Jump to content

குப்பிளானில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_6716.jpg?resize=800%2C600
யாழ்.குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குப்பிளான் தெற்கு மயிலங்காடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 48) அவரது சகோதரியான கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

யாழில்.இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மழை பெய்தது. அதன் போது வீட்டு க்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த மூவரும் மழையின் காரணமாக தென்னை மரம் ஒன்றின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் ஒதுங்கி நின்றுள்ளார்கள். அதன் போது தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

IMG_6714.jpg?resize=800%2C600IMG_6715.jpg?resize=600%2C800  IMG_6717.jpg?resize=800%2C600

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சோகம் ! மின்னல் தாக்கி இரு சகோதரர்கள் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே பலி

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கியதில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு  ( 218) பகுதியிலேயே மின்னல் தாக்கி மூன்று பேர் இறந்துள்ளனர். 

thunder.jpg

தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான், மயிலங்காடு பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

57012489_2198741763724688_37992713850632

சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (வயது- 48), கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு பேர் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோரில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் வேலைசெய்துகொண்டிருந்தனர்.

57348195_836799726718727_559602655197292

அதன் போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னைமரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் அவர்கள் மூவரும் ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது இடி மின்னல் அந்தத்  தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

http://www.virakesari.lk/article/54030

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். 

அப்பாவி ஏழைகளைதான் இயற்கையும் தாக்குகின்றது.

பலர் மின்னல் வெட்டில் இறந்து போகின்றார்கள். மக்களுக்கு இதை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லையா? மரத்திற்கு அடியில் நிற்பது சரியா?

Link to comment
Share on other sites

ஊரில் இப்படி அடிக்கடி நிகழ்வதை இப்ப சில வருடங்களாகத் தான் கேட்கின்றேன்...கடந்த வருடமும் அப்பாவும் மகனும் இறந்தனர் இதே போன்றுதானே இறந்தனர்?

இடி முழங்கும் போது மரங்களின கீழ் நிற்க கூடாது என பள்ளி பாடப் புத்தகங்களில் கூட குறிப்பிட்டு இருக்கு

விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டிய இன்னொரு விடயம் இது.

Link to comment
Share on other sites

2 hours ago, colomban said:

ஆழ்ந்த இரங்கல்கள். 

அப்பாவி ஏழைகளைதான் இயற்கையும் தாக்குகின்றது.

பலர் மின்னல் வெட்டில் இறந்து போகின்றார்கள். மக்களுக்கு இதை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லையா? மரத்திற்கு அடியில் நிற்பது சரியா?

"அப்பாவி ஏழைகளைத் தான் இயற்கையும் தாக்குகின்றது" - இயற்கையும், இனவாதமும், நோயும், நெருப்பும், வாழ்வின் இன்னல்கள் அனைத்துமே அப்பாவி ஏழைகளையே குறிவைக்கின்றன. புரியாத புதிர்...ஆழ்ந்த அனுதாபங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையடக்க தொலைபேசிகளும் ஒரு காரணம், இச்சம்பவத்தில் அதுவும் காரணமோ தெரியவில்லை.

  • இடி, மின்னல் தாக்கும் போது திறந்த வெளியில் நிற்கக்கூடாது. உடனடியாக கான்கிரீட் கூரையிலான கட்டிடம், உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடைய வேண்டும்.
  • குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ நிற்கக்கூடாது.
  • தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும்.
  • டி.வி. மிக்ஸி, கிரைண்டர், கணினி, அலைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உபயோகத்தில் இல்லாத போது சுவிட்சுகளை அணைத்து வைக்க வேண்டும்.
  • மின்வாரியத்தின் மின்மாற்றிகள், துணை மின்நிலையத்துக்கு போடப்பட்டுள்ள வேலி அருகே சிறுநீர் கழிப்பதையும், அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
  • மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • மின்கம்பங்கள், அவற்றைத் தாங்கும் கம்பிகளை தொடுவதையும், மின் கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதையும் தவிர்க்கவும்.
  • மின்சார வயர்கள் பதிக்கப்பட்டுள்ள சுவர்களில் ஆணி அடிக்க வேண்டாம்.
  • மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அந்தத்  தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி, கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b87b9fbbf-baebbfba9bcdba9bb2bcd-baebb4bc8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் உள்ள,  வாள்  வெட்டுக்காரர்  மேல் ஒரு இடியும் விழுகுதில்லை,
வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற நினைத்தவர்களை.... 
இயற்கை பலி கொண்டது சோகமான செய்தி. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான செய்தி....ஆழ்ந்த இரங்கல்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் மழை பெய்யும் என்றார்கள் சொன்ன உடனே இடியும் மழையும் வருது  ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

உயர்ந்த கட்டடங்கள் எல்லாவற்றிற்கும் "lightning protection " செய்வதன் மூலம் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் இடிதாங்கி கோபுரங்கள் நிறுவுவதன் மூலம் இப்படியான இழப்புகளை குறைக்க முடியும், புதிதாக அமைக்கப்படும் கட்டடங்கள் எல்லாவற்றிலும் "lightning protection". நிறுவ வேண்டும் என்பதை கட்டாயாமாக்க வேண்டும் 

சிங்கப்பூர் ஒருகாலத்தில் அதிகளவு மின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டது..இப்போது அப்படியான சம்பவங்கள் அரிது ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image-0-02-06-7247766eb92356c87f45fd83d0

இன்று காலை 6 மணிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி முரளிதரன், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன், கிராம சேவகர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அடங்கிய குழுவினர் மின்னல் அனர்த்தம் நிகழ்ந்த  இடத்தினை சென்று பார்வையிட்டதோடு உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கும் சென்றனர்.  

image-0-02-06-48a183e4e71175da1d7d87c1dd

இதன்போது சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் மரணத்திற்கான கொடுப்பனவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொடுப்பனவு ரூபா ஒரு இலட்சத்தில்  உடனடியாக பதினைந்தாயிரம் ரூபாவினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரசாங்க அதிபர் வழங்கினார். 

மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கான வீட்டுத்திட்டத்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறும் அரசாங்க அதிபர் பணித்துள்ளார்.

image-0-02-06-03dbca45d89649aa701d70092e

அப்பகுதிகளில் அடிக்கடி மின்னல் தாக்கம் நிகழ்வதற்கான காரணம் பற்றி ஆராய்வதோடு அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் இயங்கு நிலையில் இருக்கின்றதா மற்றும் உரிய தரத்தில் உரிய முறைப்படி பொருத்தப்பட்டுள்ளதா என உடனடியாக பரிசீலித்து நடவடிக்கையெடுக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/54047

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு கால்களையும் சேர்த்து நிலத்தில் குந்தி அமர்ந்து கொள்வது பாதுகாப்பு!

கடும் வெப்பமான காலநிலையின் பின்னர் மாலை வேளைகளில் மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் அதிகமாக  இருக்கும் என்று தெரிவித்துள்ள இடர் முகாமைத்துவப் பிரிவு, அது தொடர்பாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மழை பெய்யும்போது மைதானம், வயல்கள், கடலில் நிற்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிகமாக மின்சார வடங்கள் தற்போது மின் இணைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சாரம் வழங்கும் தொகுதி மற்றும் மின்சாரக் கம்பங்களுக்கு அருகே நிற்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வீடு மற்றும் வேலைத் தளங்களில் மின் சாதனங்களின் மின் இணைப்புக்களை நிறுத்திக் கொள்ளவது, மின்னலால் ஏற்படும் மின் ஒழுக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்.

தொலைக்காட்சி அன்ரனா இணைப்புகளையும் துண்டித்துக் கொள்ளுதல் பாதுகாப்பானதாக அமையும். அண்மையான பிரதேசத்தில் மின்னல் தாக்கம் ஏற்படும் போது இரு கால்களையும் சேர்த்து நிலத்தில் குந்தி அமர்ந்து கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும்.

மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் வருடம்தோறும் 70 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர்.

மக்கள் அவதானத்துடன் செயற்படுவதன் ஊடாகவே தேவையற்ற இடர்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், குப்பிளானில் நேற்று மதியம் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேற்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

http://battinaatham.net/description.php?art=19311

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.