Jump to content

ஊழல், உளவு, அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல், உளவு, அரசியல்

 
 
 
51Y9Y0vbjpL.jpg
 
 
 
சங்கர் எழுதிய ‘ஊழல் – உளவு – அரசியல்’ நூலை வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற சுவாரசியத்துடன் ஏறத்தாழ ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது புனைவு அல்ல. மூர்க்கமான அரசு இயந்திரத்துடன் மோதி ஜெயித்த ஒரு சாமானியன் எதிர்கொண்ட திகிலும் பயங்கரமும் கொண்ட அனுபவங்களின் தொகுப்பு. அரசு இயந்திரத்தின் ஒரு உதிரியே அந்த இயந்திரத்தின் மோசடியை வெளிப்படுத்தத் துணிந்த துணிச்சலும் நேர்மையும் இந்த நூலின் பக்கங்களில் பதிவாகியுள்ளன. 

தந்தையின் மறைவு காரணமாக 16 வயதிலேயே அரசுப் பணியில் இணையும் சங்கர், ஒரு விடலை இளைஞனின் அப்பாவித்தனமான பார்வையில் விரியும் அலுவலக அனுபவங்களை யதார்த்தமாக விவரித்துள்ளார். மெல்ல மெல்ல தன்னை முன்னேற்றிக் கொள்ளும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் பதிவாகியுள்ளன. அங்கு நிகழும் அநீதிகளை, ஊழல்களை, மோசடிகளை நடைமுறை விவரங்களுடன் விவரித்துள்ளார். அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டே இவற்றை நேரடியாக எதிர்க்க முடியாத சூழலில் மறைமுகமானதொரு யுத்தத்தைத் துவங்குகிறார். கோபமும் குதர்க்கமும் கொண்ட ஒரு பலமான குத்துச்சண்டை வீரனை எதிர்த்து ஐந்து வயது சிறுவன் சண்டைக்கு இறங்குவதற்கு நிகரான காரியம் இது. 

எனவே இதன் எதிர்விளைவுகளையும் இவர் பிறகு எதிர்கொள்ள நேர்கிறது. காவல்துறை இழைத்த சித்திரவதைகளை இவர் இயல்பாக விவரிக்கும் போது மனம் கலங்கிப் போகிறது. சராசரி நபராக இருக்கும் ஒவ்வொருவரும் தாமே அங்கு மாட்டிக் கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறார். இவரது சிறை அனுபவங்கள் பல திரைப்படங்களை நினைவுப்படுத்துகின்றன. ஆனால் அதையும் தாண்டிய நடைமுறை நுண்விவரங்கள். பார்ப்பதற்கு பயங்கரமாகத் தோற்றமளிக்கும் ஒருவர் எவ்வாறு வெள்ளந்தியாக உதவுகிறார் என்கிற விஷயம் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிறகு தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கை சங்கர் எதிர்கொள்கிறார். நீதித்துறையும் காவல்துறையும் அதிகார வர்க்கமும் எத்தனை மெத்தனத்தையும் அலட்சியத்தையும் சார்புகளையும் சுயநலத்தையும் கொண்டு இயங்குகிறது என்பதற்கான சாட்சியங்கள் இந்தப் பக்கங்களில் விரிகின்றன. 

தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து விவரிக்கும் போது அவை வாசகர்களிடம் எவ்வித இரக்கத்தையும் கோரிவிடக்கூடாது என்பதில் சங்கர் கவனமாக இருக்கிறார். கழிவிரக்கத்தின் தடயங்கள் இல்லை. அதே சமயத்தில் தான் ஒரு ஹீரோ என்கிற சாகச பெருமிதமும்  அவரிடமும் இல்லை. ஒரு சாமானியனாக தான் எதிர்கொண்ட வயிற்றைப் பிசையும் முந்தைய அனுபவங்களை விலகி நிற்கும் எள்ளலோடு எழுத்தில் விவரிக்கிறார். ஆனால் அதையும் மீறி உண்மை நிலவரத்தை கற்பனை செய்து பார்க்கவே நமக்குத்தான் அத்தனை பயமாக இருக்கிறது. 

ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்குமே மனச்சாட்சி, நேர்மை போன்ற நல்லியல்புகள் அடிப்படையாக இயற்கையில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் குரல் எழுப்பும் எச்சரிக்கையை பலர் காது கொடுத்துக் கேட்டு தங்களின் கீழ்மைகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். 
 
ஆனால் சிலர் இவற்றையெல்லாம் கழற்றி ஓரமாகப் போட்டு விட்டு சுயநலம், பேராசை, தன் வளர்ச்சியை பாதிப்பவற்றின் மீதான அச்சம், எனவே அவற்றுடன் இயைந்து போதல், அதற்காக எந்தவொரு அப்பாவியையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் கருணையற்ற தன்மை போன்றவற்றுடன் இயங்குகிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. ஒட்டு மொத்த அரசுத்துறையே இப்படித்தான் இயங்குகிறது.  குறிப்பாக காவல்துறை இயங்கும் விதம் அவர்களின் இயந்திரத்தனமான மிருகத்தனத்தை உறுதி செய்கிறது. 

அரசியல்வாதிகளை விடவும் அதிகார வர்க்கம் எத்தனை பலம் வாய்ந்தது என்கிற நடைமுறை இந்த நூலில் நுண்விவரங்களுடன் பதிவாகியிருக்கிறது. அதே சமயத்தில் அப்போதைய ஆளுங்கட்சியின் நோக்கத்தை திருப்தி செய்வதற்காக எந்த வித சர்க்கஸ் வித்தைகளையும் செய்ய இவர்கள் தயாராகவும் இருக்கிறார்கள் என்கிற முரணும் பதிவாகியுள்ளது. ஆட்சி மாறியவுடன் உடனே பச்சோந்திகளாக மாறவும் இவர்கள் தயங்குவதில்லை. 

இவர்கள் கற்ற கல்வி, பெற்ற அனுபவம் எல்லாம் குற்றங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் எப்படி மூடி மறைத்து திறமையாக செய்யலாம் என்பதற்கே பயன்படுகிறது. அரசியல்வாதிகளையாவது ஐந்து வருடத்தில் துரத்தி விடலாம். ஆனால் ஓய்வு பெறும் வரை இவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும் சுயஆதாயங்களுக்காக செய்யும் அநீதிகளையும் கட்டுப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. 
 
() () () 
 


ஆனால் இருளே நிறைந்திருக்கும் பிரதேசத்தில் நம்பிக்கையின் வெளிச்சம் இல்லாமல் போகாது. நூலாசிரியர் முதற்கொண்டு அவரது அலுவலகத்தில் பணிபுரியும் சில நல்ல மனிதர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள் போன்றோரின் துணையுடன்தான் தன் மீது சுமத்தப்பட்டிருந்த முள்கீரிடத்தை ஒருவாறாக இவர் கழற்ற முடிகிறது. ஆனால் அது எத்தனை எளிதான பாதையாக இல்லை. சங்கரின் குடும்பமே வழக்கு விசாரணையால் அலைக்கழிக்கப்படுகிறது. உதவி செய்த நண்பர்கள் மிரட்டலுக்கும் நெருக்கடிக்கும் ஆளாகிறார்கள். 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ரமணா திரைப்படத்தில் ஒரு விஷயம் வரும். ஊழலும் மோசடியும் நிறைந்திருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் நேர்மையாகவும் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டும் இயங்கும் ஒன்றிரண்டு நபர்களாவது இல்லாமல் போக மாட்டார்கள். அப்படியொரு மனிதராகவே சங்கர் காட்சி தருகிறார். அவருக்கு உதவி செய்யும் நண்பர்களும் தெரிகிறார்கள். அரிய விதிவிலக்குகள். 

இத்தனை கசப்பான அனுபவங்களுக்கு ஆளாகி மீண்ட சங்கர் செய்த குற்றம்தான் என்ன? அரசு இயந்திரத்தில் நிகழும் அநீதிகளின் முக்கியமானதொரு  துளியை மட்டும் வெளிப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் ஒட்டு மொத்த இயந்திரமே இவர் மீது மூர்க்கமாக பாய்ந்து இவருடைய வாயை அடைக்க, சாம, தான, பேத, தண்டம் என்று அனைத்து வழிகளையும் முயல்கிறது. ஏனெனில் அது பெரிய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தொடர்பான ஒரு கண்ணியாக இருக்கிறது. 

சங்கர் எதிர்கொண்ட அனுபவங்களை வாசிக்கும் போது ஒரு சராசரி நபராக எனக்குள் அச்சமே பரவியது. சமூகக் கோபத்தில் ஃபேஸ்புக்கில் எதையாவது எழுதி வைத்திருப்பேனோ என்பது போன்ற திகிலான எண்ணங்கள் உருவாகின. ஆனால் அதே சமயத்தில் சமூக அநீதிகளை எதிர்ப்பதற்கான ஒரு துளி செயலையாவது செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தருகிறது. 

