Jump to content

Recommended Posts

2017 ல சீசன் 7 முடிஞ்ச பிறகு அடுத்த சீசன் எப்படா  வரும் என்று இருந்தது  இன்னும் 4 நாட்கள் அதற்கிடையே எத்தனை எத்தனை எதிர்வு கூறல்கள்,  பான் மேட் ஸ்ரோரிஸ்... இப்போது இது இறுதி பகுதி என்பதால் யார் த்ரோனை வெல்லப்போவது என்பதையும் விட யார் யார் உயிருடன் எஞ்ச போகிறார்கள் என்பதே ஒருவித பயத்துடன் கூடிய எதிர்பார்ப்பாக உள்ளது 

எனது எதிர்பார்ப்பின் படி செர்சி டனி  இருவருக்கும்  த்ரோன் கிடைக்காது ,
ஜோன் போரில் இறக்க கூடும் மெலிசான்ட்ரே திரும்ப வந்து உயிர் குடுக்கலாம் 
டைரியன் துரோகம் செய்ய டனி  அவரை ட்ராகனிற்கு  BBQ செய்ய குடுப்பார்:)
ஜேமி அநேகமாக இறக்க கூடும் 
ஆர்யாவும் இறக்ககூடும் இல்லாவிட்டால் அரியணை ஏறும் அரசனின் கிங்ஸ்காட் ஆக வருவார்

(ஆர்யா இறக்க சான்ஸ் குறைவு என நம்புகிறேன்.
ஆர்யாவை எழுத்தாளர் கொல்வாரெனில் அவரை டைவோர்ஸ் பண்ணி விடுவதாக செல்லமாக மிரட்டி இருப்பதாக ஒரு பேட்டியில் அவரின் மனைவி சொல்லி இருந்தார்.)
HBO CEO முழுவதையும் பார்த்து விட்டு ஒவ்வொரு episode ம்  ஒரு படத்தை போல இருப்பதாக கூறியிருக்கிறார் 

  இந்த பகுதியில் நான் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது 

1) ஆர்யா - ஜோன் ரீ யூனியன் 
2) சன்ஷா- tyrion ரீ யூனியன் 
3) ஆர்யா - ஜென்றி 
4) ஆர்யா - க்ளக்கெய்ன் 
5)சன்ஷா - செர்சி
6) ப்ரான் - ஜேமி 
மற்றும் சிலவும் 
 
மார்ச்ல இருந்து HBO(ஒன்லைன்) சப்ஸ்க்ரைப் பண்ணியாச்சு  பார்த்திட வேண்டியதான் பாக்கி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கதை எப்படிப் போனாலும் பரவாயில்லை. முடிவில் white walkers எப்படி இல்லாமல் போவார்கள் என்று அறியவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேம் ஆப் த்ரோன்ஸ்: குளிர் காலத்தில் பிழைத்திருக்க போவது யார்?

75.jpg

மொத்தமுள்ள எட்டு சீஸன்களில் ஏழு முடிவடைந்த நிலையில், நாளை தொடங்க உள்ள எட்டாவது சீஸன் என்னென்ன ஆச்சரியங்களை வைத்திருக்கும் என கேம் ஆப் த்ரோன்ஸ் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டினால் 1992ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘எ சாங் ஆப் ஐஸ் அண்ட் பயர்’ நாவல்களின் தொகுப்பை தழுவி உருவாக்கப்பட்ட அமெரிக்க ஃபேண்டஸி ட்ராமா தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். எச்பிஓ தொலைக்காட்சி நிறுவனத்திற்காக டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி.வேய்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த தொடர் 2011ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

வருடத்துக்கு ஒரு சீஸன், சீஸனுக்கு பத்து தொடர்கள். மீதமிருக்கும் மாதங்கள் அனைத்தும் அடுத்த சீஸனுக்கான காத்திருப்பு என ரசிகர்களை அதன் கற்பனை உலகதுக்குள்ளேயே அடைகாத்து வைத்திருக்கும் மந்திரத்தன்மை கொண்ட கேம் ஆப் த்ரோன்ஸில் அப்படி என்ன இருக்கிறது?

