Jump to content

ஒரு வெற்றியாளரின் கதை


Recommended Posts

ஒரு வெற்றியாளரின் கதை ...

 
ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பு ...
steve_jobs.jpgஉலகிலே மிக சிறந்த பல்கலைகழகம் ஒன்றில்உங்களோடு இருப்பதை பெருமையாகநினைக்கிறன். உண்மைகள் சொல்ல படவேண்டும். நான் ஒருபோதும்பல்கலைகழகங்களில் பட்டம் பெறவில்லை.பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு அருகில் வருவதுஇதுதான் முதல் தடவை. நான் இன்று உங்களுக்குஎனது வாழ்கையில் இருந்து மூன்று கதைகளைசொல்ல விரும்புகிறேன். அவ்வலவு தான்.பெரிதாக ஒன்றுமில்லை. மூன்றே மூன்றுகதைகல்தான்.
 
முதல்கதை புள்ளிகளை தொடுப்பதுபற்றியது.
 
ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு சேர்ந்து ஆறு மாதங்களில் எனது பட்ட படிப்பைகைவிட்டேன்.நான் ஏன் அவ்வாறு கைவிட்டேன்...???
நான் பிறப்பதற்கு முன்னரே இந்த  பிரச்சினை தொடங்கியது. என்னை பெற்ற தாய்திருமணமாகத ஒரு இளம் பல்கலைகழக மாணவி.
அவர் நான் பிறந்த உடன் என்னை தத்து கொடுக்க தீர்மானித்திருந்தார். எனது தாய்,பல்கலைகழக பட்டம் பெற்ற தம்பதியினரே என்னை தத்தெடுக்க வேண்டும் என்பதில் மிகஉறுதியாக இருந்தார். இந்த வகையில் நான் பிறந்த உடன் சட்டத்தரணி  ஒருவரும் அவரதுமனைவியும் என்னை தத்தெடுப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நான் பிறந்தபோது அந்த சட்டத்தரணி குடும்பம் தங்களுக்கு பெண் பிள்ளை ஒருவரே வேண்டும் என்றுகூறி என்னை தத்தெடுக்க மறுத்துவிட்டனர்.
 
இந்த வகையில் பிள்ளை ஒன்றை தத்தெடுக்க பதிந்து விட்டு காத்திருந்த எனதுதற்போதைய பெற்றோருக்கு நடுச்சாமத்தில் தொலைபேசி  அழைப்பொன்றை ஏற்படுத்தி,
"நாங்கள் எதிர்பார்த்திராத ஆண்  குழந்தை ஒன்று உள்ளது. அதனை தத்தெடுக்கவிரும்புவீர்களா...???"
 என கேட்க பட்டது.
 
உடனே அதற்கு எனது வளர்ப்பு பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
என்னை பெற்ற தாய் எனது வளர்ப்பு அம்மாவும், அப்பாவும் பல்கலைகழக பட்டம்பெறாதவர்கள் என்பதை தெரிந்து கொண்டனர்
இதனால் அவர் என்னை அவர்களுக்கு தத்து கொடுப்பது தொடர்பான ஆவணங்களில்கையெழுத்திட மறுத்து விட்டனர்.
 
இந் நிலையில், எனது வளர்ப்பு பெற்றோர் தாம் என்னை எப்படியாவாதுபல்கலைக்ககத்துக்கு அனுப்புவோம் என்று உறுதி கூறியதன் பின்பு நான் முறையாகதத்துக்கொடுக்கப்பட்டேன்.
 
17 வருடங்களுக்குப் பிறகு நான் பல்கலைக்கழகம் சென்றேன்.எனது அறியாமையினால்நான் தெரிவு செய்திருந்த பல்கலைக்கழகம் நீங்கள் படிக்கும் ஸ்டான்ன்போர்ட்பல்கலைக்கழகம் போன்று மிகவும் செலவு கூடியது. இதனால் எனது வளர்ப்புபெற்றோரின் வாழ்க்கை கால சேமிப்புகள் முழுவதுமே எனது பல்கலைக்கழக படிப்பிற்குசெலவிடப்படுவதாக இருந்தது. 6 மாதங்கள் படித்த பின்னர் அந்த படிப்பில் எந்தபிரயோஷனமும் இருப்பதாக எனக்குப்படவில்லை. எனது வாழ்கையில் நான் எதைசெய்யப்போகிறேன் என்பதை பற்றியோ, பல்கலைக்கழக்கழக படிப்பு  எனதுவாழ்கையை தீர்மாzpப்பதw;கு எவ்வாறு உதவg; போகிறது என்பது பற்றியோ எனக்குஎந்த வித எண்ணமும் அப்போது இருக்கவில்லை
 
ஆனால்,
அந்த பல்கலைக்கழகப் படிப்பிற்காக எனது பெற்றொர் தமது வாழ்க்கை காலம்முழுவதும் சேமித்த பணத்தினை நான் செலவு செய்து கொண்டிருந்தேன். இதனால் நான்எனது பல்கலைக்கழகப் படிப்பினை கைவிடுவதற்கு தீர்மானித்தேன்.
அந்த நேரத்தில் அது ஒரு பயமூட்டும் ஒரு முடிவாகும். ஆனால், இன்று நான் அந்த முடிவைசீர்தூக்கிப்பர்க்கும் போது அதுவே எனது வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் சிறந்ததீர்மானம் என்று கருதுகிறேன். பல்கலைக்கழக கல்வியினை கைவிட்டவுடன் அந்தபாடத்திட்டத்திற்கு அமைவான வகுப்புகளுக்குச் செல்வதை என்னால் நிருத்தக்கூடியதாகஇருந்தது. இதனால் எனக்கு விருப்பமாக இருந்த வகுப்புகளுக்குச் செல்லக்கூடியதாகஇருந்தது. இவையோண்டும் சந்தோஷமான அனுபவங்கள் அல்ல.
 
