ்டைன் முன்வைத்ததை, ஏற்க முடியாமலும், விலக்க முடியாமலும் தவித்தது உலகம். காலம் செல்லச் செல்ல ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புக் கோட்பாடு சரியெனப் புரிந்துகொண்டது உலகம். அதன் நீட்சியாக ஐன்ஸ்டைன் சொல்லியிருந்ததுதான் கருந்துளைகான வித்தாகியது. கருந்துளைக்கு எல்லையில்லா அதியீர்ப்பு உண்டு என்பதால், அது விண்வெளியில் நினைக்கவே முடியாத ஆழம்வரை பெருங்குழியை ஏற்படுத்தும். அந்தக் குழியின் முடிவு, ஒற்றைப் பரிமாணமுள்ள ஒருமைப்புள்ளியாக இருக்கும் என்றார். கருந்துளைபற்றி இவ்வளவு விவரமாக விளக்கிச் சொன்னாரேயொழிய, அவர் இருக்கும்வரை அப்படியானதொன்று உண்மையில் இருக்கிறது என்பதை நிறுவவே முடியவில்லை. ஒருகட்டத்தில் கருந்துளை என்ற ஒன்று இல்லையென்ற சந்தேகம்கூட அவருக்குத் தோன்றியது. ஆனால், இன்று நூற்றுநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம். இதுவரை அப்படியானதொன்று இருக்கிறது என்று அடித்துச் சொன்னாலும், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அதைக் கண்டுபிடித்து, அதன் உருவத்தையும் படமெடுத்திருக்கிறோம். மனித குலத்தின் மாபெரும் சாதனை அது. எப்படி அதைக் கண்டுபிடித்தோம்? அது இன்றைய விஞ்ஞானிகளின் அற்புதமான புரட்சிச் சிந்தனையால் சாத்தியமாயிற்று. எப்படி?
உலகிலேயே மிகப்பெரிய காணொளிப்பெட்டியை (Television) துபாய் மோலில் வைத்திருக்கிறார்கள். அது ஒரேயொரு காணொளிப் பெட்டியாக இருந்தாலும். சற்றே உற்று நோக்கினால், ஆயிரம் சிறிய காணொளிப் பெட்டிகளை ஒன்றிணைத்து உருவாக்கியது என்று தெரியவர்தெரியவர்ரும். அதாவது ஆயிரம் சிறிய காணொளிப்பெட்டிகள் சேர்ந்து ஒரு மிகப்பெரிய காணொளிப்பெட்டியாக மாறியிருக்கிறது. இதுபோன்ற பெரிய திரைகளை நீங்களும் விழாக்களில் கண்டிருப்பீர்கள். சமீபத்தில் நீங்கள் பார்த்த ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்திலும் ஒன்று சொல்வார்கள். பல நுண்ணுயிரிகள் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கப்பட்டவன்தான் மனிதன் என்னும் ஒரு உயிர் என்பார்கள். இவற்றைச் சரியாக நீங்கள் புரிந்துகொண்டால் போதும். கருந்துளையைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படையையும் புரிந்துகொள்ளலாம். அதாவது 55 மில்லியன் ஒளி வருட தூரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு கருந்துளையைப் பார்ப்பதென்றால், நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் எந்தத் தொலைநோக்கியாலும் சாத்தியமேயில்லாதது. அதற்குப் பூமியளவு பெரிய தொலைநோக்கி தேவைப்படும். அப்படியொரு தொலைநோக்கியையை நான் மேலே சொன்ன உத்தி முறையால் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தத் தொலைநோக்கிதான் ‘நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி’ (Event Horizon Telescope - EHT). இது உலகின் பல இடங்களில் பரந்துபட்டுள்ள எட்டு மிகப்பெரிய தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மாபெரும் தொலைநோக்கி.
கட்டுரை மிக நீளமாவதால், இரண்டு பகுதிகளாகப் போடுகிறேன். நாளை இதன் அடுத்ததைப் போடுகிறேன். உங்களுக்கும் படிப்பதற்குச் சிரமமில்லாமல் இருக்கும்.
 

As per Raj Siva ...

படங்கள் இணைக்க முடியாமல் இருக்கிறது , மட்டுறுத்துனர் தயவு செய்து அனுமதி தர முடியுமா , நன்றி    

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
32 minutes ago, சாமானியன் said:

சுவாரசியமான    பின்னூட்டங்கள்        போய்க்கொண்டிருக்கின்றன 
கரும்  துளை  பற்றி   படித்தவர்  ஐன்ஸ்டீன்  100 வருடங்களுக்கு  முன்னர்   இப்போதைய  நவீன  கருவிகளின்  துணை  ( அபோது  ஒரு  மொபைல்  போன்  கூட  இருக்கவில்லை ) இல்லாமலேயே  வெறும்  கணித  மாதிரிகளின்  அடிப்படையில்  பிரேரித்திருந்தார்  .
அவர்    அந்த  நேரம்    பிரேரித்திருந்த  படியே    தற்போதைய  கண்டுபிடிப்பின்  உறுதிப்பாடு   அமைத்திருப்பது   கவனத்தில்  கொள்ளக்  கூடியது .
திண்ணை  வாசிகள்   இடைக்கிடை  திண்ணையை  விட்டு  வெளியேயும்    வந்து   ஊர்  உலகத்தில  என்ன  நடக்குது  என்று  ஒரு  அலசல்  செய்து  விட்டு  பின்னூட்டம்    விடலாமே  . போகும்  போக்கில்  பின்னூட்டங்களை  தவிர்ப்பது  திண்ணையின்  தரத்தை  மேம்படுத்த  உதவக்  கூடும்  என்பது  எனது  பணிவான  அபிப்பிராயம் 
பால்ய  நண்பன்  ராஜ் சிவா, எழுத்தாளர்  சுஜாதாவிற்கு  அடுத்தபடியாக   விஞ்ஞான      விடயங்களை      எல்லோரும்  புரிந்து  கொள்ளக்  கூடிய  மாதிரி  எழுதிக்  கொண்டு  வரும்  பிரபல எழுத்தாளர்  .  தமிழ்  நாட்டில்  அவரின்  நூல்கள்  பல  பிரசுரம்  ஆகியிருக்கின்றன  ( நிலவுக்குப்  போனவன் , இறந்த  பின்பும்  இருக்கின்றோமா  etc )
அவர்  நேற்று    இந்த  விடயம்  பற்றி  பதிவிட்டுருந்ததை   இங்கே   இணைத்து  விடுகிறேன்  ( அவரின்  அனுமதி  இல்லாமலே  – அவரிடம்  பின்பு   சொல்லிக்  கொள்வேன் )
…   சாமான்யன் 

 

சாமான்யன், இணைப்பிற்கு நன்றி. யாழ் இணையம் எங்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஒரு துளி (representative sample) என்பது என் கருத்து! சில நேரங்களில் உலகின் இன்றைய போக்கினைப் பிரதிபலிக்கும் ஒரு துளியாகவும் இங்கே கருத்தாளர்கள் நடமாடுவர். உலகில் இப்போது நிபுணர்கள், ஆய்வாளர்கள் என்போருக்கு எதிரான ஒரு போக்கு இருக்கிறது. அறிவியல் எதிர்ப்பு என்பது 60 களின் counter culture மாதிரி இப்போது இருக்கிறது. அதன் பிரதிபலிப்பே சில கருத்தாளர்களின் சதித் திட்டக் கருத்துகளும் உதாசீனங்களும். விண்வெளி ஆய்வை நாசா உட்பட சில மேற்கு நாடுகள் தொடங்கிய போது உருவான பல தொழில் நுட்பங்கள் இன்று எங்கள் அன்றாட வாழ்வில் இன்றியமையாதவையாக மாறி விட்டன (கணணி சிப், வீட்டின் வெப்பக் காவலி, தண்ணீரை வடி கட்டும் கருவி எனப் பல!). இதையெல்லாம் ஒருவர் ஆவலுடன் தேடினாலே கண்டு பிடிக்கக் கூடிய யுகத்தில் வாழ்ந்து கொண்டும் அறிவுக் குருடர்களாக இருப்போரை ஒன்றும் செய்ய முடியாது! 

