Jump to content

சிங்கங்கள் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை என்று ஒன்றில்லை….

 அண்மையில் வயதில் குறைந்த உறவினரொருவர் அவரது 3 பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்திருந்தார். (முதல் தடவையாக 15 ஆண்டுகளின் பின்னர்) மூவரும் 3  விதமான கெட்டித்தனம் நிறைந்தவர்களாக இருந்தனர். இரண்டாவது பையன் ஒரு 8  அல்லது 9  வயது இருக்கும். சற்று நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு அப்பால் போனவன் ஒரு 15  நிமிடங்களில் திரும்பி வந்து இதைப் பாருங்கோ அங்கிள் என்று ஒரு தாளை நீட்டினான். அச்சு இயந்திரத்தில் பதிப்பித்தது மாதிரி மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய Lion King படம்,  பென்சிலாலேயே வெவ்வேறு வகையான shades filling  உடன் அவன் அந்த 15 நிமிடத்தில் வரைந்தது- என்னால் நம்ப முடியவில்லை .

அவனைப் பற்றி பெற்றோர் சொன்னது இது தான் .அவனுக்கு வாய் பேச்சு வர மிகுந்த தாமதம் ஆகியதாம்.  உண்மையில் அவனின் இளைய சகோதரி பிறந்து பேசத் தொடங்கி தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டுத் தான் இவனே பேசத் தொடங்கினானாம்.

பெற்றோர் வைத்திய நிபுணர்களிடம் காட்டிய போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொன்னார்களாம். ஒரு நிபுணர் சொன்னாராம்,  பையன் வயதுக்கு மீறிய தோற்றமாக இருக்கிறான் , ஆட்டிசம் ( autism)  ஆக இருக்கக்கூடும் என்று. தயார் கேட்டாராம்காது நன்கு கேட்கின்றது,  கதை வரவில்லை என்று இங்கே வந்தால் உடம்பு வளர்ச்சி, ஆட்டிசம் என்று என்னவோ சொல்கிறீர்களே , உடம்பு வளர்ச்சிக்கும் , கதை வராததிற்கும் ஆட்டிசம் இற்கும்  ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா”  என்று. நிபுணர் தடுமாறிப் போய் விட்டாராம்.

இன்று அந்தப் பையன் மிக நன்றாக கதைத்து , மிக்கத் திறமையாகப் பாடி நன்றாகத் தான் இருக்கிறான். நிபுணர் சொன்ன மாதிரி ஆட்டிசம் என்று போயிருந்தால் என்ன மாதிரிப் போயிருக்குமோ சொல்லத் தெரியவில்லை.  அந்த பெற்றோரின் Parenting  இற்கு தலை வணக்க்குகிறேன் , வயதில் மிக இளையவர்களாக இருந்த போதிலும.

அது போக , இதனைப் பற்றி நான் இங்கே பதிவிட வந்ததின் நோக்கமே வேறு .  

அந்தப் பையன் சில வேளைகளில் தன்னுள்ளே அமிழ்ந்து போய் ஒரு வகையான உரையாடல்களுடன் கூடிய செயல்முறைகளில் ஈடுபடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்குமாம்.  அதன் பின்னர் அவனிடம் என்ன விடயம் என்று கேட்டால், நவரசங்களுடன்  கூடிய கோர்வையான கதை ஒன்றுடன் வருவானாம். உதாரணமாக Lion King   சந்தித்து அதனுடன் மலை உச்சிச்சிக்கு போய் இருவருமாக அவ்வழியே வந்த பெரும் பறவை ஒன்றில் ஏறிப்போய் சிறைப்பட்டிருக்கும் பாட்டியை சண்டை செய்து விடுவித்து வரும் வழியில் ஒரு 18 ஹோல் Golf  லைன் கிங் உடன் கூட விளையாடிய கதையை சுவாரஸ்யமாகச் சொல்வானாம்.

ஒருவர் உணர்வது எதுவுமே கற்பனை அல்ல,  இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே சாத்தியமான விடயங்களே.

 எதுவொன்றைப்  பற்றியும் ஒருவர் சிந்தித்த கணத்திலேயே  அது உண்மையாக , நடைமுறைச் சாத்தியமாக மாறி விடுகிறது , ஒன்றில் அது முன்னர் எப்போதாவது நடந்திருக்கலாம் , அல்லது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் எஞ்சியதாக  எதிர்காலத்து நேரத்துளி ஒன்றில் அது நடை பெறப் போவதாக இருக்கக் கூடும்.

நடந்து கொண்டிருக்கும் இந்த இதே நேரத்துளியில்,  முழுப் பிரபஞ்சத்திலும் நடந்து கொண்டிருக்கும் சகல விடயங்களும் அப்படியே அதே நேரத்துளியில் உறைந்து போய் எப்போதுமே சாஸ்வதமாக இருக்கும்  என்று ஒரு கருதுகோள் உண்டு. அந்த நேரத்துளிக்கு திரும்பவும் சென்று அதனை மீண்டும் அனுபவிப்பது சாத்தியமே என்கிறது அறிவியல்.

 இந்தப் பையனும் அந்த லைன் கிங் உடன் முன்னர் எப்பவாவது Friend ஆக இருந்திருப்பானோ?

ஏதோ ஒரு நேரத் துளியில் சிங்கங்களும் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ ??

 கற்பனை என்று ஒன்றில்லை ………..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்...... எம்மால் உணரமுடியாத பலவிதமான அமானுஷ்யங்களுடன்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.சிலவற்றை  அறிவால் அவிழ்த்து விடுகின்றோம்,பல இன்னும் புதிர்களாக தொடர்கின்றன......நல்ல பதிவு சாமானியன் ....!   😁

Link to comment
Share on other sites

5 hours ago, சாமானியன் said:

கற்பனை என்று ஒன்றில்லை….

 கற்பனை என்று ஒன்றில்லை ………..

எதுவுமே இல்லை என்பதுவும் எல்லாமே இருக்கின்றது என்பதுவும் ஒன்றே. சூனியமும் பூரணமும் ஒன்று. கேட்பதற்கு அந்நியமாய்த் தோன்றினும் சற்றுச் சிந்திக்கையில் இது மிகச்சுலபமானதாய்த் தோன்றும். அனைத்துமான ஒன்று, ஒன்றுமில்லாததைப் போன்று தான் தன்னை உணர முடியும். 

ஒரு சிறு உதாரணம். ஒரு ஒலியினை நாம் கேட்கவேண்டுமாயின், கேட்பவர், அதிர்வது, அதிர்வைக் கடத்தும் காற்றுவெளி என்ற மூன்று இருந்தால் மட்டுமே சாத்தியம். பூரணமான ஒன்று என்று ஒன்று இருந்தால், அங்கு கேட்பவர் மற்றும் கேட்கப்படுவது என்ற பிரிவு சாத்தியமில்லை. ஏனெனில் கேட்கப்படுவது என்பது கேட்பவரிற்குப் புறம்பான ஒன்றாக இருப்பின், கேட்பவர் பூரணமானதாய் இருக்க முடியாது. பூரணம் என்பது தனக்கு அப்பால் ஏதும் இல்லை என்பது. அப்படிப் பார்க்கையில், பூரணத்துவத்தில் அமைதி (silence) மட்டுமே சாத்தியம். அமைதி, சூனியம் என்று தப்பாகப் புரிந்துகொள்ளப்படக்கூடியது. 

சூனியம் என்று ஒன்று இருக்கவேண்டுமாயின் அங்கு சூனியம் கூட இருக்க முடியாது. ஏனெனில் சூனியம் என்பது இருப்பின் அங்கு இருத்தல் வந்து விடுகிறது. சூனியம் சாத்தியப்படவேண்டுமாயின் ஏதுமே இருக்கக் கூடாது. ஆனால் இருத்தல் இல்லாத இருப்புச் சாத்தியமில்லை. ஆதலால் சூனியம் சாத்தியமில்லை. பூரணம் மட்டுமே சாத்தியம். ஆனால், பூரணத்தில் பூரணம் சூனியமாகவே உணரப்படும்.

அந்தவகையில் கற்பனை என்று எதுவும் இல்லை என்ற உங்கள் கருத்தினை கற்பனை மட்டுமே இருக்கிறது என்று தான் கொள்ள வேண்டும்.

----------------------
Quantum Physics என்பது இன்று பலராலும் பலசரக்குச் சாமான் போன்று உபயோகிக்கப்படுகிறது. செவ்விலக்கியங்களை வெறும் 140 எழுத்துக்குள் சுருக்கி ருவிற்றரில் வாசித்து வளரும் சந்ததிக்குள் இது இப்படி இருப்பதில் எந்த விந்தையும் இல்லை. ஆனால் Quantum Physics போன்ற கடினமான துறைகளிற்குள் கட்டமைப்புக்கள் வாயிலாகச் செல்லாது, தனித்திருந்து அடிப்படைகளைத் தரிசிக்கையில் அனைத்து உண்மைகளும் கைப்படும். எது ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ என்று ஒன்று உண்டு. இன்னமும் சொன்னால் அது மட்டுமே உண்டு.

ஒரு சித்திரத்தை வரையவேண்டுமாயின், சித்திரம் கான்வசில் வருவதற்கு முன்னர் அதன் essense(அறிவு) மனத்தில் வந்துவிடும். எசென்ஸ் எப்போதும் existenceற்கு முந்தியது. இதனை இதற்கு முந்திய பந்தியோடு சேர்த்துப் பார்க்கையில் உலகில் அறிவு மட்டுமே இருக்கிறது.

