Jump to content

சமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது?

14.jpg

நவீனா

ஒருமுறை கடற்கரையில் காலை நடைப்பயிற்சியின் போது, சிறுமி ஒருத்தி அந்தரத்தில் கயிற்றின் மீது நடந்தவாறு வித்தை காட்டிக்கொண்டிருந்தாள். கீழே ஒரு பத்துப் பதினைந்து பேர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கருகில் ஓர் அப்பாவும், இரண்டு மகன்களும் நின்றுகொண்டிருந்தனர். இரண்டு மகன்களில் ஒருவன் சற்றே பெரிய பையனாகத் தென்பட்டான். மற்றவன் சுமார் நான்காம் வகுப்பு படிக்கும் பையன் போல் தோன்றினான். அனைவரும் ஆச்சரியமாக அந்தச் சிறுமியைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம், இந்தச் சிறுவன் மட்டும் எந்த சலனமுமின்றி கடல் அலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

இதை கவனித்த அவனது அப்பா, “டேய், இங்க பாரு! இந்த குட்டிப் பொண்ணு எவ்வளவு துணிச்சலா அந்த கயிறு மேல நடக்குறா” என்றார். அதற்கு அந்தச் சிறுவன், “இதப்போய் அதிசயமா பாக்குறீங்க? இதெல்லாம் கிராபிக்ஸ் பா” என்றான்.

அருகிலிருந்த எனக்கு இந்தப் பதில் சற்று சிரிப்பூட்டினாலும், அதன் பின்னணியைப் பற்றிச் சிந்திக்கவும் வைத்தது. மெய்நிகர் உலகத்தின் பிடியிலிருக்கும் அடுத்த தலைமுறை நிஜத்தைக்கூட மெய்நிகராகவே பார்க்கப் பழகிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் மனித வாழ்க்கையின் முக்கியமான அங்கங்களில் ஒன்றாக மாறிவிட்ட சமூக வலைதளங்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்வது, காலத்தின் கட்டாயமாகவுமிருக்கிறது.

சமூக வலைதளங்களில் மனித செயல்பாடுகள், சமூக வலைதளங்கள் மனிதன் மீது செலுத்தும் உளவியல் ரீதியான ஆதிக்கம், இவை சார்ந்த மனித நடவடிக்கைகளின் விளைவாக ஏற்படும் சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, உடல் ரீதியான மாற்றங்கள், அதன் பின்னணியில் அன்றாடம் நிகழ்ந்துவரும் சம்பவங்கள், முன்னேற்றங்கள் மற்றும் விபரீதங்கள் எனத் தொடுதிரைகளின் பின்னிருந்து செயல்பட்டுவரும் சமூக வலைதளங்களை பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டியிருக்கிறது.

2007ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகப்படுத்திய பின்னர், ஏறத்தாழ 12 ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களின் பயன்பாடு சற்று அதிகமாகி, இன்று உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், ஏதேனும் ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது. வெறும் 12 ஆண்டுகளில் சமூக வலைதளங்கள் மக்களிடம் ஏற்படுத்திக்கொண்டுள்ள நேரடித் தொடர்பின் சதவிகிதம் சற்று மிரட்சிகொள்ளச் செய்வதாகத்தான் இருக்கிறது. இவ்வளவு வேகமாக உலகம் முழுவதும் பரவிவிட்ட இந்தச் சமூக ஊடகங்கள், உலகிற்கான முன்னேற்றப் பாதையில் பெரும் மைல் கல்லாக அமைந்தாலும் பல ஆபத்துகளையும் சுமந்தபடியேதான் நடைபோடுகின்றன. இதுவரை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எந்த ஒரு கண்டுபிடிப்பும், அறிவியல் முன்னேற்றமும், நேர்மறை, எதிர்மறை என இரு வித விளைவுகளையும் ஏற்படுத்திச் செல்வது இயல்பானதுதான்.

14a.jpg

சமூக வலைதளங்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மக்களிடம், மிகக் குறுகிய காலத்தில் சென்று சேர்ந்தது மட்டுமன்றி, இன்றளவும் பயன்படுத்தப்பட்டு, இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்களை நாள்தோறும் தன்பால் ஈர்த்துவருகிறது. நாமும், நம் குடும்பமும், நம் சுற்றத்தாரும், நம் ஊரும், நம் நாடும், நம் உலகமும் சமூக வலைதளங்களோடு ஒன்றோடு ஒன்றாய்ப் பிணைக்கப்பட்டிருக்கும் சூழலில், அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து தெளிந்து, பின் அதை அணுகுவதே முறையான அணுகுமுறையாக இருக்கக்கூடும்.

திரைகளின் உலகம் செயலிகளால் நிரம்பியுள்ளது. அனைத்திற்குமான செயலிகள் உருவாக்கப்பட்டு, அவை அன்றாட வாழ்வில் எல்லா வகையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெவ்வேறு இடங்களின் தேவை சார்ந்து அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களும், செயலிகளும் வேறுபடுகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், யூடியூப் போன்ற செய்தி மற்றும் இன்ன பிற தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் சமூக வலைதளங்களும், இன்ஸ்டகிராம் போன்ற புகைப்படங்கள், காணொலிகளைப் பதிவேற்றக்கூடிய சமூக வலைதளங்களும், டிக்டாக் போன்ற பொழுதுபோக்குக்கான சமூக வலைதளங்களும், பப்ஜி போன்ற இணைய விளையாட்டுகளும், ஸ்கைப் போன்ற காணொலி அழைப்புக்கான வலைதளங்களும், டிண்டர் போன்ற இணை தேடும் வலைதளங்களும் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதிகப்படியாக பயன்படுத்தப்படும் வலைதளங்களாக இருக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் மனித உளவியலின் மீது அதற்கே உரிய தனித்துவமான, முற்றிலும் ஒவ்வொன்றிலிருந்து வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தி, மனிதனைத் தன்பால் ஈர்த்துக்கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கின்றன. அத்தனை அன்றாடத் தேவைகளுக்கும் சமூக வலைதளங்களை அணுகிப் பழகிவிட்டபடியால், இந்த ஈர்ப்பிலிருந்து விடுபடுவது இன்றைய சூழலில் சற்று மலைப்பான காரியமாகவே தோன்றுகிறது.

இருப்பினும் சமூக வலைதளங்களின் பயன்பாட்டுக்கான அளவுகோல் குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியம். இந்தக் கருத்தை மையமாக வைத்து, உண்மை நிகழ்ச்சிகள், உதாரணங்கள், பதிவுகள், செய்திகளின் அடிப்படையில் சமூக வலைதளங்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியே இந்தத் தொடர். சமூக வலைதளங்களைப் புரிந்துகொள்வது என்பது ஒரு வகையில் நம்மைப் புரிந்துகொள்வதுதான் என்பதால் இது மிகவும் அவசியமாகிறது. உண்மை நிகழ்வுகள், உதாரணங்கள், பதிவுகள், செய்திகளை முன்வைத்து ‘சமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது?’ என்ற கோணத்தில் அலசுவோம்…

 

 

https://minnambalam.com/k/2019/04/11/14

 

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

இவை ஒவ்வொன்றும் மனித உளவியலின் மீது அதற்கே உரிய தனித்துவமான, முற்றிலும் ஒவ்வொன்றிலிருந்து வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தி, மனிதனைத் தன்பால் ஈர்த்துக்கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கின்றன. அத்தனை அன்றாடத் தேவைகளுக்கும் சமூக வலைதளங்களை அணுகிப் பழகிவிட்டபடியால், இந்த ஈர்ப்பிலிருந்து விடுபடுவது இன்றைய சூழலில் சற்று மலைப்பான காரியமாகவே தோன்றுகிறது.

உண்மை தான். சமூகவிலங்கான மனிதன், சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி மந்தைக்கூட்டமாக மாறி வருகிறான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பகிருங்கள்......பாப்போம் என்னதான் நடக்குது என்று.....!  😁

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைதளங்களின் மீது மோகம் எங்கிருந்து வந்தது?

7.jpg

நவீனா

சமூக வலைதளங்கள், பொருட்களைப் பெரிய சந்தையில் வைத்து அதிகப் பொருளீட்டப் பயன்படுகின்றன. கருத்துச் சுதந்திரம் தருகின்றன. திறமைகளை வெளிக்காட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்க வகை செய்கின்றன. பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கின்றன. ஒரே நேரத்தில் பெரும்பான்மையான மக்களோடு தொடர்பில் இருக்கச் செய்கின்றன. ஆனால், இதுபோன்ற காரணங்கள் மட்டுமே சமூக வலைதளங்களின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணங்களாகத் தோன்றவில்லை. ஏனெனில், சமூக வலைதளங்களை வணிகச் சந்தையாகப் பயன்படுத்தக்கூடியவர்கள் சுமார் 20 சதவிகிதம் பேர் மட்டுமே. மீதமுள்ளோர் வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவே வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அந்தக் காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், டோபமைன் (Dopamine) பற்றி ஒரு சிறிய விளக்கம். ஓர் இளைஞன் ஓர் இளம்பெண்ணை முதன்முறையாகப் பார்க்கும்போதே அந்தப் பெண் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். 'இவள்தான் என் மனைவி, என் பெற்றோரின் மருமகள், என் குழந்தைகளின் தாய்', என்றெல்லாம் கற்பனை செய்யும் அளவுக்குத் தூண்டப்படுகிறான். சூதாடும்போதும், புகை பிடித்தல், மது அருந்துதலின்போதும், அதிகமாக உண்ணும்போதும், ஷாப்பிங் செய்யும்போதும், போதை வஸ்துக்களைப் பயன்படுத்தும்போதும், இவ்வாறான எந்த ஒரு நடவடிக்கையில் ஈடுபடும்போதும், அதன் விளைவாக ஒருவித இன்பமான உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வினால் தூண்டப்பட்டுத்தான் இவ்வாறான நடவடிக்கைகளில் திரும்பத் திரும்ப ஈடுபடுகிறோம்.

இந்த உணர்ச்சியின் மூலமாக மனித மூளைக்குள் இருந்து தூண்டிவிடுவது டோபமைன் என்னும் வேதிப்பொருள். இதுவே மனிதன் அடிமையாக இருக்கும் அத்தனை பழக்க வழக்கங்களுக்கும் ஆதிமூலம். சொல்லப்போனால், மனித மூளையில் இயற்கையாகவே உற்பத்தி ஆகும் ஒரு போதை வஸ்துதான் டோபமைன். மனிதனின் தனிப்பட்ட விருப்பமாகக் கருதப்படும் அனைத்தும் மனித மூளையில் உற்பத்தியாகும் டோபமைனால் உந்தப்படுபவையே.

7a.jpg

'சோஷியல் மீடியா டோபமைன்' என்னும் வழக்காறு சமீபத்தில் பிரபலமாகிவருகிறது. மனிதனுக்கு இயல்பிலேயே தன்னைப் பற்றிப் பேசுவது மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. தன்னைப் பற்றியும், தான் சார்ந்த விஷயங்களையும் அனைவரும் புகழ்ந்து பேச வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மனிதனுக்கு என்றும் குறைவதே கிடையாது. இதுவும் ஒருவகையில் டோபாமைனால் தூண்டப்படும் விருப்பம்தான். இதன் காரணமாகவே ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய விஷயங்களை அதிகம் பகிரக்கூடிய ஃபேஸ்புக் (Facebook), வாட்ஸ் அப் (Whatsapp), ட்விட்டர் (Twitter), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) போன்றவை உலகம் முழுவதும் இணையப் பயன்பாட்டில் முதலிடத்தில் இருக்கின்றன.

நேருக்கு நேராக, முகம் பார்த்து ஒருவரிடம் நிகழும் உரையாடலில் 30 முதல் 40 சதவிகிதம் ஒருவர் தன்னைப் பற்றி பேசுகிறார். இவ்வகை உரையாடல்களில், இருவரும் மாறி மாறிப் பேசும்போது, ஒருவர் மட்டுமே தன்னைப் பற்றிப் பேசும்படியாக நிஜவுலக உரையாடல்கள் இருப்பதில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொருவரும் 80 சதவிகிதம் தன்னைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். இன்னொருவரும் பேசுவது என்பது சமூக வலைதள உரையாடல்களில் நிகழ்வதில்லை. இதனால் அவர்கள் ஒரு வகையான சுய மிகை விருப்பத்துக்கு ஆளாகின்றனர். இது மனித மூளையின் டோபாமைனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இந்த சுய மிகை விருப்பம் நாளடைவில் தன் பார்வையாளர்களின் எண்ணிக்கை, தன்னைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, லைக்குகள், கமெண்ட்டுகள், ஷேர்கள், மறு பதிவுகள் என்பன போன்றவற்றின் மீதான மிகை விருப்பமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் நிஜ மனிதர்களைக் காட்டிலும், சமூக வலைதளத்தில் உலவும் மனிதர்களின் மீது அதிக ஆர்வம் காட்டத் தொடங்குவதையே 'சமூக வலைதள டோபாமைன்' என்று குறிப்பிடுகின்றனர்.

டச்சுக் கட்டடக் கலைஞர்கள் வடிவமைத்த நிறுவனம் ஒன்றில், அறையின் மேசைகள் அனைத்தும் மேற்கூரையோடு பொருந்துமாறு வடிவமைத்திருந்தனர். முதல் நாள், அந்தப் புதிய கட்டடத்தில் பணியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மின்னஞ்சல் அனுப்புவதும், வலைதளங்களில் பதிவிடுவது என இருந்தவர்கள் திகைக்கும்படி, மாலை 6 மணியானதும் மேசைகள் மடங்கித் தானாகவே மேற்கூரையுடன் சேர்ந்து பொருந்திவிட்டன. அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. நிறுவன அதிபரிடம் இதுபற்றி அவர்கள் விளக்கம் கேட்டபோது அவர், “நீங்கள் இந்தத் திரைகளுக்கு முன் அமர்ந்து உழைப்பதெல்லாம், உங்கள் குடும்பங்களுக்காகத்தான். அலுவலக நேரம் முடிந்த பின், அப்படிப்பட்ட குடும்பத்தோடு நீங்கள் செலவிட வேண்டிய நேரத்தை, இந்தத் திரைகளின் முன்பு அமர்ந்து செலவிடுவது எந்த விதத்தில் சரியாகும்?” எனக் கேள்வியெழுப்பினார்.

எந்த அறிவியல் முன்னேற்றத்தையும் மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்வரை அது பற்றி அதிகமாகக் கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால், அதன் கட்டுப்பாட்டில் மனிதன் இருந்தால் என்றுமே விபரீதம்தான்.

வலைய வரலாம்!

 

https://minnambalam.com/k/2019/04/18/7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டீவ் ஜாப்ஸின் குழந்தைகளும் ஆப்பிள் ஐபாடும்!

15.jpg

நவீனா

உலகம் முழுவதும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் இணையமும் சமூக வலைதளங்களும் இல்லாமல் சக மனிதர்களோடு உரையாடுவதும், அவர்களின் வாழ்க்கை முறைகளைத் தெரிந்துகொள்வதும், நம்மை பற்றிய விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும் சற்றுக் கடினமான காரியமாகத்தான் மாறிவிட்டது. நேரில் சந்தித்து, பழகி, நட்பை வளர்த்துக்கொள்ளும் பலரையும் அன்றாடம் நேரில் மட்டுமே சந்தித்து உரையாடுவது என்பது இயலாத ஒன்று.

வெவ்வேறு நாடுகள், ஊர்கள், மொழிப் பின்புலத்தைச் சேர்ந்தவர்களைக்கூடச் சமூக வலைதளங்கள் ஒன்றிணைக்கின்றன. ஒருவர் மற்றவருடன் தொடர்பில் இருக்கப் பெரும் உதவி புரிகின்றன. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தித் தங்கள் பொருட்களை விற்பனை செய்பவர்களும், தங்கள் திறமைகளை உலகுக்கு வெளிக்காட்டியவர்களும், பல புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.

ஆனால், இப்படிப்பட்ட ஏதேனும் ஒரு குறிக்கோளோடு அல்லது ஏதேனும் ஒரு தேவைக்காகச் சமூக வலைதளங்களைத் திறம்படப் பயன்படுத்திவருபவர்கள் வெகு சிலரே. மீதமுள்ளவர்கள் எவர் ஒருவரையாவது கண்காணிக்கவோ அல்லது எல்லோரும் பயன்படுத்துவதால் நாம் பயன்படுத்தாமல் இருப்பது தவறு என்கிற எண்ணத்தால் தூண்டப்பட்டோ சமூக வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்குகின்றனர்.

சமூக வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்கிய பின்னர், பெரும்பாலானவர்கள் அதில் முழுமையாக மூழ்கிவிடுவதைப் பார்க்க முடிகிறது. தனது குடும்பம், உறவினர்கள் என மற்றவர்களோடு செலவிடப்பட வேண்டிய நேரம் முழுவதையும் வலைத்தளங்களிலேயே செலவிட ஆரம்பித்துவிடுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான வலைதள நட்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலும், அவர்களோடு உரையாடுவதிலும் அதிக முனைப்பு காட்ட ஆரம்பித்துவிடுகின்றனர். இந்த எண்ணம் அதீதமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் குடும்பத்தில் உள்ளவர்களையே தனது போக்குக்கு இடையூறாக எண்ணுமளவுக்கு முற்றிவிடுவதையும் சிலரிடம் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் ஒரு சுவராக மாறிவிடுகின்றன. வலைதளங்கள் காட்டும் சமூகத்தையே உண்மையானது என நம்பி, நிசர்சனத்தை விட்டு வெகு தொலைவுக்கு அவர்கள் நகர்த்தப்படுகிறார்கள்.

இந்த வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் சிலர் இவ்வாறு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதன் தாக்கம் பல தளங்களில் எதிரொலிப்பதால் இந்தச் சூழலை மேம்படுத்தவும், அதில் ஈடுபடும் மனிதர்களில் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்தப் புள்ளியில்தான் இத்தகைய அறிவியல் முன்னேற்றங்களுக்குப் பின்புலமாக இருந்தவர்கள் இந்த அறிவியலை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை உற்று நோக்க வேண்டியதாகிறது.

15a.jpg

ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்குக்கு (Mark Zuckerberg) ஃபேஸ்புக் கணக்கு இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அவருடன் பலரும் ஃபேஸ்புக் நண்பர்களாகவும் இருக்கின்றனர். “மார்க் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார், நான் மார்க்கோடு ஃபேஸ்புக் நண்பராக இருக்கிறேன்” என்றெல்லாம் பலரும் பெருமையாகப் பேசுவதைப் பார்த்திருப்போம். தனது கண்டுபிடிப்பான முகநூலை அவர் பயன்படுத்துவதில் எந்தவோர் ஆச்சரியமும் இல்லையென்றாலும், அவர் முகநூலுக்கும், தனது குடும்பத்திற்குமான பங்களிப்பை எவ்வாறு வரையறுத்துக்கொள்கிறார் என்பதே இங்கு முக்கியம்.