Share this post


Link to post
Share on other sites

 

 

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

#சந்­தி­ரனில் காற்று இல்லை என்றால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நட்ட அமெ­ரிக்க கொடி எவ்­வாறு பறக்­கின்­றது?

#ஈர்ப்பு சக்தி இல்லா ஓரி­டத்தில் எவ்­வாறு வானத்தை புழுதி கிளப்­பிக்­கொண்டு தரையில் ஓட்டிச் செல்ல முடி­கி­றது?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் சந்­தி­ரனில் கால் பதித்தார் எனில் அவர் கால் பதிக்கும் காட்­சியை விண்­வெளி ஓடத்­திற்கு வெளியில் இருந்து யார் படம் பிடித்­தது? ஏனெனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த உடையின் நெஞ்சுப் பகு­தி­லேயே கமெரா இணைக்­கப்­பட்­டுள்­ளது எனவே அவர் தரை­யி­றங்­கி­யதை படம் பிடித்­தது எவ்­வாறு சாத்­தியம்?

#நில­வி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களின் பின்­ன­ணியின் எந்­த­வொரு நட்­சத்­தி­ரத்­தையும் காண­வில்­லையே?

#அப்­பலோ 11 விண்­வெளி ஓடம் தரை­யி­றங்­கி­ய­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் இல்லை. அதே­வேளை அது தரை­யி­றங்­கிய பகு­தியில் கால்­தடம் இவ்­வ­ளவு தெளி­வாக இருப்­பது எப்­படி சாத்­தியம்?

#பல்­வேறு பக்­கங்­களில் நிழல் தெரி­கி­றது அது ஏன்? நிலவில் ஒளி­யில்லை சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் ஒளி­யி­லேயே நிலா பிர­கா­ச­மாக தெரி­கி­றது. ஆனால் பல ஒளி மூலங்கள் (லைட்டிங் செய்­தது போல) பிர­யோ­கிக்­கப்­பட்­டது போல் ஒரே நேரத்தில் வெவ்வேறு திசை­களில் நிழல் தெரி­வது ஏன்?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்த மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த கால­ணியில் அடியில் இருக்கும் வடி­வமும் சந்­தி­ரனில் பதித்த கால் தடமும் ஒத்துப் போகாமல் இருப்­பது ஏன்?

சில சந்தேகங்களை தெளிவுபடுத்தாது அவற்றை கேட்பவர்களை முட்டாளாக்கி விட்டால் கேள்வியே தப்பு என்று நிறுவுவது சிறப்பு.

Share this post


Link to post
Share on other sites

கேட்டி பௌமேன்: கருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்த பின்னணியில் உள்ள பெண்

 •  
டாக்டர் பௌமேன்

கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை எடுத்துள்ள அல்கோரிதத்தை உருவாக்க உதவியதற்காக 29 வயதான கேட்டி பௌமேன் உலக அளவில் புகழ்பெற்றுள்ளார்.

இந்த திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய புகைப்படத்தை எடுக்கும் கணினி செயல் நிரலியை உருவாக்குவதற்கு கேட்டி பௌமேன் தலைமை தாங்கினார்.

பூமியில் இருந்து 500 மில்லியன் டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவிலுள்ள தூசு மற்றும் வாயுவின் ஒளிவட்டத்தை காட்டுகின்ற வியக்கதக்க இந்த புகைப்படம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த முன்முயற்சியை அடைய முடியாது என்று முன்னர் நம்பப்பட்டதாக பௌமேன் கூறுகிறார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் பட்டதாரி மாணவராக இருந்தபோது, பௌமேன் இந்த அல்கோரிதத்தை உருவாக்க தொடங்கினார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் கணினி அறிவியல் பிரிவை சோந்த குழுவினர், செயற்கை நுண்ணறிவு ஆய்வகம், த ஹார்வேடு-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய ஹேஸ்டாக் வான் கண்காணிப்பு நிலையம் போன்ற பலரின் உதவியோடு இந்த பணித்திட்டத்தை பௌமேன் நடத்தினார்.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Katie

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Katie

கோடு

டாக்டர் பௌமேன் உருவாக்கிய அல்கோரிதத்தால், ஒன்றோடொன்று தொடர்பு ஏற்படுத்தப்பட்ட 'இவண்ட் ஹோரிசன் தொலைநோக்கி'யால் (இஹெச்டி) கருந்துளை புகைப்படமாகியுள்ளது.

இந்த புகழ்மிக்க புகைப்படம் வெளியான சில மணிநேரங்களில், ட்விட்டரில் பெயர் டிரண்டாக டாக்டர் பௌமேன் சர்வதேச அளவில் பேசப்படும் நபரானார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம் மற்றும் ஸ்மித்கோசியன் வானியற்பியல் மையத்தாலும் டாக்டர் பௌமேன் பாராட்டப்படுகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டதாரி மாணவி கேட்டி பௌமேன் கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை உருவாக்குவதற்கான புதிய அல்கோரிதத்தை உருவாக்குவதற்கு தலைமைதாங்கினார். இன்று, இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது" என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையமும் அதன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் தெரிவித்துள்ளது,

கோடு

இதற்கு உதவிய குழுவினரும் பெயர் பெறுவதற்கு சம அளவில் கடமைப்பட்டுள்ளனர் என்று கலிஃபோர்னிய தொழில்நுட்ப நிலையத்தின் கணக்கீடு மற்றும் கணிதவியல் துணை பேராசிரியாக வேலை செய்தவரும் டாக்டர் பௌமேன் வலியுறுத்தியுள்ளார்.

அண்டார்டிக்கா முதல் சிலி நாடு வரை வேறுபட்ட இடங்களில் இருக்கும் தொலைநோக்கிகளை பயன்படுத்தி இந்த புகைப்படத்தை உருவாக்குவதில் 200-க்கு மேலான விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

"எங்களில் யாரும் தனியாக இதனை செய்திருக்க முடியாது" என்று சிஎன்என்-க்கு தெரிவித்த டாக்டர் பௌமேன் பல்வேறுபட்ட பின்னணிகளில் இருந்து வந்த வித்தியாசமான விஞ்ஞானிகள் பலரால் இது கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கருந்துளை பற்றி நாம் அறிந்தவை

கருந்துளையை நமது கண்களால் நேரடியாக பார்க்க முடியாது. பூமியைவிட மூன்று மில்லியன் மடங்கு அளவு பெரிதானது, 40 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

மேஸ்சியர் 87 கேலக்ஸியில் 10 நாட்களாக இது வரிமம் (ஸ்கேன்) செய்யப்பட்டுள்ளது.

"ஒட்டுமொத்த சூரிய அமைப்பை விட பெரியது" என்று இந்த பரிசோதனையை முன்மொழிந்த நெதர்லாந்திலுள்ள ராட்பௌட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெய்னோ ஃபால்க்கே பிபிசியிடம் கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் உருவானது எப்படி?

டாக்டர் பௌமேனும், பிறரும் உருவாக்கிய கணினி நிரல் தொடர்கள், தொலைநோக்கி தரவுகளை உருமாற்றி உலக ஊடகங்கள் வெளியிட்ட வரலாற்று புகழ்மிக்க புகைப்படமாக உருவாக்கியுள்ளன.

கணிதவியல் மற்றும் கணினி அறிவியலில், அல்கோரிதம் என்றால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பயன்படுகின்ற ஒரு செயல்முறை அல்லது விதிகளின் தொகுப்பாகும்.

ஒரு தொலைநோக்கி தனியாக கருந்துளையை படம் பிடித்துவிட முடியாது. எனவே 'தலையீட்டுமானி' என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எட்டு தொலைநோக்கிகளின் வலையமைப்பு உருவாக்கப்பட்டது.

