Jump to content

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அதிரடி கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அதிரடி கைது! ஈக்குவெடார் தூதரகத்திற்குள் புகுந்த லண்டன் போலீஸ்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையதளத்தில், அமெரிக்காவின் ராணுவம் மற்றும் ராஜாங்க ரகசிய தகவல்கள் பலவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.

இவர் வெளியிட்ட ஆயிரக்கணக்கான ரகசிய தகவல்கள், அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகள் பலவற்றை அம்பலமாக்கியது. சர்வதேச நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் முகத்திரையை கிழிக்க உதவியது.

2012 முதல் தஞ்சம்

இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் துன்புறுத்தல் புகார் பதிவு செய்யப்பட்டது. இவரை கைது செய்வதற்காக நீதிமன்றம் ஆணை பிறப்பித்த நிலையில் 2012ஆம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே தஞ்சமடைந்தார். சர்வதேச நாடுகளின் விதிமுறைப்படி, தஞ்சம் அளித்துள்ள நாட்டின் தூதரகத்துக்குள் காவல்துறையினர் சென்று யாரையும் கைது செய்ய முடியாது. எனவே தூதரகத்துக்கு உள்ளேயே தொடர்ச்சியாக காலம் கழித்து வந்தார் அசாஞ்சே.

அமெரிக்கா மீது அச்சம்

ஸ்வீடன் நாட்டில் இவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் புகார் திரும்பப் பெறப்பட்ட போதிலும், தன்னை கைது செய்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சிய, அசாஞ்சே, தொடர்ந்து ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஈக்குவடார் நாடு ஜூலியன் அசாஞ்சேவிற்கு அளித்துவந்த அரசியல் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

அதிபர் அறிவிப்பு ஈக்குவடார் நாட்டின் அதிபர் லெனின் மொரேனோ, தனது முடிவை இன்று ட்விட்டரில் அறிவித்திருந்தார். அதில், ஜூலியன் அசாஞ்சேக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை ஈகுவடார் விலகிக் கொள்கிறது. தொடர்ச்சியாக சர்வதேச ஒப்பந்தங்களை மீறி அவர் செயல்பட்டு வருவது உறுதியானதால் இந்த முடிவை எடுத்துள்ளது, என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தகவல் லண்டன் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டார் அசாஞ்சே தகவல் அறிந்ததும், மெட்ரோபொலிட்டன் போலீஸ் சர்வீஸ் காவல்துறையினர், ஈக்வடார் நாட்டு தூதரகத்திற்குள்ளேயே, இன்று சென்று, ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்துள்ளனர். மத்திய லண்டன் போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் அவர். வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மரண தண்டனை கூடாது ஈக்வடார் அதிபர் லெனின் மொரேனோவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவரங்களை அசாஞ்சே சமீபத்தில் வெளியிட்டதாகவும், எனவே தான் அந்த நாடு வரை இவரை கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அசாஞ்சேவை துன்புறுத்துதல் அல்லது மரண தண்டனை விதிக்கக்கூடிய நாடு எதுவாக இருந்தாலும் அங்கு, அனுப்பி வைக்கக் கூடாது என்று பிரிட்டனை தான் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் லெனின் மொரேனோ. பிரிட்டிஷ் அரசாங்கம் தங்கள் நாட்டின் விதிமுறைப்படிதான் விசாரணை நடைபெறும் என்று உறுதியளித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச விதிமுறைக்கு எதிரானது இதனிடையே விக்கிலீக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "அவசரம்.. ஈக்குவடார் சட்டவிரோதமாக அசாஞ்சேவுக்கு அளித்த அரசியல் பாதுகாப்பை விலக்கியுள்ளது. இது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. சில நிமிடங்களுக்கு முன்பாக அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ள இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/london/wikileaks-founder-julian-assange-arrested-by-london-police/articlecontent-pf366834-346627.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலியன் அசாஞ்சே: விக்கிலீக்ஸ் நிறுவனர் லண்டனில் கைது

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார் அசாஞ்சே.

