Sign in to follow this  
தமிழ் சிறி

கனிமொழி வீட்டில், வருமான வரி சோதனை..

Recommended Posts

Kanimozhi house raided in Tuticorin

அடுத்த அதிரடி.. தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை.. பரபரப்பு

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீடு, மற்றும் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் களமிறங்கியுள்ளார்.

நாளை மறுநாள், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. நேற்று இரவு முதலே ஓட்டுக்கு 300 ரூபாய் அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில் தூத்துக்குடி, குறிஞ்சி நகர் என்ற பகுதியில் கனிமொழி தங்கியுள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று இரவு 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகத்தின், உள்ளே செல்வதற்கும், உள்ளே இருந்து வெளியே செல்வதற்கும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வருமான வரி சோதனை நடைபெறுவது தெரிந்ததும், திமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் குறிஞ்சி நகரில் உள்ள வீட்டைச் சுற்றி திரண்டனர்.

எனவே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, வேலூரில் பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tuticorin/kanimozhi-house-raided-in-tuticorin-347123.html

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, பெருமாள் said:

ஆக 300 ரூபா தானா ?

கனிமொழிக்கு.... காசு தட்டுப்பாடு போலை இருக்கு. :grin:  😝

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆதி சங்கரர் 6 சமயத்தை இணைத்தார். ஆனால் இந்து சமயம் என்ற பெயர் வெள்ளையர்களால் வழங்கப்பட்டது. அத்துடன் ஆதிசங்கரர் 6 சமயத்தை இணைக்க முன்னரே தனித்தனியாக வணங்கப்பட்ட கடவுள்களுக்கு உறவு முறைகளை ஏற்படுத்தி இணைத்து விட்டார்கள். 
  • இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என நான் எங்கும் கூறவில்லை. நான் இத்திரியில் சைவம் எமது சமயமா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை, நீங்கள் அது பற்றி கேட்டீர்கள் என கூறினேன். இன்னொரு திரியில் எழுதியிருந்தேன், தமிழர்களிடையே முருக வழிபாடு வெவ்வேறு வழிகளில் இருந்தது. பின் தமிழர்களின் முருகவழிபாட்டுடன் ஆரியர்கள் ரிக் வேதத்திலுள்ள ஸ்கந்தா, குமரா என்பதை புகுத்தி முருக வழிபாட்டை பரப்பினார்கள் என்று. தமிழர்களிடையே சிவ வழிபாடும் இருந்தது. பின்னர் அதுவும் ஆரியர் கலவை. சிவ வழிபாடு தனியே இலங்கை, இந்தியாவில் மட்டும் இருந்ததல்ல. பல்வேறு நாடுகளில் இருந்தது. சாதி முறை பற்றி கதைக்கும் போது ஈழத்தமிழர்களையும் தமிழக தமிழர்களையும் ஒன்றாக கருத முடியாது முடியாது.
  • லாரா, நாம் என்றால் தமிழ்கூறும் நல்லுலகு (தமிழகம்+இலங்கை). ஈழத்தவர் சைவர்கள் என்கிறீர்கள். ஆனால் எமது ஆதி மதம் சைவமா? என்றால் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்கிறீர்கள். ஈழத் தமிழருக்கு ஒரு மதம், தமிழக தமிழருக்கு என ஒரு மதம் இருக்க முடியுமா? நாம் எல்லாரும் தமிழர்களே - ஈழத்தமிழர் சைவர் என்பதுக்கு, திருமூலர் இலங்கையை சிவபூமி என்றார் என்பதை தவிர வேறு ஆதாரமேதுமில்லை. மட்டக்களப்பில் பிரதான வழிபாடு அம்மன். யாழில் விஸ்ணுகோயில்கள் சிவன் கோயிலுக்கு இணையாக உள்ளன. மாத்தறையில் இருந்து அழிந்த தொண்ட்டீஸ்வரம் ஒரு விஸ்ணு ஆலயம். இலங்கை தமிழர்கள் எல்லாரும் சைவர்கள் என்பது, திருமூலரின் வாக்கை மட்டும் கொண்டு சைவ பரிபாலன சபையின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களம் பரப்பிய புரட்டு நான் சொல்கிறேன் எமது சங்க இலக்கியம் (ஈழத்தில் சங்க இலக்கியம் இல்லை) எதிலும் சிவன் என்றோ சைவம் என்றோ இல்லை.  அப்படி இல்லாதபோது, எந்த அடிப்படையில் எம் மதம் சைவம் என்றோ நாம் சைவர் என்றோ ஏற்க முடியும்.என்னை கேட்டல் இலங்கையில் பின்பற்றபடுவது 6 உட்பிரிவுகளும் கலந்த, ஆதி சங்கரருக்கு பின்னான நவீன இந்து சமயமே. இதன் அடி, வட இந்தியாவிலே உளது. ஆகவே இலங்கை இந்துக்கள் தம்மை, சைவர் என இனம்காட்டி, இந்துதுவா/பிரம்மணியத்தின் கேடுகளில் இருந்தும் விலத்தி நிற்க முடியாது.
  • தெரிந்தோ  தெரியாமலோ மைத்திரி ஒரு நன்மை செய்துள்ளார். மீண்டும் சர்வதேசத்திற்கு போர்க்குற்றம் பற்றிய நினைவுகளை மீட்க வைத்துள்ளார்.  யார் புதியாய்  மகேஷின் இடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களும் தமிழின அழிப்பையே தொடர்ந்தும் முன்னெடுத்து இருப்பார்கள்.  ஷவேந்திர சில்வாவை நியமித்தது மூலம் சர்வதேசத்திற்கு இங்கு நல்லெண்ணமும் இல்லை நம்பகத்தன்மையும் இல்லை என்பதை மீண்டும் கூற முடிகின்றது.  
  • புலிகள் போர்க்குற்றம் செய்திருந்தால்.. அவர்களை சர்வதேசம் விசாரித்து தண்டிக்கலாம். அதுபோல்.. எவர் போர்க்குற்றம் செய்திருந்தாலும்.. ஹிந்திய அழிப்புப்படை.... மண்டையகுழு மண்டை.. யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் படுகொலை மன்னர்கள்.. மற்றும் சொறீலங்கா இனப்படுகொலையாளிகள்.. போர்க்குற்றவாளிகள்.. நீதியின் பிடியில் இருந்து குறிப்பாக.. சர்வதேச நீதியின் பிடியில் இருந்து தப்பவே கூடாது. முதலில் உந்த ஹிந்திய வால்பிடியை பிடிச்சு சர்வதேசம் தண்டிக்க முன்வர வேண்டும். மன்னிப்பும் மண்ணாங்கட்டியும்.