யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Recommended Posts

2017 ல சீசன் 7 முடிஞ்ச பிறகு அடுத்த சீசன் எப்படா  வரும் என்று இருந்தது  இன்னும் 4 நாட்கள் அதற்கிடையே எத்தனை எத்தனை எதிர்வு கூறல்கள்,  பான் மேட் ஸ்ரோரிஸ்... இப்போது இது இறுதி பகுதி என்பதால் யார் த்ரோனை வெல்லப்போவது என்பதையும் விட யார் யார் உயிருடன் எஞ்ச போகிறார்கள் என்பதே ஒருவித பயத்துடன் கூடிய எதிர்பார்ப்பாக உள்ளது 

எனது எதிர்பார்ப்பின் படி செர்சி டனி  இருவருக்கும்  த்ரோன் கிடைக்காது ,
ஜோன் போரில் இறக்க கூடும் மெலிசான்ட்ரே திரும்ப வந்து உயிர் குடுக்கலாம் 
டைரியன் துரோகம் செய்ய டனி  அவரை ட்ராகனிற்கு  BBQ செய்ய குடுப்பார்:)
ஜேமி அநேகமாக இறக்க கூடும் 
ஆர்யாவும் இறக்ககூடும் இல்லாவிட்டால் அரியணை ஏறும் அரசனின் கிங்ஸ்காட் ஆக வருவார்

(ஆர்யா இறக்க சான்ஸ் குறைவு என நம்புகிறேன்.
ஆர்யாவை எழுத்தாளர் கொல்வாரெனில் அவரை டைவோர்ஸ் பண்ணி விடுவதாக செல்லமாக மிரட்டி இருப்பதாக ஒரு பேட்டியில் அவரின் மனைவி சொல்லி இருந்தார்.)
HBO CEO முழுவதையும் பார்த்து விட்டு ஒவ்வொரு episode ம்  ஒரு படத்தை போல இருப்பதாக கூறியிருக்கிறார் 

  இந்த பகுதியில் நான் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது 

1) ஆர்யா - ஜோன் ரீ யூனியன் 
2) சன்ஷா- tyrion ரீ யூனியன் 
3) ஆர்யா - ஜென்றி 
4) ஆர்யா - க்ளக்கெய்ன் 
5)சன்ஷா - செர்சி
6) ப்ரான் - ஜேமி 
மற்றும் சிலவும் 
 
மார்ச்ல இருந்து HBO(ஒன்லைன்) சப்ஸ்க்ரைப் பண்ணியாச்சு  பார்த்திட வேண்டியதான் பாக்கி :)

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

எனக்கு கதை எப்படிப் போனாலும் பரவாயில்லை. முடிவில் white walkers எப்படி இல்லாமல் போவார்கள் என்று அறியவேண்டும்!

Share this post


Link to post
Share on other sites

கேம் ஆப் த்ரோன்ஸ்: குளிர் காலத்தில் பிழைத்திருக்க போவது யார்?

75.jpg

மொத்தமுள்ள எட்டு சீஸன்களில் ஏழு முடிவடைந்த நிலையில், நாளை தொடங்க உள்ள எட்டாவது சீஸன் என்னென்ன ஆச்சரியங்களை வைத்திருக்கும் என கேம் ஆப் த்ரோன்ஸ் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டினால் 1992ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘எ சாங் ஆப் ஐஸ் அண்ட் பயர்’ நாவல்களின் தொகுப்பை தழுவி உருவாக்கப்பட்ட அமெரிக்க ஃபேண்டஸி ட்ராமா தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். எச்பிஓ தொலைக்காட்சி நிறுவனத்திற்காக டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி.வேய்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த தொடர் 2011ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

வருடத்துக்கு ஒரு சீஸன், சீஸனுக்கு பத்து தொடர்கள். மீதமிருக்கும் மாதங்கள் அனைத்தும் அடுத்த சீஸனுக்கான காத்திருப்பு என ரசிகர்களை அதன் கற்பனை உலகதுக்குள்ளேயே அடைகாத்து வைத்திருக்கும் மந்திரத்தன்மை கொண்ட கேம் ஆப் த்ரோன்ஸில் அப்படி என்ன இருக்கிறது?

75a.jpg

ஏழு தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரும் ராஜ்ஜியத்தின் இரும்புச் சிம்மாசனத்தில் அமரப் போவது யாரென்பதே கதை. சிம்மாசனத்திலிருந்த ராபர்ட் பராதியன் என்ற மன்னன் இறந்ததிலிருந்து ஆரம்பமாகும் கதை, அதன் பின் தகுதியற்ற குடும்பத்தினர் மகுடமேற்க பிரச்சினைகள் உருவாகின்றன. அந்த அரியணையில் அமர்ந்த ஒவ்வொருவரையும் அது காவு வாங்குகிறது.

போட்டியிடும் ஒவ்வொருவரிடம் அந்த அரியணையை அடைவதற்கான காரணங்களும், நியாயங்களும் இருக்கும். ஒவ்வொரு கதாபத்திரங்களின் பார்வையிலிருந்தும் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை வடிவம் முற்றிலும் புதிதான அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும்.

ஒரு திரைப்படத்திற்கு இணையான பிரம்மாண்டத்துடன், மிகுந்த பொருடச்செலவில் எடுக்கப்பட்டாலும் இதன் உண்மையான பிரம்மாண்டம் கதாப்பாத்திர வடிவமைப்பு, திரைக்கதையின் திருப்பங்கள் மற்றும் வசனங்கள் தான்.