75a.jpg

ஏழு தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரும் ராஜ்ஜியத்தின் இரும்புச் சிம்மாசனத்தில் அமரப் போவது யாரென்பதே கதை. சிம்மாசனத்திலிருந்த ராபர்ட் பராதியன் என்ற மன்னன் இறந்ததிலிருந்து ஆரம்பமாகும் கதை, அதன் பின் தகுதியற்ற குடும்பத்தினர் மகுடமேற்க பிரச்சினைகள் உருவாகின்றன. அந்த அரியணையில் அமர்ந்த ஒவ்வொருவரையும் அது காவு வாங்குகிறது.

போட்டியிடும் ஒவ்வொருவரிடம் அந்த அரியணையை அடைவதற்கான காரணங்களும், நியாயங்களும் இருக்கும். ஒவ்வொரு கதாபத்திரங்களின் பார்வையிலிருந்தும் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை வடிவம் முற்றிலும் புதிதான அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும்.

ஒரு திரைப்படத்திற்கு இணையான பிரம்மாண்டத்துடன், மிகுந்த பொருடச்செலவில் எடுக்கப்பட்டாலும் இதன் உண்மையான பிரம்மாண்டம் கதாப்பாத்திர வடிவமைப்பு, திரைக்கதையின் திருப்பங்கள் மற்றும் வசனங்கள் தான்.

வெறும் நல்லவன் கெட்டவன் என்ற அடிப்படையில் நகராமல், அனைத்து கதாபாத்திரங்களுக்குள்ளும் இருக்கும் இரட்டை நிலையை காட்டுவதே இதன் சிறப்பம்சமாகும். நல்லவன் என நம்பும் பாத்திரங்கள் கூட ஒரு சிக்கலான கட்டத்தில் வேறு வழியின்றி உணர்ந்தே சில அநீதிகளை இழைக்க வேண்டிய இடத்திற்கு தள்ளப்படும்.

75b.jpg

நன்மையும் தீமையும் நம் விருப்பதையும் மீறி நாம் இருக்கும் இடத்தின் நிர்பந்தம் என்பதை திரைக்கதையின் போக்கில் சொல்லிப்போகும் போது பார்வையாளர்களுக்குள் ஏற்படும் புரிதல் அளப்பரியது.

ஹாரிபாட்டர் படங்களுக்கு உள்ளதைப் போல வலிமையான ரசிகர் தளத்தை கொண்ட கேம் ஆப் த்ரோன்ஸ், இணையமெங்கும் தொடர் குறித்து ரசிகர்கள் உருவாக்கும் புதிய கோட்பாடுகளால் நிறைந்து வருகிறது. முடிவில் இரும்பு சிம்மாசனத்தை அடையப்போவது யார், குளிர்காலத்தின் வாசிகளான வைட் வாக்கர்ஸ் என்ற மரணமேயடையாத படைகளிடமிருந்து மக்களையும் ராஜ்ஜியத்ததையும் காப்பது யார், குளிர் காலத்தின் இறுதிவரை பிழைத்திருப்பது யார் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க போகிறதா சீஸன் 8 என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விண்டர் இஸ் கம்மிங்.

 

https://minnambalam.com/k/2019/04/13/75

Link to comment
Share on other sites

சீசன் 8 இன் முதலாவது எபிசொட் இன்று வந்துவிட்டது 

*Spoilers alert*

எதிர்பார்த்த மாதிரியே டனேரியஸ் மற்றும் ஜோன் தன் பரிவாரங்கள் சூழ "வின்ரர்பெல்" வந்து விட்டார்கள்.