அசாஞ்சேவை கைது செய்த காவல்துறை, அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவித்தனர்.

சர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப்பெறுவதாக ஈகுவேடார் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ட்விட் செய்தியில், சர்வதேச சட்டவிதிகளை மீறி அசாஞ்சேக்கு தஞ்சம் வழங்கப்பட்டதை சட்டவிரோதமாக ஈகுவேடார் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனின் உள்துறை செயலர் சஜித் ஜாவிட் வெளியிட்ட ட்விட் செய்தியில், ''ஜூலியன் அசாஞ்சே தற்போது போலீஸ் காவலில் உள்ளார் என்பதை நான் உறுதி செய்கிறேன். பிரிட்டனின் சட்டநடைமுறையை அவர் எதிர்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/global-47895424

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலியன் அசாஞ்சே: விக்கிலீக்ஸ் நிறுவனர் லண்டனில் கைது

ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டது ஏன்?படத்தின் காப்புரிமைREUTERS

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார் அசாஞ்சே.

அசாஞ்சேவை கைது செய்த காவல்துறை, அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவித்தனர்.

சர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப்பெறுவதாக ஈகுவேடார் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ட்விட் செய்தியில், சர்வதேச சட்டவிதிகளை மீறி அசாஞ்சேக்கு தஞ்சம் வழங்கப்பட்டதை சட்டவிரோதமாக ஈகுவேடார் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனின் உள்துறை செயலர் சஜித் ஜாவிட் வெளியிட்ட ட்விட் செய்தியில், ''ஜூலியன் அசாஞ்சே தற்போது போலீஸ் காவலில் உள்ளார் என்பதை நான் உறுதி செய்கிறேன். பிரிட்டனின் சட்டநடைமுறையை அவர் எதிர்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @sajidjavid
 

Nearly 7yrs after entering the Ecuadorean Embassy, I can confirm Julian Assange is now in police custody and rightly facing justice in the UK. I would like to thank Ecuador for its cooperation & @metpoliceuk for its professionalism. No one is above the law

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @sajidjavid

ரகசிய ஆவணங்கள் மற்றும் படங்களை பெறுவதற்கு மற்றும் பதிப்பிப்பதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் நிறுவனத்தை ஜூலியன் அசாஞ்சே நிறுவினார்.

Julian Assangeபடத்தின் காப்புரிமைREUTERS

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்க ராணுவத்தினரால் இராக்கில் மக்கள் கொல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோபதிவை வெளியிட்டதையடுத்து இந்நிறுவனம் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது.

அசாஞ்சே வாழ்க்கையில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்தது என்ன?

ஆகஸ்ட் 2010 - சுவீடன் அசாஞ்சேவுக்கு கைது ஆணையை பிறப்பித்தது. பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் பலவந்த குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அசாஞ்சே கூறினார்.

டிசம்பர் 2010 - லண்டனில் அசாஞ்சே கைது செய்யப்பட்டார். இரண்டு முறை பிணையில் வெளிவந்தார்.

மே 2012 - அசாஞ்சே அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை எதிர்கொள்ள சுவீடனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பிரிட்டன் உச்ச நீதிமன்றம் கூறியது.

ஜூன் 2012 - லண்டனில் ஈகுவடார் தூதரகத்தில் நுழைந்து அசாஞ்சே தஞ்சம் கோரினார்.

ஆகஸ்ட் 2012 - ஈகுவடார் தூதரகம் அசாஞ்சேவுக்கு தஞ்சம் தந்தது. மேலும் அசாஞ்சே ஒப்படைக்கப்பட்டால் அவர் மீது மனித உரிமைகள் மீறப்படும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்தது.

ஆகஸ்ட் 2015 - பாலியல் குற்றங்கள் தொடர்பான சில குற்றச்சட்டுகள் குறித்த விசாரணையை காலம் கடந்தால் நேரமில்லை என கூறி கைவிட்டது ஆனால் பாலியல் வல்லுறவு குறித்த குற்றச்சாட்டை மட்டும் அசாஞ்சே எதிர்கொள்ள வேண்டியிருந்தது

அக்டோபர் 2015 - ஈகுவடேரியன் தூதரகத்துக்கு வெளியே அதிகாரிகள் இனி இருக்கமுடியாது என லண்டன் பெருநகர காவல்துறை அறிவித்தது.

பிப்ரவரி 2016 - சட்டத்திற்கு புறம்பான வகையில் 2010லிருந்து தன்னிச்சையாக பிரிட்டன் மற்றும் சுவீடன் அதிகாரிகளால் அசாஞ்சே காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என ஐநா அமர்வு கூறியது.

மே 2017 - சுவீடன் அரசு வழக்குரைஞர்களின் இயக்குநர் அசாஞ்சே மீதான பாலியல் வல்லுறவு குறித்த விசாரணை கைவிடப்பட்டதாக தெரிவித்தார்.

ஜூலை 2018 - அசாஞ்சேவின் விதி பற்றி பேச்சுவார்த்தை நடந்துவருவதாக பிரிட்டனும் ஈகுவடாரும் உறுதி செய்தன.

அக்டோபர் 2018 - லண்டனில் ஈகுவடார் தூதரகத்தில் அசாஞ்சேவுக்கு பிரத்யேக விதிகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து ஈகுவடார் அரசு மீது அசாஞ்சே சட்ட நடவடிக்கை துவங்கினார்.

டிசம்பர் 2018 - ஈகுவடார் தூதரத்தை விட்டு அசாஞ்சே வெளியேறும் தருணம் வந்துவிட்டது என ஈகுவடார் அதிபர் கூறியதொரு ஒப்பந்தத்தை அசாஞ்சே வழக்குரைஞர் நிராகரித்தார்.

பிப்ரவரி 2019 - ஈகுவடார் அசாஞ்சேவுக்கு தஞ்சம் வழங்கியதை முடிவுக்கொண்டுவர முனைந்துவருவதாக அச்சம் எழுந்த நிலையில் ஆஸ்திரேலியா அசாஞ்சேவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கியது.

ஏப்ரல் 2019 - 2012-ல் பிடி ஆணை வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய தவறிவிட்டார் எனக்கூறி அசாஞ்சேவை கைது செய்தது லண்டன் பெருநகர காவல்துறை.

https://www.bbc.com/tamil/global-47895424

Link to comment
Share on other sites

பூகோள அரசியலின் சூட்சுமங்களை உலகுக்கு வெளிக்கொணர்ந்த

யூலியான் அஸாஞ் பிரித்தானியாவால் கைது- அமெரிக்காவின் அழுத்தமெனக் குற்றச்சாட்டு

பிரித்தானியா வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர் களமிறங்கவேண்டிய தருணம் இது
 
 
Julian Assange
 
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போரில் சர்வதேச சக்திகளின் பங்கு பற்றிய பல இரகசியங்களை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸ் செய்தி இணையத்தளத்தின் நிறுவனர் யூலீயான் அஸாஞ் பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா வழங்கிய அழுத்தங்களினாலேயே அவர் பிரித்தானியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூகோள அரசியல் நகர்வுகள், உள்நாட்டுப்போர்கள், நாடுகளிடையேயான மோதல்கள். உலக அளவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய விடயங்களில் அமெரிக்கத் தலையீடுகள், அமெரிக்க நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் பல இரகசியத் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது. 
 
அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் பல இரகசியத் தகவல்களையே விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.

 

 

அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரத்திற்காகச் செயற்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கடும் அழுத்தம் செலுத்தப்பட்டபோதும், அதை எதிர்த்துச் செயலாற்றி வந்துள்ள யூலியான் அஸாஞ் போன்றவர்களே தற்காலத்தின் கருத்துச் சுதந்திரத்திற்கான சர்வதேசப் போராளிகளாகியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இதனால் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி யூலீயான் அஸாஞ், கைது செய்யப்பட வேண்டுமென அமெரிக்கா பிடியானை பிறப்பித்திருந்தது. அதனால் யூலீயான் அஸாஞ் சுவீடன் நாட்டுக்குத் தப்பிச் சென்றார்.