முகநூலையே பிரதான வாழ்வாக்கிக்கொண்டு, அதிலிருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் மார்க், தனக்குக் குழந்தை பிறந்தபோது மூன்று மாத காலம் தனது ஃபேஸ்புக் கணக்கை டிஆக்டிவேட் (Deactivate) செய்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மட்டுமே தனது நேரத்தைச் செலவிடப்போவதாக அறிவித்தார்.

2010இல் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) ஆப்பிள் ஐபாடுகளை அறிமுகம் செய்துவைத்து, அதன் திறன் குறித்து உரையாற்றும்போது, “தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களைக் காட்டிலும் இந்த ஐபாடுகள் பன்மடங்கு திறனுடன் வேலை செய்யக்கூடியவை, அவற்றைவிடச் சிறந்த பிரவுஸிங் அனுபவத்தைத் தர வல்லவை” என்று குறிப்பிட்டார். அதை உடனே வாங்கிப் பயன்படுத்துவதற்குப் பலரும் முனைப்போடு காத்திருந்தனர்.

உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபாடுகளின்மேல் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நேரம், ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையிலிருந்து ஐபாடுகள் குறித்த பேட்டிக்காக ஒரு பத்திரிகையாளர், ஸ்டீவ் ஜாப்ஸை அணுகுகிறார். பேட்டியின் முடிவில் பத்திரிகையாளர் அவரிடம், “உங்கள் குழந்தைகள் ஐபாடுகளை மிகவும் விரும்பிப் பயன்படுத்துவார்கள்தானே?” என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ், “இல்லை, எங்கள் வீட்டில் குழந்தைகள் ஐபாடுகளைப் பயன்படுத்துவதே கிடையாது. அவர்கள் எவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பெரியவர்கள் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறோம்” என்று பதிலளித்தார்.

மனிதர்களின் தேவைகள் எவையெவை என்பதை இன்றைய சூழலில் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே தீர்மானிக்கக்கூடிய கட்டத்துக்கு மனித வாழ்க்கை நகர்த்தப்பட்டுவிட்டது. எந்தவோர் அறிவியல் முன்னேற்றமும் குடும்பத்தையும், சமூகத்தையும் தனி மனிதனிடமிருந்து பிரித்து வைப்பதற்காக உருவாக்கப்படுவதில்லை, மாறாக அவர்களை சமூகத்தின் சிறந்த அங்கமாக மாற்றும் நோக்குடனே உருவாக்கப்படுகிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவோரின் கையில்தான் அதன் நோக்கம் வழிதவறிப் போக நேர்ந்துவிடுகிறது. தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோமா, இல்லை தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயமும் இன்று அதிகரித்துள்ளது.

 

https://minnambalam.com/k/2019/04/25/15

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமே வகுத்துக்கொள்ள வேண்டிய எல்லைகள்!

19.jpg

சமூக வலைதளங்களும் நாமும் - 4: நவீனா

ஒரு தனிநபர் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று முதல் நான்கு மணி நேரம் திரைகளுக்கு முன்பாகச் செலவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு தனிநபரின் இரண்டு மணி நேரமாவது சமூக வலைதளங்களில் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில், வாழ்நாளின் கணிசமான பகுதி சமூக வலைதளங்களில் செலவிடப்படுவது புலப்படுகிறது.

இயல்பாகவே எவரும் தன்னுடைய நேரத்தை விரயம் செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால், நேரம் குறித்து மிகுந்த கவனம் உள்ளவர்கள்கூட, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது மட்டும் காலம் விரயமாவதை உணராமல் தொடர்ந்து அதில் புழங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ‘இப்பத்தான் இன்ஸ்டாகிராம திறந்தேன், அதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆயிடுச்சு, நேரம் போனது தெரியலையே’ என்று எந்த ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும்போதும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும்படி அவ்வப்போது அமைந்துவிடுகிறது. சமூக வலைதளங்கள் 'ஸ்டாப்பிங் க்யூஸ்' அதாவது 'நிறுத்தல் சமிக்ஞைகள்' இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருப்பதே இத்தகைய நிலைக்குக் காரணமாகும்.

ஸ்டாப்பிங் க்யூஸ் என்பது என்ன?

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களிடம் பெரும்பாலும் வாசிப்பு, இசை, நடனம், ஓவியம், விளையாட்டு என இன்னும் பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன (அவை இன்னும் இருக்கத்தான் செய்கின்றன). அவற்றில் பெரும்பாலானவை மிகவும் ஆரோக்கியமானவையாகவும் மனதுக்கு உற்சாகமூட்டி அவர்கள் ஈடுபடும் வேலைகளைத் திறம்பட நிறைவேற்றத் தேவையான நேர்மறை எண்ணங்களைத் தூண்டுபவையாகவும் இருந்தன. அப்போதும் அவர்களிடம் தொலைக்காட்சி எனும் திரை இருந்தது. இருப்பினும், அது அவர்களுடைய மற்ற ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும், அதற்காக அவர்கள் ஒதுக்க வேண்டிய நேரத்தையும் இன்றைய அளவுக்குப் பாதிக்கவில்லை. ஆனால், இன்று கைபேசித் திரைகளுக்கும், கணினித் திரைகளுக்கும் முன்பாகச் செலவிடப்படும் நேரமோ பெரும்பாலும், ஆரோக்கியமான மற்ற பொழுதுபோக்குக்காகவும், குடும்பத்துக்காகவும் செலவிடப்பட வேண்டியதாகும். சமூக வலைதளங்களின் எழுச்சி பல பாரம்பரியப் பொழுதுபோக்குகளை ஏறக்குறைய அழித்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், அதை நாம் உணர்வதற்கான சிறு இடைவெளியைக்கூடச் சமூக வலைதளங்கள் நமக்குத் தரத் தயாராக இல்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள், நாளிதழ்கள், புத்தகங்கள் என்பன போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறுத்தல் சமிக்ஞைகளோடுதான் வருகின்றன. அதாவது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ முடிந்தவுடன் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அதன் தொடர்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பப்படும் என அறிவுறுத்தப்படும். அதைப் பார்க்கும்போது மற்ற வேலைகளைப் பார்க்கலாம் என்பது நினைவுபடுத்தப்படுகிறது என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். நாமும் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு மற்ற வேலைகளைத் தொடர ஆரம்பித்துவிடுவோம். ஒரு நாளிதழையோ அல்லது புத்தகத்தையோ வாசிக்கும்போதுகூட அதன் கடைசிப் பக்கத்தை அடைந்ததும் இதே போன்ற உணர்வுதான் ஏற்படும்.

19a.jpg

முடிவின்றித் தொடரும் வலை வீச்சு

ஆனால், சமூக வலைதளங்களில் நிறுத்தல் சமிக்ஞைகள் இருப்பதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் என அனைத்து சமூக வலைதளங்களும் முடிவற்றவை. அதாவது ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது டைம்லைனை ஸ்க்ரோல் (scroll) செய்யும்போது அது முடிவின்றி மேலே நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதில் தோன்றும் பதிவுகளுக்கு எல்லை என்பதே கிடையாது. அது தரையற்ற கடலின் ஆழத்தைப் போலப் போய்க்கொண்டே இருக்கக்கூடியது. இங்கு சமூக வலைதளங்களுக்குள்ளாக இருக்கும் முக்கியமானதோர் ஒற்றுமையாகவும் நிறுத்தல் சமிக்ஞைகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குக் காரணம், எந்தவொரு சமூக வலைதளமாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துவோர் அதில் செலவிடும் நேரம்தான் அதன் முதலீடு. எவ்வளவு அதிகமாக நேரத்தை ஒருவர் ஒரு சமூக வலைதளத்தில் செலவிடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக வருமானத்தை அந்தச் சமூக வலைதளம் ஈட்ட முடியும். எனவே, எந்த ஒரு சமூக வலைதளத்தையும் உருவாக்கியவர்கள் அதன் அடிப்படை மூலதனமான பயனாளி ஒருவர், தனது நேரத்தை அவர் விரயம் செய்வதை உணராத வகையில்தான் உருவாக்கியிருக்கின்றனர். இது நாம் சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் வைத்திருப்பதோடு, நாம் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டுவதையும் தடுக்கிறது. மற்றொருவர் பொருளீட்டுவதற்காக நமது நேரம் உறிஞ்சப்படுவதோடு அல்லாமல், அதை நாம் முற்றிலும் உணர்ந்துவிடாத வண்ணம் ஒரு மாயைக்குள்ளும் அது நம்மைச் சிக்க வைத்துவிடுகிறது.

மேட்ரிட் (Madrid) நகரில் ஒரு தாய் தனது ஆறு மாதக் குழந்தையைக் குளியல் தொட்டியில் கிடத்திக் குளிப்பாட்டுவதற்காகத் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிடுகிறார். அந்த நேரத்தில் கைபேசி சத்தம் எழுப்புகிறது. ஃபேஸ்புக் நோட்டிபிகேஷன் பார்க்கும் ஆர்வ மிகுதியில், தனது கைபேசியை எடுத்து, பார்த்த மாத்திரத்தில் திரும்பி வந்துவிடலாம் என அடுத்த அறைக்கு விரைகிறார். தனது டைம்லைனில் புதிய பதிவுகளைப் பார்த்ததும் அவற்றை ஸ்க்ரோல் செய்ய ஆரம்பித்த அவர் நேரம் போவது தெரியாமல் அதில் மூழ்கிவிடுகிறார். குழந்தையைப் பற்றிய நினைவு சிறிதும் அவருக்கு வரவில்லை. அவர் ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்தபோது, குழந்தை தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறி இறந்துவிடுகிறது. நீண்ட நேரத்துக்குப் பின்பு இதனைத் தெரிந்துகொண்ட தாய் கதறி அழுகிறார்.

சமூக வலைதளங்கள் எல்லையற்று நீண்டுகொண்டே செல்வதால், அவற்றுக்கான எல்லையை நம் தேவைக்கேற்ப நாமே தீர்மானித்துக்கொள்வது இதுபோன்ற பல ஆபத்துகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும்.

 

https://minnambalam.com/k/2019/05/02/19

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பிய திசையெல்லாம் தசாவதானிகள்!

1.jpg

சமூக வலைதளங்களும் நாமும் - 5: நவீனா

உலகம் கண்ட தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரும் சார்பியல் கோட்பாட்டைத் தந்தவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அறிவியலுக்காகத் தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடலை முழுமையாகப் பரிசோதனை செய்துவிட்டு, அவரது தமனியில் உட்புறமாக ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், சிறு அறுவை சிகிச்சை மூலம் அதை எளிதில் குணப்படுத்திவிட முடியும் என்றும் கூறினார்கள்.

அதற்கு அவர், “அறிவியலைக் கொண்டு செயற்கையாக வாழ்நாளை நீட்டிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? நான் போக வேண்டிய நேரம் வரும்போது போவதையே விரும்புகிறேன். இந்த உலகில் எனக்கான கடமைகளை நேர்த்தியாகச் செய்து முடித்தது போலவே, எனது இறப்பையும் நேர்த்தியாக ஏற்றுக்கொள்வேன்” என்றார். மிகக் குறுகிய காலமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட அவர், அறுவை சிகிச்சை எதுவும் செய்துகொள்ளாமல் 76ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

அறுவை சிகிச்சையின் மூலம் தன் வாழ்நாளை நீட்டிப்பதையே இயற்கைக்கு விரோதமானதாக ஐன்ஸ்டைன் கருதினார். ஆனால், இன்று அறிவியலும் அதன் முன்னேற்றங்களும் இயற்கையிலிருந்தும் இயல்பான வாழ்விலிருந்தும் பல்வேறு வகையில் நம்மைப் பிரித்து நெடுந்தூரம் கொண்டுசென்றுவிட்டன. கைபேசிகளும் சமூக வலைதளங்களும் மனித வாழ்க்கையை ஆக்கிரமிக்க நேர்ந்ததிலிருந்து நாம் யதார்த்தத்தை விட்டு வெகு தொலைவில் நிற்பதாகவே தோன்றுகிறது.

அறிவியல் மேதைகள்கூடத் தங்களின் வாழ்க்கையை அறிவியலின் ஆதிக்கத்திலிருந்து சற்று விலக்கியே வைத்திருந்திருக்கின்றனர். ஆனால், நாம் சில விநாடிகள்கூட இன்று கைபேசிகளையும் சமூக வலைதளங்களையும் பிரிந்திருக்க விரும்புவதில்லை.

சீத்தலைச் சாத்தனார் ஓர் அஷ்டாவதானி என்றும் அவர் ஒரே நேரத்தில் எட்டுப் பேரின் கேள்விகளை உள்வாங்கிக்கொண்டு பதில் அளிக்கக் கூடியவர் என்றும் கேள்விப்பட்டிருப்போம். இதனையே ‘மல்டிடாஸ்கிங்’ (Multitasking) என்று அழைக்கின்றனர். அத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த ஒருசிலரை இப்போதும் உலகம் பிரமிப்போடுதான் பார்த்துவருகிறது. இன்று சமூக வலைதளங்கள் நம்மில் பலரையும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக மாற்றிவிட்டது. ஆனால், இந்த மாற்றம் ஆக்கபூர்வமான வகையில் மனிதனை மாற்றியதாகவோ அல்லது மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடியதாகவோ தென்படவில்லை.

1a.jpg

அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, புத்தகம் படிக்கும்போது, சமையல் செய்யும்போது, இன்னும் வேறு எந்த ஓர் அலுவலில் ஈடுபடும்போது, ஏன் இரவு உறக்கத்தின் இடையில் விழிக்கும்போதுகூட சமூக வலைதளங்களின் நோட்டிஃபிகேஷனைப் பார்ப்பது இன்று இயல்பானதாகிவிட்டது. இதனால் சமூகத்துக்கும் தனிமனிதருக்கும் எதிர்மறை விளைவுகளே அதிகமாகிவருகின்றன.

இந்த விதமான ‘மல்டிடாஸ்கிங்’ மனித மூளையைச் சேதப்படுத்துகிறது என்பது மருத்துவ அறிவியல் ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. மனித மூளை ஒரு நேரத்தில் ஒரு வேலையின் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்கும்போது, திடீரென இன்னொரு புதிய செயல்பாட்டின்மீது கவனம் திசை திருப்பப்படுவதால் அதன் செயல்படும் திறன் குறைந்துவிடும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. மேலும், ஒரு வேலையை அதன் மீதான ஈடுபாடு குறையாமல் செய்து முடிக்க ஆகும் நேரத்தைவிட, மற்ற வேலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிக்க அதிக நேரம் தேவைப்படுவதால், மல்டிடாஸ்கிங்கின்போது கால விரயமாவதையும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, அதனிடையே எண்ணற்ற வேலைகளில் ஈடுபடுவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு, எடுத்த வேலையைத் திறம்பட முடிக்க முடியாத சூழலும் ஏற்படுகிறது. இத்தகைய இடையூறுகளால் சுயமுன்னேற்றத்திலிருந்து சமூக முன்னேற்றம் வரை பலதரப்பட்ட பாதிப்புகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

1b.jpg

மல்டிடாஸ்கிங் பல உளவியல் ரீதியான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. அவற்றுள் ஒன்று ஃபேண்டம் வைப்ரேஷன் சிண்ட்ரோம் (Phantom vibration syndrome) எனும் ஒரு வகை உளவியல் பாதிப்பு. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோரிடம் இது இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மிக முக்கியமான பணியில் இருக்கும்போது அல்லது அலுவலகக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதுகூட பலர் தங்கள் கைபேசிகள் வைப்ரேட் ஆகாமலேயே, வைப்ரேட் ஆனதாக உணர்ந்து கைபேசியை எடுத்துப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். உண்மையில் கைபேசி வைப்ரேட் ஆகாதபோதும் இவ்வாறான கற்பனையில் கைபேசிகளை எடுத்துப் பார்க்கும் நிலையையே ‘ஃபேண்டம் வைப்ரேஷன் சிண்ட்ரோம்’ என்கின்றனர்.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 89 சதவிகிதம் பேர் இரண்டு வாரங்களில் ஒருமுறையாவது கைபேசி வைப்ரேட் ஆவதைப் போல உணர்ந்து, மிக முக்கியமான பணிகளுக்கு இடையில்கூட அதை எடுத்துப் பார்த்ததாக ஒப்புக்கொள்கின்றனர். இம்மாதிரியான உளவியல் தாக்கம் ஏறத்தாழ நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

இதைச் சரிசெய்யவும் இவ்வாறான உளவியல் பிரச்சினைகளிலிருந்து வெளிவரவும் முதலில் சமூக வலைதளங்களின் பயன்பாட்டை நமக்கு நாமே நெறிப்படுத்திக்கொள்வது மிகவும் உறுதுணையாக இருக்கும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, உணவு அருந்துதல் மற்றும் இன்னபிற அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது, கைபேசிகளை நம்மிடமிருந்து சற்றுத் தொலைவில் வைத்துவிடுவதால் உடனுக்குடன் நோட்டிஃபிகேஷன் பார்க்கும் பழக்கம் நாளடைவில் குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபட்டிருக்கும் பணிக்கு ஏற்ப, இயன்றவரை கைபேசிகளை எப்போதும் அருகிலேயே வைத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நாளடைவில் தேவைக்கு மட்டும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நிலையை அடைய இந்தப் பழக்கம் உதவும்.

 

https://minnambalam.com/k/2019/05/09/1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறரைத் துன்புறுத்தும் தளங்கள்!

21.jpg

சமூக வலைதளங்களும் நாமும் - 5: நவீனா

மனிதனின் ரசனை சார்ந்த விஷயங்களின் மீதான அறிவையும், ஈடுபாட்டையும் அதிகப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படைக் கூறுகளைக் கொண்டே சமூக வலைதளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சமூக வலைதளமும் அதற்கான தனித்துவமான சிறப்பம்சங்கள் மூலம் மனிதனிடம் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி சமூகத்தில் அவற்றுக்கான இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், சில சமயங்களில் அவற்றின் தனித்தன்மைகள் சில குறிப்பிட்ட பிரத்யேகமான பிரச்சினைகளைத் தூண்டவும் அசாதாரண சூழல்களை உருவாக்கவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

ட்விட்டர் மீது சமீபத்தில் சாட்டப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டுகளில், பெண்களின் மீதான குரூப் ஹராஸ்மண்ட் (Group Harassment) எனப்படும் கூட்டுத் துன்புறுத்தலும் ஒன்று. அடிப்படையில் ட்விட்டர் தனிமனித ஆர்வம் சார்ந்த சமூக வலைதளம். அதாவது, குறிப்பிட்ட துறையில் ஆர்வமுடைய ஒருவர் ட்விட்டர் கணக்கு ஒன்றைத் துவங்கி, தான் ஆர்வம்கொண்ட அதே துறை சார்ந்த கணக்குகளைத் தேடி, அவற்றில் பகிரப்படும் கருத்துகளை ரீடிவிட் அல்லது மறுபதிவு செய்வதற்கான தளம்தான் ட்விட்டர். ஆனால், கோடிக்கணக்கான ட்விட்டர் கணக்குகளில், இதுபோன்ற ஒருமித்த எண்ணங்களுடைய கணக்குகளைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பதே மிகவும் கடினமான காரியம்.