இரோன் கிறேஜோய் கோல்டன் கொம்பனியைச்சேரந்த இருபதினாயிரம் படைவீர்ர்கள் மற்றும் இரண்டாயிரம் குதிரைகளுடனும் கிங்ஸ்லான்ட வந்தடைந்துவிட்டார்கள்கள் ,இரோனுக்கு செர்சி அவன்கேட்டதை கொடுக்கிறார். தியோன் யாராவை இரோன் கிறேஜோயின் பிடியிலிருந்து மீட்டு கொள்கிறான். ஆர்யா ஜோன் பல வருடங்களின் பின் மீள சந்திக்கிறார்கள்..

சாமை சந்திக்கும் டனேரியஸ்,மற்றும் ஜோரா, சாம்க்கு ஜோராவை குணப் படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறார் அவனின் மூலம் அவன் தன்னால் அழிக்கப் பட்ட"Turlly"பிரபு வம்சத்தை சேர்ந்தவன் என அறிந்து அவனிடம் அவனின் தந்தை மற்றும சகோதரன் ஆகியோர் தன்னால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதை தெரிவிக்கிறாள். கவலையுடன் வெளிவரும் சாம் அங்கு ப்ரான் இருப்பதை பார்க்கிறார் ப்ரான் அவனிடம் ஜோனுக்கு அவன் பற்றிய உண்மையை கூறுமாறு கூறுகிறார். ஒருவாறு ஜோன் தனது உண்மையான தாய் தந்தையர் பற்றி கூறி அவன் தான் த்ரோனுக்கான உண்மையான வாரிசு என கூறுகிறான். சஞ்சாவிற்கு டனேரியஸ்ஸ ஜோன் வடக்கு நோக்கி அழைத்து வந்த்து பிடிக்கவில்லை.இன்னும் சில வடக்கைசேர்ந்த பிரபுக்களிற்கும் ஜோன் இப்போது வடக்கின் கிங் இல்லை ஏற்றுக.கொள்ள கூடியதாக இல்லை, சஞ்சா ரைறியன் சந்தித்து கொள்கிறார்கள், சொல்லாமல் அவனை விட்டு விலகி வந்த்தற்கு சஞ்சா மன்னிப்பு கேட்கிறார் . செர்சி படையணிய அனுப்புவதாக சொன்னதை சஞ்சா நம்பவில்லை அதை tyrion டம் சொல்கிறார் ஆர்யா க்ளக்கேய்ன்,ஆர்யா ஜென்றி  சந்திப்பும் நிகழ்கிறது.. ஜோனும் டனேரியஸ் ட்ராகனில் பறக்கிறார்கள்,ஜேர்மி வின்ரபெல் வந்தடைகிறார் ப்ரான் டனை நேரில் பார்க்கிறார் ப்ராண்டனும் அவருக்காக தான் காத்திருக்கிறார்.நைட்கிங் அம்பர் பிரபு ? மகனை கொன்று சுவரில் தூக்கி ஸ்ரோங் மெஜெஜ் ஒன்றை நொர்தேனருக்கு அனுப்புகிறார் 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Gameofthrones 
S-8,Ep-3 The Long night / battle of winterfell
கடந்த பகுதி (S8-E2)  ஆர்மி ஒவ் த டெட் + நைட்கிங்  வின்ரஃபெல் வாயிலில் அடி எடுத்து வைப்பதோடு முடிவடைந்திருந்தது.

*spoilers* முழுக்கதையும் உள்ளது .*
இந்த பகுதியில் கட்டாயம் மிகப்பெரும் போர் இருக்கும் என எல்லோருமே எதிர் பார்த்திருந்தோம் 
படக்குழுவினருமே இந்த பகுதியின் சூட்டிங் கிட்டத்தட்ட55 நாட்கள் நடந்த்தாகவும் கேம் ஒவ் த்ரோன் வரலாற்றில் மிகநீண்ட  சூட்டிங் என ஆர்வத்தை கிளப்பி இருந்தனர் 

