Jump to content

மகிந்த வடிக்கும் நீலிக் கண்ணீர்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வடிக்கும் நீலிக் கண்ணீர்!!

பதிவேற்றிய காலம்: Apr 11, 2019

கூட்­ட­மைப்பு அர­சைப் பாது­காப்­ப­தா­க­வும் தமிழ் மக்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு எதை­யுமே செய்­வ­தில்­லை­யெ­ன­வும் முத­லைக் கண்­ணீர் வடித்­தி­ருக்­கி­றார் எதிர்­கட்­சித் தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச.

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தற்கு அவர் இது­வரை என்ன செய்­தி­ருக்­கி­றார்? என்­பதை அவர் ஒரு கணம் சிந்­தித்­துப் பார்ப்­பது நல்­லது. தமி­ழர்­க­ளுக்கு எதை­யும் வழங்கி விடக்­கூ­டாது என்­ப­தில் மகிந்த தீவி­ர­மாக உள்­ளார். புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் அடிப்­பட்­டுப் போன­தற்­கும் இவரே முதன்­மைக் கார­ணம். இத்­த­கைய ஒரு­வர் தமி­ழர்­க­ளுக்கு அனு­தா­பம் காட்­டு­வ­தைப் போன்று நீலிக் கண்­ணீர் வடிப்­பதை எவ­ருமே நம்­ப­மாட்­டார்­கள்.

கூட்­ட­மைப்பு மீது
மகிந்­த­வுக்கு வெறுப்பு
கூட்­ட­மைப்­பின் மீது காழ்ப்­பு­ணர்வு கொள்­வ­தற்கு மகிந்­த­வி­டம் பல கார­ணங்­கள் உள்­ளன. கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் தாம் தோல்­வி­ய­டைந்­த­மைக்கு கூட்­ட­மைப்பே கார­ண­மென்­பதை அவர் நன்­க­றி­வார். அது­மட்­டு­மல்­லாது அர­சி­யல் குழப்ப நிலை­யின் போது அவ­ருக்கு வழங்­கப்­பட்ட தலைமை அமைச்­சர் பதவி பறிக்­கப்­பட்­ட­மைக்­கும் கூட்­ட­மைப்பு ரணி­லுக்கு வழங்­கிய ஆத­ரவே கார­ண­மென்­ப­தை­யும் மகிந்த மறந்­தி­ருக்­க­மாட்­டார். அது மட்­டு­மல்­லாது ரணில் தலை­மை­யி­லான அர­சைக் கவிழ்ப்­ப­தி­லேயே தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கும் அவர் கூட்­ட­மைப்பு அர­சுக்கு முண்டு கொடுத்­துக்­கொண்­டி­ருப்­பதை வெறுப்­பு­ட­னேயே பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­றார். இத­னால் தான் கூட்­ட­மைப்­பின் மீது சேறு­பூசி விடு­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார்.

அதிக நிதி ஒதுக்­கீட்­டில் வடக்கை அபி­வி­ருத்தி செய்­யும் வேலைத் திட்­டத்தை ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆரம்­பித்து வைத்­துள்­ளார். இதில் பலாலி வானூர்தி நிலை­யத்­தைப் பன்­னாட்டு வானூர்தி நிலை­ய­மாக மாற்றி அமைக்­கும் திட்­ட­மும் அடங்­கு­கின்­றது. கட்­டு­ நா­யக்­க­வி­லும் மத்­த­ள­வி­லும் இரண்டு பன்­னாட்டு வானூர்தி நிலை­யங்­கள் இருக்­கும்­போது பலா­லி­யில் இன்­னு­மொன்று தேவை­யில்­லை­யென மகிந்த எதிர்ப்­புக் குரல் எழுப்­பி­னார்.

ஆனால் வட­ப­கு­தி­யில் பன்­னாட்டு வானூர்தி நிலை­யம் அமைக்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­து­தான் அவ­ரது நோக்­க­மா­கும். பல்­லா­யி­ரக் கணக்­கான கோடி ரூபாக்­க­ளைச் செல­விட்டு பொருத்­த­மற்­ற­தொரு இடத்­தில் அவ­ரால் அமைக்­கப்­பட்ட மத்­தள வானூர்தி நிலை­யம் பயன்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யில் காணப்­ப­டு­வது ஏனோ அவ­ரது கண்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. பலாலி வானூர்தி நிலை­யம் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­மா­னால் வட­ப­குதி மக்­கள் அதிக பயன்­பெ­று­வார்­கள். தற்­போது அவர்­கள் அனு­ப­வித்து வரு­கின்ற பய­ணச்­சி­ர­மங்­க­ளுக்­கும் ஒரு விடிவு கிடைக்­கும். ஆனால் மகிந்­த­வுக்­கும் அவ­ரது தரப்­பி­ன­ருக்­கும் இதைப் பொறுத்­துக் கொள்ள முடி­ய­வில்லை. இத­னால்­தான் கூட்­ட­மைப்பு நடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அபி­வி­ருத்தி என்ற பெய­ரால் கோடிக் கணக்­கான பணத்­தைக் கொடுத்து ரணில் அவர்­களை வளைத்­துப் போட்­டுள்­ள­தாக மகிந்த வாய் கூசா­மல் கூறு­கி­றார். ஆனால் இதை எவ­ருமே நம்­ப­மாட்­டார்­கள். அரச தலை­வர் கூட கூட்­ட­மைப்­பி­னர் மீது வெறுப்­பில் இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. அத­னால் தான் அவர்­க­ளைச் சந்­திப்­ப­தற்கு அவர் நேரம் ஒதுக்­கித் தர­வில்லை.

