Jump to content

இந்த புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

crude-oil-2-data.jpg

இந்த புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

எண்ணெய்க் குளியல் என கேட்டவுடன் யாரும் கச்சா எண்ணெயைப் பற்றிக் கற்பனையும் செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

எனினும், ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையிலான அஸர்பைஜானிலுள்ள (Azerbaijan) நஃப்த்தலான் (Naftalan) என்ற நகரில் பல நோய்களுக்கு கச்சா எண்ணெய்க் குளியல் வழி தீர்வு காண்கிறார்கள் பலர்.

உடல் வெப்பத்திற்குச் சற்றே அதிகமான வெப்பநிலையில் கச்சா எண்ணெய் சூடாக்கப்படும். அதில் 10 நிமிடங்கள் மூழ்கி வெளியில் வருவதற்காகச் சுற்றுப்பயணிகள் பலரும் கச்சா எண்ணெய்க் குளியல் விடுதிகளுக்குச் செல்கிறார்கள்.

அஸர்பைஜானின் வர்த்தகத்தில் பெரும் பகுதி எண்ணெய் ஏற்றுமதி. ஆனால் நஃப்த்தலானில் கிடைக்கும் கச்சா எண்ணெய், ஏற்றுமதிக்கு ஏதுவானதல்ல.

அதற்குப் பதிலாக தசை, தோல், எலும்புக் குறைபாடுகளுக்குச் சிகிச்சையளிக்க அது பயன்படுகிறது.

இறக்கும் நிலையிலிருந்த ஒட்டகம் தேங்கிக் கிடந்த கச்சா எண்ணெய்க்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்டுப் பின்னர் அது குணமடைந்ததாக அந்த நகர மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.

ஆனால், கச்சா எண்ணெய்க் குளியல் குறித்து மருத்துவர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். அதனால் ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

crude-oil-3-data-720x450.jpg

http://athavannews.com/இந்த-புதுவகை-எண்ணெய்க்-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

கச்சா எண்ணெய்க் குளியல் குறித்து மருத்துவர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். அதனால் ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இன்றைய மருத்துவர்களின் எச்சரிக்கையும்......மருந்து கொம்பனிகளின் எச்சரிக்கையும் அவர்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கின்றது. ஒருகாலத்தில்  தேங்காய் உடல் நலத்திற்கு கேடு என்றாகள். இன்றோ அதை வரவேற்கின்றார்கள்.எரித்த  உமியால் பல் தீட்டுவது கேடு என்றார்கள். இன்று அதன் மூலப்பொருளை வைத்து பற்பசை தயாரித்து பக்க விளைவுகள் இல்லாதது என்கிறார்கள்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
12 minutes ago, குமாரசாமி said:

தேங்காய் உடல் நலத்திற்கு கேடு என்றாகள். இன்றோ அதை வரவேற்கின்றார்கள்.

vegan உணவு 700% கடந்த மூன்று ஆண்டுகளில் வளர்ந்ததால், தேங்காய் எண்ணெய் பாவனை பிரித்தானியாவில் மிகவும் அதிகரித்துள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.