காவல் துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்த காரணத்தினால் அது சார்ந்த நடைமுறை அனுபவங்கள், சட்டவிதிகளின் அடிப்படைகள் போன்வற்றின் சிலவற்றையாவது சங்கர் அறிந்துள்ளார். எனவே அவற்றின் துணை கொண்டு எதிர்கொள்ள சங்கரால் இயன்றிருக்கிறது. ஆனால் இவை எதுவுமே இல்லாத ஒரு சாமானியன் என்ன செய்வான்? எளிய குற்றங்களைச் செய்து விட்டு வறுமையின் காரணமாக பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவே பலர் சிறையில் இருக்கும் அவலத்தையும் சங்கர் பதிவு செய்துள்ளார். 

சிறை என்பது ஒரு தனிப்பட்ட அரசாங்கமாகவே இயங்குகிறது. லஞ்சம்தான் அதன் ஆதார இயங்குசக்தி. பல வருடங்களாகவே நீடிக்கும் இந்த நிலைமை அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் நீதித்துறைக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர இவற்றை கறாராக மாற்றியமைக்க ஏன் எவருமே நடவடிக்கையும் முயற்சியும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பல்வேறு விதமான ஒழுங்கீனங்களுடன் இயங்குவதுதான் ‘சிஸ்டம்’ என்பதை பலரும் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டார்களா?
 
() () () 
 



இந்த நூலை நிச்சயம் வாசிக்க வேண்டுமென்று அனைவருக்கும் பரிந்துரைப்பேன். ஒட்டுமொத்த அரசுத் துறையே ஊழலிலும் மோசடியிலும் அதிகாரதுஷ்பிரயோகத்திலும் புரையோடிப் போயிருக்கும் அவலத்தின் ஒரு துளி சித்தரித்தை இந்த நூல் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பெயர்கள் அப்படியே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒளிவும் மறைவும் இல்லை. குறிப்பாக அரசியல் கட்சித் தலைவர்களை தங்களின் ஆதர்சங்களாக கருதிக் கொண்டிருக்கும் அப்பாவி தொண்டர்கள், விசுவாசிகள் படித்த புத்திசாலிகள் போன்றோர் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும். அவர்கள் அறிந்திருக்கும் ஆளுமைகளின் நேர்மறையான வெளிச்சத்திற்குப் பின்னால் இருளும் கொடூரமும் நிறைந்திருக்கும் உலகு நிறைந்திருக்கிறது என்பதை நிச்சயம் அறிய வேண்டும். 

ஒருவர் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் தன் மீதும் தன்னைச் சார்ந்தவர்களின் மீதும் உள்ளவர்களின் குற்ற வழக்குகளையும் விசாரணைகளும் குழி தோண்டிப் புதைப்பதற்கான காரியங்களை விரைவாக நிறைவேற்றுகிறார். அதே சமயத்தில் தனது எதிரிகளின் மீதான வழக்கு முகாந்திரங்கள், அவற்றிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதல் போன்றவற்றி முழு மூச்சாக ஈடுபடுகிறார். அரசு இயந்திரம் பெரும்பாலும் இதற்கு துணை போக வேண்டியிருக்கிறது. எதிர் தரப்பில் இருந்தவர் ஆட்சிக்கு வந்ததும் அவரும் இதையே செய்கிறார். இப்படியொரு விஷச்சுழற்சியில் தேசம் பிடிபட்டிருக்கிறது. இதை எதிர்ப்பவர்கள் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்படுகிறார்கள். சங்கரின் அனுபவங்களும் இதைத்தான் பிரதிபலிக்கின்றன. 

சங்கரின் துணிச்சலுக்காகவும் நேர்மைக்கும் அவருக்குள் இயங்கும் ஆதாரமான அறவுணர்விற்காகவும் அவரைப் பாராட்ட விரும்புகிறேன். சராசரி நபர்களின் பிரதிநிதியாக அவரை மகிழ்ச்சியுடன் அரவணைக்க விரும்புகிறேன். “சங்கர் யார் தெரியுமா, அவருடைய பின்னணி, நோக்கம் தெரியுமா?” என்பது போல் சிலர் ஐயம் எழுப்பக்கூடும். ஆனால் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் சமூக நடப்புகளையே பிரதிபலிக்கின்றன. கற்பனையாக எதுவும் எழுதப்படவில்லை. அந்த ஆதார உணர்வும் அறமும் இருப்பதை உணர முடிகிறது.  
 
 
 
 
Link to comment
Share on other sites

தயவு செய்து யாரும் வாங்க வேண்டாம் 

எதுவுமே இல்லை, தன்னை வெறும் ஹீரோவாக உருவகப்படுத்தியுள்ளார்..என்ன குற்றத்திற்காக கைது செய்தார்கள் என்று கூட இதில எழுதவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கடுப்பாயிட்டிங்கள்🙂 போல...நன்றி தகவலுக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.