கருந்துளையின் முதல் புகைப்படம்படத்தின் காப்புரிமை Reuters

அவை வழங்கிய தரவுகள் நூற்றுக்காணக்கான வன் டிரைவ்களில் சேமிக்கப்பட்டு, பாஸ்டன், அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் போன் ஆகிய இடங்களில் இருக்கும் மத்திய செயல்முறை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த தரவுகளை செயல்முறை செய்ய டாக்டர் பௌமேன் உருவாக்கிய அல்காரித முறை உதவியதால் கருந்துளையின் இந்த புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த தரவுகளில் இருந்து புகைப்படத்தை பெறுவதற்காக, வேறுபட்ட அனுமானங்களோடு உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு அல்கோரிதம்களோடு செய்யப்பட்ட பரிசோதனை முயற்சிக்கு பௌமேன் தலைமை தாங்கினார்.

இவண்ட் ஹோரிசன் தொலைநோக்கி' கோடு

இந்த அல்கோரிதம்களால் கிடைத்த முடிவுகள் நான்கு தனிப்பட்ட குழுக்கள் பகுப்பாய்வு செய்து அவர்களின் கண்டுப்பிடிப்பை உண்மை தன்மை ஆய்வு செய்து நம்பிக்கையை உருவாக்கினர்

வானியலாளர்கள், இயற்பியலாளர்கள், கணிதமேதைகள், பொறியியலாளர்களை உருக்கிய பானைகள்தான் நாங்கள். அதனால்தான் முடியாதது என்று முன்னர் நம்பப்பட்டதை சாதிக்க முடிந்தது என்று டாக்டர் பௌமேன் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/science-47899432

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, Justin said:

கிருபன் சொன்ன போது நான் நம்பவில்லை! இப்ப புரிகிறது, நிச்சயமாக வெட்டி வேலை தான்! 😁

இத்தனை எழுதிய பிறகு, கிருபன் கூறிய பிறகு தான் அது உங்களுக்குத் தெரிந்ததா ????😊

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, ஏராளன் said:

 

 

சில சந்தேகங்களை தெளிவுபடுத்தாது அவற்றை கேட்பவர்களை முட்டாளாக்கி விட்டால் கேள்வியே தப்பு என்று நிறுவுவது சிறப்பு.

இதன் அர்த்தம் என்ன? சந்திரனில் கால் பதித்தது பற்றிய இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் கடந்த 20 ஆண்டுகளாகப் பதில்கள் விஞ்ஞானத்தில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கும் விளங்கக் கூடியவாறு எழுதப் பட்டு வருகின்றன. அந்த இணைப்பு இங்கே முதலிலேயே கொடுக்கப் பட்டு விட்டது!

 

......"சுமே என்ன சொல்ல முனைகிறார் என்று சிறிது விளங்கி விட்டதால், கீழே preemptive ஆக இணைப்பைக் கொடுத்திருக்கிறேன்.

https://spacecentre.co.uk/blog-post/know-moon-landing-really-happened/"

இது போன்று தகவல்களை தேடியறியும் ஆர்வம் இல்லாதோரை எப்படி அழைப்பது?

 

Share this post


Link to post
Share on other sites

சோவியத் ரசியாவுக்கும் அமரிக்காவுக்கும் இடையில் இருந்த பனிப்போர் காலத்தில் நான் பெரிதா நீ பெரிதா என்ற விண்வெளிப் பயணப்போட்டியில் நிலவுக்கு அமரிக்கன் சென்றது உண்மை என்றோ அல்லது பொய் என்பது குறித்து நாம் அக்கறைப்படத் தேவையில்லை. எந்த முடிவுக்கும் வராமல் இந்த சம்பவத்தை அப்படியே சர்ச்சைக்குரிய விசயமாக கடந்து செல்லவேண்டியதுதான். இந்த இரு நாடுகளும் தமிழின அழிப்புக்கு சிங்களபேரினவாதத்திற்கு ஆதரவுதந்த நாடுகள் தான். நாம் ரசியாவிலோ இல்லை அமரிக்காவிலோ இல்லை லண்டன் கனடாவில் புலம்பெயர்ந்து வாழவதால் வெள்ளையராகவோ ஆங்கிலேயர் ரசியராகவோ மாறவும் முடியாது, அவ்வாறு மாறி அந்தந்த நாட்டு விஞ்ஞானிகள் அறிவாளிகள் நிறுவனங்களின் கூற்றுக்களுக்கு சார்பாகவே எதிராகவோ உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏன் என்ற கேள்விதான் அறிவு ஆராய்ச்சித் தேடலுக்கு அடிப்படை.. அவ்வாறுதான் ஏராளமான கேள்விகள் இந்த நிலவுப்பயணம் குறித்தும் பல கேள்விகள் எழுகின்றது. நாம் தான் அறிவாளி அல்லது அவர்கள் இவர்கள் தான் அறிவாளி அவர்கள் சொல்வதை மட்டும் கேள் என்ற நிலைப்பாடும் திணிப்பும் கருத்தாடலில் இங்கே இருக்கின்றது. அதை ஒருபோதும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை. கேள்விகளின்பக்கம் நிற்பதே ஆரோக்கியமானது. 

 

நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் நடந்தது உண்மை என்றால் பைபிள் மேல் சத்தியம் கேட்கும் போது அவரே சத்தியம் செய்ய மறுத்துவிட்டார். இதற்கு மேல் இதில் நாம் வில்லங்கப்பட என்ன இருக்கின்றது. !! 

Neil Armstrong: Refuse to Swear on the Bible He walked On the Moon

 

Share this post


Link to post
Share on other sites
49 minutes ago, சண்டமாருதன் said:

நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் நடந்தது உண்மை என்றால் பைபிள் மேல் சத்தியம் கேட்கும் போது அவரே சத்தியம் செய்ய மறுத்துவிட்டார். இதற்கு மேல் இதில் நாம் வில்லங்கப்பட என்ன இருக்கின்றது. !! 

Neil Armstrong: Refuse to Swear on the Bible He walked On the Moon

 

என்னிடம் ஒருவர் வந்து உங்கள் அப்பா இவர் தான் என்பதை பகவத்கீதையையில் சத்தியம் பண்ணுங்கள் என்று கேட்டால் நிச்சயமாக அவ்வாறு செய்ய மாட்டேன். ஏனென்றால் இனந்தெரியாத யாரோ ஒரு நபரால் எழுதப்பட்ட பகவத்கீதை என்ற  புத்தகத்தை நம்பாத நான்   எனது தாய் தந்தையர் என்ற உண்மையை  நான் நம்புகிறேன.  அது போல. நீல் ஆம்ரோங்கும் நடந்து கொண்டிருக்கலாம்.

Edited by tulpen

Share this post


Link to post
Share on other sites

ஆர்வம் இருப்பவர்களுக்கு ராஜ் சிவாவின் பதிவின் இரண்டாவது பகுதியையும் இணைத்து விடுகிறேன் ।   

நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும், ஐன்ஸ்டைனும் (தொடர்ச்சி)
நிகழ்வெல்லைத் தொலைநோக்கிகள் பற்றிப் பலர் பலவிதமான கட்டுரைகள் எழுதிவிட்டதால், பொதுவானவற்றைத் தவிர்த்து, உங்கள் சந்தேகங்களுக்கான விடைகளை மட்டும் இங்கு தந்திருக்கிறேன். நேற்றைய கட்டுரைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு என் நன்றிகள்.

நீண்டு பரந்திருக்கும் மெரினாக் கடற்கரைக்குச் செல்லுங்கள். அங்கு யாருமே இல்லை. நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். உங்கள் கையில் இருக்கும் கடுகை எடுத்து மணல் பரப்பில் வையுங்கள். சற்றுத் தள்ளிச் சென்று கடுகைப் பாருங்கள். அப்போது கடுகு உங்களுக்குத் தெரிகிறதென்றே வைத்த்துக் கொள்வோம். நூறு மீட்டர் தொலைவுக்குச் சென்று பாருங்கள் . இப்போது கடுகு தெரியுமா? இன்னும் சற்றுத் தொலைவாக, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள். இப்போது கடுகைப் பார்க்க முயல்வதென்னும்போதே உங்களுக்குச் சிரிப்பு வரும். இதுவே 13000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்றால், அங்கு கடுகில்லை, மெரினாக் கடற்கரைகூட இல்லை, சென்னையே தெரியாதல்லவா? ஆனால், பதின்மூன்றாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து, ஒரு கடுகை நாம் பார்த்திருக்கிறோம். பார்த்தது கடுகல்ல, இராட்சசன். 55 மில்லியன் ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் இராட்சசன். ’மெஸ்ஸியர் 87’ (Messier 87. சுருக்கமாக M87) என்னும் உடுத்திரளின் கருவாக அமைந்திருக்கும் கருங்குழியே அந்த இராட்சசன். அது என்ன இராட்சசக் கருங்குழி? சாதாரனமாகப் பல மில்லியன் கருங்குழிகள் நம் பால்வெளி உடுத்திரளிலேயே நிறைந்திருக்கின்றன. அவையெல்லாம்சூசூ டிவிபார்க்கும் குட்டிப் பாப்பாக்கள். பெரிய நட்சத்திரங்கள் இறந்து உருவாகும் குழந்தைகள். ஒரு பேச்சுக்கு, நம் சூரியன் இறந்து கருங்குழியானால் (சூரியன் கருங்குழி ஆகாது. அதற்கான போதிய எடை அதற்கு இல்லை), வெறும் 3கிமீ அளவுள்ள கருங்குழியாகவே இருக்கும். இதுபோன்ற சாதாரணப் பால் குடிகள் நிறைந்ததுதான் பால்வெளி. அவற்றையெல்லாம் பார்க்கவே முடியாது. சில கிலோமீட்டர் அளவுள்ள கருந்துளைகளைக் கண்டுபிடிப்பது சிரமமானது. கருப்பானாலும் களையாயிருப்பது இராட்சச கருங்குழிகள் மட்டுமே. ஒவ்வொரு உடுத்திரளும் (Galaxy), தன் மையக்கருவாக ஒரு இராட்சச கருங்குழியைக் கொண்டிருக்கும். அப்படியான ஒன்றைத்தான், M87 உடுத்திரளின் மத்தியில் நாம் கண்டிருக்கிறோம்.

M87 இன் மையக் கருங்குழியானது, சூரிய எடையைப்போல் ஆறரை பில்லியன் மடங்கு பெரியது. அதன் விட்டம் 20 பில்லியன் கிலோமீட்டர்கள். அதைச் சுற்றிவரும் ஒளித்துகள்களுடன் சேர்த்து, 100 பில்லியன் கிலோமீட்டர் விட்டம் கொண்டது. இதுவே, 550 பில்லியன் பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால், ஒரு கடுகை 13000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்ப்பது போன்று தெரிகிறது. இப்போது சொல்லுங்கள். இவ்வளவு தூரத்திலிருந்து எடுக்கப்படும் படம், எப்படித் துல்லியமாகத் தெரியும்? இந்தளவு துல்லியத்தைப் பெறுவதற்கே எவ்வளவு மெனக்கெடல்? அதுமட்டுமல்ல. “இப்படியான துல்லியமற்ற படத்தை எடுத்துவிட்டா இப்படித் துள்ளுகிறார்கள்?” என்று சிலர் எள்ளி நகைக்கிறார்கள். உங்கள் வீட்டில் சுழன்று கொண்டிருக்கும் காற்றாடியைத் (Fan) துல்லியமாகப் படமெடுத்துத் தரும்படி சொன்னால், அந்தக் காற்றாடி சுழலாமல் இருக்கும்போது படமெடுத்துத் தருவீர்கள். அதுவே, காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும்போது படமெடுத்திருந்தால், துல்லியமாகத் தெரிந்திருக்குமா? இல்லையல்லவா? ‘என்னிடம் வேகமாக அசையும் பொருட்களைப் படமெடுக்கக்கூடிய நவீன கமெரா இருக்கிறது. அதனால். காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும்போதே நிலையான படத்தை என்னால் எடுக்க முடியும்என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அதுவும் ஒரு குறிப்பிட்ட வேகம் வரைதான் முடியும். M87 கருங்குழியானது, கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை எப்படி நிலையான கருங்குழியாகப் படமெடுக்க முடியும்? இதுவரை நாம் பார்த்திருந்த கருங்குழிகளின் படங்கள் அனைத்துமே கணணியால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள். அவை நிலையாக இருக்கக்கூடியதாகக் கருதும் கருங்குழியின் படங்கள். ஆனால், இப்போது பெறப்பட்டது நிஜமான கருங்குழி. பாலே நடனமாடும் பெண்போல அதிவேகமாகச் சுழன்று கொண்டிருக்கும் கருங்குழி.

சந்திர கிரகணத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் மறைக்கப்பட்ட நிலையில் கருமையாகப் பார்ப்பது சூரியனின் நிழல்தான் என்றாலும், உண்மையில் அங்கு தெரிவது சந்திரன்தான். இந்த நிலையை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால், இனி நான் சொல்லப் போவதையும் புரிந்து கொள்வீர்கள். ஒரு கரிய நிறப் பொருளை உங்களால் படமெடுக்கவே முடியாது. அதற்கு அந்தப் பொருளிலிருந்து ஒளி வரவேண்டும். எந்த ஒளியையும் வெளியே விடாத கருங்குழியை எப்படிப் படமெடுக்க முடியும்? M87 கருங்குழியின் நிழலானது, அதன் நிகழ்வு எல்லையில் (Event horizon) விழும்போது பெறப்பட்ட தோற்றத்தையே நாம் படம் பிடித்திருக்கிறோம். இதுவும் ஒருவகை நிழல்தான். ஆனாலும், அங்கு தெரிவது என்னவோ கருங்குழியின் தோற்றம்தான். அதிர்ஸ்டவசமாக M87 ஐத் தூசுத் துணிக்கைகளும், வாயுத் துகள்களும் சூழ்ந்திருக்கின்றன. அங்கிருக்கும் அதிவெப்பத்தினால் அவை ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. M87 இன் ஈர்ப்பினால் வளைக்கப்பட்ட காலவெளியின் (Space time) ஊடாக, அந்த ஒளிரும் துகள்களும் நெருப்பு வளையமாகச் சுற்றுகின்றன. அதுவே, M87 ஐக் கண்டுபிடிக்கவும், படமெடுக்கவும் நமக்கு வாய்ப்புகளைக் கொடுத்திருக்கின்றது.

இவையெல்லாவறையும் சாத்தியமாக்கியது நிகழ்வெல்லைத் தொலைநோக்கித் திட்டம்தான். இன்றுவரை உலகின் மிக முக்கியமான எட்டுத் தொலைநோக்கிகளை ஒன்றுசேர்த்து இந்த நிகழ்வெல்லைத் தொலைநோக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும். அதன் துல்லியத்தை மேலும் அதிகரிக்கலாம். அதிகரிக்கவும் வேண்டும். இவற்றுடன் மேலும் சில தொலைநோக்கிகளை இணைந்தால், வானியல் ஆராய்ச்சியில் பல மைல் கற்களைத் தொட்டுவிடலாம். இன்னும் நாம் பார்த்துத் தெளிவடைய வேண்டிய பொருட்கள் விண்வெளியில் நிறையவே உண்டு. குவேசார்கள், பல்சார்கள் என்று பலவகை விண் பொருட்கள் ஜாலம் காட்டியபடி இருக்கின்றன. அதிகம் ஏன், வோர்ம் ஹோல்களகூட இருக்கின்றனவா என்று பார்த்துவிடலாம். ஆனாலும், கருங்குழிகள்பற்றி இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும். நம் சொந்தப் பால்வெளியின் மையக் கருங்குழி பற்றியும் அறிய வேண்டும். பதினாறு வருடங்களாகச் சஜிட்டாரியஸ் A வழியாக அந்தக் கருங்குழியைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அங்கு பல நட்சத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை வித்தியாசமான முறையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து, அந்த இடம் ஒரு இராட்சசக் கருங்குழியெனக் கணித்துள்ளார்கள். அதுவே பால்வெளியின் மையமும்கூட. அந்தக் கருங்குழியைச் சுற்றும் S2 என்னும் நட்சத்திரம் அந்தக் கருங்குழியின் ஈர்ப்பினால் கவரப்பட்டு, அதை 2.5% ஒளியின் வேகத்தில் நெருங்கிக் கொண்டு செல்வதை அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும், என்றாவது ஒருநாள் அந்த S2 நட்சத்திரம், கருங்குழியின் நிகழ்வு எல்லையைத் தொடும்போது வானவேடிக்கைகள் நிகழலாம். அப்போது இதுபோன்ற நெருப்பு வளையம் அங்கும் தோன்றலாம்.