***************************
டனேரியஸ் ஜோரா தலைமையில் டத்ரோகிஸ் முன்ணனியில் விட்டிருந்தார். அடுத்து unsullied, அவர்களிற்கு பின்னனியிலும் பக்கமாகவும் ஏனையோரும்
லியன்னா மற்றும் அவரின் படையினர் கோட்டையின் உள் பக்கமாகவும் ,அணிவகுக்கப்பட்டிருந்தனர் .
நைட் கிங் பெயருக்கேற்றமாதிரி நீண்ட இருளுடன் கடும் பனியையும் தன்கூட அழைத்து  வந்திருக்கிறார்..நீண்ட அமைதி குதிரை ஒன்று மெதுவாக டத்ரோகிஸ் பகுதியை அணுகுகின்றது, அவர் முன்னைய பகுதிகளில்  எமக்கு அறிமுகமான ரெட் வுமன் மெலிசான்ரே.தனது முக்காடினை விலக்கி ஜோராவிடம் அவர்களின் மொழி உன்னால் பேச முடியுமா என ,கேட்டு அவர்களின் வாட்களை உயர்த்த சொல்லி வாட்களில் நெருப்பினை பற்ற வைத்து பின்னரங்க பகுதிக்கு செல்ல சேர் டாவோஸ் உத்தரவுபடி கோட்டை கதவுகள் அவரிற்காக திறக்கப்படுகின்றன. சேர் டாவோஸ் ரெட்வுமன் நேரிற்கு நேர் சந்தித்து கொள்கின்றனர்( ரனிஷ் பாராத்தியன் மகளை உயிருடன் நெருப்பில் எரித்ததற்காக ஜோன், டாவோஸ்சின் வேண்டுகோள்படி அவரை நோர்த் ஐ விட்டு வெளியேற்றி இருந்தார் மீண்டும் வருவாராயின் அவர் தூக்கிலிடப்படுவார் என சொல்லி இருந்தார்)

டாவோசிடம் என்னை தூக்கிலிட வேண்டிய அவசியமில்லை இன்றைய பொழுது / இன்றைய யுத்தம் முடியும் போது நானும் இறந்துவிடுவேன் என கூறிவிட்டு செல்வார் 

உயர்த்திபிடித்த வாள்களில் நெருப்புடன் டத்ரோகிஸ் கூச்சலிட்டவாறு  டெத் ஐ நோக்கி செல்ல  செல்லும் பின்ணனியிலிருந்து நெருப்பு கோளங்கள்வீசப்படும் 

சமவெளியில் டத்ரோகிஸ்ச சந்திப்பவன் முட்டாள் ,சமவெளியில் எவரும்  அவர்களிற்கு எதிர்நிக்க முடியாது என புகழ் பெற்ற டத்ரோகிஸ் வெறும் மூன்று நிமிட போரில் ஆர்மி ஒவ் த டெத்தால்  துவம்சம் செய்ய பட்டனர். 

ஜோரா மற்றும் ஒருசிலர் மட்டும் திரும்பினர். டத்ரோகிஸ் அழிக்கப்பட்டதை கண்ட டனேரியஸ் கோபத்துடன் ட்ராகன் நோக்கி செல்வார்அவரிடம்  ஜோன்   நைட் கிங் இங்க தான் இருக்கார்  என," Dead already here" என்று விட்டு செல்லும் டனேரியஸ ஜோன் வேறுவழி இல்லாமல் தொடர்வான் இருவரும் ட்ரோகோ மற்றும் ரேகர்(ல்)ட்ராகன்கள் மூலம் டெத்ஸ் எரிக்க தொடங்குவர் .. 

அதற்கிடையே முன்னனி படைக்கும் ஆர்மி ஒவ் த டெத் க்கும் இடையில் கடும் சண்டை ஆரம்பித்து விடும் ப்ரெய்னா ஸ்டார்த் ஜேர்மி லெனிஸ்ரார் பக்கம்பக்கமா நின்று சண்டை செய்வார்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பாதுகாத்தும் கொள்வார்கள் ,

