யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
nunavilan

52 நாள் வரட்சியின் பின்னர் வடக்கில் ஐஸ் மழை

Recommended Posts

52 நாள் வரட்சியின் பின்னர் வடக்கில் ஐஸ் மழை

rainy weather

கடுமையான வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நீர்வேலி உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த ஐஸ் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 52 நாட்களின் பின்னரே இப்பிரதேசத்துக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தொடர்ந்தும் அப்பிரதேசத்துக்கு கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் அபாயம் உள்ளதனால், இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

http://www.dailyceylon.com/180975

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, nunavilan said:

ஆகா, எனது ஊரில் ஐஸ் மழை பெய்துள்ளது!

Share this post

Link to post
Share on other sites

யாழில் 7.1 மில்லி மீற்றர் மழை..

April 17, 2019

raining.jpg?resize=794%2C542

யாழில்.கடந்த சில மாதங்களாக கடும் வெயிலான கால நிலை நிலவி வந்த நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.நகரை அண்டிய புறநகர் பகுதிகளில் மழை வீழ்ச்சி காணப்பட்டது.

கடும் வெப்பத்தால் மக்கள் தவித்து வந்த நிலையில் பலத்த இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. நேற்றைய தினம் 7.1 மில்லி மீற்றர் மழை பெய்த்துள்ளது என வானிலை அவதான நிலையத்தின் யாழ்.பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.

அதேவேளை வடக்கில் இடை நிலை பருவ பெயர்ச்சி ஆரம்பித்துள்ளதாகவும் , அதனால் மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உண்டு. குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மாலை வேளைகளில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ்.பிராந்திய காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழில்.நேற்றைய தினம் பெய்த மழையின் போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/118453/

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, நீர்வேலியான் said:

ஆகா, எனது ஊரில் ஐஸ் மழை பெய்துள்ளது!

தம்பி நீர்வேலி!  ஐஸ் மழை தோட்டக்காரருக்கு கூடாதையா....
பொயிலை எல்லாத்தையும் கிழிச்சுப்போடும்....அதேமாதிரி வாழை இலையையும்....
மரக்கறியளின்ரை பூ குருத்துக்களையெல்லாம் நாசமக்கிப்போடும் ஐயா...

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, குமாரசாமி said:

தம்பி நீர்வேலி!  ஐஸ் மழை தோட்டக்காரருக்கு கூடாதையா....
பொயிலை எல்லாத்தையும் கிழிச்சுப்போடும்....அதேமாதிரி வாழை இலையையும்....
மரக்கறியளின்ரை பூ குருத்துக்களையெல்லாம் நாசமக்கிப்போடும் ஐயா...

அண்ணை,
வருஷத்திலே ஒரு நாள் பெய்யிறதால வாழைக்குலை தப்பிவிடும். நீர்வேலி யாழ்ப்பாணத்திலே ஒரு Switzerland மாதிரி எண்டு சொல்ல வந்தனான்  😎

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை,
வருஷத்திலே ஒரு நாள் பெய்யிறதால வாழைக்குலை தப்பிவிடும். நீர்வேலி யாழ்ப்பாணத்திலே ஒரு Switzerland மாதிரி எண்டு சொல்ல வந்தனான்  😎

அப்படியானால் நீர்வேலி யாழ்பபாணத்தின் பூந்தோட்டம்.  💐 🌹  🌸 

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, குமாரசாமி said:

தம்பி நீர்வேலி!  ஐஸ் மழை தோட்டக்காரருக்கு கூடாதையா....
பொயிலை எல்லாத்தையும் கிழிச்சுப்போடும்....அதேமாதிரி வாழை இலையையும்....
மரக்கறியளின்ரை பூ குருத்துக்களையெல்லாம் நாசமக்கிப்போடும் ஐயா...

கொஞ்சம் இந்தப்ப்பக்கம் திருப்பி விடுங்கள் ஐயா வெக்கையால இருக்க முடியல  கோவணம் தான் சரிவரும் போல இருக்கு 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 4/18/2019 at 6:01 AM, நீர்வேலியான் said:

யாழ்ப்பாணத்திலே ஒரு Switzerland மாதிரி எண்டு சொல்ல வந்தனான்  😎

இனி பெயரை மாற்றி விடுவோம் .....ஐஸ் வேலி என்று.....😀

எங்களுக்கு யாழ்ப்பாணத்து பச்சை பசேள் என்ற நீர்வேலிதான் வேண்டும் ஐஸ்கொட்டும் சுவிஸ் வேண்டாம்

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, putthan said:

இனி பெயரை மாற்றி விடுவோம் .....ஐஸ் வேலி என்று.....😀

எங்களுக்கு யாழ்ப்பாணத்து பச்சை பசேள் என்ற நீர்வேலிதான் வேண்டும் ஐஸ்கொட்டும் சுவிஸ் வேண்டாம்

நன்றி புத்தன். ஆம் நீர்வேலி பச்சை பசேலான இடம்தான். பருத்தித்துறை வீதி பக்கத்தை தாண்டி உள்ளுக்கை போனா, செம்பாட்டு மண்ணும், அடர்ந்து படர்ந்த வாழை தோட்டங்களும், அவற்றுக்கு இடையில் வெங்காயம், மரவள்ளி, தக்காளி, மிளகாய் என்று... அந்த காலம் ஒரு சொர்க்கம்.  வசதிகள் குறைவு, தேவைகள் குறைவு, கட்டுப்பாடுகளோ அதிகம்,  ஆனால் அனுபவித்ததோ அடங்காதவை.  

On 4/18/2019 at 1:45 AM, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் இந்தப்ப்பக்கம் திருப்பி விடுங்கள் ஐயா வெக்கையால இருக்க முடியல  கோவணம் தான் சரிவரும் போல இருக்கு 

கோவணத்தை காட்டிக்கொண்டு இருந்தீங்கள் எண்டால், அதையும் உருவி விட்டுவிடுவாங்கள் (அரசியல்வாதிகள்)🤣

  • Like 3

Share this post

Link to post
Share on other sites

இது ஆலங்கட்டி மழை என்றுதான் நினைக்கின்றேன்.  முன்பும் எப்போதாவது இப்படி மழை பெய்யும்..... பனிப்பொழிவு பஞ்சுபோல் பொழியும்.....!   😄

  • Like 1
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

சடுதியாக ஒரு பிரதேசத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக ஏற்படும் மேற்காவுகை (Convection)காரணமாக பெய்யும் மேற் காவுகை மழையில் ஒரு வகையே இந்த Hagel என்று அழைக்கப்படும் ஆலங்கட்டி மழை. பொதுவாக  வெப்ப நாட்களில் அன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இவ்வாறான மேற்காவுகை மழை பெய்வது வழமை.  

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

Ãhnliches Foto

Ãhnliches Foto

இந்த ஆலங்கட்டி மழை  சில நேரங்களில்... தேசிக்காய் அளவிற்கு, 
கார்களின் மேல் விழுந்து, பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடும்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, நீர்வேலியான் said:

கோவணத்தை காட்டிக்கொண்டு இருந்தீங்கள் எண்டால், அதையும் உருவி விட்டுவிடுவாங்கள் (அரசியல்வாதிகள்)🤣

நீங்க டூ லேட் ஐயா ஆட்கள் பார்ப்பார்கள் என்றதற்க்காக அதை வச்சிருக்கிறம்  ஒரு துண்டு கோவணத்தையெல்லாம் உருவி கனகாலம் ஆச்சுது

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு