Jump to content

உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி விபரம் வெளியிடும் தினம் அறிவிப்பு


Recommended Posts

உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி விபரம் வெளியிடும் தினம் அறிவிப்பு

 

srilanka

இம்முறை உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் எதிர்வரும் 18ம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

நேற்று நிறைவடைந்த மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் சுற்றுத்தொடரில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகள் மற்றும் அனுபவத்தை கருத்திற்கொண்டு இம்முறை உலகக்கிண்ணத்துக்கான அணி தெரிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அணி விபரம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அணித்தலைவர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் அணிக்கான தலைவர் பதவிக்காக பல வீரர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்த டி மெல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.dailyceylon.com/180754

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணித்தலைவராக திமுத் கருணரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி விபரம்,

திமுத் கருணரத்னே, ஏஞ்சிலோ மேத்யூஸ், லசித் மலிங்கா, குசல் பெரேரா, லஹிரு திரிமன்னே, அவிஸ்கா பெர்ணாண்டோ, குசல் மெண்டீஸ், தனஞ்செய டிசில்வா, ஜெப்ரி வாண்டர்சே, திசேரா பெரேரா, இசுரு உடனா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், ஜீவன் மெண்டீஸ், மிலிண்டா சிரிவர்டனா.

https://www.todayjaffna.com/139932

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.