Jump to content

சிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…

April 15, 2019

 

யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு யாழ்ப்பாண காவற்துறையினர் தடை விதித்துள்ளனர். மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வு எனவும் , அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் யாழ்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாட்டில் , குறித்த மத நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அதற்கான காணொளி ஆதாரம் உண்டு (முறைப்பட்டாளரால் காவற்துறையினரிடம் அது ஒப்படைக்கப்பட்டது அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த மூவரே இந்த நிகழ்வை நடத்துகின்றனர். என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவற்றை ஆராய்ந்த காவற்துறையினர் குறித்த நிகழ்வை நடாத்துவதை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த மத நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கல்முனை பிரதேசத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://globaltamilnews.net/2019/118340/

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

குறித்த மத நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அதற்கான காணொளி ஆதாரம் உண்டு (முறைப்பட்டாளரால் காவற்துறையினரிடம் அது ஒப்படைக்கப்பட்டது அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு.

சித்திரைப் புத்தாண்டு தமிழரிடையே திணிக்கப்பட்ட ஒன்று என்பதால் அதைக் கொண்டாடக்கூடாது என்று புலம்பும் 'சீர்திருத்த வாதிகள்' இது போன்ற செயல்களைக் கண்டிப்பார்களா? இவ்வாறான, இதையும் விடக் கேவலமான இழி செயல்கள் ஐரோப்பியர் 1505 - 1948 ஈழத்தை ஆக்கிரமித்தபோதும் நிகழ்ந்தன என்பதை மறுப்பார்களா?

3000ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது தவறல்ல. ஆனால் இங்கு குறிப்பிட்டது போன்ற செயல்களை மூடிமறைப்பது அநியாயம்.

Link to comment
Share on other sites

38 minutes ago, மல்லிகை வாசம் said:

சித்திரைப் புத்தாண்டு தமிழரிடையே திணிக்கப்பட்ட ஒன்று என்பதால் அதைக் கொண்டாடக்கூடாது என்று புலம்பும் 'சீர்திருத்த வாதிகள்' இது போன்ற செயல்களைக் கண்டிப்பார்களா? இவ்வாறான, இதையும் விடக் கேவலமான இழி செயல்கள் ஐரோப்பியர் 1505 - 1948 ஈழத்தை ஆக்கிரமித்தபோதும் நிகழ்ந்தன என்பதை மறுப்பார்களா?

3000ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது தவறல்ல. ஆனால் இங்கு குறிப்பிட்டது போன்ற செயல்களை மூடிமறைப்பது அநியாயம்.

மதம் மாறுவது என்பதே ஒரு முட்டாள்தனத்தில்  இருந்து வெளியேறி வேறு ஒரு முட்டாள்த் தனத்தை ஏற்று கொள்வதாகும். இதை முற்றாக கைவிட்டு  மத முட்டாள்தனங்களை மக்கள் கேள்வி கேட் கும் போது இவ்வாறான செயல்கள் இடம் பெறாது. பிறந்த குழந்தையில் இருந்து கடவுள் என்ற கற்பனை கதாபாத்திரத்தை காட்டி குழந்தைகளை பலவீனமானவர்களாக வளர்ககாமல் தன்னம்பிக்கை உடைய மனிதர்களாக வளர்ததால் இவ்வாறான மத மாற்றும் அற்பத்தனமான மனிதர்களின் செயல்களுக்கு மனிதர்கள் எடுபட மாட்டார்கள்.  

அது சரி தமது மதத்தை ஏற்றுக்கொண்ட பக்தர்களையே  கீழ்சாதி என்று  கூறி கோவிலுக்குள் வந்தால் தீட்டு பட்டுவிடும் என்று விரட்டியடித்ததுடன் இன்றும் தங்களை தவிர ஏனையோரை அரச்சகர்களாக அனுமதிக்காத போது வராத கோபம் சிவனை,புத்தரை சாத்தான் என்று கூறியபோது  வருவது ஏன்? சிவனை சாத்தான் என்று கூறினால் சிவன் அவர்களை தண்டிப்பான் தானே.  அப்படி ஒருவன் இல்லை என்ற சந்தேகம் பக்தர்களுக்கு வந்ததால் தான் சிவன் அவர்களை தண்டிக்கமாட்டான் என்று தெரிந்து இவர்கள் அவசரப்படுகிறார்களோ

 

Link to comment
Share on other sites

அனைத்து சாதியினரும்  அர்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் அரசாணைக்கமைய முறைப்படி ஆகமங்களைப் படித்து அரச்சகர் ஆக்க்கூடிய தகுதியுடன் இருக்கும் பல தூற்றுக்கணக்கான இந்துக்களை அவர்களின. பிறப்பின் அடிப்படையில் இன்றும் அர்சகர் ஆக  அனுமதிக்காத போது இந்த கோபம் ஏன் தமிழகத்தில் பல காலம்  வாழ்ந்த சிவசேனைத் தலைவர்  மறவன்புலவு சச்சிதானந்தத்திறகு ஏற்பட வில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு – பாதகம் ஏற்பாட்டலே தடை..

யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு தாம் தடை விதிக்கவில்லை எனவும் குறித்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு பாதகமாக முன்னெடுக்கப்பட்டாலே தடை விதிக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அது குறித்து பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கையில்

மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

 

அந்நிலையில் குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வாகும். இதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த மூவரே இந்த நிகழ்வை நடத்துகின்றனர் அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.

அது தொடர்பில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியுடன் பேசியுள்ளார். அதன் போது பொறுப்பதிகாரி குறித்த நிகழ்வுக்கு தாம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , குறித்த மத நிகழ்வில் ஏனைய மதங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது , ஏனைய மதங்களை இழிவு படுத்துதல் போன்ற மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் , அவ்வாறு மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் குறித்த மத நிகழ்வு நடத்தப்பட்டால் நீதிமன்றை நாடி உடனடியாக அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளார். என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2019/118340/

Link to comment
Share on other sites

20 minutes ago, tulpen said:

மதம் மாறுவது என்பதே ஒரு முட்டாள்தனத்தில்  இருந்து வெளியேறி வேறு ஒரு முட்டாள்த் தனத்தை ஏற்று கொள்வதாகும்.

அப்போ.... அந்நியர் ஆட்சிக்காலத்திலும், தற்போதும் மக்கள் மதம் மாறுவது முட்டாள்த்தனம் என்கிறீர்கள். 

அவ்வாறு மதம் மாறிய தமிழர்கள் புதிய மதத்தின் (உதாரணமாக மேலைத் தேசத்திலிருந்து வந்து திணிக்கப்பட்ட மதம்) பண்டிகைகளைக் கொண்டாடுவது சரி என்கிறீர்களா / தவறு என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

7 minutes ago, மல்லிகை வாசம் said:

அப்போ.... அந்நியர் ஆட்சிக்காலத்திலும், தற்போதும் மக்கள் மதம் மாறுவது முட்டாள்த்தனம் என்கிறீர்கள். 

அவ்வாறு மதம் மாறிய தமிழர்கள் புதிய மதத்தின் (உதாரணமாக மேலைத் தேசத்திலிருந்து வந்து திணிக்கப்பட்ட மதம்) பண்டிகைகளைக் கொண்டாடுவது சரி என்கிறீர்களா / தவறு என்கிறீர்களா?

மதங்கள் அனைத்துமே முட்டாள்த்தனம்  தான். பண்டிகைகளை ஜாலியாக கொண்டாடுவது வேறு அதை தமிழரின் கலாச்சார் விழுமியங்கள் என்று முட்டாள்தனமாக நம்புவது வேறு. இந்த கேள்விக்கான பதிலை வேறு ஒரு திரியில்  நிழலி  மிகச்றப்பாக உங்களுக்கு தந்து விட்டார். 

Link to comment
Share on other sites

27 minutes ago, tulpen said:

அது சரி தமது மதத்தை ஏற்றுக்கொண்ட பக்தர்களையே  கீழ்சாதி என்று  கூறி கோவிலுக்குள் வந்தால் தீட்டு பட்டுவிடும் என்று விரட்டியடித்ததுடன் இன்றும் தங்களை தவிர ஏனையோரை அரச்சகர்களாக அனுமதிக்காத போது வராத கோபம் சிவனை,புத்தரை சாத்தான் என்று கூறியபோது  வருவது ஏன்?

எந்த ஒரு மதத்திலும் உள்ள பிற்போக்கான நடைமுறைகளை நான் ஆதரிக்கவில்லை. குறைகளைத் தேடித்தேடி விவாதிப்பதை விட எல்லா மதங்களிலுள்ள நிறைகளை மதித்து வாழுதலே பயனுள்ளது என உறுதியாக நம்புவன் நான். சித்திரை / தமிழ்ப் புத்தாண்டு உள்ளடங்கலாக பண்டிகைகளைக் கொண்டாடி வாழ்த்தி மகிழ்வதால் யாரும் தாழ்ந்துவிடப்போவதில்லை. மாறாக அவற்றைக் கிளறுவதால் வீண் மதச் சண்டைகளில் காலம் வீணாகி சமகாலத்தில் ஆராய்ந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் நமது ஆயுட்காலம் விரயமாகிவிடுமோ என்ற கவலை தான் எனக்கு. 

2 minutes ago, tulpen said:

மதங்கள் அனைத்துமே முட்டாள்த்தனம்  தான். பண்டிகைகளை ஜாலியாக கொண்டாடுவது வேறு அதை தமிழரின் கலாச்சார் விழுமியங்கள் என்று முட்டாள்தனமாக நம்புவது வேறு. இந்த கேள்விக்கான பதிலை வேறு ஒரு திரயில் நிழலி சிறப்பாக உங்களுக்கு தந்து விட்டார். 

அதற்கான பதிலை விரைவில் அங்கு தருகிறேன். 

எனினும் உங்கள் கருத்துக்கான பதில் என்னவென்றால், நாம் தமிழ் புத்தாண்டை மத விழாவாகத் தான் கொண்டாடுகிறோம். இந்துவான தமிழர்் கொண்டாடுவதால் தமிழ்ப்புத்தாண்டு என்று பயன்பாட்டில் வந்துவிட்டது. பண்டிகைகளைக் கொண்டாாடுவதும், விடுவதும் அவரவர் இஷ்டம். ஆனால், கொண்டாடுபவர்களை முட்டாளாக்குவது நாகரிகமடைந்த மனிதர்களின் செயல் அல்ல. மற்றவர் சுதந்திரத்தில் தலையிட அவர்களுக்கு உரிமை ஏது???

Link to comment
Share on other sites

9 minutes ago, tulpen said:

தமிழரின் கலாச்சார் விழுமியங்கள் என்று முட்டாள்தனமாக நம்புவது வேறு.

மேலும், முட்டாள்தனமாகக் கொண்டாடவில்லை. வரலாற்றைக் கிளறினால் எல்லா மதங்களிலும், இனங்களிலும் குறை காணலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது முக்கியமானது அல்ல.

கொண்டாட்டங்களையும் கொண்டாடிக் கொண்டு முடிந்த அளவில் நல்ல நெறியில் பயணம் செய்து பிறருக்கு நம்மாலான உதவிகளையும் செய்தால் மற்றவர்களின் அவசியமற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை எனப் பேசாமல் இருந்தேன். ஆனால் சில நேரங்களில் பொறுமை சோதிக்கப்படுகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மோசமான செயற்பாடு,

மற்றைய மதங்களை இழிவாக விழிக்கும் இந்தச் செயற்பாடு ஒரு அடிப்படை மதவாதமேயன்றி வேறில்லை.

இப்படி தென்னிந்தியாவில் இருந்து வருகைதரும் பெருமளவு கிறீஸ்த்தவப் பாதிரியார்கள் புதுமை செய்கிறோம், கூட்டாகச் செபிக்கிறோம் என்கிற போர்வையில் செய்வது சுத்த அயோக்கியத்தனம். இப்படியானவர்கள் நிறையவே பணம் சம்பாதிக்கிறார்கள். தமக்கென்று சபைகளை உருவாக்கி, படிப்பறிவு குறைந்த மக்களை ஏமாற்றி தமது வருவாயைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் பற்றி மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானது. 

இவர்களின் நிகழ்ச்சிக்குத் தடைவிதிப்பது சரியானதே. தமிழர்களிடையே மதரீதியிலான பிணக்குகள் அவப்போது முளைத்துவரும் வேளையில், இவர்களின் செயற்பாடு, இன்னுமின்னும் விரிசலை அதிகரிக்குமேயன்றி, குறைக்கப்போவதில்லை.

அதேவேளை, மறவன்புலவு சட்சிதானாந்தம் கூட தூரத்தில் வைக்கப்படவேண்டிய ஒருவர்தான். இந்தியாவின் சிவசேனையுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கும் இவரின் அமைப்பினால், தமிழர்கள் மதரீதியாகப் பிளவுபட சந்தர்ப்பம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

தடை விதிப்பது மட்டுமின்றி இப்படியானவற்றை நிகழ்த்த முற்படுகின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மத சுதந்திரம் எனபதை தவறாக பாவிப்பவர்கள் இவர்கள். 

நான் அவதானித்தவரைக்கும் இவ்வாறான ஏமாற்றும் கூட்டத்திடம் ஏமாந்து போகின்றவர்கள் கடவுளை கண் மூடித்தனமாக நம்புகின்றவர்களாகவும் தம் பிரச்சனைகளுக்கான தீர்வை சாமியார்களிடமும் சாத்திரகாரரிடமும் தேடுகின்றவர்களாகவுமே இருக்கின்றனர். எங்கே தீர்வு உடனடியாக கிடைக்கும் என நம்ப வைக்கப்பட்டு அந்த பக்கத்துக்கு ஈர்க்கப்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

நிழலி கூறியது போல கடவுளை கண்மூடித்தனமாக நம்புபர்கள் தான் இப்படியான மதம் மாற்றும் கும்பலினால் ஏமாற்றப்படுபவர்களாக உள்ளனர். எனக்கு தெரிந்து ஊரில் சைவப்பழங்களாக இருந்த பலர் இங்கு மதம் மாறி உள்ளனர். மதம் மாற்றும் கும்பலும் ஆசியநாட்டவரை தேடியே செல்கின்றனர். இங்கு உள்ள ஐரோப்பிய மக்களிடம் இவர்களின் சேட்டை எடுபடாது என்பது அவர்களுக்கும் தெரியும்.

மக்கள் மதங்களை பற்றி கவலைப்படாத agnostics ஆக வாழ தலைப்படும் போது இந்த மதவாத குழுக்களின் வேலை வரகளிடம் எடுபடாது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களுக்கு முன்னர் கோப்பாயில் இயங்கும் 5 தொடக்கம் 18 வயது வரை உள்ள கைவிடப்பட்ட , அநாதை பெண் குழந்தைகளை பராமரிக்கும் இளம் ஒன்றிட்கு சென்றிருந்தேன். 
எல்லாமே அழகான, அமைதியான, அநாதரவான குழந்தைகள்.
நடத்துவது நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்ற ஒரு மத அமைப்பு. குழந்தைகளை அவர்களை மத கோட்பாட்டில் தான் வைத்து பராமரிக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் சேவை பெரிது , போற்றத்தக்கது.
இவர்கள் செய்யும் இந்த மத போதனை , மாற்றங்கள் தான் மனதை நெருடுகிறது...
யாழ்பண நகர பஸ் வண்டிகள் நிறுத்தும் இடத்தில பெரியதொரு கட்டவுட் காணப்பட்டது.
"சுவிசேஷக்கூட்டம் ... துன்பங்களில் இருந்து விடுதலை , ஆராதனை இத்தியாதி...
இவை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து  கொண்டு  தான் இருக்கிறது. 😲
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத நிறுவனங்களும் கருத்து திணிப்பு மையங்கள்......

Link to comment
Share on other sites

ஏனைய (குறிப்பாக குரலற்று இருக்கும் இந்து/சைவ) மதங்களை குறைகூறும், ஏனைய மதத்தவர்களின் சொத்துக்களை அபகரிக்கும்,  மதவெறியர்களின் நடமாட்டம் வடகிழக்கில் அதிகரிப்பது நல்லதல்ல. குறிப்பாக நிறுவனமயப்பட்ட பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த சில மதவெறியர்கள் தான் இதுபோன்ற ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றனர்!  

இவ்வாறான சில மதவெறியர்கள் உயர் பொறுப்புகளில் இருக்கும் போது, அண்மையில் சிவராத்திரி காலத்தில் திருக்கேதீஸ்வரத்திலும் திருக்கோணேஸ்வரத்திலும் நடந்ததைப் போன்ற அடாவடித்தனங்கள்,  இடம்பெறுவதும், அவற்றை நியாயப்படுத்தும் ஈனச் செயல்கள் இடம்பெறுவதும் அதிகரிக்கவே செய்யும்.

இதன் ஒரு பகுதியாகவே ஆட்சி அதிகாரத்தில் உள்ள மதவெறியர்களால் வன்னிப் பிரதேசத்தில் பல தொன்மையான சைவ வழிபாட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், கீரிமலைப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயலுவதையும் கருத வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற மதங்களை இழிவுபடுத்தவில்லை…

April 17, 2019

 

பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் தாம் செயற்படவில்லை எனவும் , அதற்கான தேவை தமக்கு இல்லை எனவும் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனங்கள் ஐக்கியம் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாநகர சபை மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்றுவரை வரையில் நடைபெறும் மத நிகழ்வில் , ஏனைய மதங்களை நேரடியாக இழிவு படுத்தபடுகின்றது எனவும் , சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என பரப்புரை செய்கிறார்கள் எனவும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் காவற்துறையினரிடம் முறையிட்டிருந்தார். எனவும் அதனால் அந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்கள்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

தாம் எந்த மதத்தையும் இழிவு படுத்தவில்லை. அதற்கான தேவையும் தமக்கு இல்லை. பிற மதங்களை இழிவு படுத்தும் எந்த செயற்பாட்டிலும் தாம் ஈடுபடவில்லை. பிற மதங்களை இழிவு படுத்தும் எந்த கருத்துக்களையும் நாம் வெளியிடவில்லை. உரிய தரப்பினர்களிடம் உரிய அனுமதிகளை பெற்றே நிகழ்வுகளை நடாத்தியதாகவும், திட்டமிட்ட படி எமது நிகழ்வுகள் நடைபெற்றன எனவும் தெரிவித்தனர்.

 

http://globaltamilnews.net/2019/118466/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/15/2019 at 1:29 PM, tulpen said:

மதங்கள் அனைத்துமே முட்டாள்த்தனம்  தான். பண்டிகைகளை ஜாலியாக கொண்டாடுவது வேறு அதை தமிழரின் கலாச்சார் விழுமியங்கள் என்று முட்டாள்தனமாக நம்புவது வேறு. இந்த கேள்விக்கான பதிலை வேறு ஒரு திரியில்  நிழலி  மிகச்றப்பாக உங்களுக்கு தந்து விட்டார். 

 சாதரணமாக ஒரு தமிழன் எப்படியிருக்க வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? எந்தெந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும்? ஏதாவது முன் யோசனைகள் உங்களிடம் இருக்கின்றதா?
இதற்கும் நிழலியை மேற்கோள் காட்டவேண்டாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

 சாதரணமாக ஒரு தமிழன் எப்படியிருக்க வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? எந்தெந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும்? ஏதாவது முன் யோசனைகள் உங்களிடம் இருக்கின்றதா?
இதற்கும் நிழலியை மேற்கோள் காட்டவேண்டாம்.

மல்லிகை வாசம் என்னிடம் கேட்ட கேள்விக்கு தான் கொடுத்த பதிலை மேற்கோள் காட்டி நீங்கள் இதை என்னிடம் கேட்டதே அபத்தமான விடயம். 

நாம் எல்லொரும் இங்கு கருத்துக்களத்தில் தத்தமது கருத்துக்களை தெரிவிக்கிறோம். மற்றவர்கள் எப்படி வாழவேண்டும் என்று நிர்பந்திக்க அல்ல. கருத்து தெரிவிக்க வாழ்வியலில் கலாசார சம்பிரதாயங்களை விமர்சிக்க  உரிமை எல்லோருக்கும்  உண்டு. எவருக்கும் எனது  கருத்தை நான்  திணிக்கவில்லை. நான் சொல்வது தவறு என்று நீங்கள் அறிவுபூர்வமாக  நிருபித்தால் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வேன். கேள்வி எதுவும் இன்றி முன்னோர் சொன்னார்கள் என்பதற்காக எதையும் அறிவுக்கண்ணை மூடிக்கொண்டு  ஏற்றுக்கொள்பவன் மனிதனே அல்ல. முன்னோர்களும்  எங்களைப் போலவே தவறிழைக்கும்  சாதாரண மனிதர்கள் தான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பேன்,

மதம் சார்ந்த உங்களின் கருத்துக்களை வாசித்து வருகிறேன். நான் அறிந்தவரையில் எம்மதத்தையும் நீங்கள் சார்ந்து எழுதுவதில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? எனது நிலைப்பாடும் அப்படித்தான். தமிழருக்கு மதம் தேவையில்லை என்பதே எனது கருத்து.

நான் தாய்வழியாக கிறீஸ்த்தவ மதத்தைப் பின்பற்றிவந்தாலும்கூட, அது எம்மேல் வலிந்து திணிக்கப்பட்ட மதம் என்கிற உணர்வு எப்போதும் எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. தமிழர்களின் ஆதி மதத்தில் இருந்தால் (அது எதுவென்று தெரியவில்லை) நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறேன்.

மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்பது எனது நிலைப்பாடு. அவைக்காக மனிதர் தமக்குள் அடிபட்டு அழிவது அநியாயம்.

மதங்களைத் தூக்கிச் சற்று தள்ளிவைத்து தமிழர்களாக அடையாளம் காண்போம். எவர் மதமும் புண்பட வேண்டாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

மல்லிகை வாசம் என்னிடம் கேட்ட கேள்விக்கு தான் கொடுத்த பதிலை மேற்கோள் காட்டி நீங்கள் இதை என்னிடம் கேட்டதே அபத்தமான விடயம். 

நாம் எல்லொரும் இங்கு கருத்துக்களத்தில் தத்தமது கருத்துக்களை தெரிவிக்கிறோம். மற்றவர்கள் எப்படி வாழவேண்டும் என்று நிர்பந்திக்க அல்ல. கருத்து தெரிவிக்க வாழ்வியலில் கலாசார சம்பிரதாயங்களை விமர்சிக்க  உரிமை எல்லோருக்கும்  உண்டு. எவருக்கும் எனது  கருத்தை நான்  திணிக்கவில்லை. நான் சொல்வது தவறு என்று நீங்கள் அறிவுபூர்வமாக  நிருபித்தால் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வேன். கேள்வி எதுவும் இன்றி முன்னோர் சொன்னார்கள் என்பதற்காக எதையும் அறிவுக்கண்ணை மூடிக்கொண்டு  ஏற்றுக்கொள்பவன் மனிதனே அல்ல. முன்னோர்களும்  எங்களைப் போலவே தவறிழைக்கும்  சாதாரண மனிதர்கள் தான்.  