அவ்வாறான கணக்குகளைக் கண்டறிய முடியாத நிலையில், தனிமனித ஆர்வம் சார்ந்த சமூக வலைதளமான ட்விட்டர் இன்று தனிமனிதக் கணக்கு சார்ந்த சமூக வலைதளமாக மாறிவிட்டது. ஒருவர் பின்தொடரும் ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்படும் எந்த ஒரு கருத்தையும் சிறிதும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் மறு பதிவேற்றும் நிலையே தற்போது விஞ்சி நிற்கிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களைக் குறிவைத்து, அவர்கள் மீது அவதூறு பரப்பும்படியாகப் பதிவேற்றப்படும் கருத்துகள் மிக அதிகமாக மறுபதிவிடப்படுகின்றன. இப்படியாக ஒரு குறிப்பிட்ட தனி மனிதனுடைய கருத்து, ஒட்டுமொத்தக் குழுவின் கருத்தாக மாறி, அது பெண்கள் மீதான கூட்டுத் துன்புறுத்தலாக ஆகிவிடுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, ஆம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் (Amnesty International) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பத்தில் ஒன்று என்கிற விகிதத்தில், பெண்களைப் பற்றி அவதூறு பரப்புதல், சித்திரிக்கப்பட்ட கதைகள் அல்லது சம்பவங்கள், தனிப்பட்ட வக்கிரமான எண்ணங்கள், தவறான செய்திகள், பெண்களைத் துன்புறுத்தும்படியான கருத்துகள் கொண்ட ட்விட்டுகள் பதிவேற்றப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் இம்மாதிரியான பதிவுகள் அதிக லைக்குகளையும் ஃபாலோயர்களையும் பெறுவதற்கான குறுக்கு வழியாகக் கையாளப்பட்டு வருகின்றன.

21a.jpg

ட்விட்டரின் சிஇஓ ஜாக் டோர்ஸியிடம் (Jack Dorsey), ஒரு நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டர் உருவாக்கப்பட்டபோது இது போன்ற பிரச்சினைகள் வரும் என முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று பதிலளித்த அவர், தற்போது ட்விட்டர் சமூக வலைதளத்தில் உரையாடல்களின் ஆரோக்கியத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவதூறு பரப்பக்கூடிய ட்விட்டுகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அவற்றைப் பற்றி மேலும் விவரங்களை ட்விட்டர் கணக்கு வைத்திருப்போரிடமிருந்து சேகரித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் முடிவில் ஜாக் டோர்ஸி ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்தார். ட்விட்டரின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் சார்ந்து ட்விட்டர் குழுமம் துரிதமாக நடவடிக்கைகள் எடுத்துவருகிறது என்றாலும், குறிப்பிட்ட பதிவைப் பரப்புவது என்ற முடிவை எடுப்பது தனிப்பட்ட நபர்தான். எனவே ட்வீட்டர் குழுமத்தின் முயற்சிகள் வெற்றியடைய தனிமனிதர்களின் ஒத்துழைப்பும் அதிகமாகவே தேவைப்படுகிறது என்றார்.

ஆரோக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்காகவும், அறிவைப் பெருக்கிக்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் பெரும்பாலும் இன்றைய நிலையில் அவதூறுகளைப் பரப்புவதற்கும், தனிமனிதனை துன்புறுத்துவதற்கும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்குமான தளமாக மாறிவிட்டது சமூக முன்னேற்றத்துக்கு ஒரு பின்னடைவுதான். உண்மைத்தன்மையை அறியாமல் பகிரப்படும் எந்த ஒரு செய்தியும், கருத்தும் மற்றொருவரை இரையாக்கித் துன்புறுத்திக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

 

 

https://minnambalam.com/k/2019/05/16/21

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தி எது?

34.jpg

சமூக வலைதளங்களும் நாமும் - 6: நவீனா

இந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, அதன் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்குக் காத்திருக்கும் இந்த வேளையில், கருத்துக் கணிப்பு, வாக்குக் கணிப்பு (Opinion poll, Exit poll) ஆகியவை பற்றிய பரபரப்பான பேச்சுக்களை அனைத்து சமூக வலைதளங்களிலும் காண முடிகிறது. அது தொடர்பான விளம்பரங்கள், ட்ரோல்கள் மீம்கள் போன்றவை சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வகையான விளம்பரங்களை ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் காண நேரும்போது அவற்றின் பின்னணி என்ன என்பதை முற்றிலும் நாம் அறிந்துகொள்கிறோமா?

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக இருக்கின்றன என்றும் சொல்லலாம். சமூக வலைதளங்களில் நம் கண்முன் காட்டப்படும் பகுதி மிகச் சிறியது, அதன் பின்னணியில் மறைந்திருக்கும் பெரும் பகுதியொன்று, அவை வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டும் அல்ல என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்துகளைப் பதிவேற்றிக்கொண்டே இருந்தார். அது குறித்து அவரது முகநூல் நண்பர்கள் கேள்வி எழுப்பும்போது அவர்களுடன் மிகப் பெரிய வாக்குவாதமும் செய்துகொண்டிருந்தார். அவரிடம் அந்தக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான பின்னணி என்ன என்று கேட்டபோது, அந்த குறிப்பிட்ட கட்சி மட்டுமே மக்கள்நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி வருவதாகவும், அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்தியாவில் முன்னேற்றங்கள் இருக்கும் எனவும் தான் கருதுவதாகக் கூறினார். இப்படிச் சொல்வதற்கு உங்களிடம் என்ன முகாந்திரம் இருக்கிறது எனக் கேட்டதற்கு, அவர் தான் தனது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட தேர்தல் தொடர்பான பல விளம்பரங்களைப் பார்த்ததாகவும், அதன் பின்னரே அந்த குறிப்பிட்ட கட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.

தவறாக வழிகாட்டும் ஃபேஸ்புக்

2016ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பில் ஃபேஸ்புக்கின் பங்கு அளப்பரியது என அப்சர்வர் பத்திரிகையின் நிருபரும் பிரிட்டிஷ் எழுத்தாளருமான கரோல் காட்வெலாடர் (Carole Cadwalladr) குறிப்பிடுகிறார். துருக்கி யூரோப்பியன் யூனியனில் இணையவிருப்பதாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பல விளம்பரங்கள் இங்கிலாந்து மக்களை ஐரோப்பிய யூனியனுக்கு எதிராகத் திருப்பியதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், உண்மையில் துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுபோன்ற தவறான விளம்பரங்களால் இங்கிலாந்து மக்கள் திசைதிருப்பப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டப்பட்டிருக்கின்றனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 33 மில்லியன் பவுண்ட் செலவிலான கல்லூரி வளாகம், 350 மில்லியன் பவுண்ட்ஸ் அளவிலான விளையாட்டு நிலையம், 77 மில்லியன் பவுண்ட் செலவிலான சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் என இவை அனைத்தும் ஐரோப்பிய யூனியனால் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்களினால் அதிகம் பயனடைந்த சவுத் வேல்ஸ் பள்ளத்தாக்கில் வசிக்கும் படித்த இளைஞர்களும் இளம் பெண்களுமாகச் சுமார் 62 சதவிகிதம் பேர் இந்தப் பகுதியிலிருந்து மட்டும் இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர் என கரோல் கூறுகிறார். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே, முகநூல் விளம்பரங்களைப் பார்த்துத் தவறான பரப்புரைகளை உண்மை என்று நம்பி வாக்களித்தவர்கள்.

ஃபேஸ்புக்கைப் பொறுத்தமட்டில் அதைப் பயன்படுத்துவோரின் டைம்லைனில் காட்டப்படும் விளம்பரங்களுக்கான ஆவணக் காப்பகங்கள் இதுவும் தனிப்பட்ட வகையில் கிடையாது. அதாவது ஒருவருடைய டைம்லைனில் காட்டப்படும் விளம்பரங்கள் அவருக்குக் காட்டப்பட்டதாக உறுதி செய்யக்கூடிய வகையில் எந்தவித ஆவணங்களையும் அதைப் பார்த்தவரால் சேகரித்துத் தர இயலாது. அதேபோல் அவருடைய நியூஸ் ஃபீடில் என்ன காட்டப்பட வேண்டும் என்பதையும் ஃபேஸ்புக்கே தீர்மானிக்கிறது. இவ்வாறான பரப்புரைகள் தவறா, சரியா என்று உறுதி செய்யப்படாமல் விடப்படுவதால், அந்தச் செய்திகள் சரியானவை என்று பெரும்பாலான மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒரு கட்டத்தில் அதுவே உண்மையாகவும் மாறிவிட வாய்ப்புள்ளது.

34a.jpg

அச்சத்தைத் தூண்டும் சமூக வலைதளங்கள்

2016 அமெரிக்கத் தேர்தலிலிருந்து 2019 இந்திய மக்களவைத் தேர்தல் வரை உலகில் நடைபெற்ற பல தேர்தல்களிலும், ஃபேஸ்புக் மறைமுகமாக அதிக பங்காற்றியுள்ளது எனப் பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சுமார் ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கூடி இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கைக் கேட்டபோது அவர் இதற்கான விளக்கத்தைத் தருவதற்குத் தயாராக இல்லை.

மக்களிடம் உள்ள வெறுப்பைப் பயன்படுத்துவதும், அவர்களின் பயத்தைத் தூண்டுவதும்தான் இந்த சமூக வலைதளங்கள் தேர்தல் சார்ந்து செயல்படும் முக்கியப் புள்ளிகளாக இருக்கின்றன. தேர்தலை ஒட்டி எடுக்கப்படும் சர்வேக்களில் அந்தந்த நாடுகளில் மக்கள் அதிகப்படியாக வெறுக்கும் கட்சிகளையும், ஆதரிக்கும் கட்சிகளையும் பற்றிய பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களின் மனப் போக்கினை மாற்றுவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்குள் இருக்கும் பயத்தைத் தூண்டிவிட்டு, ஒட்டுமொத்தமாக மக்களின் ஆதரவை ஒரு குறிப்பிட்ட கட்சியின்பால் திருப்புவதே இந்தச் சமூக வலைதளங்களின் மறைமுக வேலை.