எனக்கு விடுதி அரை ஒன்று இருக்கவில்லை.இதனால் எனது நண்பர்களின் அறைகளில்நிலத்தில் படுத்துத் தூன்கினேன். வெற்று கோககோலா போத்தல்களை சேகரித்துகடையில் கொடுத்து அதில் வரும் பணத்தைக்கொண்டு உணவு உண்டு வந்தேன்.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூரனமான உணவு ஒன்றினை உண்பதற்காக 7 மைல்தூரம் ஹரே கிருஷ்ண கோவிலுக்கு நடந்து சென்று வந்தேன்.அது எனக்கு மிகவும்பிடித்திருந்தது.
 
 
அதே நேரத்தில் ஆர்வம் மற்றும் உள்ளுணர்வு அடிப்படையில் நான் மேற்கொண்டசெயற்பாடுகள் மிகவும் விலை மதிப்பற்ற செயற்பாடுகளாக பின்னர் மாறியிருந்தன.
நான் உங்களுக்கு உதாரணம் ஒன்றை சொல்கிறேன்.
 
அந்தக்காலத்தில் ரீட் கல்லூரி எமது நாட்டிலே மிக சிறந்த எழுத்துருவாக்கள் முறைவகுப்புகளை நடத்தி வந்தது. அதனடிப்படையில் வளாகத்தினுள் காணப்பட்டசுவரொட்டிகள், ஓவியங்கள் அனைத்துமே அழகான கையினால் செய்யப்படஎழுத்திருவில் அமைந்திருந்தன.
நான் எனது பட்டப்படிப்பை கைவிட்டிருந்த படியால் இந்த எழுத்துருவாக்கள் வகுப்பிற்குசென்று இதனை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள தீர்மானித்தேன். இது தொடர்பாகபல விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். குறிப்பாக, வெவ்வேறுபட்ட எழுத்துச் சேர்க்கைகளுக்கிடையிலான இடைவெளி அமைப்பு எவ்வாறு அந்த சொல் உருவினைசிறப்பாக ஆக்குகின்றது என்பதைக்கற்றுக்கொண்டேன். அது மிகவும் அழகானது.அதனை விஞ்ஞானத்தால் அடைய முடியாது. எனக்கு அது மிகவும் உட்சாகம் தருவதாகஇருந்தது
 
 
 
எவ்வாறாயினும் இவற்றை எனது நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்திவது பற்றியஎந்த எண்ணமும் எனக்கு அந்த நேரத்தில் இருக்கவில்லை. ஆனால் 10 வருடங்களுக்குப்பிறகு எனது மக்கின்டொச் (Macintosh) கணினியை வடிவமைக்கும்போது நான்கற்றுக்கொண்ட அந்த விடயங்களெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தன. இதனால் இவைஎல்லாவற்றையும் எனது கணினி வடிவமைப்பில் பயன்படுத்தினேன். அதுவே மிகவும்அழகானமுறையில் அச்சிடும் நுட்பத்துடன் அமைந்து வந்த முதலாவது கணினியாகும்.நான் எனது பட்டப்படிப்பை கைவிட்டு எழுத்துருவாக்கள் வகுப்பிற்கு சென்றிராவிட்டால்மக்கின்ரொஸ் கணினிகள் விகிதாசார  அடிப்படையில்இடை வெளிகளினைக்கொண்டமைந்த எழுத்துருக்களை எந்தக்காலத்திலும் கொண்டிருக்கமாட்டாது. என்னால் வடிவமைக்கப்பட்ட இந்த முறையினை தான் விண்டோசில் பின்னர்பயன்படுத்தி இருந்தனர். இந்த வகையில் நான் எனது பட்டப்படிப்பைக்கைவிட்டுஎழுத்துருவாக்கள் வகுப்பிற்கு சென்றிராவிட்டால் உலகிலுள்ள கணினிகள் எவையுமேதற்போது கொண்டிருக்கும் பிரதானமன எழுத்துருக்களை கொண்டிருக்க மாட்டது.
 
அந்த நேரத்தில் இந்த விடயங்களை எதிர்வு கூறி எனது வாழ்க்கையிலே வேறுபட்ட இந்தபுள்ளிகளை இணைத்திருக்க முடியாது. ஆனால் இன்று அந்த நிகழ்வுகளை  திருப்பிபார்க்கும்போது  இந்த புள்ளிகளெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் எதிர்காலத்தில்இணைக்கப்படக்கூடியவை என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.
 
ஏதோ ஒன்றில் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்களது உள்ளுணர்வு, இலக்கு, வாழ்வு, கர்மா எதுவென்றாலும் பரவாயில்லை.இந்த அணுகுமுறையால் நான் எப்போதும் தோல்விஅடையவில்லை .இதுவே எனது வாழ்க்கையில் இவ்வலவு மாற்றங்களை செய்து என்னைசாதனையாளராக மாற்றியது.
 
எனது இரண்டாவது கதை காதல் மற்றும் தோல்வி பற்றியது. நான் அதிஷ்டமானவான்.நான் விரும்பியவற்றை எனது இளமைக்காலத்தில் செய்யக்கூடிய வாய்ப்பு எனக்குகிடைத்தது. நான் 20 வயதாக இருக்கும்போது நானும் வோஷும் சேர்ந்து எனதுபெற்றோரில் வாகன தரிப்பிடத்தில் ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்தோம். நாம் மிககடுமையாக உழைத்தோம். 10 வருடத்தில் ஆப்பிள் கணினி நிறவனத்தை 4,000ஊழியர்களைக்கொண்ட 20,000 கோடி ரூபாய்   பெருமதியுள்ள நிறுவனமாக எம்மால்வளர்த்தெடுக்க முடிந்தது. எமது முதலாவது படைப்பான மக்கின்றோஷ் கணினியினைஅறிமுகப்படுத்தி ஒரு வருடத்தில் நான் ஆப்பிspy;  இருந்து வேலை நீக்கம்செய்யப்பட்டேன். அப்போது எனக்கு 30 வயது.
 
என்னால் உருவாக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து என்னை எப்படி வேலை நீக்கம் செய்யமுடியும் என்று நீங்கள் கற்க முடியும்..?? 
ஆப்பிள் நிறுவனம் வளர்ச்சி அடையும்போது மிகவும் கெட்டிக்காரர் என்று கருதியஒருவரை நான் வேலைக்கு சேர்த்திருந்தேன். அவர் என்னுடன் இணைந்து நிறுவனத்தினைகொண்டு நடத்தினார். முதலாவது வருடம் நன்றாக முடிவடைந்தது. ஆனால்அதற்குப்பிறகு எதிர்காலம் பற்றிய எண்கள் இருவரது பார்வையும் வேறுபடத்தொடங்கியது
இதனால் நாம் இருவரும் முரண் பட்டுக்கொண்டோம். இந்த முரண்பாட்டில் எமதுநிறுவனத்தின் இயக்குனர் சபை அவரின் பக்கம் சாய்ந்து கொண்டது..! 
இதனால் என்னால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து எனது 30ஆவது வயதில் நான் வெளியேற்றப்பட்டேன். எனது வாழ்க்கையில் நான் எந்த விடயத்தில்எனது முOக்கவனத்தை செOத்தி இருந்தேனோ அது என்னை விட்டு சென்றிருந்தது.அதுஎன்னை கதி கலங்க செய்தது. சில மாதங்களுக்கு என்ன செய்வதென்றே எனக்குதெரியவில்லை
 
எனக்கு முனனைய தொழில் முயற்சியாளர்கள் எல்லாருமே தோல்வியடைய நான்காரணமாகிவிட்டேன் என்று கருதினேன். அவர்கள் என்னிடம் கொடுத்த அஞ்சலோட்டதடியை கீழே  விழுத்தி விட்டதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் தொழில் முயட்சியாsர்கள்பலரை சந்தித்து நான் தவறு செய்துவிட்டதாக கூறி மன்னிப்பு கூறினேன். எனதுதோல்வியானது மிகவும் பிரபல்யமாக இருந்தது.
 
என்றாலும் ஏதோ ஒன்று என்னுள் உதயமாகொக்கொண்டு இருந்தது. நான் முன்னர்செய்தவற்றை இப்போதும் நான் விரும்பினேன். ஆனால் ஆப்பிள் நிறுவன நிகழ்வுகளில்எந்தவித மாற்றமும் ஏற்படவில்லைநான் நிராகரிக்கப்பட்டேன். ஆனாலும் நான் அதனைஇப்போதும்  விரும்புபவனாக இருந்தேன். இதனால் நான் மீண்டும் புதிதாகதொடங்குவதற்கு தீர்மானித்தேன். அந்த நேரத்தில் எனக்கு புரியவில்லை ஆனால் ஆப்பிள்நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற பட்டமை தான்  
எனது வாழ்க்கையில் நடந்த மிகவும் சிறந்த ஒரு நிகழ்வாகும். வெற்றிகரமாக இருப்பதிலுள்ள பாரத்திலிருந்து விடுபட்டு புதிதாக தொடங்குவதிலுள்ளஇலகுத்தன்மையினை உணர்ந்தேன்
 
அடுத்த 5 வருட காலப்பகுதியில் நெக்ஸ்ட் மற்றும்  பிக்சார் என்ற இரண்டு நிறுவனங்களைஆரம்பித்தேன். அத்துடன் சிறந்த பெண் ஒருவருடன் காதல் கொண்டேன். அப்பெண்பின்னர் எனது மனைவியானார்.
பிக்சர் நிறுவனம் உலகிலே முதலாவது கணினியில் உருவாக்கப்பட்ட உருவமைப்புபடமான  TOY STORY இணை உருவாக்கியது. சிறிது காலத்தின் பின் நினைத்துபார்த்திருக்காத முறையில் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஆப்பிள் நிறுவனம் எனது நெக்ஸ்ட்நிWவனத்தினை கொள்வனவு செய்தது. இதனால் நான் மீண்டும் ஆப்பிள்நிருவனத்திw;குள் வரவேண்டி இருந்தது.
 
நாம் நெக்ஸ்ட் நிறுவனத்தில் உருவாக்கிய   தொழில்நுட்பமே இன்றைய ஆப்பிள்நிறுவனத்தின் இதயமாக இருந்தது. அத்துடன் எனது மனைவி லோரன்சும் நானும்சிறப்பான முறையில் குடும்பத்தில் இணைந்துள்ளோம். நான் ஆப்பிள் நிறுவனத்தில்இருந்து வெளியேற்ற பட்டிருக்கவிட்டால் இவை எதுவுமே நடந்திருக்காது. இது மிகவும்கசப்பான ஒரு மருந்து. ஆனால் நான் நினைக்கிறேன் நோயாளிகளுக்கு அந்த மருந்து மிகஅவசியமானது.
 
 
 
சில சமயங்களில் வாழ்க்கை உங்கள்  கல்லினால் அடிக்கிறது. ஆனால் உங்கள்தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.நான் விரும்புவதை எந்த நேரத்திலும் என்னால்செய்ய முடிந்தமைதான் என்னை இந்த உயர் நிலைக்கு கொண்டு வந்தது என்பதை நான்எப்போதுமே நம்புகிறேன். இது உங்கள் வேலைக்கு மட்டுமல்ல உங்கள் காதYக்கும் கூடஉண்மையானதொன்று
உங்களை திருப்தி படுத்திக்கொள்ள ஒரே வழி உங்களுக்கு
 விரும்பியவற்றை நீங்கள் செய்வதுதான். நீங்கள் இதுவரை காலமும் உங்களுக்குவிரும்பியது எது என்று அறிந்து கொள்ளாவிட்டால் அதனை  முயற்சி செய்யுங்கள்.ஒருபோதும் மனதுக்கு பிடிக்காதவற்றை கொண்டு திருப்தி பட வேண்டாம்.
உங்களுக்கு பிடித்தவற்றை நீங்கள் கண்டுகொள்ளும்போது உங்கள் இதயத்தினால்அதனை உணர முடியும். சிறந்த உறவு என்பது வருடங்கள் செல்ல செல்லஇருக்கமடையுமே தவிர விரிசலடைந்து செல்லாது. எனவே நீங்கள் விரும்புவதைகண்டுகொள்ளும் வரை அதனை தேடுங்கள். மனதிற்கு பிடிக்காததுடன் திருப்தி அடையவேண்டாம்.  
 
எனது 3 ஆவது கதை இறப்பு பற்றியது.
 எனக்கு 17 வயதாக இருக்கும்போது நான் ஒரு வாசகத்தை பார்த்தேன். அதில் , ‘ஒவ்வொருநாளும் உனது இறுதி நாள் என நீ நினைத்து 
வாழ்வாயானால் ஒருநாள் உனது எண்ணம் சரியாக இருக்கும்.’ என எழுத பட்டிருந்தது.
இந்த வாக்கியம் என்னை மிகவும் பாதிப்பதாக இருந்தது. அன்று முதல் இன்றுவரை கடந்த 33 வருடங்களாக ஒவ்வொரு நாள் காலையிலும் கண்ணாடியை பார்த்து எனதுவாழ்க்கையின் இறுதி நாளாக இன்று இருக்குமானால் நான் இன்று செய்வதற்குஎண்ணியுள்ள விடயங்களை  செய்வேனா..???
என்று என்னை நான் கேட்டுக்கொள்வேன். அதற்குரிய விடை குறிப்பிட சில நாட்களாகஇல்லை என்பதாக இருக்குமானால் நான் எனது செயற்பாடுகளில் மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என புரிந்து கொள்வேன்.
 
நான் விரைவாக இறந்துவிடுவேன் என்பதை மனதில் நினைத்துக்கொள்வது தான் நான்எனது வாழ்க்கையில் பாரிய தெரிவுகளை மேற்கொள்ள உதவியது. நான்இறக்கப்போகிறேன் என்பதனை மனதில் கொள்ளும்போது தான் நான் எதனையோஇழக்கப்போகிறேன் என்ற மாயைக்குள் அகப்பட்டுக்கொல்லாமல் இருக்க முடியும். நீஏற்கனவே நிர்வானமாக்கப்பட்டவன். உனது மனது சொல்வதனை பின்பற்றாமல்இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.
 
 
ஒரு வருடத்துக்கு முன்னர் எனக்கு புற்று  நோய் இருப்பது கண்டு பிடிக்கபட்டது. ஒரு நாள்காலை 7.30 இற்கு பரிசோதனை செய்தபோது எனது சதய சுரப்பியில் புற்று நோய் தோற்றிஇருப்பது தெரிய வந்தது. சதய சுரப்பி என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது.
மருத்துவர்கள் இந்த புற்று நோயானது குணப்படுத்த முடியாது எனவும் இன்னும் 3-6மாதங்கள் வரை தான் நான் உயிர் வாழ முடியும் என்றும் கூறினார்கள்.  
வீட்டுக்குப்போய் எனது கருமங்களை சீர்படுத்தி வைக்கும்படி எனது மருத்துவர் கூறினார்.மருத்துவ வார்த்தைகளில் அதன் கருத்து நீர் உமது சாவிற்கு உம்மை தயார்படுத்தவும்என்பதாகும். இதன்படி எனது பிள்ளைகளுக்கு அடுத்த பத்தாண்டு காலத்தில் சொல்லநினைத்தவற்றையும் செய்ய நினைத்தவற்றையும் ஒரு சில மாதங்களில் சொல்லவும்செய்யவும் வேண்டும். இலகுவாக விடைபெற கூடியவாறு எல்லா குடும்ப விடயங்களும் சரிசெய்யப்படல் வேண்டும்
 
இன்னும்சில நாட்கள் தான் நான் உயிரோடிருப்பேன் என்ற உண்மையுடன் நான் அந்த நாழ்முழுவதுமே வாழ்ந்தேன். அன்று பின்னேரம் எனது தொண்டைக்குள்ளால் குழாய் ஒன்றைவயிற்ருக்குள்ளே செலுத்தி அதில் சிறிதளவு பகுதியை வெளியில் எடுத்து பரிசோதனைசெய்தனர்.
அந்த நேரத்தில் நான் மயக்கப் பட்டிருந்தேன். அப்போது என்னருகிலிருந்த எனது மனைவி,மருத்துவர்கள் அந்த பரிசோதனையை செய்து முடிந்தவுடன் கண்ணீர் மல்கிஆனந்தப்பட்டதை அவதானித்தேன். காரணம் எனக்கு வந்திருந்தது அறுவை சிகிச்சைமூலம் குனபடுத்தக்கூடிய அரிதான புற்று நோயாகும். நான் அந்த அறுவை சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டேன். இப்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல சுகதேகியாக  இருக்கிறேன் .
 
இது உண்மையில் நான் சாவிற்கு மிக அருகில் சென்று வந்த அனுபவமாகும். அதற்கூடாகவாழ்ந்தவன் என்ற வகையில் நான் உங்களுக்கு ஒரு உண்மையினை சொல்கிறேன் .
இறப்பு என்பது மிகவும் பயனுள்ள எண்ணக்கருவாகும் எவருமே சாவிற்கு தயாராகஇல்லை. சொர்க்கம் செல்ல இருப்பவர்கள் கூட. இறப்பு என்பது எங்கள் எல்லோருக்கும்பொதுவான முடிவாகும் எவருமே எந்த காலத்திலும் சாவில் இருந்து  தப்பவில்லை அதுஅவ்வாறு தான் இருக்க வேண்டும்.
 