ஆனாலும் அங்கு பாதுகாப்பில்லை என்பதை அறிந்துகொண்ட யூலீயான் அஸாஞ் பிரித்தானியாவுக்குச் சென்று அங்கு எக்குவடோர் நாட்டின் தூதரகத்தில் மறைந்திருந்தார்.

யூலீயான் அஸாஞ் லத்தீன் அமெரிக்க நாடான எக்குவடோரின் பிரித்தானியாவில் உள்ள தூதராலயத்தில் அரசியற் தஞ்சத்தில் இருந்தவாறே தனது கருத்துச்சுதந்திரப் போரை நடாத்திவந்தார்.

ஆனால் அவரைக் கைது செய்யுமாறு அமெரிக்கா பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால், இன்று பிரித்தானிய அரசு அந்த எக்குவடோர் தூதராலயத்தின் திடீர் அனுமதியுடன் அவரைக் கைதுசெய்திருப்பதாக இறுதியாகக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே விக்கிலீக்ஸ் நிறுவுனரின் விடுதலைக்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் நன்றியுணர்வுடன் களமிறங்கவேண்டும் என்பதைக் கூர்மை இணையத்தள ஆசிரியபீடம் இத்தருணத்தில் தமிழர் தாயகத்தில் இருந்து நினைவுபடுத்துகிறது.

 

மேற்குலக வல்லாதிக்க நாடுகளில் ஜனநாயக உரிமைகளுக்கும் குடியியல் சுதந்திரங்களுக்கும் இருக்கும் எல்லையை ஜீலியன் அசாஞ்சின் கைது வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக, முகநுால் பதிவு ஒன்றில் கொழும்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் கூறியுள்ளார்.

 

அமெரிக்கா வியட்நாம் மீது போர் நடாத்திக்கொண்டிருந்தபோது அதன் கொடுமைகளை உலகுக்கு, குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி ஊடகம் வெளிக்கொணர்ந்து அந்தப்போரில் இருந்து அமெரிக்காவைப் பின்வாங்கவைக்கும் சாதனையை ஊடக சுதந்திரம் நிலைநாட்டிய காலம் ஒன்றிருந்தது.

தற்காலத்தில் அதே அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரத்திற்காகச் செயற்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கடும் அழுத்தம் செலுத்தப்பட்டபோதும் அதை எதிர்த்துச் செயலாற்றி வந்துள்ள யூலியான் அஸாஞ் போன்றவர்களே தற்காலத்தின் கருத்துச் சுதந்திரத்திற்கான சர்வதேசப் போராளிகளாகியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, 2012 ஆம் ஆண்டு முதல் பிாித்தானியாவில் உள்ள எக்குவடோர் நாட்டின் தூதரகத்தில் யூலியான் அஸாஞ் மறைந்து வாழ்ந்தார். எக்குவடோர் நாட்டின் அரச நிர்வாகத்துடன் கூட முரண்பட்ட நிலையில் விக்கி லீக்ஸ் செய்தி இணையத்தளத்திற்கான பணியைச் செய்வதிலும் பல இடர்களை யூலீயான் அஸாஞ் எதிர்நோக்கியிருந்தார்.

எனினும் எக்குவடோர் அவருக்கு குடியுரிமையை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கியிருந்தது. எக்குவடோர் வெளியுறவு அமைச்சர் மரியா கூறும் போது, யூலீயான் அஸாஞின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இது அவருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் என்றும் கூறியிருந்தார்.

யூலியான் அஸாஞ் அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாக்க் கொண்டவர். கணணி நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை, யூலியான் அஸாஞ் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரிப் பதிரிகையின் செய்தி முகாமையாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசேிரியருமான வீரகத்தி தனபாலசிங்கம் முகநுால் பதிவு ஒன்றில் இவ்வாறு கூறுகின்றார்.