சாம் மிகப் பயந்தபடி காணப்படுவார் அவரை காப்பாற்றி  எட்  உயிரை விடுவார் ( ஜோன் க்கு அடுத்து நைட் வோட்ச் கமாண்டர் இருந்தவர்) ட்ராகனால் டெத் எரிக்கப்படுவதை பார்த்த நைட் கிங் பனி மூட்டத்தை அதிகப்படுத்துவார் அதனால் ஜோன் மற்றும் டனேரியஸ்ஆல் கீழே நடப்பவற்றை பார்க்க முடியாமல் போகும். என்ன தான் சண்டை போட்டாலும் அலை அலையாக வரும் டெத்னை சமாளிக்க  முடியாது என தெரிந்து கோட்டைக்குள் பின் வாங்குமாறு ப்ரெய்னா ஸ்டார்த் மற்றும் ட்ரோமன்ற்  கட்டளை இடுவார்கள் unsullied காத்து நிற்க மற்றையோர் பின்வாங்கி கோட்டைக்குள் செல்வார்கள் 

அத்துடன் கோட்டையை சுற்றி உள்ள அகழியை கொளுத்துமாறு கிரேவோர்ம் (unsullied leader) சொல்லுவார் சேர் டாவோஸ் மேல் இருந்து கொடுக்கும் சிக்னல்களை டனேரியஸ் ல பார்க்க முடியவில்லை,அகழி கொழுத்தாவிட்டால் டெத் முன்னேறுவதை  தடுக்க முடியா  என திகைத்து நிற்கும் கிரேவோர்ம் கண்களில் மெலிசான்டரே படுகிறார் அவரை பாதுகாப்புடன் அகழிக்கு அழைத்து சென்று  அவரின் மந்திர/ தந்திரம் மூலம் அகழியை பற்றவைக்கின்றனர்  டெத்ன் முன்னேற்றம் கொஞ்சநேரம் தாமதிக்கிறது இதற்கிடையில் சஞ்சா ஸ்டார்க் crypt க்கு செல்லுமாறு ஆர்யாவை  அனுப்புகிறார் கையில் ட்ராகன் கிளாஸ்ஸாலான ஒரு 🔪 கொடுத்து ... சஞ்சா அங்கிருந்து சென்று ரைறியன் வாரிஸ் மற்றையோருடன் இணைந்து கொள்கிறார்.

நெருப்பின் உள்நுழையும் டெத்ஸ் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து பாதை அமைப்பதனூடு மற்றவர்கள் உள் நுழைய வழி அமைத்து கோட்டை மதில் மேல் ஏற தொடங்குகின்றன ஜேமி  ,ப்ரெய்ன் ,ஹன்ட், ட்ரோமன்ட்,ஹென்றி, பொட்ரிக் ,பெரிக் என நீண்ட ரணகளம் ஒன்று நிகழ்ந்தேறுகிறது 

Battle of bastard கொல்லப்பட்ட "Giant " ஒன்று கோட்டை கதவை உடைத்து தள்ளி உள்நுழைகின்றது அங்கு நிற்கும் லையானா  மற்றும படை அதை எதிர் கொள்ள எல்லாரையும் அடித்து துவைக்கும் "Giant" ஐ நோக்கி கத்தியுடன் லையான (Lyana) பாய்வர் ,அவரை கைகளில் எடுத்து தன் முகத்திற்கு நேரில் வைத்து தன் கைகளால் நொருக்கும் அதன் கண்களை ட்ராகன் கிளாஸால் குத்தி கொன்று தானும் இறப்பர் லியானா,
உள்நுழைந்த டெத்ஸ் உடன் ஆர்யா ஹென்றி செய்து கொடுத்த ஆயுத்தத்தால்  செமையா சண்டை போடுவதை சேர் டாவோஸ் பெருமையா பார்த்துகொண்டிருப்பார் 