காரணம் இறப்பு என்பதுதான் வாழ்க்கையில் மிக உன்னதமான கண்டுபிடிப்பாகும் .இதுவே வாழ்க்கையின் மாற்றத்திற்கான  காரணி . இது புதியவர்களுக்கு இடமளிக்கும்பொருட்டு பழையனவற்றை  இல்லாதாக்குகின்றது . இப்போது நீங்கள் தான் அந்தபுதியவர்கள் இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக வயதானவர்களாகி இந்த உலகிலிருந்துஇல்லாமலாகி விடுவீர்கள் . நான் அவ்வாறு சொல்வதற்கு என்னை மன்னியுங்கள் ஆனால்இது தான் உண்மை.
 
உங்களது காலம் வரையறுக்க பட்டது எனவே அந்த  வாழ்க்கையினை வேறு ஒருவரின்வாழ்கையை வாழ்வதன் மூலம் வீணடித்து விடாதீர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்குஏற்ப வாழ்தல் என்ற வலைக்குள் நீங்கள் விழுந்து விட வேண்டாம். மற்றவர்கள் போடும்சத்தங்களால் உங்களது உள்ளுணர்வு அடிப்பட்டு போக அனுமதிக்காதீர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்களது இதயத்தினையும் உள்ளுனர்வினையும்பின்பற்றக்கூடிய உத்வேகத்திணை எப்போதும் கொண்டிருங்கள். நீங்கள் என்னவாக வரவிரும்புகிறீர்கள் என்பது உங்களது இதயத்திற்கும் உள்ளுனர்விற்கும் ஏற்கனவே தெரியும்.
மற்றவை எல்லாமே இரண்டாம் தரமானவை.
 
 
நான் சிறுவனாக இருந்தபோது முழு உலக வழிகாட்டி என்ற ஒரு சிறந்த புத்தகம் இருந்தது.பிபிலிய நூல் போல் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு நூலாக அந்த நூல் அக்காலத்தில்காணப்பட்டது.  ஸ்ருவர்ட் ப்ராண்ட் என்பவரால் அந்த புத்தகம்  உருவாக்க பட்டிருந்தது.அந்த புத்தகத்தை கவித்துவம் பொருந்திய நூலாக அவர் வடிவமைதிருந்தார். இதுகணினிகளும் நவீன அச்சு சாதனங்களும் அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன்பாகும் .
 
 இப்புத்தகம் தட்டச்சு இயந்திரம் , கத்தரிக்கோல் , மற்றும் பொலரைட் கமரா என்பவற்றின்உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகும் . இது கூகுள் (Google) அறிமுகப் படுத்துவதற்கு 35வருடங்களுக்கு முன்னர் கூகிலினை புத்தக வடிவில் வெளியிட்டது போன்றது.
 
 
அது ஒரு லட்சிய பூர்வமான படைப்பு . அது சிறந்த  கறுவிகளுடனும் உயர் மேட்கோள்களுடனும்அமைக்கப் பட்டிருந்தது . ஸ்டுவார்டும் அவரது குழுவுமாக சேர்ந்து சேர்ந்து 'முழு உலகவழிகாட்டியில்' பல பாகங்களை வெளியிட்டிருந்தனர் . எல்லாவற்றினையும் உள்ளடக்கிவிட்டோம் என்று கருதி தமது இறுதி பாகத்தினை 1970 களின் நடுப்பகுதியில் வெளியிட்டனர் .அப்போது எனக்கு உங்களது வயதிருக்கும் .
அப்புத்தகத்தின் பின்  அட்டைகள் மிகவும் ஆவலை  தூண்டும் கிராமப்புற வீதியொன்றின்அதிகாலை பொழுது ஒன்றின் புகைப்படம் இணைக்க பட்டிருந்தது . அதன் கீழ் பின்வருமாறுஎழுத பட்டிருந்தது.
பசித்திருங்கள்...!!! மூடராயிருங்கள்...!!! (Stay hungry. Stay Foolish ). அவர்கள் தமது காரியத்தினைமுடித்து விடைபெறும்போது சொல்லப்பட்ட வாக்கியமாக அது இருந்தது பசித்திருங்கள்...!!!மூடராயிருங்கள்...!!! நான் அன்றிலிருந்து அவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்பினேன் .இன்று உங்களது பல்கலைக்கழக பட்டப்படிப்பு தொடங்கும்போது அந்த வாக்கியங்களை நீங்கள்புரிந்து பின்பற்ற வேண்டும் என விரும்புகிறேன்
steve-jobs-in-our-hearts.jpg
 