மேற்குலக வல்லாதிக்க நாடுகளில் ஜனநாயக உரிமைகளுக்கும் குடியியல் சுதந்திரங்களுக்கும் இருக்கும் எல்லையை ஜீலியன் அசாஞ்சின் கைது வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்னோடன் மாதிரி இந்தாளும் ரஷ்யாவுக்கை உள்ளட்டிருக்கலாம்..

ஸà¯à®©à¯à®à®©à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

julian-assange.jpg

யார் இந்த ஜுலியன் அசாஞ்?

செல்வாக்குமிக்கவர்களின் நடவடிக்கைகளையும், ஜனநாயகத்திற்கு எதிரான குற்றங்களையும் உலகிற்கு தனது விக்கிலீக்ஸ் (Wikileaks) என்ற இணையத்தளத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் ஜுலியன் அசாஞ்.

அவுஸ்ரேலிய குடிமகனான ஜுலியன் அசாஞ் 2006ம் ஆண்டு ஐஸ்லாந்தில் விக்கிலீக்ஸ் என்ற இந்த இணையத்தளத்தை ஆரம்பித்து இலாப நோக்கமற்று ஊடகம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்.

ஜுலியன் அசாங்கே சிறுவயதிலேயே இணைய ஹக்கிங்கில் ஆர்வம் கொண்ட பத்திரிகையாளர்.

அமெரிக்காவினால் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல ஆவணங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார்.

இதனை அடுத்து உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அவரை மனித உரிமையாளர்கள் பாராட்டினார்கள்.

இதன் பின்னர் 2010ம் ஆண்டு சுவீடனில் பாலியல் குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டது இதுவும் அவர் மீது சுமத்தப்பட்ட வீண்பழி என அவர் மறுத்திருந்தார்.

அச்சுறுத்தல் காரணமாக தொடர் பயணங்களிலேயே இருந்து வந்த அவர், ஒபாமா முதல் கிலாரி வரையான அனைத்து தலைவர்களது ஆவணங்களும் வெளியிட்டு அமெரிக்க தேர்தலில் ஹிலாரி கிளின்டனை தோற்கடிக்கவும் காரணமாக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் குற்றத்திற்காக சுவீடன் அரசினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் ஈக்குவடோர் அகதி அந்தஸ்து இருந்தமையால் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் 2012 ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார்.

இதன் பின்னர் லண்டனில் அரசியல் அகதி அந்தஸ்து கேட்டிருந்தார். ஆனாலும் அது நிராகரிக்கப்பட்டு லண்டன் பொலிஸாரால் ஏழு வருடங்களின் பின்னர் இன்று தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான ஜுலியன் அசாஞ் அண்மை நாட்களாக உடல்நலக்குறைவினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது இணையத்தள கணக்குகள் சுவிஸ் வங்கி கணக்குகள் அனைத்தும் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யார்-இந்த-ஜீலியன்-அசாங்க/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசாஞ்சே கடந்து வந்த பாதை: தப்பிச் சென்றது முதல் அடைக்கலம் தேடியது வரை; ஹாலிவுட் கதைகளை விஞ்சும் சம்பவங்கள் (2010-2019)

Published :  11 Apr 2019  18:54 IST
Updated :  11 Apr 2019  19:03 IST

ஏஎப்பி

பாரீஸ்assange-the-hindujpg

ஜூலியன் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இன்று லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வைத்து  கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர்.

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் அசாஞ்சே. 47 வயதுமிக்க அசாஞ்சே 2006-ல் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தில் ஒரு முக்கிய அங்கமாக பொறுப்பேற்றார்.

அதன்மூலம் எண்ணற்ற புலனாய்வுச் செய்திகளை வழங்கினார். அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதால், பென்டகனின் பழிவாங்கலுக்கு ஆளானார். அவர்களிடமிருந்து தப்பிக்க அவர் பட்டபாடு ஹாலிவுட் திரைக்கதைகளை விஞ்சக்கூடியது.

தப்பிச் சென்று அடைக்கலம் தேடியதுமுதல் இன்று கைதாகியுள்ளது வரை அசாஞ்சே கடந்து வந்த பாதை இதோ:

ஜூலை முதல் அக்டோபர் வரை 2010: ஆப்கன் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற போர்கள் குறித்து அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய 4,70,000 ராணுவ ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இதன் பின்னர் அரசின் 2,50,000 ரகசிய (டெலிகாரம் உள்ளிட்ட) கேபிள் தகவல்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

நவம்பர் 2010: அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அசாஞ்சே அதை மறுத்தார்.

டிசம்பர் 2010: ஸ்வீடன் நீதிமன்றம் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அசாஞ்சே லண்டன் போலீஸில் தானே சென்று சரணடைந்தார். அவரை ஸ்வீடனிலிந்து நாடு கடத்துவதற்கான ஒரு கோரிக்கை நிலுவையில் உள்ளதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஸ்வீடனின் குற்றச்சாட்டுகள் அவதூறு எனக்கூறப்பட்டு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பிப்ரவரி 2011: பிரிட்டிஷ் நீதிமன்றம் அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அசாஞ்சா அங்கே சென்றால் ஆவணங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைத்துவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்தார்.

ஜூன் 2012: இந்நிலையில் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் கோரினார். பின்னர் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அரசியல் புகலிடம் பெற்று பாதுகாப்பு கிடைத்தது.

அக்டோபர் 2013: ஈக்வடார் தூதரகம் அசாஞ்சேவை அந்நாட்டு தலைநகரமான கியூட்டோவிற்கு அனுப்பிவைக்க அனுமதி கோரியது.

ஜனவரி 2016: ஸ்வீடன் வழக்கறிஞர்கள் அசாஞ்சேவை லண்டனில் வைத்து விசாரிப்பதற்கு விடுத்த கோரிக்கையை கியூடோ நிராகரித்தது.

பிப்ரவரி 2016: அசாஞ்சே தன்னிச்சையான காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளிடமிருந்து இழப்பீடு கோர முடியும் என்றும் ஐநா பணிக்குழு தெரிவித்தது. தங்களுக்கு இதில் அதிகாரமில்லை என மறுத்தன.

ஜனவரி 2017: அவரது உரிமைகளுக்கு முழு உத்தரவாதம் தரப்படுமென்றால் அவர் அமெரிக்காவுக்குச் சென்று விசாரணையில் கலந்துகொள்ள முடியும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்தது.

மே 2017: அசாஞ்சே மீது நடைபெற்று வந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை முடித்துக்கொள்வதாக ஸ்வீடிய நீதிமன்றம் தெரிவிக்கிறது. எனினும் பிரிட்டிஷ் போலீஸார், தூதரகத்திலிருந்து அசாஞ்சே வெளியே வரும் பட்சத்தில், 2012-ல் அசாஞ்சேவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இப்பொழுதும் அவரைக் கைது செய்ய முடியும் எச்சரிக்கை விடுத்தது.

டிசம்பர் 2017: அசாஞ்சேவுக்கு ஈக்வடார் குடியுரிமை அளித்து கியூட்டோ அனுமதி வழங்குகிறது. அசாஞ்சேவுக்கு தாங்கள் குடியுரிமை அளித்துள்ள நிலையில் அவரைக் கைது செய்யாமல் தூதரகத்தை விட்டு வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டுமென ஈக்வடார் கோரிக்கையை பிரிட்டிஷ் நிராகரித்தது.

ஜனவரி 2018: அசாஞ்சே தொடர்பாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையைத் தீர்க்க ஒரு நடுவர் வேண்டுமென ஈக்வடார் தெரிவித்தது.

பிப்ரவரி 2018: உடல்நிலையைக் காரணம்காட்டி பிரிட்டிஷ் போலீஸாரால் கைது செய்யப்படுவதிலிருந்து விலக்கு பெறும் ஒரு சிறிய முயற்சியையும் அசாஞ்சே இழந்தார்.

