Jump to content

கௌரவன்-1


Recommended Posts

கௌரவன் -1 -  ஆனந்த் நீலகண்டன் - (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)இப்போது வாசிப்பில்..

பலவருடங்களிற்கு முன்னர்  ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டாடும் ஒரு விழா ஒன்றில்  கேரள மாநிலத்தின்  பொருவழி கிராமத்திலுள்ள மலைநடைக்கோவிலில் பார்த்ததாகவும் அவ்விழா  இதிகாசத்தில் மிகக்கெட்டவனாக சித்தரிக்கப்பட்ட துரியோதனனிற்காக கொண்டாடப்படும் விழா  எனவும் பெரும்பாலோரினால் கெட்டவனாக சித்தரிக்கப்படும் ஒருவனிற்கு விழா கொண்டாடும் அளவிற்கு அவன் அந்த கிராம மக்களிற்கு செய்தது என்ன என ஆராயும் போது ..அந்த கிராமத்தின் வரலாறு மகாபாரத காலத்தோடு தொடர்பு பட்டதாக காணப்பட்டதாகவும் கூறுகிறார் 

மகாபாரதத்தில் நாடு கடத்தப்பட்டிருந்த பாண்டவர்களை தேடி துரியோதனன் இக்கிராமத்திற்கு வந்ததாகவும் ..தாகத்தினால் தவிர்த் அவனிற்கு அங்கிருந்த மூதாட்டி தன்னிடமிருந்த கள்ளை கொடுத்ததாகவும்

அவனை ஒரு சத்திரிய வீரன் என்பதை அறிந்த மூதாட்டி குறைந்த சாதியான தன்னிடமிருந்து  கள்ளை பருகியதால் அவன் சாதி இழப்பிற்கு உள்ளாக்கப்படக்கூடும்,உண்மையை அவனிடம் கூறினால் அவன் தன்னை கொன்றுவிடுவான் என்ன ஆயினும் உண்மை கூறுவதே நன்று என உண்மையை கூறி அவனிடம் தண்டனையை எதிர்பார்த்தது நின்றார். அதற்கு துரியோதனன் "தாயே பசிக்கும் தாகத்திற்கும் சாதி எதுவும் கிடையாது" உனக்கிருந்த ஆபத்தை பார்க்காமல் தவித்து வந்தவனின்  தாகத்தை தீர்த்தாய் உண்மையிலேயே  நீ ஆசிர்வதிக்கப்பட்டவள் என கூறினான் , வழிபாடு சிலை எதும் இல்லாத ஒரு கோயிலை கட்டி எழுப்புவதற்காக சுற்றயல் கிராமங்களை 
அவளிற்கும் அவளுடைய சமூகத்திற்கும் அளிப்பதாக கூறி அதற்கு அந்த பெண்ணின் வம்சாவளியினரே பூசகராக இருக்கவேண்டும் எனவும் அறிவித்தான்,இங்க எந்த தெய்வசிலைகளும் இல்லை மாறாக துரியோதனனின் சிலை தான் கொலுவீற்றிருக்கிறது..அதனுடன் அவனின் மனைவி பானுமதி ,கரணன்,காந்தாரி ஆகியோரின் சிலைகளும் உண்டு 

அத்தினாபுரத்திலிருந்து3000 கிமீ தொலைவில் உள்ள கிராமத்திற்கு ஏன் வரணும் ஏன் அந்த மக்களால் இன்றுவரை கொண்டாடப்படனும்
 தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை விட்டு கொடாமல் நின்றவன் , தன் நண்பர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் ,திரௌபதி மீதான செய்கையை எங்குமே அவன் நியாயபடுத்தவில்லை ,தனது செய்கைகளிற்கு தெய்வீகம் தர்மம் என முக்காடிட்டு கொள்ளவில்லை இவ்வாறான தன்மைகளே அவனை எதிர்நாயகன் எனும் இடத்திலிருந்து கதாநாயகன் எனும் நிலைக்கு இட்டு சென்றதாக தனது முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார் 
துரியோதனன் நாயகன் ஆக்கப்படும் பொழுது பாண்டவர்கள் வில்லன்களாக ஆக்கப்படுவது இயல்பானதே.. ஏற்றுகொள்வதும் கொள்ளாததும் வாசகர் கைகளில்.. தோற்றுபோனவனின் பார்வையில் எழுந்துள்ள இன்னுமொரு நாவல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.