பசித்திருங்கள்...!!! மூடராயிருங்கள்...!!!
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜெனிவாவில் இரட்டை நன்மை : நா.உறுப்பினர் சுமந்திரன் வீரகேசரி வார வெளியீட்டுக்குப் பிரத்தியேக செவ்வி .. !   'புதிய பிரேரணையை இலங்கை நிராகரித்தால் அதன் சர்வதேச உறவில் முறிவுகள் ஏற்படும்' வடமாகாண சபையின் ஐ.நா.வுக்கான தீர்மானம் இனப்படுகொலையை வலியுறுத்தவில்லை' சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவதானது முரண்பாடான விடயமாகவே இருக்கும். குறைந்தபட்ச சாத்தியப்பாடுகளுடனனேயே குற்றவியல் நீதிமன்றுக்கான முயற்சி. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மீள எடுப்பதால் அதனை உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புக் கிடைப்பதோடு, பேரவையினுள் இலங்கை பற்றிய புதிய தீர்மானமும் தடையின்றி நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வை தொடர்ந்தும் நீடித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இது எமக்கு இரட்டை நன்மையை அளிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் , யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது குறிப்பிட்டார் . அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு: கேள்வி : - தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூன்று கூட்டுக்கள் ஒன்றிணைந்து ஜெனிவா மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் பின்னடித்த விடயங்கள் சிலவற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றதே ? பதில் : - கூட்டமைப்பு பின்னடித்த விடயங்கள் என்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? கேள்வி : - இனப்படுகொலை நடைபெற்றமை மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களைத்தான் கூறுகின்றேன் ? பதில் : - அவ்வாறில்லை. ‘நான் 2013 ஆண்டில் முதன்முதலாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஒரு ' இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டு இலங்கைப் பாராளுமன்றத்திலே உரையாற்றியிருந்தேன் . அது பகிரங்கமாக கூறப்பட்டதொன்றுதானே. கேள்வி : - நீங்கள் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தாலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அல்லது தீர்மானங்களில் இனப்படுகொலை என்பதை வலியுறுத்தவில்லையல்லவா ? பதில் : - முதன் முதலாக 2011 ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆணையின் பிரகாரம் இலங்கை பற்றிய மூன்று நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது . செயலாளர் நாயகம் அந்த அறிக்கையை செப்டெம்பரில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார் . அந்த அறிக்கையில் 'இனப்படுகொலை' என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை. ‘துன்புறுத்தல்கள்' என்ற சொற்பதமே உள்ளது . அதில் ‘இனப்படுகொலை' என்ற சொற்பதத்தினை பயன்படுத்தாமை தொடர்பில் நாம் நீண்ட நேரம் அவர்களுடன் விவாதித்தோம். அச்சமயத்தில் , ‘இனப்படுகொலை' என்பதற்கான 'நோக்கு' மற்றும் '’குற்றவியல்” ரீதியான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமை, அத்துடன் ' கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை' என்பது நீண்டகாலமாக நடைபெறுவதால் அதனைக் குறிப்பிட்டு கூறி உள்ளீர்க்க முடியாமை தொடர்பில் எமக்கு தெளிவு படுத்தினார்கள். 2012 ஆம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது , ' பிரகடனத் தீர்மானத்தினையே ' செய்தது . அதன் பின்னர் 2012 , 2013 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறே குறிப்பிட்டிருந்தன. அரசாங்கம் அதனை முன்னெடுக்காததன் காரணத்தினாலேயே 2014 இல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் மூலமாக சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது . அந்த தீர்மானத்திற்கு அமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடைய அவலுவலகத்தினால் விசாரணை அறிக்கை 2015 செப்டெம்பர் 16 ஆம் திகதி ஜெனிவாவில் வெளியிடப்பட்டது . இதிலும் ' இனப்படுகொலை' என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை. குறித்த அறிக்கை வெளியிடப்பட்டபோது, பத்திரிகையாளர் ஒருவர் இனப்படுகொலை என்ற சொற்பதம் இடம்பெறாமை குறித்துக் கேள்வி எழுப்பிய சமயம் உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹசைன் , "போதுமான ஆதரங்கள் இல்லாமையாலேயே அச்சொற்பதத்தினை பயன்படுத்தவில்லை" என்று குறிப்பிட்டார் . நாம் சமூகவியல் சார்ந்து இனப்படுகொலை என்று குறிப்பிட்டாலும் குற்றவியல் அடிப்படையில் அதற்கான சான்றுகள் அப்போது போதுமானதாக இருக்கவில்லை. கேள்வி : - 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலும் அவ்விடயம் இருக்கவில்லையே ? பதில் : - 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் இலங்கை அரசாங்கத்தினது இணை அனுசரணையைப் பெற்றுக்கொண்டதாகும் . ஏற்கனவே 'இனப்படுகொலை' என்ற சொற்பதத்தினை பயன்படுத்துவதில் உள்ள நிலைமைகளை நாம் புரிந்து கொண்டிருந்தோம். முன்னதாக வெளியான ஐ.நா.வின் இரண்டு அறிக்கைகளில் அச்சொற்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் அச்சொற்பதத்தினைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அதனை நிரூபிக்க முடியாது போனால் அது எமக்குப் பலத்த பின்னடைவுகளையே ஏற்படுத்தும். அதன் காரணத்தினால்தான், நாம் இனப்படுகொலை , மனிதாபிமானச் சட்ட மீறல்கள், துன்புறுத்தல்கள், போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் என்று தனித்தனியாக வகைப்படுத்தாது பொதுவாக 'சர்வதேசச் சட்ட மீறல்கள்' என்ற சொற்பதத்தினை ஒரு 'உத்தியாக' பயன்படுத்தி இருந்தோம் . கேள்வி : - சட்ட நுட்பங்கள் அறிந்தவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து வடக்கு மாகாண சபையில் 2015 பெப்ரவரி 10 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இனப்படுகொலைச் சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதே ? பதில் : - அந்தத் தீர்மானத்தினை அனைவரும் இனப்படுகொலைத் தீர்மானம் என்றே கூறுகின்றார்கள் . அந்த தீர்மானத்தின் இறுதிப்பகுதியை மிகக் கவனமாக அவதானித்தால் , அதில் 'கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 'கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்பது 'சர்வதேச குற்றங்களில் ஒன்றாக இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை', ஆகவே அது வருங்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றே அத்தீர்மானம் நிறைவடைகிறது . அந்த தீர்மானம் இலங்கையில் நடந்தது 'சர்வதேச குற்றங்கள் இல்லை' என்ற செய்தியையே ஐ.நா.வுக்கு வழங்கியுள்ளது . அவ்விதமான எமது பலவீனங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் மக்களுக்கு நன்மை கிடைக்காத முறையிலும் நாம் செயற்படவில்லை. கேள்வி : - நீண்டகாலமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறிவந்த நீங்கள் பொது ஆவணத்தில் அவ்விடயம் உள்வாங்கப்படுவதற்கு எவ்வாறு இணக்கம் தெரிவித்தீர்கள் ? பதில் : - கடந்த 10 வருடங்களாக மனித உரிமைகள் பேரவை ஊடான முயற்சியில் பொறுப்புக்கூறல் செய்யப்படவில்லை . கடந்த ஐந்து வருடங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஐ.நா.தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி வாக்குறுதிகளை அளித்தாலும் உள்நாட்டில் எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை . பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நாடுகளை கட்டுப்படுத்தாது . சம்பந்தப்பட்ட நாடு இணங்கினால் மட்டுமே பொறுப்புக்கூறல் தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தலாம் . அதுவே மனித உரிமைகள் பேரவையின் அமைப்பு முறைமையாகும் . அந்த அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் கடந்த செப்டம்பர் கூட்டத்தொடரில் ஐ.நா.தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்து விட்டது . அதன் பின்னர் , பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையில் வைத்திருப்பதால் பயனில்லை . ஆகவே தான் அதனை அங்கிருந்து மீளெடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளது . கேள்வி : - இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முடியும் என்ற நம்பிக்கை உங்களிடத்தில் உள்ளதா ? பதில் : - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மூன்று வழிகளே உள்ளன . முதலாவது , ' ரோம் ' சாசனத்தில் சம்பந்தப்பட்ட நாடு கைச்சாத்திட்டிருக்க வேண்டும் . ஆனால் இலங்கை அதில் கையொப்பமிடவில்லை . இரண்டாவது , சம்பந்தப்பட்ட நாடு இணங்கி குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறைக்கு முகங்கொடுக்க வேண்டும் . இலங்கை அவ்விதமான இணக்கத்தை ஒருபோதும் தெரிவிக்கப்போவதில்லை . மூன்றாவது ஐ.நா.பாதுகாப்புச் சபையின் ஊடாக பரிந்துரைக்கப்பட வேண்டும் . இதுவொன்றே எமக்குள்ள ஒரேவழியாகும் . ஆனால் இதில் வீட்டோ அதிகாரத்தினைக் கொண்டுள்ள ரஷ்யா , சீனா இலங்கையை காப்பாற்றும் என்பதே எனது தர்க்கமாகும் . ஆனால் பல சந்தர்ப்பங்களில் இவ்விதமான விடயங்களில் சீனா வீட்டோவை பயன்படுத்தாது இருந்துள்ளதாக பொது ஆவணத் தயாரிப்பு கலந்துரையாடல்களின் போது எனது நிலைப்பாட்டுக்கு எதிரான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன . ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சாத்தியமில்லை என்று எதிர்மறையாக சிந்திப்பதை விடவும் ஒரு சதவீதமேனும் உள்ள சாத்திய வழியில் முயற்சித்துப்பார்ப்போம் என்ற நிலைப்பாடு உடையவர்களின் முயற்சிக்கும் கருத்துக்கும் குறுக்கே நிற்பதற்கு நான் விரும்பவில்லை . அதனாலேயே சம்மதம் தெரிவித்தேன் . அவ்விதமான முயற்சி வெற்றி பெற்றால் அதனை மனதார வரவேற்கும் முதல் நபரும் நானே . கேள்வி : - மனித உரிமைகள் பேரவையில் இருந்து பொறுப்புக்கூறல் விடயம் மீள எடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் என்ன ? பதில் : - பொறுப்புக்கூறல் மீளவும் எடுக்கப்பட்டு அதனை மீண்டும் ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் அனுப்புமாறு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரைக் கோரியுள்ளோம் . ஏனென்றால் அவரே இலங்கை விடயத்தினை மனித உரிமைகள் பேரவைக்கு 2011 இல் அனுப்பி வைத்தவர். அவர் அனுப்பி வைத்த விடயம் பத்து ஆண்டுகளாக எந்த முன்னேற்றத்தினையும் எட்டவில்லை என்ற செய்தியையும் அவருக்கே மீள அனுப்பி வைப்பதன் ஊடாக தெரிவிக்க முடியும் . மேலும் மனித உரிமைகள் பேரவையாலோ அல்லது உயர்ஸ்தானிகராலோ இந்த விடயத்தினை நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது . ஆகவே செயலாளர் நாயகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் பொதுச்சபையில் இந்த விடயத்தினை விவாதித்துத் தீர்மானம் எடுத்தே அவரால் சாத்தியமான பொறிமுறைகளில் ஒன்றைப் பரிந்துரைக்கலாம். உதாரணமாக, கூறுவதென்றால் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் அவரால் அனுப்பபடலாம். அல்லது , சிரியா விடயத்திற்காகப் பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையைப் போன்றதொரு கட்டமைப்பை உருவாக்கலாம் . நாம் அனுப்பி வைத்துள்ள ஆவணத்தில் சிரியாவை ஒத்தபொறிமுறையை உதாரணமாகக் கூறியுள்ளமைக்கு காரணம் என்னவென்றால், பொறுப்புக்கூறல் விடயத்தினை நீதிமன்றப் படிமுறைக்குள் கொண்டு செல்வதற்காகவே. அவ்விதம் பரிந்துரைக்கும் கட்டமைப்பு செயற்படுவதற்காக ஒருவருட கால அவகாசம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளோம் . கேள்வி : - இதில் மியன்மார் பொறிமுறைகள் ஒரு உதாரணமாக உள்ளீர்க்காமைக்கான காரணம் என்ன ? பதில் : - மியன்மார் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையே அந்தப் பொறிமுறையை உருவாக்கியுள்ளது . நாங்கள் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையிலிருந்து மீள எடுப்பதற்கான கோரிக்கையை முதலில் விடுத்துவிட்டு பின்னர் அதே ஆவணத்தில் மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறிமுறையை கோருவதானது முன்னுக்குப்பின் முரண்பாடாக இருக்கும் என்பதால் தான் அப்பொறிமுறையை உள்வாங்கவில்லை . கேள்வி : - இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க முடியாதென கூறியுள்ளதே ? பதில் : - ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணை நாடுகள் இறுதி தருணத்திலும் இலங்கை அரசாங்கத்தினை மார்ச் மாதம் நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு அனுசரணை அளிக்குமாறு கோரியிருந்தன . எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது . அது உண்மையிலேயே எமக்கு சாதகமான விடயம்தான் . ஏனென்றால் இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்குவதாக இணை அனுசரணை நாடுகளிடத்தில் சம்மதம் தெரிவித்திருந்தால் அரசாங்கம் விரும்புகின்ற வகையிலேயே நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைந்திருப்பதற்கே அதிக சாத்தியங்கள் இருந்தன . அத்தோடு இம்முறை பாதிக்கப்பட்ட எமது தரப்புக்கு சாதகமான நிலைமைகள் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இல்லை. பொறுப்புக்கூறல் பரிந்துரைகளுடன் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதே மிகச் சவாலான விடயமாகவே உள்ளது . குறிப்பாக பொறுப்புக்கூறலுடன் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் தருணத்தில் அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கின்றது . ஆனால் , இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை நாம் பேரவையிலிருந்து மீள எடுக்கும் கோரிக்கையை முன்வைத்திருப்பதன் மூலம் , இலங்கை தொடர்பான பிரேரணையை நிறைவேற்றும் நாடுகளுக்கும் நன்மையே ஏற்பட்டுள்ளது . அதாவது பொறுப்புக்கூறல் விடயங்கள் இல்லாத தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்காக உறுப்பு நாடுகளின் ஆதரவினைப் பெறுவதில் கடினமான நிலைமைகள் இருக்கப்போவதில்லை. அவை தயக்கங்களையும் தெரிவிக்காது . ஆகவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் எமக்கு இம்முறை இரட்டை நன்மையே ஏற்படப்போகின்றது . முதலாவது பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து மீள எடுத்து உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது . இரண்டாவது , இலங்கை பற்றிய தீர்மானமும் தடையின்றி மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வையுடன் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்கவுள்ளது . கேள்வி : - இலங்கை அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐ.நா.வில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தினையும் நிராகரித்தால் என்னவாகும் ? பதில் : - இலங்கை அரசாங்கம் அவ்வாறு கூறினாலும் கடந்த ஐ.நா.தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான சில கட்டமைப்புக்களை இன்மும் வைத்திருக்கின்றன. அவற்றை வினைத்திறனாகச் செயற்பட இடமளிக்காது விட்டாலும் ஐ.நா.விற்கு காண்பிப்பதற்காக அவ்வாறே வைத்துள்ளன. மேலும் இம்முறை இலங்கைக்கான பொறுப்புக்கூறல் விடயம் இல்லாத தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதற்கு எந்தவிதமான நியாயங்களும் இல்லை. அவ்வாறு நிராகரிக்கின்றபோது , ஒரே நேரத்தில் மேற்குலநாடுகள் உள்ளிட்ட முக்கியமான நாடுகளைப் பகைத்துக்கொள்ள அல்லது இருதரப்பு உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டிய நிலைமையே ஏற்படும் . அவ்விதமான நிலைப்பாடொன்றை இந்த அரசாங்கம் எடுப்பதற்கு விரும்பாது . கேள்வி : - வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையை ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் நீங்கள் உள்ளீர்க்க விரும்பாமைக்கான காரணம் என்ன ? பதில் : - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி , ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் கையொப்பமிட்ட ஏனைய கூட்டுக் கட்சிகளாக இருந்தாலும் சரி, ஐக்கிய இலங்கைக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன . அதேநேரம் , அதிகாரங்கள் அதியுச்சமாக பகிரப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. சர்வஜன வாக்கெடுப்பு என்பது பிரிந்து செல்லுதலை மையப்படுத்தியதாகும் . அதிகாரப்பகிர்வினைக் கோரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்களத் தரப்புக்கள் நாட்டை பிரிக்கப்போகின்றோம் என்றே பிரசாரம் செய்கின்றன . அவ்வாறான நிலையில் சர்வஜன வாக்கெடுப்பையும் கோரினால் அவர்கள் செய்யும் பிரசாரம் உண்மையாகிவிடும். மேலும் நாமும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தமையும் பொய்யாகிவிடும். எனவே அவ்விடயம் உள்ளீர்க்கப்படவில்லை. கேள்வி : - இறுதியாக , ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் பிறிதொரு குழு நியமிக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ? பதில் : - ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே தற்போது இவ்விதமான குழுவை நியமித்து சர்வதேசத்திற்கு போலியானதொரு தோற்றப்பட்டை வெளிப்படுத்த முனைகின்றது . அந்தக் குழுவை நாம் எள்ளளவும் நம்பவில்லை . அதுவெறுமனே கண்துடைப்புச் செயற்பாடாகும் . இதனை சர்வதேச நாடுகளும் நன்கு அறியும் . - வீரகேசரி பத்திரிகை -    
  • “உன்னைத்திருத்து, உலகம் தானே திருந்தும்”… https://www.facebook.com/pragash001/videos/10157638989486056
  • ஒரு ராகம் பாடலோடு  
  • தானும் சனிதான் என்று வெறுட்டல்  விடும் சந்திரன் . https://www.theeyota.com/2021/01/photographer-takes-once-in-lifetime.html?fbclid=IwAR02VDHLs-18XhYSZt6zKsbDqac0Wx4QAKdS2FUpxkvlT9cO7ua5p3FWuwI  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.