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அபத்தம் என்றுவிட்டு......வேறு எதையோ புலம்புவதன் அர்த்தம் என்னவோ? இதற்கு பதில் எழுதினால் இன்னொரு பச்சை புள்ளிகிடைக்க இறைவனை வேண்டுகின்றேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கடவுள்  நம்பிக்கை  மிக  மிக  அரிது

ஆனாலும்  இவர்கள்   சிவனை சாத்தான்  எனும்  போது கோபம்   வருகிறது

அது எனக்கு  மட்டுமல்ல  என்பது  இங்கே  கருத்து எழுதியவர்களை  பார்க்கும் போது  தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/15/2019 at 11:16 AM, மல்லிகை வாசம் said:

சித்திரைப் புத்தாண்டு தமிழரிடையே திணிக்கப்பட்ட ஒன்று என்பதால் அதைக் கொண்டாடக்கூடாது என்று புலம்பும் 'சீர்திருத்த வாதிகள்' இது போன்ற செயல்களைக் கண்டிப்பார்களா? இவ்வாறான, இதையும் விடக் கேவலமான இழி செயல்கள் ஐரோப்பியர் 1505 - 1948 ஈழத்தை ஆக்கிரமித்தபோதும் நிகழ்ந்தன என்பதை மறுப்பார்களா?

3000ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது தவறல்ல. ஆனால் இங்கு குறிப்பிட்டது போன்ற செயல்களை மூடிமறைப்பது அநியாயம்.

வெள்ளைக்கார்ரின் ஆக்கிரமிப்பிலும் கொடியது ஆரிய ஆக்கிரமிப்பு. வெள்ளையர் மதத்தை மட்டும்தான் திணித்தனர். ஆரியர் முக்கியமாக தமிழ் மொழியையும் அல்லவா சீர்குலைத்தனர். இதற்குக் கோபம் கொள்ளாது உதற்குமட்டும் கொடிபிடித்து எப்பயனும் இல்லை மல்லிகை வாசம்.

Link to comment
Share on other sites

9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்குக் கோபம் கொள்ளாது உதற்குமட்டும் கொடிபிடித்து எப்பயனும் இல்லை மல்லிகை வாசம்.

ம்... மீண்டும் ஆரம்பிச்சாச்சா அக்கா? 😮 புதுவருடக் காய்ச்சல் முடிந்து ஈஸ்டருக்கு எனது கிறிஸ்தவ நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லியாவது மற்றத் திரியில் கடந்த 4 நாளா மண்டைக்குள்ள சேர்ந்த எதிர்மறை எண்ணங்களை ஒழிக்கலாம் என்று பார்தேன். சரி, விளக்கம் கேட்கிறீங்க, கொடுத்திடுவோம். 😃

 

Link to comment
Share on other sites

15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெள்ளைக்கார்ரின் ஆக்கிரமிப்பிலும் கொடியது ஆரிய ஆக்கிரமிப்பு. வெள்ளையர் மதத்தை மட்டும்தான் திணித்தனர். ஆரியர் முக்கியமாக தமிழ் மொழியையும் அல்லவா சீர்குலைத்தனர். 

அக்கா, இரண்டு அந்நியரின் ஆக்கிரமிப்பையும் நீங்களும் நேர பார்க்கேல, நானும் பார்க்கேல. 

இதில ஆரிய ஆக்கிரமிப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது என்று பழைய நூல்கள், அகழ்வாராய்ச்சிகள், செவிவழிக் கதைகள் மூலமாகத் தான் எமக்குத் தெரியும். 

ஐரோப்பியரது 5 நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆக்கிரமிப்பு பற்றி பல்வேறு ஆவணக்குறிப்புகள், நூல்கள் மட்டுமல்ல எங்கள் பாட்டன், முப்பாட்டன் சொல்லியும் கேள்விப்பட்டிருப்போம். 

அப்படிப் பார்த்தால் ஐரோப்பியரது ஆக்கிரமிப்பு பற்றித் தான் ஒப்பீட்டளவில் அதிகம் நம்பகத்தன்மையான தகவல்கள் (அதுவும் அண்மையில் நிகழ்ந்ததால்) நமக்குக் கிடைத்துள்ளன. 1900 களின் ஆரம்பத்தில் பிறந்தவர்களைக் கேட்டாலே இதன் நேரடித் தாக்கங்களைப் பற்றி நிறையச் சொல்வார்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.