டனேரியஸ்சும் ஜோனும் நைட்கிங் க தேடுகின்றனர்  அவர்களிற்கு மேலால் நீல ட்ராகனில் பறந்துவரும் நைட்கிங் ஜோன் ட்ராகன் ஐ   நோக்கி நெருப்பை கக்குகிறது ,இரண்டு ட்ராகன்களும் சண்டையை தொடங்குகின்றன, நைட்கிங் தன் ஆயுதத்தால் ஜோனை குத்துவதற்கு முயற்சிப்பார் இறுதியில் ஜோனின் ட்ராகன்( ட்ரேகர்) விசேரியஸ்சை கடித்து கீழே தள்ள நைட்கிங்  ட்ராகனில் இருந்து கீழே விழுவார்,ஜோனும் ட்ராகனிலிருந்து விழ டனேரியஸ் நைட் கிங் நோக்கி தன் ட்ராகனை நெருப்பை கக்க செய்வார் ஆனால் நைட் கிங் எதுவும் செய்யாது அந்த நெருப்பு, ட்ராகனை தாக்குவதற்கு தனது ஆயுதத்தை குனிந்து எடுப்பதைக்கண்ட டனேரியஸ் ட்ராகனை  அங்கிருந்து கிளப்பி விடுவர் 

தியோன்  ப்ரான் ஆகியோர் wirewood மரத்தின் கீழ் நைட்கிங் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் , 

நெருப்பை பண்டு பயந்து நிற்கும் ஹண்ட் னை , beric சண்டை பிடிக்க  வருமாறு கூப்பிடுவார் , அவர்களை வெல்ல முடியாது என ஏசும் ஹண்ட் இடம் ஆயுத்தை தவற விட்டு விழும் ஆர்யாவை காட்டி அவளிடம் அதை சொல்லுமாறு beric சொல்லுவார் ,இருவரும் ஆர்யாவை காப்பாற்ற ஓடுவார்கள்,
 ஆர்யா என்ன தான் போராடினாலும் விழ விழ வந்து கொண்டிருப்போரை எந்தளவிற்கு சமாளிப்பது கோட்டைக்குள் உள் அறைகளிற்குள் ஒழிந்து கொள்கிறார் அங்கு நடமாடும் டெத்ஸிடமிருந்து பதுங்கி பதுங்கி நகரும் ஆர்யாவை அவரின் காயத்திலிருந்து சொட்டும் இரத்தத்தின் சத்தத்திலிருந்து கண்டு பிடிக்கும் டெத்ஸ் இடமிருந்து தப்பித்து ஓடுகிறார்..ஹண்ட் மற்றும் பெரிக் ஆர்யாவை தேடுகின்றனர். டெத்ஸ்களால் சூழப்பட்டு விழும் ஆர்யாவை பெரிக் தன் நெருப்பு வாளை வீசி காப்பாற்றுகிறார் 

ஹண்ட் ஆர்யாவை தூக்கி கொண்டு அங்கிருந்து ஓர் அறைக்குள் செல்கிறார் பெரிக்  டெத்ஸ் களை தடுத்து அவர்களிடம் குத்து வாங்கி குற்றுயிராக இவர்களின் அறைக்குள் வந்து சேர்கிறார் ஆர்யா முன்னாடி அவர் உயிர் பிரிகிறது ..அங்கிருக்கும் மெலிசாண்டரே ஆர்யாவை காப்பாற்றுவதற்காக தான் lord of light அவரை( beric) ஏழு தடவைகள் உயிர்ப்பித்ததாக கூறுகிறார் 
உன்னை எனக்கு தெரியும் என கூறும் ஆர்யா நாம் முன்னரே மீட் பண்ணி இருக்கம்,மீண்டும். மீட் பண்ணுவம் என கூறியதாக கூறுவார்.ஆம் இப்போது மீட் பண்ணி இருக்கிறம் என கூற.. என் கண்கள் தெரியாமல் போகும் என நீ கூறியது நடந்தது என கூறும் ஆர்யாவிடம்  நீ சிவப்பு நீலம்  பச்சை கண்களை மூட பண்ணுவாய் என வேறு அர்த்தத்தில் கூறி , சாவை மீட் பண்ணினால என்ன சொல்லுவாய்  என கேட்க ஆர்யா Not today ,என்று விட்டு அங்கிருந்து கிளம்புவாள். 

