-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
குடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு.. பெரும் கலவரம்! டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பேருந்துகள் தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் நடக்கும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்தை போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்ல போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். போலீசார் அத்துமீறுகின்றனர்.. தினமும் போலீஸ் தடியடியும் மீறி மாணவர்களின் போராட்டம் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர். ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களின் இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசி தடியடி நடத்தினர். இந்நிலையில் திடீரென பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் 3 பேருந்துகள் தீக்கிரையாகின. மாணவர்கள் மறுப்பு இருப்பினும் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எதுவும் செய்யவில்லை. எங்கள் போராட்டத்தை திசை திருப்ப போலீசார் இப்படி புகார் அளிக்கிறார்கள் என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளனர். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாணவர்களை மோசமாக தாக்கியுள்ளனர். பெண் மாணவிகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோசமான நிலை அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு இருக்கும் வகுப்பறைகள், நூலகம் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். https://tamil.oneindia.com/news/india/protest-against-cab-escalate-in-delhi-3-buses-set-ablaze-by-protesters/articlecontent-pf422325-371444.html டிஸ்கி: யார் பெரியவா..அடிச்சு காட்டு ..👍 -
சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரை மோசடியில் குற்றவாளியாக நேற்று இனங்கண்டுள்ள அந்நாட்டு நீதிமன்றமொன்று அவரை இரண்டாண்டுகளுக்கு சீர்திருத்தல் மய்யமொன்றுக்கு அனுப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீருக்கு 75 வயதென்பதால், அதைக் கருத்திற் கொண்டே சிறைச்சாலையை விடுத்து அவர் சீர்திருத்த மய்யத்துக்கு அனுப்பப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரின் 30 ஆண்டுகள் ஆட்சிக்கெதிரான மாதக்கணக்கான வீதி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தால் அவர் பதவி அகற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீர் பதவியிலிருந்து அகற்றப்படும்போது கண்டுபிடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள், சூடானிய பவுண்ஸ்களையும் பறிமுதல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விதிமுறைக்கு மீறி வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தால் அதிகபட்ச 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சூடானின் டாபர் பிராந்தியத்தில் நிகழந்த இனவழிப்பு, போர்க்குற்றச்சாட்டு, மனிதத்துக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்காக 2009, 2010ஆம் ஆண்டுகளில் பிடிவிறாந்துகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மசடககக-சரதரததல-மயயததல-சடன-மனனள-ஜனதபத/50-242480
-
நான் இப்போது சொல்கிறேன், குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் ஓர் நாள் வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகி என்று கூறுவீர்கள். அப்போது எண்னை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், சிங்களம் ஒருபோதும் வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகி என கூறவும் இல்லை , கூறவும் போவதில்லை . ஏனென்றால் அவர்கள் சிங்களவர் நாங்கள் தமிழர்
-
தாங்கள் சொல்லவருவதை தெளிவாகச் சொல்லாமே ....? ஏன் இந்த இழுவை ????????
-