பலிக்­க­வில்லை
பகல் கனவு
ரணில் தலை­மை­யி­லான அர­சி­னால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த ஆண்­டுக்­கான பாதீட்டை நிறை­வே­ற­வி­டாது தடுத்து விட்­டால் அரசு கவிழ்ந்து விடும். தாம் ஆட்­சி­யைக் கைப்­பற்றி விட­லா­மென மகிந்த கனவு கண்­டார். இதற்­கா­கத் தம்­மா­லி­யன்ற முயற்­சி­கள் அனைத்­தை­யும் மேற்­கொண்­டார். தமது எண்­ணத்­துக்­குத் தடை­யாக நிற்­கும் கூட்­ட­மைப்­பின் மீது அடுக்­க­டுக்­காக குற்­றச்­சாட்­டுக்­களை அவர் சுமத் திக் கொண்­டி­ருந்­தார். ஆனால் கூட்­ட­மைப்­பி­னர் மகிந்­த­வின் கருத்­துக்­க­ளைக் காதில் போட்­டுக்­கொள்­வ­தா­கவே தெரி­ய­வில்லை. அவர்­கள் தாம் நினைத்­த­தைச் சாதிப்­ப­தில் உறு­தி­யாக இருப்­பது தெரி­கின்­றது. அநே­க­மாக பாதீட்­டின் மூன்­றா­வது மீதான வாக்­கெ­டுப்­பின்­போது அர­சுக்கு சாத­க­மா­கவே கூட்­ட­மைப்பு வாக்களித்தது. அரசை முற்று முழு­தா­கப் பகைத்­துக் கொண்டு எதை­யுமே சாதிக்க முடி­யா­தென்­பது கூட்­ட­மைப்­புக்­குத் தெரி­யா­த­தல்ல. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தர்­ம­லிங்­கம் சித்­தார்த்­தன் இதைத் தெளி­வா­கக் கூறி­விட்­டார்.

ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, ஆர்.பிரே­ம­தாச, சந்­தி­ரிகா அம்­மை­யா­ளர், மகிந்த ராஜ­பக்ச ஆகி­யோர் இந்த நாட்­டின் அரச தலை­வர்­க­ளா­கப் பதவி வகித்­துள்­ள­னர். இவர்­க­ளது ஆட்­சிக் காலத்­தில் போரும் இடம்­பெற்­றுள்­ளது. இந்­தக் காலப் பகு­தி­யில் தமிழ் மக்­கள் மோச­மான அவ­லங்­க­ளைச் சந்­தித்­துள்­ள­னர். ஆனால் மகிந்த காலத்­தி­லேயே இறு­திப் போர் இடம்­பெற்­றது. இதன்­போது வர­லா­று­கா­ணாத மிக மோச­மான பாதிப்­புக்­க­ளைத் தமி­ழர்­கள் எதிர்­கொண்­ட­னர். பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் கொல்­லப்­பட்­ட­னர். படை­யி­னர் போர்க்­குற்­றங்­க­ளி­லும் மனித உரிமை மீறல்­க­ளி­லும் தாரா­ள­மாக ஈடு­பட்­ட­னர்.

ஆனால் ஒரு சிறிய சேதம்­கூட ஏற்­ப­டுத்­தா­மல் தாம் போரை முடி­வுக்­குக் கொண்டு வந்­த­தாக மகிந்த எந்­த­வி­த­மான கூச்­ச­மு­மின்­றிக் கூறி­னார். தெற்­கில் போரை வென்ற வெற்றி வீர­னாக வலம் வந்­தார். வடக்­கில் இழவு ஓசை எழுந்த போது தெற்­கில் ஜெய­பே­ரிகை முழங்­கி­யது. இத்­த­கைய ஒரு­வர்­தான் இன்று தமி­ழர்­க­ளுக்­காக நீலிக்­கண்­ணீர் வடிக்­கி­றார். தமி­ழர்­கள் மீது அக்­கறை கொண்­ட­வர் போன்று காட்­டிக் கொள்­கின்­றார். ஆனால் தமி­ழர்­கள் இத்­த­கை­ய­வர்­க­ளின் பசப்பு வார்த்­தை­க­ளுக்கு இனி­யும் மயங்க மாட்­டார்­கள். எது உண்மை எது பொய் என்­பதை அவர்­கள் நன்­றா­கவே அறி­வார்­கள்

 

https://newuthayan.com/story/08/மகிந்த-வடிக்கும்-நீலிக்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.