இதை அறியாமலேயே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முகநூல் பக்கங்களில் தேர்தல் சார்ந்த பதிவுகளை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பதிவேற்றி, நமது தனிப்பட்ட கருத்துகளை அறிந்துகொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சமூக வலைதளங்களுக்கு நாமாகவே முன்வந்து நமது கருத்துகளையும் அள்ளிக் கொடுத்துவிடுகிறோம். இவ்வாறு தரப்பட்ட டேட்டாவை வைத்துக்கொண்டு சமூக வலைதளங்கள் இன்னும் விரைவாகவும், சாதுரியமாகவும் செயல்பட்டு மக்களின் ஒட்டுமொத்த மனப்போக்கை மாற்றும் வேலையைச் செய்து முடிக்கின்றன.

வாக்களிக்கும் உரிமை மட்டுமே நம்மிடம் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நம்மைச் சுற்றி இருப்பவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆயிரம் விமர்சனங்களை எழுப்பும் நாம், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான விளம்பரங்களையும் செய்திகளையும் உடனுக்குடன் நம்பிவிடுவது ஏன் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் சிறு புள்ளியில் தான் ஜனநாயகத்தின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

 

https://minnambalam.com/k/2019/05/23/34

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதினரின் மன உளைச்சல்!

19.jpg

சமூக வலைதளங்களும் நாமும் – 7: நவீனா

சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிக்கும் அவளது தங்கையைச் சந்திக்க நேர்ந்தது. அவளது நெற்றியில் இருந்த சிறு வீக்கத்தைப் பற்றித் தோழியிடம் விசாரித்தபோது, 'அத ஏன்டி கேக்கறே, மொபைல்ல வாட்ஸ் அப் பாத்துட்டே போய் லேம்ப் போஸ்ட்ல இடிச்சிட்டு வந்துட்டா. இதோடு இவ இப்படி இடிச்சிட்டு வர்றது அஞ்சாவது தடவ. ரோட்டில நடக்கும் வாட்ஸ் அப் பாக்காதேன்னு எத்தனை தடவ சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறா' என்றாள்.

பதின்ம வயதினரிடம் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சற்று அச்சமூட்டுவதாகவே அமைந்திருக்கின்றன. சமூக வலைதளங்களை இவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் காரணத்தினாலேயே, அமெரிக்க உளவியல் அமைப்பான அமெரிக்கன் சைக்கலாஜிக்கல் அசோசியேஷன், இவர்களை அதிக மன உளைச்சலுக்குள்ளான தலைமுறை என்று குறிப்பிடுகிறது.

பெரும்பாலான பதின்ம வயதினரின் நாட்கள் இவ்வாறே தொடங்குகின்றன: காலையில் எழுந்து அறை விளக்கின் ஸ்விட்சை ஆன் செய்வதற்கு முன்னமே, கையில் மொபைலை எடுத்து, தனது சமூக வலைத்தளக் கணக்குகளைத் திறந்து, லைக்குகள், கமெண்ட்டுகளை இட ஆரம்பித்துவிடுகிறார்கள். சராசரியாக ஒரு பதின்ம வயதினருக்குக் குறைந்தபட்சம் ஐந்து சமூக வலைதளக் கணக்குகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றில் நாளொன்றுக்குச் சராசரியாக குறைந்தபட்சம் 14 நிமிடங்கள் வரை ஒரு கணக்கிற்காக மட்டும் பதின்ம வயதினர் ஒருவர் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது.

படத்தைப் பதிவேற்றுதல் என்னும் பெரும்பணி

பதின்ம வயதினர் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் பக்கம் பக்கமாகக் கருத்துகளை எழுதிப் பதிவேற்றுவது கிடையாது. அவர்கள் புகைப்படங்களைப் பதிவிடுவதையே அதிகம் விரும்புகின்றனர். அவ்வாறு புகைப்படங்களைப் பதிவேற்றுவதும் மிக நீண்ட செயல்முறைதான். அதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்கின்றனர். எடுத்த புகைப்படங்களை கிராப் செய்வது, ஃபில்டர் செய்வது, பின்பு எடிட் செய்வது என்று புகைப்படத்தைத் தயார் செய்வது முதல் வேலை. அந்த இடுகையில் எழுதப்பட வேண்டிய கேப்ஷனைத் தீர்மானிப்பது இரண்டாவது வேலை. கேப்ஷனுக்காக மட்டுமே ஒரு மணிநேரம் செலவிடக்கூடிய பதின்ம வயதினரும் இருக்கிறார்கள். இவ்வளவும் செய்து பதிவேற்றிய பின்னர் அந்தப் புகைப்படத்துக்கு அவர்கள் எதிர்பார்த்த லைக்குகள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர். சிலர் நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து, புகைப்படத்திற்கு லைக் இடவும், கமெண்ட் செய்யவும் சொல்லிக் கேட்கவும் செய்கின்றனர்.

19a.jpg

உண்மை இங்கே எடுபடாது

சமூக வலைதளங்களில் நட்பு வட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி அவர்களின் பதிவுகளின் மூலம் அறிந்துகொள்ளும்போது பதின்ம வயதினர் இன்னும் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் செல்லும் இடங்கள், உண்ணும் உணவுகள், உடுத்தும் உடைகள் என மற்றவர்களின் பகட்டான வாழ்வைப் பார்த்து ஏங்கவும் ஆரம்பித்துவிடுகின்றனர். உண்மையில் சமூக வலைதளங்களில் பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தைச் சற்று மிகைப்படுத்தியே காட்டுகின்றனர். வீட்டிலிருந்தபடியே புகைப்படம் எடுத்து வெளிநாட்டில் இருப்பதாகக் கூறிப் பதிவேற்றுவது, பிற நண்பர்களின் விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தன்னுடையது எனக் கூறிப் பதிவேற்றுவது போன்ற ஏமாற்று வேலைகளைக்கூட உண்மை என்று நம்பி பதின்ம வயதினர் பலர் மனம் வெதும்புகின்றனர்.

புதிதாக அறிமுகமாகும் எவரொருவரைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவர்களது சமூக வலைதளக் கணக்குகளைத் துழாவிப் பார்ப்பதையே சிலர் வழக்கமாக வைத்திருப்பதால், பெரும்பாலான பதின்ம வயதினர், தன்னை எவரும் குறைவாக மதிப்பிடக் கூடாது என்ற அச்சத்திலேயே, தனது வாழ்க்கைத் தரத்தை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்கின்றனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அணுகும் நிறுவனங்கள்கூட, அவர்களைப் பற்றிய மதிப்பீட்டை அவர்களுடைய சமூக வலைதளக் கணக்குகளைக் கொண்டே தீர்மானிக்கின்றன. இப்படிப்பட்ட காரணங்களால் சமூக வலைதளங்களில் பொய்யான பதிவுகள் இன்னும் தவிர்க்க முடியாதவையாகிவிடுகின்றன.

19b.jpg

விடுபடுதல் பற்றிய அச்சம்

ஃபோமோ (FOMO) என்று சொல்லக்கூடிய ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட் (Fear Of Missing Out) என்கிற அச்சமும் பதின்ம வயதினரை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. அதாவது தன்னால் அறிந்துகொள்ளப்படாமல் செய்திகள் / புதிய போக்குகள் ஏதேனும் விடுபட்டுப் போகுமோ என்னும் அச்சம். புதிய ஃபேஷன்கள், பாடல்கள், திரைப்படங்கள் என பதின்ம வயதினர் அதிக ஆர்வம் காட்டக்கூடிய அத்தனை விஷயங்களிலும் அப்டேட்டாக இல்லாவிட்டால், இதுகூடத் தெரியலையா என நண்பர்கள் கேலி செய்வார்கள் என்ற காரணத்தினாலேயே சமூக வலைதளங்களை சதா சர்வ காலமும் உருட்டிக்கொண்டிருக்கும் பதின்ம வயதினரும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட பயமும் மன உளைச்சலும் அதிகரிக்கும்போது அவர்களுடைய மனநலம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறது.

சமூக வலைதளங்களில் காட்டப்படும் பெரும்பாலான வாழ்க்கை நிஜத்திலிருந்து மிகைப்படுத்தப்பட்டுள்ளதை உணர வேண்டும். அதேவேளையில், பதின்ம வயதினர் பிறருக்காக வாழ்வதைத் தவிர்த்துத் தனக்காக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். பிறர் தன்னை எவ்வாறு மதிப்பிடுவார்கள் என்கிற பயத்தை விடுத்து இயல்பாக இருக்கும்போது வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தின்பால் அவர்களின் கவனம் திரும்ப வாய்ப்புகள் உள்ளது.

 

https://minnambalam.com/k/2019/05/30/19

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்காக விரிக்கப்படும் வலை!

17.jpg

சமூக வலைதளங்களும் நாமும் – 9: நவீனா

சமூக வலைதளங்கள் பெரும்பாலான மற்ற துறைகளுக்குத் தகவல் வங்கிகளாகச் செயல்படுகின்றன. பல துறைகளின் போக்குகளைச் சமூக வலைதளங்களே தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகள், தேவைகள், நோக்கங்கள், தனிப்பட்ட உணர்வுகள் என அனைத்துமே வியாபாரமாக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு பெண் தனது முகநூல் கணக்கைத் திறக்கும்போது, தனது முகநூல் பக்கத்தில் காட்டப்படும் சேலை விளம்பரம் ஒன்றை கிளிக் செய்து பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். உடனடியாக, அவரது மொபைல் எண்ணுக்கு ஆன்லைனில் சேலைகள் விற்பனை செய்யும் வலைதளங்களிலிருந்து குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வரத் துவங்கிவிடும். பல சலுகைகள் பற்றிய அப்டேட்களும் வந்த வண்ணமிருக்கும். ஒரு சமூக வலைதளத்தில் அந்தப் பெண் பார்த்த விளம்பரத்தின் மூலம் அவரது விருப்பம் அறியப்பட்டு, அதன் அடிப்படையில் பெறப்படும் டேட்டா, அந்த விளம்பரம் சார்ந்த ஏனைய துறைகளுக்கு அனுப்பப்படுகிறது. மீண்டும் அந்தத் தனிநபரின் சமூக வலைதளக் கணக்குகள் மூலமாகவே ஆன்லைன் வியாபாரத் தளங்கள் நுகர்வோரை நேரடியாக அணுகவும் முடிகிறது.

17a.jpg

பொழுதுபோக்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்கள் தரும் டேட்டாவை நம்பியே முதலீடுகள் செய்யப்படுகின்றன. அண்மையில் அமெரிக்காவின் நீல்சன் கம்பெனி நடத்திய ஆய்வு ஒன்றில் சமூக வலைதளங்கள் என்டர்டெயின்மென்ட் மீடியாவை அதிகமாகப் பாதிப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆண்களைவிடப் பெண்களே சமூக வலைதளங்களில் அதிகக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதனால்தான் பெண்களை கவரும் வகையில், பெண் சூப்பர் ஹீரோக்களைக் கொண்ட பெரும் பட்ஜெட் படங்கள் அதிகமாக வெளிவருவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸின் கேப்டன் மார்வெல், டிசி காமிக்ஸின் வொண்டர் வுமன் போன்ற திரைப்படங்களிலிருந்து, கேம் ஆப் த்ரோன்ஸ் போன்ற பெரிய பட்ஜெட் டிவி சீரியல்கள் வரை அனைத்திலும் பெண்களே முன்னிலை கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். 1960களில் பெரும்பாலும் ஆண் மையக் கருத்துகளை அதிகமாகப் பரப்பிவந்த பொழுது போக்கு ஊடகங்கள் இன்று பெண் மையச் சிந்தனைகளுக்கு அதிகமாக இடம் கொடுப்பதன் பின்னணியில் சமூக வலைதளங்களின் பங்கு அளப்பரியது.

சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளைப் பதிவு செய்வது ஒரு வகையில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்துவிடுகிறது. இதுவே பெண்கள் அதிகமாக ஆன்லைன் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வதற்கும் காரணமாகும். தனி மனிதரின் விருப்பங்களைப் பொறுத்து சமூக வலைதளங்கள் அவர்களை டேஸ்ட் கம்யூனிட்டிஸ் (taste communities) அதாவது ஒருமித்த விருப்பமுடைய குழுக்களாகப் பிரித்துவிடுகின்றன. சமூக வலைதளங்களின் அடிப்படைக் கட்டமைப்பே அதில் இணைந்திருப்பவர்கள் நேரில் சந்தித்துப் பேசிவிடக் கூடாது என்பதுதான். அவர்கள் நேரில் சந்தித்து பேசும்போது அவர்களுடைய சமூக வலைதளப் பயன்பாடு பெரும்பாலும் குறைந்துவிட வாய்ப்பிருப்பதால், அவர்களுக்குக் காட்டப்படும் நட்புக்கான பரிந்துரைகளில்கூட உள்ளூர்வாசிகள் இல்லாதவாறு சமூக வலைதளங்கள் பார்த்துக்கொள்கின்றன.

L17b.jpg

இவ்வாறு பிரிக்கப்படும் டேஸ்ட் கம்யூனிட்டிஸில் உள்ள ஆண்களை சமூக வலைதளங்களில் சந்திக்க நேரும்போது அவர்கள் பால் இயல்பிலேயே பெண்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாகிறது. இது நாளடைவில் காதலாக வளர்ந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது. இவ்வாறான ரேண்டம் ரிலேஷன்ஷிப்களில் பெரும்பாலும் இரு பாலரிடமுமே உண்மை இல்லாததால் பல சிக்கல்கள் உண்டாகின்றன. இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை, ஓர் ஆணை நேரில் சந்தித்துப் பேசும்போது ஏற்படும் உளவியல் ரீதியான தடைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பேசும்போது ஏற்படுவதில்லை என்பதால் அவர்கள் சமூக வலைதள உரையாடல்களைச் சற்று சௌகரியமானதாகவும் நினைக்கிறார்கள். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் வெகு தூரத்தில் இருப்பதால் உறவு இன்னும் விரைவாக வளர்ந்துவிடுகிறது. இதன் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் வீடியோக்களும் குறுஞ்செய்திகளும் பிற்காலத்தில் பெண்களுடைய வாழ்க்கையைப் பாதிப்பதாகவே பெரும்பாலும் அமைகின்றன.

பெண்களின் விருப்பங்களைச் சமூகம் அறிந்து வைத்திருப்பது அவசியம்தான். அதைப் பொதுவெளியில் சொல்வதற்கான உரிமைக்காகப் பெண்களும் பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள். இருந்தாலும் தனக்கென வைத்துக்கொள்ள வேண்டிய தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அவ்வாறு பகிர்ந்துகொள்ளும் பட்சத்தில் அது தங்கள் பாதுகாப்பைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் கடமையும் தங்களுக்கு இருக்கிறது என்பதையும் பெண்கள் உணர வேண்டும்.

 

https://minnambalam.com/k/2019/06/06/17

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்பட்டு அந்நியமாகும் குழந்தைகள்!

20.jpg

சமூக வலைதளங்களும் நாமும் – 10: நவீனா

ஒரு மாலை நேரம் பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சியின்போது ஒரு தாயையும் அவருடைய பெண் குழந்தையையும் சந்தித்தேன். அந்தத் தாய் தன் குழந்தையை அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற குழந்தைகளோடு சென்று விளையாடுமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார். ஆனால், அந்த குழந்தை பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துகொண்டு, கீழே இறங்க மறுத்து அழுதபடி பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தது. இதுபற்றி அந்தக் குழந்தையின் தாயிடம் கேட்டபோது, அந்தக் குழந்தை நான்கு வயதாகியும் இன்னும் பேசவில்லை என்றும் அந்தக் குழந்தைக்கு ‘ஸ்பீச் தெரபி’ கொடுக்கும் மருத்துவர், அந்தக் குழந்தையை மற்ற குழந்தைகளோடு அதிகம் விளையாட விடும்படி அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரியவந்தது. ஆனால், அந்தக் குழந்தை மற்றவர்களோடு விளையாட மறுத்து ஐபேடைக் கேட்டுப் பிடிவாதம் செய்துகொண்டிருப்பதாக அந்தத் தாய் கூறினார்.

எளிதாக உணவு ஊட்டுவதற்காக, அந்தக் குழந்தைக்குச் சிறு வயது முதல் ஐபாடில், யூடியூபில் வீடியோக்களைக் காட்டியதாகவும், நாளடைவில் குழந்தை தானாகவே நாள் முழுவதும் யூடியூப் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டதாம். இதனால் உண்டான மன அழுத்தம் காரணமாகவும், அந்தக் குழந்தையோடு பெற்றோர் அதிகமாகப் பேசி விளையாடாமல் போனதாலும், அந்தக் குழந்தை பேசும் திறனை இழந்துவிட்டதாக மருத்துவர் சொன்னதாக அந்தத் தாய் கூறினார்.

20a.jpg

திரைபோடும் திரை பிம்பங்கள்

குழந்தைகள் சிறு வயது முதலே சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால், உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்க்கைத் திறன்களும் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. சமூக வலைதளங்கள் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என அறிந்திருந்தும், பெற்றோரே தனது குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கின்றனர். இரண்டு வயது குழந்தைகூடக் கடவுச் சொல்லைப் பயன்படுத்திக் கைபேசியைத் திறந்து, தனக்கு விருப்பமான யூடியூப் சேனல்களையும் விளையாட்டுகளையும் தானே பார்க்கக் கற்றுக்கொண்டுவிடுகிறது. குழந்தையின் இந்தச் செய்கையைப் பெற்றோர் மற்றவர்களிடம் சொல்லிப் பூரித்துப்போகிறார்கள்.

ஆனால், திரைகளுக்கு முன் செலவிடப்படும் குழந்தைப் பருவம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறது. வாழ்க்கைத் திறனை வளர்க்கக்கூடிய கதைகள் கேட்பது, சொல்வது, படங்கள் வரைதல், வண்ணங்கள் தீட்டுதல், நீச்சல் அடித்தல், ஆற்றில் மீன் பிடித்தல், மரத்தில் ஏறிப் பழம் பறித்தல் முதலான செயல்பாடுகள் இன்றைய குழந்தைகளுக்குப் பெரும்பாலும் அறிமுகம் இல்லாதவையாக இருக்கின்றன. அவர்களுடைய பிற்கால வாழ்க்கை ஏட்டுக் கல்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக அமையும்பட்சத்தில், பல தொழில்கள் சார்ந்த அறிவு இவர்களுக்கும், இனிவரும் அடுத்த தலைமுறையினருக்கும் கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தவிர, அவர்கள் வாழ்க்கை ஓரிரு பரிமாணங்களோடு சுருங்கிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.

20b.jpg

உறவில் ஏற்படும் விரிசல்

பெற்றோர் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதாலும் குழந்தைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பெற்றோர் குழந்தைகளுடன் செலவிட வேண்டிய நேரத்தைச் சமூக வலைதளங்களில் செலவிடுவதால் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்தத் தனிமை அவர்களின் மன வளர்ச்சி முதல் கல்வித் திறன்வரை அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் மூழ்கிப்போயிருக்கும் பெற்றோர் குழந்தைகளின் முக்கியத் தருணங்களைத் தவறவிடுகின்றனர். அவர்களின் செயல்களைப் பாராட்டுவது, தவறுகளைக் கண்டிப்பது, அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி எச்சரிப்பது போன்ற கடமைகளைப் பெற்றோர் மறந்துவிடுவதால், குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கான அடிப்படை சரிவர அமையப்பெறாமல் போய்விடுகிறது. குழந்தைக்கும் பெற்றோருக்குமான அன்பில் விரிசல் ஏற்படுகிறது. குழந்தைகள் பெற்றோர் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றனர். பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள யாருமற்ற நிலைக்குக் குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் போவதால் அவர்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்.

இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தமது அதிகப்படியான பங்கை உறுதிசெய்ய வேண்டும். தான் சமூக வலைதளங்களில் இடையூறின்றி நேரம் செலவிடுவதற்காக, குழந்தைகளையும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக மாற்றிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இன்று அதிகமாகிவருகின்றனர். இதனால் பின்னாளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பெற்றோரும் குழந்தைகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், குழந்தை நலனில் பெற்றோர் கூடுதல் அக்கறை காட்டுவது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கிறது.

https://minnambalam.com/k/2019/06/13/20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் இருக்கும்... குடுப்பத்தினர்.... 
அந்தக் குழந்தை... பத்து வயது நிறைவு செய்யும் வரையாவது,
அவர்கள்.. தொலைக்காட்சி பார்ப்பதில், கட்டுப் பாடு இருக்க வேண்டும்.
அந்தக்  குழந்தையுடன்... அதிக நேரத்தை, மழலை மொழியில் பேச வேண்டும்.

தோழில்... சுமந்து கொண்டு,  தெருவில் நடந்து போக வேண்டும்.
நாளைக்கு... நாம் செத்தால், சுமப்பது அவர்கள் தானே.. என்ற உணர்வு இல்லாமல்,

ஐபோன், சிமாட் போன், புளூ ருத், தமிழ் நாட்டு ரீவி நாடகம் பார்க்கும்...  
குடும்பங்கள்.... உருப்பட மாட்டாது. 💥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி 
மிகவும் பயனுள்ள தகவல்கள் 
சரியான நேரத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதைப் பகிர்கிறோம், எதைப் பரப்புகிறோம்?

22.jpg

சமூக வலைதளங்களும் நாமும் 11 - நவீனா

1517ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் தனது 95 கோரிக்கைகளை ஒரு நீண்ட சுருள் ஒன்றில் தானே கைப்பட எழுதி, அதை விட்டன்பர்க் தேவாலயத்தின் கதவில் ஆணி கொண்டு அறைந்தார். இந்தக் கோரிக்கைகள் பெரும்பாலும் கேள்விகளாக இருந்தன. அவை லத்தின் மொழியில் எழுதப்பட்டிருந்தன. அதை வாசிக்க நேர்ந்த பலரும் தங்களுடைய சுருள்களில் குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். உடனே இந்தக் குறிப்புகளை அச்சுக் கூடங்களுக்கு அனுப்பினர். இதன் மூலம் அந்தக் குறிப்புகள் மற்ற நகரங்களுக்கும் பயணிக்க ஆரம்பித்தன.

ஒரு நகரின் அச்சுக் கூடமொன்றில் இந்த கோரிக்கைகள் அனைத்தும் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அதன் பிறகு இரண்டே வாரங்களில் இந்த 95 கோரிக்கைகளும் ஜெர்மனி முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் சென்றடைந்ததாகவும், சற்றேறக்குறைய ஒரு மாதத்தில் ஐரோப்பா முழுவதும் பரப்பப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது மார்ட்டின் லூதருக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கிறது. உண்மையில் தன்னுடைய கருத்துகள் இவ்வளவு விரைவாக மக்கள் அனைவரிடமும் சென்று சேரும் என்று அவரே எதிர்பார்த்திருக்கவில்லை. அடுத்தடுத்து மார்ட்டின் லூதர் நேரடியாக ஜெர்மானிய மொழியில் எழுத ஆரம்பிக்கிறார். அவருடைய கருத்துகள் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் உள்ள அனைத்து மக்களிடமும் சென்று சேர ஆரம்பிக்கின்றன. அவருடைய கருத்துகள் ஏற்படுத்திய தாக்கத்தினால் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே கத்தோலிக்கத் திருச்சபை இரண்டாக உடைய நேரிடுகிறது.

22a.jpg

கருத்துகளின் பரவலும் தாக்கமும்

ஒரு மனிதனிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் ஏற்படுத்தும் தாக்கம் அதிக வீரியமுடையவை. அதிலும் எழுத்தாகப் பதிவாகும் கருத்துகள் ஆண்டாண்டுக்கும் நிலைத்து நிற்கக்கூடியவை. சமூக வலைதளங்களில் எழுதப்படும் கருத்துகள் இன்னும் வேகமாகவும் அதிகமாகவும் பரவக்கூடிய தன்மை உடையவை. ஐரோப்பா முழுவதும் மார்ட்டின் லூதரின் கருத்துகள் பரவுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவான ஒரு மாதம் என்பது இன்றைய சூழலில் சமூக வலைதளங்களில் ஓரிரு நொடிகள் என்பதாக மாறிவிட்டிருக்கிறது. ஒருவர் ஒரு கருத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தவுடன், அந்தக் கருத்து ஷேர், லைக், ரீட்வீட் எனக் கோடிக்கணக்கான மக்களை உடனடியாகச் சென்று சேர்ந்துவிடுகிறது.

இந்தக் கருத்துகளை வாசிப்பவர்கள் அதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி ஆராய்வது அரிதாகிவிட்டது. மனதிற்குப் பிடித்தவர்கள், நெருங்கிய நண்பர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் கருத்துகளும் மற்றும் பரபரப்பான செய்திகளும் உண்மை, பொய் பேதமின்றி சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இவ்வாறு ஷேர் செய்யப்படும் கருத்துகள் அரை மணி நேரத்திற்குள் சுமார் 72 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, உலகம் முழுவதும் பரவிவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

22b.jpg

பரவுவது செய்தியா, அவதூறா?

இத்தகைய பரப்புரைகளால் எண்ணற்றோரின் வாழ்க்கை பாதிக்கப்படுவதைப் பலரும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது. சமீபத்தில் வெளிவந்த யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி 2 (Yours Shamefully 2) எனும் குறும்படம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யபட்ட பொய்யான தகவலால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞனின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது. அந்த இளைஞனும் அவனைக் காதலித்த இளம் பெண்ணும் அன்றாட வாழ்வில் சந்தித்த அவமானங்கள், சிக்கல்கள், பிரச்சினைகள், உளவியல் ரீதியான தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றி அறியாமல், உண்மை என்னவென்று தெரியாமல் பொழுதுபோக்கிற்காகச் செய்யப்பட்ட ஷேர்களும், ரீட்வீட்களும் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய தாக்குதல்கள் யாரோ ஒருவரோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இதுபோன்ற பொய்யான பரப்புரைகளால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணற்றவர்கள். பொழுதுபோக்காக நாம் செய்யும் ஷேர்களில் பெரும்பாலானவை பொய்யான பின்னணியைக் கொண்டவை. இத்தகைய ஷேர்கள் ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. கருத்துகளை முன்னதாக ஷேர் செய்து பெயர் வாங்கும் ஆர்வத்திலும், பொழுதுபோக்காகவும், விளையாட்டாகவும் செய்யும் ஷேர்களிலும் மற்றவர்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

சமூக வலைதளங்களில் மிக அதிகமாகப் பரப்பப்பட வேண்டிய, மாற்றங்களை உண்டாக்கக்கூடிய பதிவுகளும் கருத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை முடிந்தவரையில் ஷேர் செய்வது அவசியம்தான். இருந்தாலும் எந்த ஒரு விஷயத்தையும் மற்றவருக்குத் தெரிவிக்கும் முன், அதன் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொண்டு மறுபதிவிடுவதே நல்லது.

 

https://minnambalam.com/k/2019/06/20/22

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எதைப் பகிர்கிறோம், எதைப் பரப்புகிறோம்?

22.jpg

சமூக வலைதளங்களும் நாமும் 11 - நவீனா

1517ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் தனது 95 கோரிக்கைகளை ஒரு நீண்ட சுருள் ஒன்றில் தானே கைப்பட எழுதி, அதை விட்டன்பர்க் தேவாலயத்தின் கதவில் ஆணி கொண்டு அறைந்தார். இந்தக் கோரிக்கைகள் பெரும்பாலும் கேள்விகளாக இருந்தன. 

ஐரோப்பிய மறுமலர்சியில், புரோட்டஸ்தாந்து மத உருவாக்கத்தில் முக்கிய பாதிப்பு செலுத்தியவர் பெயர் மார்டின் லூதர். ஜேர்மானிய வெள்ளையர்.

மார்டின் லூதர் கிங், அமெரிக்க சிவில் உரிமை போராளி. கறுப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஐரோப்பிய மறுமலர்சியில், புரோட்டஸ்தாந்து மத உருவாக்கத்தில் முக்கிய பாதிப்பு செலுத்தியவர் பெயர் மார்டின் லூதர். ஜேர்மானிய வெள்ளையர்.

மார்டின் லூதர் கிங், அமெரிக்க சிவில் உரிமை போராளி. கறுப்பர்.

A Freudian slip என்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.