இறுதியாக ஒன்று. 55 மில்லியன் ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் கருங்குழியை நாம் இன்று பார்க்கிறோம் என்றால், அது 55 மில்லியன் வருடங்களுக்கு முன்னிருந்த கருங்குழியின் படமாகத்தான் இருக்கும். அங்கிருந்து ஒளி, பூமியை வந்தடைய 55 மில்லியன் வருடங்கள் தேவை. அதனால், அந்தக் கருங்குழி இன்று இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்வியெல்லாம் கேட்டு நாம் குழம்பிவிடத் தேவையில்லை. பிரபஞ்ச விதியின் அடிப்படையே அதுதான். அனைத்தும் இறந்தகாலம்தான். நாம் எதையும் நிகழ்காலத்தில் பார்ப்பதில்லை. உங்கள் அருகிலிருக்கும் மனைவியைக்கூட. ஒளி உங்களை வந்தடைய எடுக்கும் நேரத்தின் அளவான காலத்தை இழந்தே நாம் எதையும் பார்க்கிறோம். இப்போது அது அங்கே இருக்கிறதா என்ற கேள்வியுடன் வானத்தைப் பார்த்தால், நான்கு ஐந்து நட்சத்திரங்களைத் தவிர ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் இப்போது இருக்கின்றனவா என்பதை உங்கள் வாழ்நாளில் தெரிந்து கொள்ளவே முடியாது. அதைத் தெரிந்து கொள்பவர்கள் உங்களுக்குப் பின்னர் வரும் சந்ததியினராக மட்டுமே இருக்கும். காரணம், நான்கு ஐந்து நட்சத்திரங்களைத் தவிர ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால்தான் இருக்கின்றன. அம்மி மிதித்த பின் நாம் பார்க்கும் அருந்ததி நட்சத்திரம்கூட அங்கு இருக்கிறதா என்று நமக்குத் தெரியவே தெரியாது. இயற்பியலில் ஆழமாகச் சென்று சிந்திக்கும்போது, வாழ்க்கையின் சுவாரஷ்யங்களும், பயமுறுத்தல்களும் நம்மைவிட்டு நழுவிப் போய்விடும். இவற்றையெல்லாம் ஒரு அறிவாகப் பார்த்துவிட்டு விலகிவிடலாம். இயற்பியல் அவ்வளவு வலிமைமிக்க உண்மைகளைச் சொல்லக்கூடியது. நாம் நம்பும் உண்மைகளே, உண்மைகள் இல்லை என்று நிரூபிக்கக்கூடியது. அதனால், அவற்றைப் பற்றி ஒருவர் விளக்கும்போது, அதைக் கேட்டுவிட்டு, ‘வாவ்!’ என்ற ஆச்சரியத்துடன் நகர்ந்துவிடுங்கள். அதையே தூக்கிக்கொண்டு செல்லாதீர்கள். இனி
55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் வந்தது நீங்கள் நினைப்பது போன்று ஒளியல்ல. முதலில் நீங்கள் நினைக்கும் ஒளியென்பது ஏழு வர்ணங்களைக் கொண்ட, ‘காணும் ஒளிக்கற்றைதான்’ (Visible Spectrum). இது ஒரு ஒளியலையின் நூறில் ஒரு பங்குகூட இல்லாதது. 99 சதவீதமான ஒளியை நாம் கண்ணால் காணமுடியாது. அவை, காமா ஒளிக்கற்றை, எக்ஸ் ஒளிக்கற்றை, ஊதா கடந்த ஒளிக்கற்றை, இன்பிரா சிகப்பு ஒளிக்கற்ரை, மைக்ரோ அலை, வானொலி அலை, நெடு வானொலி அலையெனப் பலவகைகளில் நீண்டுகொண்டே போகின்றது. இதில், வானொலி அலைகளைப் பயன்படுத்தியே நாம் தொலைநோக்கிகளால் நெடுந்தூரமிருக்கும் பொருட்களைப் பார்க்கிறோம். இவையே பின்னர் கணணிகள் மூலம் படங்களாக மாற்றிக் கொள்ளப்படுகின்றன. வானொலி அலைகள் அதிக அலைநீளம் கொண்டவை என்பதால், நெடுந்தூரம் பயனிக்கக் கூடியவை. M87 ஐயும் இந்த அலைகள் மூலமே கண்டுகொண்டோம்.

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, tulpen said:

என்னிடம் ஒருவர் வந்து உங்கள் அப்பா இவர் தான் என்பதை பகவத்கீதையையில் சத்தியம் பண்ணுங்கள் என்று கேட்டால் நிச்சயமாக அவ்வாறு செய்ய மாட்டேன். ஏனென்றால் இனந்தெரியாத யாரோ ஒரு நபரால் எழுதப்பட்ட பகவத்கீதை என்ற  புத்தகத்தை நம்பாத நான்   எனது தாய் தந்தையர் என்ற உண்மையை  நான் நம்புகிறேன.  அது போல. நீல் ஆம்ரோங்கும் நடந்து கொண்டிருக்கலாம்.

 மரபணு சோதனை வாயிலாக உறுதிப்படுத்தப்படவேணடிய விசயம். இது அம்மா இது அப்பா என்பது நாம் பிறந்து வளரும் போது அறிந்துகொள்வதும் பின்னர் அதை நம்புவதும் ஆகும். அம்மா அப்பா விசயத்தின் தீர்மானம் எமது பிறவிக்கு முற்பட்டது. பகவத் கீதைமேல் சத்தியம் செய்தால்போல் அவை உண்மையாகிவிடாது. பகவத் கீதையில் நம்பிக்கை அவநம்பிக்கை என்பது இங்கே இரண்டாம் பட்சமானது. 

இங்கே நிலவுக்கு போனதென்று சொல்வதும் அவர்கள் தான் அது பொய் என்பதும் அவர்களும் அவர்களுக்கு எதிரானவர்களும் தான் சத்தியம் கேட்பவர்களும் அவர்கள் தான் மறுப்பவர்களும் அவர்கள் தான் பொய்க்கு விளக்கம் கொடுப்பவர்களும் அவர்கள் தான். நாம் எதையும் ஏற்கவேணும் நம்ப வேணும் அல்லது மறுதலிக்கவேணும் என்ற எந்த நிர்பந்தமும்  நெருக்கடியும் அறிவுபூர்வமாகவே  உணர்வுபூர்வமாகவோ இல்லை. நிலவுக்கு சென்றதையும் அதை ஒட்டி நடக்கும் சர்ச்சைகளையும் சாதரணமாக பார்த்துக்கொண்டிருப்பவர்கள். அது சார்ந்து இயல்பாக எழும் கேள்விகளோடு பயணிப்பவர்கள் அவ்வளவுதான். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, சண்டமாருதன் said:

சோவியத் ரசியாவுக்கும் அமரிக்காவுக்கும் இடையில் இருந்த பனிப்போர் காலத்தில் நான் பெரிதா நீ பெரிதா என்ற விண்வெளிப் பயணப்போட்டியில் நிலவுக்கு அமரிக்கன் சென்றது உண்மை என்றோ அல்லது பொய் என்பது குறித்து நாம் அக்கறைப்படத் தேவையில்லை. எந்த முடிவுக்கும் வராமல் இந்த சம்பவத்தை அப்படியே சர்ச்சைக்குரிய விசயமாக கடந்து செல்லவேண்டியதுதான். இந்த இரு நாடுகளும் தமிழின அழிப்புக்கு சிங்களபேரினவாதத்திற்கு ஆதரவுதந்த நாடுகள் தான். நாம் ரசியாவிலோ இல்லை அமரிக்காவிலோ இல்லை லண்டன் கனடாவில் புலம்பெயர்ந்து வாழவதால் வெள்ளையராகவோ ஆங்கிலேயர் ரசியராகவோ மாறவும் முடியாது, அவ்வாறு மாறி அந்தந்த நாட்டு விஞ்ஞானிகள் அறிவாளிகள் நிறுவனங்களின் கூற்றுக்களுக்கு சார்பாகவே எதிராகவோ உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏன் என்ற கேள்விதான் அறிவு ஆராய்ச்சித் தேடலுக்கு அடிப்படை.. அவ்வாறுதான் ஏராளமான கேள்விகள் இந்த நிலவுப்பயணம் குறித்தும் பல கேள்விகள் எழுகின்றது. நாம் தான் அறிவாளி அல்லது அவர்கள் இவர்கள் தான் அறிவாளி அவர்கள் சொல்வதை மட்டும் கேள் என்ற நிலைப்பாடும் திணிப்பும் கருத்தாடலில் இங்கே இருக்கின்றது. அதை ஒருபோதும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை. கேள்விகளின்பக்கம் நிற்பதே ஆரோக்கியமானது. 

 

இது வரை நான் உங்களுடன் உரையாடியதில்லை. இதில் நானும் கருத்து பதிந்திருந்ததால் எனது கருத்து. இதை எனது கருத்தாகவே எடுங்கள். நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் எங்கள் விடயத்தில் என்ன செய்தது என்று எல்லோருக்கும் தெரியும். அது இந்த திரிக்கு தேவையற்றது என்பது எனது கருத்து. இந்த திரியில் ஒருவரும் உணர்ச்சி வசப்பட்டு வெள்ளைக்காரர்களுடன் தங்களை அடையாளப்படித்தியது போல தெரியவில்லை. 
ஒருவர் உலகளவில் வெளிவந்த ஒரு விஞ்ஞான நிகழ்வை இங்கு இணைத்தார். "அதில் ஏதாவது தவறு இருக்கிறது, இந்த இடத்தில் சந்தேகம் இருக்கிறது, வேறு சில அறிஞர்கள் இப்பிடி சொன்னார்கள்" என்ற ரீதியில் இருந்திருந்தால், objcetive ஆக இந்த விவாதம் போயிருந்திருக்கும். என்னை போன்ற ஆர்வமுள்ளவர்கள் இதன் மறுபக்கம் என்ன ,அப்பிடி இருக்குமா என நாங்களும் தேடி பார்க்கலாம். "இதுவும் சந்திரனுக்கு போன மாதிரித்தான்" என்று முன் முடிவுடன் அணுக்கப்பட்டவுடன் விவாதமும் அதே ரீதியில் போனது.

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, சண்டமாருதன் said:

 

நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் நடந்தது உண்மை என்றால் பைபிள் மேல் சத்தியம் கேட்கும் போது அவரே சத்தியம் செய்ய மறுத்துவிட்டார். இதற்கு மேல் இதில் நாம் வில்லங்கப்பட என்ன இருக்கின்றது. !! 

 

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? சிறிது குழப்பமாக இருக்கு. அவர் பைபிளின் மேல் சத்தியம் பண்ண மறுத்துவிட்டார், ஆகவே அவர் சந்திரனில் இறங்கவில்லை என நீங்கள் நிறுவமுற்படுவாத தெரிகிறது? இந்த மாதிரியான நிறுவல்கள் இதுக்கு போதும் அல்லது பக்கபலமானது என்று நினைக்கிறீர்களா?

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, நீர்வேலியான் said:

இது வரை நான் உங்களுடன் உரையாடியதில்லை. இதில் நானும் கருத்து பதிந்திருந்ததால் எனது கருத்து. இதை எனது கருத்தாகவே எடுங்கள். நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் எங்கள் விடயத்தில் என்ன செய்தது என்று எல்லோருக்கும் தெரியும். அது இந்த திரிக்கு தேவையற்றது என்பது எனது கருத்து. இந்த திரியில் ஒருவரும் உணர்ச்சி வசப்பட்டு வெள்ளைக்காரர்களுடன் தங்களை அடையாளப்படித்தியது போல தெரியவில்லை. 
ஒருவர் உலகளவில் வெளிவந்த ஒரு விஞ்ஞான நிகழ்வை இங்கு இணைத்தார். "அதில் ஏதாவது தவறு இருக்கிறது, இந்த இடத்தில் சந்தேகம் இருக்கிறது, வேறு சில அறிஞர்கள் இப்பிடி சொன்னார்கள்" என்ற ரீதியில் இருந்திருந்தால், objcetive ஆக இந்த விவாதம் போயிருந்திருக்கும். என்னை போன்ற ஆர்வமுள்ளவர்கள் இதன் மறுபக்கம் என்ன ,அப்பிடி இருக்குமா என நாங்களும் தேடி பார்க்கலாம். "இதுவும் சந்திரனுக்கு போன மாதிரித்தான்" என்று முன் முடிவுடன் அணுக்கப்பட்டவுடன் விவாதமும் அதே ரீதியில் போனது.

உங்கள் கருத்துக்கு நன்றிகள். 

கருந்துளை சம்மந்தப்பட்ட இந்தப் பதிவில் நிலவுக்கு சென்றது குறித்த கருத்துக்கான பாதிலாகவே எனது கருத்தும் பயணிக்கின்றது. அதற்காக இந்த திரி திசை மாறிச் சென்றதாக கருதவும் முடியாது காரணம் இவ்வாறான விசயங்களின் மேல் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தவும் அதற்காக ஏற்கனவே கேள்விக்குள்ளாகியிருக்கும் விசயங்களை ஒப்பிடவும் கருத்தாடலில் இடமுண்டு. உங்கள் ஆர்வங்களில் எந்தக் குறுக்கீடும் இல்லை அவை குறித்த தேடல்கள் தெடர்வதிலும் உரையாடப்படுவதிலும் எந்த எதிர்க்கருத்தும் இல்லை. 

14 hours ago, சண்டமாருதன் said:

இந்த இரு நாடுகளும் தமிழின அழிப்புக்கு சிங்களபேரினவாதத்திற்கு ஆதரவுதந்த நாடுகள் தான். நாம் ரசியாவிலோ இல்லை அமரிக்காவிலோ இல்லை லண்டன் கனடாவில் புலம்பெயர்ந்து வாழவதால் வெள்ளையராகவோ ஆங்கிலேயர் ரசியராகவோ மாறவும் முடியாது, அவ்வாறு மாறி அந்தந்த நாட்டு விஞ்ஞானிகள் அறிவாளிகள் நிறுவனங்களின் கூற்றுக்களுக்கு சார்பாகவே எதிராகவோ உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை

இரண்டு விடயங்களுக்கும் சம்மந்தமில்லை என்ற உங்கள் கருத்தோடு உடன்படுவதோ மறுதலிப்பதோ இவ்விடத்தில் பொருத்தமில்லை ஆனால் நான் அறிவியலுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பை துண்டித்து அணுகுவதில்லை. எம் மீது குண்டுபோட்ட விமானங்கள் தகவல் கொடுத்த செய்மதிகள் மற்றும் ஏனைய தளவாடங்கள் எல்லாம் இவர்களின் அரிய தொழில்நுட்பங்கள் தான். அறிவியல் கண்டுபிடிப்புத்தான். எனக்கும் இவற்றுகுமான முதல் தொடர்பு  நுகர்வோர் என்ற உறவுதான்  அதனால் நான் கனடாவில் இருப்பதால் கனடா கண்டுபிடிப்பை ஆ என்று அண்ணார்ந்து பாக்கவும் எதுவும் இல்லை.  நாலு பல்கலைக்கழகமும் நாற்பது அறிவாளியும் ஒன்றை சொன்னால் அதை நம்பவேண்டிய அவசியமும் இல்லை ஏனெனில் இவைகள் அறத்துக்காகவும் மனிதநேயத்துக்காகவும் செய்யப்படுவதில்லை. வியாபாரம் லாபம் என்ற கணக்கின் அடிப்படையில் செய்யப்படுவது. நீங்கள் ஒரு கண்டுபிடிப்பை வைத்து ஆர்வப்படுகின்றீர்கள் நான் இந்த அறிவியல் எந்த நாட்டு அப்பவிகளை எந்தவிதத்தில் கொல்ல பயன்படுத்தப்படும் என அச்சப்படுகின்றேன் தவிர கருத்துக்களோடு முரண்பட இங்கு எதுவும் இல்லை. 

3 minutes ago, நீர்வேலியான் said:

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? சிறிது குழப்பமாக இருக்கு. அவர் பைபிளின் மேல் சத்தியம் பண்ண மறுத்துவிட்டார், ஆகவே அவர் சந்திரனில் இறங்கவில்லை என நீங்கள் நிறுவமுற்படுவாத தெரிகிறது? இந்த மாதிரியான நிறுவல்கள் இதுக்கு போதும் அல்லது பக்கபலமானது என்று நினைக்கிறீர்களா?

 

அவர் நிலவுக்கு போனார் அல்லது பொய் சொல்கின்றார் . இதை  நாம் ஏன் ஆம் இல்லை என்று நிறுவ முற்படவேண்டும்? சர்ச்கைக்குரிய இந்த விசயம் முடிவுக்கு வரதாத சர்ச்சையான விசயமாகவே இருக்கின்றது. நாம் ஏதற்கு ஒரு முடிவுக்கு வர எத்தனிக்கவேண்டும் என்பதே என்நோக்கு. 

 

Share this post


Link to post
Share on other sites

கருந்துளை – ஒரு நோபல் பரிசு பார்சல்?

 
இது வானியலின் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். காஸ்மிக் நுண்ணலை கதிர்வீச்சுக்கு (cosmic microwave background radiation) ஆதாரம் கண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான புதிய கோள்களைக் கண்டுபிடித்து இருக்கிறோம். சமீபத்தில் 2016-இல் இரண்டு கருந்துளைகளை நியூட்ரான் விண்மீன்களும் மோதிக் கொள்வதை பார்த்திருக்கிறோம். அவற்றில் இருந்து ஈர்ப்பு அலைகளை அளந்திருக்கிறோம். இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இப்போது ஒரு கருந்துளையைப் படம் பிடித்திருக்கிறோம். இது இயற்பிலுக்கு மட்டுமின்றி, தரவுப் பகுப்பாய்வுக்கும் (data analysis) ஒரு மாபெரும் சாதனை மைல் கல். ஆம், 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்கள் வானியல் வல்லுநர்கள் திரட்டிய தரவுகளைப் பகுக்க இரண்டு ஆண்டுகளும் 5 பெடா பைட் நினைவாற்றலும் தேவைப் பட்டது [1 பெடா பைட் என்பது 10 லட்சம் கிகா பைட் (GB)].
 

அண்ட வெளியில் தன அருகில் வரும் அனைத்தையும் அபகரித்துக் கொள்ளும் தாதாவாக இருந்து வந்த கருந்துளைகளில் ஒன்றை விண் ஆராய்ச்சியாளர்கள் இப்போது ‘பார்த்து’ இருக்கிறார்கள். பார்த்ததோடு மட்டுமல்லாமல் நம் உலகமே பார்க்க அதைப் ‘புகைப்படமும்’ எடுத்திருக்கிறார்கள். 

focus_figure_1_resized

இந்தப் புகைப்படங்களில் அப்படி என்ன சாதனை?

Black Hole எனப்படும் கருந்துளை அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிகுந்த ஒரு பகுதி. எவ்வளவு ஈர்ப்பு விசை என்றால் இதைப் புகைப்படம் எடுக்க ஒளியைப் பாய்ச்சினால் அந்த ஒளியைக் கூட பிரிதிபலிக்காமல் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்ளும் அளவுக்கு ஈர்ப்பு விசை கொண்டது. எனவே, கருந்துளைகளைப் பார்ப்பது என்பது இதுவரை முடியாத ஒன்றாகவே இருந்தது.

அப்படியானால் இது இருக்கிறது என்பது எப்படி நமக்குத் தெரியும்?

அண்டத்தின் ஒரு பகுதியில் கருந்துளை இருந்தால் அதன் அருகில் உள்ள விண்மீன்கள் போன்றவை அதனுள் ஈர்க்கப்பட்டு கருந்துளை இன்னும் அடர்த்தி ஆகும். சில சமயங்களில் இரண்டு வெவ்வேறு கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு இரண்டறக் கலந்து விடுகின்றன.

Event Horizon Telescope (EHT) என்ற தொலைநோக்கியின் உதவி கொண்டு முதன் முதலாகக் கருந்துளை ஒன்றினை ‘நேரடியாக’ படம் பிடித்திருக்கின்றனர் ஆய்வாளர்கள். சூரியனைக் காட்டிலும் 650 கோடி மடங்கு அதிக நிறை கொண்ட இந்தக் கருந்துளை மெஸ்ஸியர் 87 என்கிற விண்திறலின் (glalaxy) மத்தியில் அமைந்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இது உள்ளது.

பெயரே தவறு!

கருந்துளை என்ற பெயரே இதற்குப் பொருந்தாது என்று தான் சொல்ல வேண்டும். கருந்துளை முற்றிலும் கருமையாக (இருண்டதாக) இருப்பதில்லை. அதனைச் சுற்றி உள்ள வாயுக்களும் விண் துகள்களும் பல நூறு கோடி டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு உட்பட்டு மிகப் பிரகாசமாக ஒளி வீசுகின்றன. அதே போல் கருந்துளை ஒரு வெறும் துளை கிடையாது. அதனுள் பெரும் அடர்த்தியில் நிறை திணிக்கப் பட்டிருக்கிறது.

எப்படி செய்தார்கள்?

இவ்வளவு பெரிய கருத்துளையை ஒளி அடிப்படையிலான தொலைநோக்கி உதவி கொண்டு பார்க்க வேண்டுமானால் நமது பூமி அளவுக்கு விட்டமுள்ள dish (அலை உணரும் ஆன்டெனா) தேவை. இதற்குப் பதிலாக very-long-baseline interferometry (VLBI) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் உலகின் பல இடங்களில் இருக்கும் 8 ரேடியோ தொலை நோக்கிகளின் வலையமைப்பைப் பயன்படுத்தி உள்ளார்கள். சிலி நாட்டின் அடகாமா பகுதியில் அமைந்திருக்கும் ALMA என்ற தொலைநோக்கி, அண்டார்டிகாவில் உள்ள தென் துருவ தொலைநோக்கி, ஸ்பெயினில் உள்ள IRAM தொலைநோக்கி ஆகியன இவற்றில் அடங்கும்.

d41586-019-01155-0_16646066

இந்த வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு தொலைநோக்கியையும் அடையும் சமிக்ஞைகள் (signals) ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட கால முத்திரை (time stamp) கொடுக்கப் பட்டு ஹார்ட் டிரைவ் எனப்படும் நினைவக வட்டுக்களில் சேமிக்கப் படுகிறது. ஒரு நாளில் ஒவ்வொரு தொலைநோக்கியும் சுமார் 350 டெரா பைட் (terabytes) அளவுக்கு தகவல்களைத் திரட்டித்த தருகிறது. இந்தத் தகவல்களை உருக்குலையாமல் சேகரிக்கவும் பின்பு அவற்றைத் தரம் பிரிக்கவும் புகைப்படங்களாக மாற்றவும் ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் ஆய்வு நிலையத்திலும் அமெரிக்காவின் எம்.ஐ.டி. வானியல் ஆய்வகத்தில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்கள் எனப்படும் மீக்கணினிகள் உதவுகின்றன.

இவ்வளவு அதிகமான தரவுகளை எளிதில் இணையத்தில் பதிவேற்றி பின்பு தரவிறக்கம் செய்து கொள்ள முடியாது. எனவே இந்த நினைவு வட்டுக்களை விமானம் மூலம் மீக்கணினிகள் இருக்கும் ஆய்வகங்களுக்கு அனுப்பி பின்னர் பகுப்பாய்வு நடைபெறுகிறது. இதனால் இந்த ஆராய்ச்சிக்கு அதிக காலம் தேவைப் படுகிறது. எடுத்துக்காட்டாக, அண்டார்டிகாவில் உள்ள தொலைநோக்கி சேகரித்த தரவுகளை எடுத்து வர அங்கு தட்ப வெப்பம் போக்குவரத்துக்கு உகந்ததாக மாறும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது.

என்ன பயன்?

கருத்துளையைப் புகைப்படம் எடுத்ததனால் இந்த ஆண்டு கரும்பு சாகுபடி அதிகமாகவோ கத்திரிக்காய் விலை குறையவோ பெரிய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் இருக்கும் அண்டத்தில் இன்னுமொரு அதிசயத்தைப் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். வெகு மக்களை அறிவியல் சென்றடைய சொற்களையும் ஆய்வுக்கு கட்டுரைகளையும் விட புகைப்படங்கள் பெரிதும் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஐன்ஸ்டீன் நிர்மாணித்த சார்பியல் கொள்கைக்கு மேலும் வலு சேர்க்கிறது. அறிவியல் வட்டாரத்தில் சொல்வது போல, கருதியற்பியலாளர் (theoretical physicist) ஒரு அஞ்சல் உரையின் பின்பக்கத்தில் கிறுக்கும் சில சமன்பாடுகளை மெய்ப்பிக்கவோ மறுத்துரைக்கவோ சோதனை முறை இயற்பியலாளர்களும் பொறியாளர்க்ளும் ஆண்டுக் கணக்கில் உழைக்க வேண்டி இருக்கும். அதுவும் பல கோடிக்கணக்கான டாலர்களை இரைத்து!

இந்தப் புகைப்படத்தின் மூலமாக, இதுவரை நிரூபிக்கப் படாமல் கணிதவியல் கருத்தாக்கமாக மட்டுமே இருந்து வந்த கருந்துளை இப்போது இயற்பியல் உருப்பொருளாக மாறி இருக்கிறது.

இந்த ஆண்டோ அல்லது எதிர்வரும் ஓரிரு ஆண்டுகளிலோ இந்த ஆய்வுகளுக்கு அடித்தளமிட்ட, செயல்படுத்திய சிலருக்கேனும் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைக்கக் கூடும். இது என் தனிப்பட்ட மதிப்பீடு.

இன்னும் ஆழமாகப் படிக்க நினைப்பவர்கள், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களே எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளைக் கீழே உள்ள இணைப்பில் இலவசமாகப் படிக்கலாம்:

https://iopscience.iop.org/journal/2041-8205/page/Focus_on_EHT

https://ilakyaa.wordpress.com/2019/04/13/கருந்துளை-ஒரு-நோபல்-பரிச/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வணக்கம் வாத்தியார்......! பெண் : பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்                   பள்ளியறை வர நேரமில்லையா  ஆண் :   ஓ....ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி                     உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா  பெண் : ஆசை பூவை தவிக்க விட்டு                      அமைச்சரோடு நகர்வலமோ  ஆண் : உனது கண்ணில் நீர் துடைத்தால்                   ஊர் குழாயில் நீர் வருமோ  பெண்: வேந்தனே ....வேந்தனே  உந்தன் வரம் வருமோ ........! ---முதல்வனே.... வனே.....வனே...---
  • அரசாங்கம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய முயற்சிப்பது ஏன்? – லக்ஷமன் கேள்வி        by : Jeyachandran Vithushan 19 ஆவது திருத்தச்சட்டத்தை எந்த நோக்கத்திற்காக அரசாங்கம் இல்லாது செய்ய முற்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் 18 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முழுமையான அதிகாரம் கொண்ட ஒருவராகத்தான் இருந்தார். இதன் ஊடாக, அவர் நீதிமன்றங்களுக்குக் கூட அழுத்தம் பிரயோகிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இதனை இல்லாது செய்யும் நோக்கில்தான் நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தோம். அதில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன, சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் தொடர்பாக ஒரு நாள் முழுவதும் நாடாளுமன்றில் விவாதம் நடைபெற்றது. அனைவரின் ஒப்புதலுடன்தான் இது நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், தற்போது இதனை ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அதேநேரம், தங்களின் வேலைத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என அரசாங்கம் தற்போதுக் கூறிக்கொண்டிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கவும், ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. எமது 100 நாள் அரசாங்கத்தின்போது நாம் பாரிய வேலைத்திட்டங்களை செய்திருந்தும், இந்த அரசாங்கம் இன்று தடுமாற்றத்துடன்தான் ஆட்சி செய்து வருகிறது” என்றார். http://athavannews.com/அரசாங்கம்-19-ஆவது-திருத்தச/
  • யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், இப்படி மட்டக்களப்பில் வாழும் பூர்வீகத் தமிழர் என்றுமே வேறுபாடு காட்டியதில்லை, செயற்பட்டதும் இல்லை. வேறுபாடு காட்டிச் செயற்பட்ட அனைவருமே மட்டக்களப்புக்கு முலில்வந்து குடியேறிய யாழ்ப்பாணத்தவர்கள். பின்வந்தவர்கள் தங்களை மிஞ்சி வளர்ந்துவிடாதிருக்க பிரதேச வாதத்தை கையில் எடுத்திருந்தார்கள்.  மட்டக்களப்பில் பிதேசவாதம் பேசுபவர்களை ஆராய்ந்தால் நிச்சயம் அவர்கள் பூர்வீகம் யாழ்பாணமாக இருக்கும். 
  • இவர் மகிந்த மற்றும் கோத்தாபயவின் நெருங்கிய நண்பராச்சே? இவரை இப்போது எதற்காக மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லையே?  அடுத்ததாக, இவரை புதிதாக ஒரு பதவியில் அண்மையில்த்தான் மைத்திரிபால அமர்த்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல், முன்னால் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு விசாரணைகளிலிருந்து விலக்களிக்கும் சட்டமூலத்தை அமுல்ப்படுத்தவேண்டுமென்று மைத்திரியிடம் கோரிக்கை வைத்தவர்களின் இவர் முதன்மையானவர். அதற்கமைய, கோத்தாவின் அரசும் முன்னாள் ராணுவ புல்நாய்வுத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் செய்த மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான விசாரணைகளிலிருந்து விலக்களிக்கும் சட்டமூலத்தை முன்வைத்திருக்கிறது. சிலவேளை இவரை எல்லா வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக நீதிமன்றிற்கு அழைத்திருக்கலாம். 
  • இந்தியாவில் வெறும் ஐந்து ஆயிரம் ரூபாவுக்கு 10 வயது சிறுமியை  கன்னித்தன்மை உடையவர் என்று விற்கிறார்கள் .......... பார்க்கும்போதே அழுகைதான் வருகிறது.  https://www.aljazeera.com/programmes/101east/2020/01/india-child-sex-highway-200115224642104.html