யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் யார் ?

Recommended Posts

உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் யார் ?

 

12 ஆவது உலகக்கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடக்கிறது. இதற்கான 15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாம் இந்திய கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

world-cup-india.jpg

15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாமிற்கு தலைவராக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரோகித் சர்மா, சிகர் தவான், கீதர் யாதேவ், மகேந்திரசிங் தோனி, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, குல்தீப் யாதேவ், ஷால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், விஜேய் சங்கர், கே. எல். ராகுல், தினேஸ் கார்த்திக் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படடுள்ளர்.

57096909_2233598480009650_80216109515915

இதேவேளை,போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் ஆகியோரை உள்ளடக்கிய உலகக்கிண்ண அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள்  இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த குழுவில் டேவிட் வோர்ணர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் ஹாண்ட்ஸ்கொம் மற்றும் ஹஸில்வூட் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்கவில்லை.

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் 15 பேர் கொண்ட 2019 ஆண்டுக்கான உலக்கிண்ண குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேரடங்கிய அவுஸ்திரேலிய குழாம் விபரங்கள் வருமாறு,

அவுஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பிஞ் தலைமை தாங்குகின்றார், அவருடன் டேவிட் வோர்ணர், ஸ்டீபன் ஸ்மித், உஷ்மன் கவாஜா, ஷோர்ன் மார்ஷ், கிளன் மெக்ஷ்வெல், மார்க்கஸ் ஸ்டெய்னிஸ், விக்கெட் காப்பாளராக அலக்ஸ் கேரி, பட் கெம்மின்ஸ், மிட்சல் ஸ்ராக், ஜெயி ரிச்சட்சன், நதன் குல்ட்லர் நில், ஜேசன் பிஹர்ன்டோர்ப், அடம் ஷம்பா, நதன் லின் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. 

இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்றையதினம் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விபரம் மற்றும் இந்திய அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இலங்கை அணி வீரர்கள் குறித்து எதுவும் வெளிவராத நிலையில், அஞ்சலோ மெத்தியூஸிடம் உலகக் கிண்ண அணிக்கு தலைமை தாங்குமாறு கேட்கப்பட்டதாகவும் அதனை மெத்தியூஸ் நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும் இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வேண்டிய நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/53991

Share this post


Link to post
Share on other sites

எங்க ஊரு வீரர்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ..? ராயுடு புறக்கணிப்பில் உள்குத்தா..? சர்ச்சையை கிளப்பிய முன்னாள் வீரர்..

ojha_1200x630xt.jpg

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நான்காம் வரிசைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில் சிறப்பாக ஆடி நான்காம் இடத்தை பிடித்துவிட்டார் விஜய் சங்கர். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நிதானமாக சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடும் அதேவேளையில், சில பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்வதாலும் இவையனைத்தையும் கருத்தில் கொண்டு விஜய் சங்கரை எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார்.

ராயுடுவின் நீக்கத்திற்கு காம்பீர் உட்பட பல முன்னாள் வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர். உலக கோப்பை அணியில் தன்னை ஓரங்கட்டிய கடுப்பில் இருந்த ராயுடு, விஜய் சங்கர் ஒரு 3 டைமன்ஷனல் வீரர் என்று பிரசாத் தெரிவித்திருந்ததை குறிப்பிட்டு கிண்டலாக டுவீட் செய்திருந்தார். உலக கோப்பையை காண இப்போதுதான் 3டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளதாக ராயுடு பதிவிட்டுள்ளார். விஜய் சங்கரின் தேர்விற்கு சொல்லப்பட்ட காரணத்தை கிண்டல் செய்யும் விதமாக இந்த பதிவை இட்டிருந்தார் ராயுடு.

ராயுடுவுக்கு ஆதரவாக அவரது டுவீட்டிற்கு பதிலளித்த முன்னாள் ஸ்பின் பவுலர் பிரக்யன் ஓஜா, தானும் இதேபோன்றதொரு சூழலை எதிர்கொண்டதாகவும் ஹைதராபாத் வீரர்கள் சிலருக்கு மட்டும் இதேபோன்று நடப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

ஹைதராபாத் வீரர்களுக்கு இதுபோன்று நடப்பதாக கூறியிருப்பதன் மூலம் அணி தேர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளதால் ஓஜாவின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

https://tamil.asianetnews.com/sports-cricket/ojha-tweet-about-team-selection-raised-controversy-pq7i01

டிஸ்கி :

தெலுங்கா என் ரோமோட்டோ  தொக்கா..? இதை இப்படியே விட பிடாது.. எல்லா இனத்துக்காரனும்  ஆளுக்கு ஒரு இடம் கிந்திய அணியில் கேளுங்கப்பா.. 😎

 

Share this post


Link to post
Share on other sites

உலகக் கோப்பை அணிக்கு தேர்வான தமிழக வீரர்: யார் இந்த விஜய் சங்கர்?

 
விஜய் சங்கர்படத்தின் காப்புரிமைFACEBOOK

உலகக் கோப்பை போட்டிகளுக்கான விராத் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மார்ச் மாதம் இந்திய அணியில் தேர்வாகியபோது பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி:

யார் இந்த விஜய் சங்கர்?

தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான 26 வயதாகும் விஜய் சங்கர், திருநெல்வேலியில் பிறந்தவர். சிறுவயது முதல் அவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

"சிறுவயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோதே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது'' என்று தெரிவித்தார்.

வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் பயிற்சி

இந்திய அணிக்கு விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம் என்று கூறிய விஜய் சங்கர், ஐபிஎல் அணிக்காக முன்னர் தேர்வானது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ளது குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறினார்.

''என் குடும்பம்தான் சிறு வயதில் இருந்தே என்னை கிரிக்கெட்டில் ஊக்குவித்தது. எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நான் நெட் பிராக்டிஸ் செய்வதற்கு என் பெற்றோர் வசதி ஏற்படுத்தி தந்தார்கள்'' என்று விஜய் சங்கர் மேலும் கூறினார்.

விஜய் சங்கர்

தனது பயிற்சியாளர் எஸ் பாலாஜியும் தனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பதாக குறிப்பிட்ட விஜய் சங்கர், இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பது தனது கனவின் முதல்படிதான் என்றும் அணியில் சிறப்பாக பங்களிப்பதும், நீண்ட காலம் நீடிப்பதும்தான் தனது மிகப்பெரிய கனவு என்று மேலும் தெரிவித்தார்.

'அணிக்கு தேர்வானது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி'

விஜய் சங்கர் இந்திய அணியில் விளையாட தேர்வானது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை ஹரிஹரன் சங்கர், ''எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவும், விஜய் இந்திய அணியில் இடம்பெறுவதும், அவர் மேலும் சிறப்பாக கிரிக்கெட்டில் பங்களிப்பதும்தான்'' என்று கூறினார்.

விஜய் இந்திய அணியில் விளையாட தேர்வான செய்தி, தனது குடும்பத்தினர் அனைவருக்கும் எதிர்பாராத ஒரு செய்தி என்று குறிப்பிட்ட ஹரிஹரன் சங்கர், ''நானும் முன்பு கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அக்காலகட்டத்தில் பொருளாதார வசதிகள் இல்லாததால் என்னால் தொடர்ந்து விளையாட முடியவில்லை'' என்று நினைவுகூர்ந்தார்.

''அதே நேரத்தில், விஜய் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அகாடமியில் சேர வேண்டும் என்று கூறியவுடன், நான் உடனே அதற்கு ஏற்பாடு செய்தேன்'' என்று தெரிவித்தார்.

இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ள விஜய் சங்கர்
Image captionஇந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ள விஜய் சங்கர்

சிறுவயதில் படிப்பு மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் விஜய் நன்றாக செயல்பட்டதாக தெரிவித்த ஹரிஹரன் சங்கர், ''விஜய்க்கு 17 வயதானபோது கிரிக்கெட்டா ,படிப்பா எதை தொடர விருப்பம் என்று கேட்டேன். அதற்கு விஜய் கிரிக்கெட்டை தொடரவே விருப்பம் என்று தெரிவித்தார்'' என்று நினைவுகூர்ந்தார்.

விஜய்க்கு உதவும் வகையில் எங்களால் முடிந்த அளவு உதவிகள் செய்து தந்தோம் என்று குறிப்பிட்ட அவரது தந்தை, ''பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படும் விஜய், ஃபீல்டிங்கிலும் நன்றாக செயல்படக்கூடியவர்'' என்று கூறினார்.

சுழல் பந்துவீச்சாளர் மித வேகப்பந்துவீச்சுக்கு மாறியது ஏன்?

விஜய் சங்கருக்கு 12 ஆண்டுகள் கிரிக்கெட் பயிற்சி அளித்துவரும் அவரது பயிற்சியாளர் எஸ் பாலாஜி, விஜய் சங்கரின் கிரிக்கெட் பயணம் குறித்த நினைவுகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

''உன்னிப்பாக ஆட்ட நுணுக்கங்களை கணிக்கும் ஆர்வம் மிக்க விஜய் சங்கர், ஆரம்பத்தில் சுழல் பந்துவீச்சாளராக இருந்தார். பின்னர், எனது ஆலோசனையின்பேரில் அவர் மித வேகப்பந்துவீச்சுக்கு மாறினார். மற்றவர்களுடன் தனது பேட்டிங், பந்துவீச்சு குறித்து விவாதிப்பார் விஜய். பின்னர் தேவையான மாற்றங்களை ஆலோசித்து இருவரும் மேற்கொள்வோம்'' என்று பாலாஜி தெரிவித்தார்.

பயிற்சியாளர் பாலாஜி
Image captionபயிற்சியாளர் பாலாஜி

இந்தியா ஏ சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட்டை தனது திறமையால் பெரிதும் ஈர்த்தார் விஜய். இவரது ஆட்ட நுணுக்கம் மற்றும் திறமைகளை தேர்வாளர்களிடம் டிராவிட் எடுத்துக் கூறியிருக்கலாம் என்று பாலாஜி குறிப்பிட்டார்.

''விஜயின் கிரிக்கெட் பயணத்தில் இது ஆரம்பம்தான். கடின உழைப்பு மற்றும் திறமையால் அவர் நீண்டதூரம் பயணிக்கமுடியும்'' என்று பாலாஜி மேலும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sport-42076009

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவு J.A. George / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:09    மெகசின் சிறைச்சாலையில் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன், நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து, அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டுள்ளார். தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவதாசன் கடந்த சில தினங்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் சாகும்வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார். நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கவிந்தன் கோடிஸ்வரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.ஜனகன், மேல்மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் விஷ்ணுகாந்தன் ஆகியோரும் அங்கு சென்று அவரை சந்தித்தனர்.     http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தேவதாசனின்-உண்ணாவிரதம்-நிறைவு/150-235737
    • ஒரு அறிவிலியைப் பார்த்துத் தலைக்குள் ஒரு மண்ணும் இல்லையே என்று ஆன்றோர் கூறுவது எதனால்.......??????🤔
    • சிறுபான்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பான்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா ?   -எம்.ரீ. ஹைதர் அலி -சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாராஎன்ற சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்அரசியல் அதிகாரங்களை பெறுவதற்குரிய மிகப்பெரிய மூலதனமாக இனவாதம் மாறிவிட்டதென்பதற்கு சீ.வி. விக்னேஸ்வரன் விலக்கல்ல என்பதை 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டது என்கின்ற ஆதாரமற்ற மிகப்பெரும் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக முதலமைச்சராகிய சீ.வீ. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறியதற்குப்பின் தனெக்கென ஒரு அரசியல் இருப்பை இனவாத்த்தினூடாக தக்கவைக்க முயற்சிப்பது அவர் வகித்திருந்த ஆதாரபூர்வமான உண்மையின் பக்கம் மாத்திரம் நீதி செலுத்தும் உயர் நீதியரசர் என்கின்ற பதவிக்கு இவர் தகுதியற்றவராக இருந்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு என்று இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் பேரின சக்திகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்ற இக்கால கட்டத்தில் சக சகோதர சிறுபாண்மை மீது இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டதை முஸ்லிம் சமூகம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.கடந்த யுத்த காலத்தின்போது யுத்தத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொண்டிராத முஸ்லிம் சமூகம் எண்ணில் அடங்காத உயிர்ச் சேதங்களையும், பாரிய பொருளாதார இழப்பையும், தமது வாழ்வுரிமைகளையும் தமிழ் போராட்டக்காறர்களால் இழந்து வட, கிழக்கில் துன்பப்பட்டதை சீ.வீ. அவர்கள் மறந்துவிட்டு பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.21/4 தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறான அபாண்டமான கருத்துக்கள் முஸ்லிம் சமூகம் மீதான சந்தேகப் பார்வையை மேலும் அதிகரிக்கும் விதமாக மாறியுள்ளது.நாட்டில் பேரினவாதம் சிறுபாண்மைகளை ஓரம்கட்டி தனிச் சிங்கள இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற கோசத்துடன் ஒரு பன்சலையினூடாக ஒரு ஆயிரம் வாக்கு என்ற முன்னெடுப்புக்களை முன்னெடுத்து 7,000,000 பேரின் வாக்கினால் நாட்டினுடைய தலைவரை தேர்வு செய்ய முயற்சிக்கும் மிக ஆபத்தான சூழலில் சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா என்ற பலத்த சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்றி வேறு எவராலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்கின்ற மிகப்பெரும் உண்மையை சீ.வீ. வருகின்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து வெளியேற்றப்படும் அந்தநாளில் புரிந்துகொள்வார்.ஆக மொத்தத்தில் சீ.வீ. அவர்கள் இனவாத அரசியலை கைவிட்டுவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இன நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கின்ற நல்ல சிந்தனையுடன் எதிர்காலத்தில் பயணிக்க சிறுபான்மை சமூகம் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். https://www.madawalaenews.com/2019/07/scv.html  
    • மனுஸ் தீவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த அவுஸ்திரேலியாவுக்கு வலியுறுத்தல் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பபுவா நியூ­கி­னியின் பிர­தமர் ஜேம்ஸ் மராபி தனது நாட்டின் மனுஸ் தீவில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்ள  புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களை மீளக்குடி­ய­மர்த்த காலவரை­ய­றை­யொன்றை நிர்ணயிக்க அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­க­ளுக்கு நேற்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  மராபி இரு மாதங்­க­ளுக்கு முன்னர் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பின்னர் வெளி­நாடு ஒன்­றுக்கு விஜயம் செய்­வது இதுவே முதல் தட­வை­யாகும். அவர்  அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்­கான இந்த விஜ­யத்தின்போது அந்­நாட்டு பிர­தமர் ஸ்கொட் மொரிஸன் எதிர்க்­கட்சித் தலைவர் அந்­தோனி அல்பானிஸ் மற்றும் உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளுடன் சந்­திப்பை மேற்­கொண்டார். அவுஸ்­தி­ரே­லி­யா­வா­னது தனது நாட்­டுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக வரும் புக­லி­டக்­கோரிக் கை­யா­ளர்கள் அனை­வ­ரையும் மனுஸ் மற்றும் நவுறு தீவுக்கு அனுப்பும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்­றது. அந்தக் கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட ஆறா­வது ஆண்டு தினம் கடந்த வெள் ளிக்­கி­ழ­மை­யாகும்.  இந்­நி­லையில் இத­னை­யொட்டி நேற்று முன்­தினம் ஞாயிற்றுக்­கி­ழமை மற்றும் அத ற்கு முதல் நாளான சனிக்­கி­ழமை ஆகிய தினங்­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­வெங்கும் எதி ர்ப்பு ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லங்கள் நடத்­தப்­பட்­டன. பபுவா நியூ­கி­னி­யி­லுள்ள புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களில் பலர் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள நிலையில் சுமார் 450 புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அங் குள்ள மோச­மான நிலைமைகள் காரண மாக அவர்கள் தற்கொலை செய்வதற்கு முயற்சித்து வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் மேலும் 350 புகலிடக்கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் உள்ளனர்.   https://www.virakesari.lk/article/60987  
    • ' நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட  திருமணம் ' - வீ.தனபாலசிங்கம் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமென்றால், அதற்கு பிறகு இலங்கை அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்பூட்டும்  போக்குகளுக்கு சிங்கள - பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதகாலத்தில் அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான  காரணிகளில் சிங்கள - பௌத்த மேலாண்மைவாதம் முதல்நிலை வகித்துவருகிறது. அதன் முன்னரங்க சேனைகளாக பிக்குமார் விளங்குகிறார்கள். அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வளர்ந்த புதியதொரு தோற்றப்பாடல்ல, பல தசாப்தங்களாக இருந்துவருகிற ஒன்றுதான்.ஆனால், அதன் அண்மைக்கால வெளிப்பாடுகள் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் ஆரோக்கியமான அரசியல் சிந்தனைப்போக்குகளுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து பலமான ஐயத்தை கிளப்புகின்றன. தான்தோன்றித்தனமாக செயற்படுகின்ற பிக்கு ஒருவர் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்து சட்டரீதியாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களின் பேரில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாகாண ஆளுநர்களையும் அமைச்சர்களையும் பதவிவிலகச் செய்யமுடிகிறது. குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் அந்த பதவிவிலகல்கள் இடம்பெறவில்லையானால் நாடு பூராவும் ' களியாட்டம் ' நடப்பதை எல்லோரும் பார்ப்பீர்கள் என்று பகிடிவிட்டு குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்படும் என்று தலதா மாளிகைக்கு முன்பாக பொலிசாருக்கு முன்னால் நின்று துணிச்சலுடன்வேறு ஒரு பிக்குவால்  கூறக்கூடியதாக இருக்கிறது ; திரிபுபடுத்தப்பட்ட தேசியக்கொடியை ஏந்திய கூட்டத்தினர் மத்தியில் நின்றுகொண்டு இலங்கையில் சிங்களவர்களை மாத்திரம் கொண்ட அரசாங்கம் அமையவேண்டும் என்று அவரால் பிரகடனம் செய்யமுடிகிறது. எந்த விதமான வன்முறையையும் ஏற்றுக்கொள்ளாத பௌத்த தர்மத்தைப் போதிக்கின்றவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்கின்ற இந்த பிக்குமாரின் பேச்சுக்களில் முற்றிலும் வன்முறைத்தொனியே   தெறிப்பதைக்  காணக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கத் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் எச்சரிக்கை செய்து  " உத்தரவுகளையும் " கூட அடிக்கடி பிக்குமார் பிறப்பிக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு முகெலும்பு இருக்கிறதா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.கண்ணியமாக  நடந்துகொள்ளாத பிக்குமாரின் செயற்பாடுகளைக்கூட கண்டிப்பதற்கு அரசியல்வாதிகள் முன்வருவதில்லை. விதிவிலக்காக  துணிச்சலை வரவழைத்துக்கொண்டு எந்த அரசியல்வாதியும் பிக்குமாரின் தவறுகள் என்று எதையாவது குறிப்பிட்டுவிட்டால் மன்னிப்புக்கேட்கும் வரை அவரை ஓய்வாக இருக்கவிடமாட்டார்கள்.பிக்குமாரில்  குறிப்பிட்ட சில பிரிவினரின் தவறான போக்குகளைச் சுட்டிக்காட்டினால், அதை முழு மகாசங்கத்தையும் அவமதிக்கும் செயலாக அர்த்தப்படுத்தும் விபரீதப்போக்கு ஒன்றையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. பிக்குமாரில் எந்தப்பிரிவினரையும் எந்தக் காரணத்துக்காகவும்  தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் அரசியல் தலைவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.  வன்முறையைத் தூண்டுகின்ற  பிக்குமாரின் பிரசாரங்களையும்  செயற்பாடுகளையும் பௌத்த உயர்பீடங்களும் கண்டிப்பதில்லை.  இத்தகைய பிக்குமாரின் போக்குகளை விரும்பாத பிரிவினர் பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் மத்தியில் கணிசமானளவில் இருக்கவே செய்கிறார்கள்.ஆனால், அவர்கள் பகிரங்கமாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முன்வரமுடியாத அளவுக்கு பேரினவாதம் மலைபோல் உயர்ந்துநிற்கிறது. கெடுதி செய்பவர்களினால் அல்ல அந்த கெடுதிகளுக்கு எதிராக எதையும் செய்யவோ பேசவோ முன்வராதவர்களினாலேயே உலகம் மக்கள் வாழ்வதற்கு ஆபத்தான இடமாக இருக்கிறது என்ற ஒரு மேதையின் கூற்று இங்கு நினைவுக்கு வருகிறது. இலங்கையில் காவியுடை பௌத்தர்களினால் எப்போது போற்றிமதிக்கப்படுகிறது. ஆனால்,கிறிமினல் செயல்களில் ஈடுபடுகின்ற பேர்வழிகள்  அந்த காவியுடைக்குள் தங்களை மறைத்துக்கொள்வதையும் எவரும் மறுக்கமுடியாது.ஒரு பௌத்தபிக்குவே தனது காவியுடைக்குள் கைத்துப்பாக்கியை மறைத்துவைத்துக்கொண்டுவந்து பிரதமர் ஒருவரைச் சுட்டுக்கொன்றார் என்பது வரலாறு. சொல்லப்போனால், இலங்கையில் பௌத்தமதம் ஒரு அரசியல் மதமாகவே விளங்குகிறது. அரசியலில் தங்களுக்கு செல்வாக்கான அந்தஸ்து ஒன்று வேண்டும் என்று பிக்குமார் நாட்டம் கொள்வதே இலங்கையில் உள்ள பிரச்சினை. புராதன காலத்தில் பௌத்தபிக்குமார் மன்னர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள் என்பதை சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இன்றைய யுகத்திலும் அவர்கள் அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆலோசனை கூற வலிந்து முன்வருகிறார்கள். அதுபோக, அவர்கள் நேரடியாகவே அரசியலுக்கு வந்தும் விட்டார்கள். காவியுடையுடன் தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம் அவர்கள் கட்சி  அரசியலுக்குள் பௌத்தமதத்தைக் ெகாண்டுவந்து நீண்டகாலமாகிவிட்டது. பிக்குமார் நேரடி அரசியலில் ஈடுபடுவதென்பது புத்தரின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானது என்ற போதிலும், அவர்கள் அரசியலில் இறங்குவதைத் தடுக்க மகாநாயக்கர்களினால் கூட முடியவில்லை.  அரசியலுக்கும் மதத்துக்கும் இடையிலான ' திருமணம் ' சொர்க்கத்தில் அல்ல, நரகத்திலேயே தீர்மானிக்கப்பட்டது என்று அண்மையில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் எழுதியிருந்தார்.நவீன  இலங்கையில் இந்த ' நரகத் திருமணத்தை ' ஏற்பாடு செய்து நடத்திவைத்தவர் தனது செயலினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய மாபாதக விளைவுகளை தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்கக்கூடிய  அறிவும் புலமையும் நிறைந்த ஒரு மனிதரே.அவர் ஒன்றும் வீரவன்சவையோ ஞானசாரவையோ போன்றவரல்ல. மொழியறிவு மட்டுப்பாடு காரணமாக உலக  வரலாற்றை தெரிந்துகொள்ளமுடியாதவரும் அல்ல. பிரபலமானவராக வரவேண்டும் என்பதற்காக மததை அரசியலுக்கு  பயன்படுத்தவேண்டிய அவசியத்தைக் கொண்ட அநாமதேயமும் அல்ல.இருந்தாலும் அவர் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகவேண்டும் என்பதற்காக சிங்கள -- பௌத்தம் என்ற ஆயுதத்தை வேண்டுமென்றே கையில் எடுத்தார்.  எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் எழுச்சியும் வீழ்ச்சியும்  அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான எச்சரிக்கையாக அமைகின்ற ஒரு ' நீதிக்கதை' போன்றதாகும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தக் கதையை தென்னிலங்கையின் எந்த அரசியல் தலைவரும் விரும்பிப் படிக்கவில்லை. அவரைப் போன்றே பிறகு வந்த அரசியல் தலைவர்களும் பிக்குமாரை தங்களது அரசியலுக்கு தாராளமாகப் பயன்படுத்தினார்கள். இன்று இறுதியாக " அரசியல்வாதிகளே, நீங்கள்பேசாமல் இருங்கள் நாங்கள் ஆட்சிசெய்கிறோம் " என்று பிக்குமார் பிரகடனம் செய்கின்ற நிலை வந்துவிட்டது. சில மாதங்களில் முக்கியமான தேர்தல்கள் வரவிருக்கின்றன. தங்களது எதிர்கால வாய்ப்புக்களுக்காக மேலும் கூடுதலான அளவுக்கு அரசியல்வாதிகள் பிக்குமாரையும் மதத்தையும் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுவார்கள். தனக்கு இரண்டாவது பதவிக்காலத்தை பெற்றுக்கொள்ளும் பிரயத்தனத்தில் மதத்தைப் பயன்படுத்தும் எண்ணத்துடனேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைவாசம் அனுபவித்த பொதுபல சேனாவின் ஞானசார தேரோவுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். அத்துரலிய தேரோவின் மிரட்டலுக்கு பணிந்தது உட்பட பல காரியங்கள் மூலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எந்தவிதமான தீவிரவாத்துக்கும் எதிராக துணிந்துநிற்கும் உத்தேசம் தனக்கு இல்லை என்பதை வெளிக்காட்டியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல சைத்தியாக்களை நிர்மாணிக்கப்போவதாக சஜித் பிரேமதாச அளித்திருக்கும் உறுதிமொழி ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கான தனது முயற்சிகளில் மதம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப்போகிறது என்பதற்கான சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்.  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வருபவர் தன்னை ஒரு நவீன துட்டகைமுனுவாக - சிங்கள பௌத்தத்தின் பாதுகாவலனாக முன்னிறுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. எதிர்வரும் மாதங்களில் அரசியலில் மதம் என்ற ஆயுதம் மிகவும் ஆபத்தானமுறையில் பயன்படுத்தப்படப்போகிறது. நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் விளைவு !   https://www.virakesari.lk/article/60904