நைட் கிங் ப்ரான்டனை நோக்கி செல்ல அவனை பின் தொடர்ந்து ஜோன் செல்ல அன்று இறந்த எல்லோரையும் தன்  சக்தியால் எழுப்பி ஜோனுடன் சண்டையிடசெய்து விட்டு  தனது குழுவுடன் ப்ரான்டன் இருக்குமிடம் நோக்கி செல்கிறான்.. ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்த டெத்ஸ்  உடன் தியோன் மற்றும் படையினர் கடுமையாக சண்டை இட்டு கொண்டிருக்கின்றனர். Crypt உள்ளேயும் டெத்ஸ் புகுந்து விட கிட்டத்தட்ட எல்லோருமே  வளைக்கப்பட்ட நிலை, டெத் களினால் சூழப்பட்ட ஜோனினை காக்க மீண்டும் டனேரியஸ்  ட்ராகனுடன் வந்துவிட  ஜோன் ப்ரான்  என கூற அவனை அங்கு செல்லுமாறு கூறிவிட்டு மீதி டெத்ஸ் எரிக்க தொடங்க .. டெத்ஸ் ட்ராகன் மீது ஏற தொடங்கும். ட்ராகன் அலறல் கேட்டு ஜோரா டனேரியஸ்க்கு  ஆபத்து என அவளை காக்க வர ட்ராகன் டனேரியஸ் மற்றும் டெத்ஸ் உதறிவிட்டு பறக்கும் இப்போது இவர்களை டெத் சுற்றி வளைத்து தாக்க வர ஜோரா டனேரியஸ் பாதுகாத்து தானும் தாக்குவார்...தியோனின் குழுவில் எல்லோரும் இறந்து விட அவனின் அம்புகளும் முடிந்த நிலை , ஜோனினை நீல ட்ராகன் முடக்கி விட்டது , மற்ற எல்லோருமே கிட்ட தட்ட டெத்களால் சூழப்பட்ட நிலை  

இப்போது ப்ரான் தியோனை  நோக்கி சொல்லுவான் "you are a good Man theon   "  கண்ணீருடன் அவனை பார்த்துவிட்டு கையில் கிடைத்த ஈட்டியுடன் நைட் கிங் நோக்கி ஓடுவான் ஈட்டியை பறித்து முறித்து அவனின் நெஞ்சில் ஒரே செருகல் ,தியோன் இறந்து விழுவான் ப்ரான்டனை நெருங்கிய நைட்கிங் அவனை உற்று பார்த்துவிட்டு அவனை கொல்ல தனது ஆயுத்த்தினை எடுக்க பின்னால் இருந்து ஆர்யா பாய்வாள்  சடக்கென திரும்பி  அவளின் கழுத்தினை பிடிக்க  கத்தியை நழுவ விடும் ஆர்யா ,மறு கையால் பிடித்து நேராக நைட்கிங் வயிற்றில செருகுவாள்  ,ட்ராகன் கிளாசால் ஆன ப்ரான்டனால் அவளிற்கு கொடுக்கப்பட்ட  லிட்டில் ஃபிங்கரின் சிறு குத்துவாள் அது ,.நைட்கிங்கினை சில்லு சில்லாக்கும் நைட்கிங் இறந்து விழ அவனின் சக்திக்குட்பட்டிருந்த எல்லாமே விழுந்து விடும் ஜோராவும் கடும் காயப்பட்டு விழ டனேரியஸ் அவரை மடிதாங்குவாள்...அவரின் உயிர் பிரியும் 
ரெட்வுமன் தன் நெக்லஸ் கழட்டி வைத்து விட்டு நடந்து சென்று இறந்து விழுவார் 

1)வீடியோ பார்க்க நைட் கிங் ஆர்யா கொல்லும் காட்சி, 
2)ரசிகர்களின் ஆரவாராம் அந்த காட்சிக்கு
 
டனேரியஸ் க்கு தான் கடும் இழப்பு இந்த சண்டை 

இறந்தோர்

Lyanna
Jorah
Beric
Melisandre
The on
Edd

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.