ஒரு உதாரணம். இப்போ நீங்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த கணனித்திரை இருக்கிறது. அதனை நீங்கள் அறிகிறீர்கள். அறிவது நீங்கள் என்று நீங்கள் ஒரு நிலையில் கருதினும், கணினித் திரை இது என்ற அறிவே இதனை அறிகிறது. ஓன்றும் ஒன்றும் இரண்டு என்ற ஒரு கடதாசியில் எழுதியிருப்பின் பார்த்த மாத்திரத்தில் அது நமக்குப் புரிகிறது. ஆனால் இரண்டு என்றால் என்ன என்ற அறிவே அந்தப் புரிதலிற்கு அடிப்படை.

ஆனால், அறிபவன், அறியப்படுவது மற்றும் அறிவு என்ற மூன்று பிரிவுகள் இருக்கையில் மட்டும் தான் உலகு சாத்தியப்படுகிறது. அறிபவனையும் அறியப்படுவதையும் அகற்றி அறிவை மட்டும் எடுத்து அந்தரத்தில் தொங்கவிட்டால் அங்கு அமைதி மட்டுமே சாத்தியப்படும். அறிபவர், ஒரு விடயத்தை அறிகையில் அவர் அறிவாகவே இருக்கிறார். அனுபவம் அனுபவிப்பவரிலிருந்து பிறிதல்ல. ஆனால் இவற்றைத் தனித்தனியாக உணர்கையில் மட்டுமேத இந்தக் கற்பனை உலகு பிறக்கிறது.

"ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க" என்ற வரியில் வருகின்ற ஏகனும் அனேகனும் மேற்படியே விரிகின்றன. உபநிடதங்கள் இதையே பேசுகின்றன. இந்த ஒருமையே முத்தியென்று தேடப்படுகிறது.

ஏதுமற்ற நிலையில் இருந்து உலகம் தோன்றியது என்பது வரை இன்று அறிவியல் ஏற்றுக்கொள்ளத் தலைப்படுகிறது. அறிவியலைத் தாண்டி அறிவாகவே தன்னை உணர்கையில் அமைதியில் பூரணம் உணரப்படும்.

உலகம் கற்பனை மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Innumoruvan said:

எதுவுமே இல்லை என்பதுவும் எல்லாமே இருக்கின்றது என்பதுவும் ஒன்றே. சூனியமும் பூரணமும் ஒன்று. கேட்பதற்கு அந்நியமாய்த் தோன்றினும் சற்றுச் சிந்திக்கையில் இது மிகச்சுலபமானதாய்த் தோன்றும். அனைத்துமான ஒன்று, ஒன்றுமில்லாததைப் போன்று தான் தன்னை உணர முடியும். 

உலகம் கற்பனை மட்டுமே.

இன்னொருவன்,

 உண்டு இல்லை என்பதை ஒரு மிக மிக மெல்லிய தடையொன்றே பிரிக்கின்றது. இந்தப் பக்கம் பார்த்தால் உண்டு;  எதிர்ப்பக்கத்தில் இருந்து  பார்த்தால் இல்லை.

 எப்போது ஒன்று இல்லை /உண்டு என்றாகின்றதோ அப்போதே  அது உண்டு/இல்லை என்றாகி விடுகின்றது என்ற கருதுகோள் புரிந்துகொள்ளக்கூடியதே .

 அண்மைக்காலமாக கருந்துளை பற்றி பல பதிவுகள் இடம்பெற்று வருகின்றன அவரவர் தமக்குப் புரிந்த வகையில் இந்த புரியாத விடயத்தை கையாள்வது நன்றாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றது.

பல பரிமாணங்களில் இருக்கும் சகலமுமுமே ஒரு கருங்குழியினுள் உள்வாங்கப்பட்டு பரிமாணம் கெட்டு  ஒற்றை பாரிமாணமாகி  (  இந்த ஒற்றைப் பரிமாணம் பல பில்லியன் மைல்களாக  இருக்கக் கூடும் என்கின்றனர் ) , ஈற்றில் ஒரே புள்ளி ஆகின்றது என்கின்றனர்.

இங்கு ஒன்றுமே இல்லாமல் போகின்றது.  

இந்த ஒற்றைப் புள்ளி அப்படியே  இருக்க வாய்ப்பில்லை.

 அது வெடித்து சிதறி மீண்டும் பரிமாணங்களை எடுக்கத் தொடங்கும் . மீண்டும் ஒற்றைப்  பரிமாணம் பன் பரிமாணம் அண்ட விரிவு என்று

இங்கு  எல்லாமுமே இருக்கின்றது

நாங்கள் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் பகுதி அப்படிப்பட்ட விரிவொன்றின் மிக மிக மிக சிறிய பகுதியே.

அடிப்படை ஒன்றே;  வடிவங்கள் மாறுபடுகின்றதேயன்றி வேறொன்றுமில்லை. (எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை ! ஊழிக்  கூத்தில் சிவனுடன் சேர்ந்து தாண்டவமாடி யாராவது உணர்ந்திருக்கிறீர்களா)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.