மார்ச் 2018: மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ஒப்பந்தத்தை மீறியதாக அசாஞ்சேவுடனான அனைத்துத் தகவல் தொடர்புகளையும் ஈக்வடார் துண்டித்தது.

அக்டோபர் 2018: லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தங்கியுள்ள அசாஞ்சேவின்மீது புதிய நிபந்தனைகளை ஈக்வடார் விதிக்கிறது. அதன்படி தங்களைமீறி அசாஞ்சே செயல்பட்டால் அடைக்கலம் முடிவுக்கு வரும் என்று எச்சரித்தது.

நவம்பர் 2018: அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள், அசாஞ்சே மீது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு முத்திரையிடப்பட்ட குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறினர்.

ஏப்ரல் 2019: ஈக்வடார் அதிபர் லெனின் மொரெனா, அசாஞ்சே புகலிடத்தின் நிலைகளை பலமுறை மீறியுள்ளதாகக் கூறினார். அசாஞ்சே மீது உள்ள விதிமீறல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்துவதற்கான தகுதி குறித்து ஆராய வரும் ஏப்ரல் 25 அன்று 'சுதந்திர உரிமைகளின் நிபுணர்' ஒருவர் அசாஞ்சேவைப் பார்க்க வருவதாக அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 11, 2019: இதற்கிடையில் ஈக்வடார் தூதரகம் அசாஞ்சேவுக்கு அளித்து வந்த புகலிடத் தகுதியை திரும்பப் பெற்றது. இந்நிலையில் பிரிட்டிஷ் போலீஸார் அசாஞ்சேவை கைது செய்தது.

தொகுப்பு: பால்நிலவன்

https://tamil.thehindu.com/world/article26806928.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலியன் அசான்ஜேக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

April 13, 2019

Julian-Assange.jpg?resize=600%2C413விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜேக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே மீது சுவீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வைத்து கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்

ஈக்வடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லபட்டார்.

நீதிமன்றத்தில் அசாஞ்சே சரணடையத் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதுடன் அவர் அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளவுள்ளதனால் அவர் ஐந்து வருடம் சிறை தண்டனை பெறலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

http://globaltamilnews.net/2019/118235/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் இருந்தாலும்.. உந்த கத்திக் குத்துக்காரர்களை.. போதைவஸ்து.. மாபியாக் கும்பல்களை.. கைது செய்ய வக்கில்லாத பிரித்தானிய பொலிஸ்.. இவரை வீடு புகுந்து இவ்வளவு கேவலமாக கைது செய்ய என்ன இருக்குது..??! ரெம்ப ஓவர் ரிஜாக்சன். 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

என்ன தான் இருந்தாலும்.. உந்த கத்திக் குத்துக்காரர்களை.. போதைவஸ்து.. மாபியாக் கும்பல்களை.. கைது செய்ய வக்கில்லாத பிரித்தானிய பொலிஸ்.. இவரை வீடு புகுந்து இவ்வளவு கேவலமாக கைது செய்ய என்ன இருக்குது..??! ரெம்ப ஓவர் ரிஜாக்சன். 🙄

வீட்டுக்குள்ள இருந்து எடுத்து வந்து கத்தியால குத்தேக்குள்ள அதை தடுப்பது கடினம்...பெற்றோர் தான் கவனமாய் இருக்க வேண்டும்...துவக்கு,போதைவஸ்து எங்கேயிருந்து வருது என்று பார்த்து தடை செய்யலாம். ஆனால் கத்தி அப்படி இல்லை 

Link to comment
Share on other sites

கீழ்வரும் விக்கிலீக்ஸ் நிறுவனர் கைது குறித்த விளக்கக் காணொளியில்  விக்கிலீக்ஸ் வெளியிட்ட  அமரிக்க ராணுவம் ஈராக்கில் அப்பாவிகளை சுட்டுக்கொல்லும் காட்சியும் சிறுபகுதியாக உள்ளது.  பார்க்க முடியாதவர்கள் இக் காணொளியை தவிரக்கவும். 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.