Jump to content

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப் பிரசுரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Aava-Group-Notice.jpg

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப் பிரசுரம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது.

ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்பொழுது தலை தூக்கியதற்கான காரணங்கள் என்ன?

இது குறித்து பல முறைப்பாடுகள் ஆவா குழுவினருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுவரை காலமும் உண்மைக்குப் புறம்பாக கூறும் ஊடகங்களால் ஆவா குழு சமூக சீர்கேட்டாளர்களாகவே கூறப்பட்டு வருகின்றது.

எமது ஆவா அமைப்பானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் சமூக சீர்கேடுகளையும் அழிக்கும் அமைப்பாகவே நாம் இதை கட்டமைத்துள்ளோம்.

எமது அமைப்பின் 40 சதவீதமானோர் பல்கலைக்கழக மாணவர்களே. ஆகவே பல்கலைக்கழக பகிடிவதையினை தவிர்ப்பதற்கு ஆவா குழுவினால் Anti Ragging Committee உருவாக்கப்பட்டுள்ளது. மறைமுகமாகவோ நேரடியாகவோ பல தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருப்பது நீங்கள் அறிந்ததே.

அது மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய போதும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையும் நீங்கள் அறிந்ததே.

ஆகவே இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுமாயின் பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களின் உடற்பாகங்கள் ஈவு இரக்கமின்றி துண்டிக்கப்படும்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதையினை எமக்கு அறியத்தரலாம். அது பல விசாரணைகளின் பின்பு உண்மைத்தன்மை அறியப்பட்டு அதற்கான தண்டனைகள் வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG-6287.jpg

http://athavannews.com/யாழ்-பல்கலை-மாணவர்களுக்க/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆகவே இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுமாயின் பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களின் உடற்பாகங்கள் ஈவு இரக்கமின்றி துண்டிக்கப்படும்

காட்டு மிராண்டிகளின் காலத்திற்கு செல்லுகிறோமா? 

Link to comment
Share on other sites

2 hours ago, colomban said:

காட்டு மிராண்டிகளின் காலத்திற்கு செல்லுகிறோமா? 

ஆவா குழுவை உருவாக்கியது, சிறீலங்க அரசும், அதன் பாதுகாப்புப் படைகளுமே என்ற சந்தேகமுள்ளதாகச் செய்திகளும் வெளிவந்தன. உங்கள் சந்தேகமும் அதனை உறுதிப்படுத்துகிறது. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே உங்க குழுவில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தையும் இணையத்திலை போட்டா நல்லது. புதிதா வேறு ஆட்களும் உங்ககுழுவிலை மெம்பராக வசதியாயிருக்குமில்ல. உங்க குறூப்புக்கு  ஈமெயில், இணையத்தளம், பேஸ்புக் இன்ஸ்ரகிராம் வட்ஸ்அப் வேறு சமுகவலை இருந்தா விபரம் தரவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.