வெறும் நல்லவன் கெட்டவன் என்ற அடிப்படையில் நகராமல், அனைத்து கதாபாத்திரங்களுக்குள்ளும் இருக்கும் இரட்டை நிலையை காட்டுவதே இதன் சிறப்பம்சமாகும். நல்லவன் என நம்பும் பாத்திரங்கள் கூட ஒரு சிக்கலான கட்டத்தில் வேறு வழியின்றி உணர்ந்தே சில அநீதிகளை இழைக்க வேண்டிய இடத்திற்கு தள்ளப்படும்.

75b.jpg

நன்மையும் தீமையும் நம் விருப்பதையும் மீறி நாம் இருக்கும் இடத்தின் நிர்பந்தம் என்பதை திரைக்கதையின் போக்கில் சொல்லிப்போகும் போது பார்வையாளர்களுக்குள் ஏற்படும் புரிதல் அளப்பரியது.

ஹாரிபாட்டர் படங்களுக்கு உள்ளதைப் போல வலிமையான ரசிகர் தளத்தை கொண்ட கேம் ஆப் த்ரோன்ஸ், இணையமெங்கும் தொடர் குறித்து ரசிகர்கள் உருவாக்கும் புதிய கோட்பாடுகளால் நிறைந்து வருகிறது. முடிவில் இரும்பு சிம்மாசனத்தை அடையப்போவது யார், குளிர்காலத்தின் வாசிகளான வைட் வாக்கர்ஸ் என்ற மரணமேயடையாத படைகளிடமிருந்து மக்களையும் ராஜ்ஜியத்ததையும் காப்பது யார், குளிர் காலத்தின் இறுதிவரை பிழைத்திருப்பது யார் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க போகிறதா சீஸன் 8 என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விண்டர் இஸ் கம்மிங்.

 

https://minnambalam.com/k/2019/04/13/75

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

சீசன் 8 இன் முதலாவது எபிசொட் இன்று வந்துவிட்டது 

*Spoilers alert*

எதிர்பார்த்த மாதிரியே டனேரியஸ் மற்றும் ஜோன் தன் பரிவாரங்கள் சூழ "வின்ரர்பெல்" வந்து விட்டார்கள்.

இரோன் கிறேஜோய் கோல்டன் கொம்பனியைச்சேரந்த இருபதினாயிரம் படைவீர்ர்கள் மற்றும் இரண்டாயிரம் குதிரைகளுடனும் கிங்ஸ்லான்ட வந்தடைந்துவிட்டார்கள்கள் ,இரோனுக்கு செர்சி அவன்கேட்டதை கொடுக்கிறார். தியோன் யாராவை இரோன் கிறேஜோயின் பிடியிலிருந்து மீட்டு கொள்கிறான். ஆர்யா ஜோன் பல வருடங்களின் பின் மீள சந்திக்கிறார்கள்..

சாமை சந்திக்கும் டனேரியஸ்,மற்றும் ஜோரா, சாம்க்கு ஜோராவை குணப் படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறார் அவனின் மூலம் அவன் தன்னால் அழிக்கப் பட்ட"Turlly"பிரபு வம்சத்தை சேர்ந்தவன் என அறிந்து அவனிடம் அவனின் தந்தை மற்றும சகோதரன் ஆகியோர் தன்னால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதை தெரிவிக்கிறாள். கவலையுடன் வெளிவரும் சாம் அங்கு ப்ரான் இருப்பதை பார்க்கிறார் ப்ரான் அவனிடம் ஜோனுக்கு அவன் பற்றிய உண்மையை கூறுமாறு கூறுகிறார். ஒருவாறு ஜோன் தனது உண்மையான தாய் தந்தையர் பற்றி கூறி அவன் தான் த்ரோனுக்கான உண்மையான வாரிசு என கூறுகிறான். சஞ்சாவிற்கு டனேரியஸ்ஸ ஜோன் வடக்கு நோக்கி அழைத்து வந்த்து பிடிக்கவில்லை.இன்னும் சில வடக்கைசேர்ந்த பிரபுக்களிற்கும் ஜோன் இப்போது வடக்கின் கிங் இல்லை ஏற்றுக.கொள்ள கூடியதாக இல்லை, சஞ்சா ரைறியன் சந்தித்து கொள்கிறார்கள், சொல்லாமல் அவனை விட்டு விலகி வந்த்தற்கு சஞ்சா மன்னிப்பு கேட்கிறார் . செர்சி படையணிய அனுப்புவதாக சொன்னதை சஞ்சா நம்பவில்லை அதை tyrion டம் சொல்கிறார் ஆர்யா க்ளக்கேய்ன்,ஆர்யா ஜென்றி  சந்திப்பும் நிகழ்கிறது.. ஜோனும் டனேரியஸ் ட்ராகனில் பறக்கிறார்கள்,ஜேர்மி வின்ரபெல் வந்தடைகிறார் ப்ரான் டனை நேரில் பார்க்கிறார் ப்ராண்டனும் அவருக்காக தான் காத்திருக்கிறார்.நைட்கிங் அம்பர் பிரபு ? மகனை கொன்று சுவரில் தூக்கி ஸ்ரோங் மெஜெஜ் ஒன்றை நொர்தேனருக்கு அனுப்புகிறார் 

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு