• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
சாமானியன்

சிங்கங்கள் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ

Recommended Posts

கற்பனை என்று ஒன்றில்லை….

 அண்மையில் வயதில் குறைந்த உறவினரொருவர் அவரது 3 பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்திருந்தார். (முதல் தடவையாக 15 ஆண்டுகளின் பின்னர்) மூவரும் 3  விதமான கெட்டித்தனம் நிறைந்தவர்களாக இருந்தனர். இரண்டாவது பையன் ஒரு 8  அல்லது 9  வயது இருக்கும். சற்று நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு அப்பால் போனவன் ஒரு 15  நிமிடங்களில் திரும்பி வந்து இதைப் பாருங்கோ அங்கிள் என்று ஒரு தாளை நீட்டினான். அச்சு இயந்திரத்தில் பதிப்பித்தது மாதிரி மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய Lion King படம்,  பென்சிலாலேயே வெவ்வேறு வகையான shades filling  உடன் அவன் அந்த 15 நிமிடத்தில் வரைந்தது- என்னால் நம்ப முடியவில்லை .

அவனைப் பற்றி பெற்றோர் சொன்னது இது தான் .அவனுக்கு வாய் பேச்சு வர மிகுந்த தாமதம் ஆகியதாம்.  உண்மையில் அவனின் இளைய சகோதரி பிறந்து பேசத் தொடங்கி தங்கையின் பேச்சைக் கேட்டு விட்டுத் தான் இவனே பேசத் தொடங்கினானாம்.

பெற்றோர் வைத்திய நிபுணர்களிடம் காட்டிய போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொன்னார்களாம். ஒரு நிபுணர் சொன்னாராம்,  பையன் வயதுக்கு மீறிய தோற்றமாக இருக்கிறான் , ஆட்டிசம் ( autism)  ஆக இருக்கக்கூடும் என்று. தயார் கேட்டாராம்காது நன்கு கேட்கின்றது,  கதை வரவில்லை என்று இங்கே வந்தால் உடம்பு வளர்ச்சி, ஆட்டிசம் என்று என்னவோ சொல்கிறீர்களே , உடம்பு வளர்ச்சிக்கும் , கதை வராததிற்கும் ஆட்டிசம் இற்கும்  ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா”  என்று. நிபுணர் தடுமாறிப் போய் விட்டாராம்.

இன்று அந்தப் பையன் மிக நன்றாக கதைத்து , மிக்கத் திறமையாகப் பாடி நன்றாகத் தான் இருக்கிறான். நிபுணர் சொன்ன மாதிரி ஆட்டிசம் என்று போயிருந்தால் என்ன மாதிரிப் போயிருக்குமோ சொல்லத் தெரியவில்லை.  அந்த பெற்றோரின் Parenting  இற்கு தலை வணக்க்குகிறேன் , வயதில் மிக இளையவர்களாக இருந்த போதிலும.

அது போக , இதனைப் பற்றி நான் இங்கே பதிவிட வந்ததின் நோக்கமே வேறு .  

அந்தப் பையன் சில வேளைகளில் தன்னுள்ளே அமிழ்ந்து போய் ஒரு வகையான உரையாடல்களுடன் கூடிய செயல்முறைகளில் ஈடுபடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்குமாம்.  அதன் பின்னர் அவனிடம் என்ன விடயம் என்று கேட்டால், நவரசங்களுடன்  கூடிய கோர்வையான கதை ஒன்றுடன் வருவானாம். உதாரணமாக Lion King   சந்தித்து அதனுடன் மலை உச்சிச்சிக்கு போய் இருவருமாக அவ்வழியே வந்த பெரும் பறவை ஒன்றில் ஏறிப்போய் சிறைப்பட்டிருக்கும் பாட்டியை சண்டை செய்து விடுவித்து வரும் வழியில் ஒரு 18 ஹோல் Golf  லைன் கிங் உடன் கூட விளையாடிய கதையை சுவாரஸ்யமாகச் சொல்வானாம்.

ஒருவர் உணர்வது எதுவுமே கற்பனை அல்ல,  இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே சாத்தியமான விடயங்களே.

 எதுவொன்றைப்  பற்றியும் ஒருவர் சிந்தித்த கணத்திலேயே  அது உண்மையாக , நடைமுறைச் சாத்தியமாக மாறி விடுகிறது , ஒன்றில் அது முன்னர் எப்போதாவது நடந்திருக்கலாம் , அல்லது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் எஞ்சியதாக  எதிர்காலத்து நேரத்துளி ஒன்றில் அது நடை பெறப் போவதாக இருக்கக் கூடும்.

நடந்து கொண்டிருக்கும் இந்த இதே நேரத்துளியில்,  முழுப் பிரபஞ்சத்திலும் நடந்து கொண்டிருக்கும் சகல விடயங்களும் அப்படியே அதே நேரத்துளியில் உறைந்து போய் எப்போதுமே சாஸ்வதமாக இருக்கும்  என்று ஒரு கருதுகோள் உண்டு. அந்த நேரத்துளிக்கு திரும்பவும் சென்று அதனை மீண்டும் அனுபவிப்பது சாத்தியமே என்கிறது அறிவியல்.

 இந்தப் பையனும் அந்த லைன் கிங் உடன் முன்னர் எப்பவாவது Friend ஆக இருந்திருப்பானோ?

ஏதோ ஒரு நேரத் துளியில் சிங்கங்களும் கோல்ப் விளையாடியிருக்கக் கூடுமோ ??

 கற்பனை என்று ஒன்றில்லை ………..

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

உண்மைதான்...... எம்மால் உணரமுடியாத பலவிதமான அமானுஷ்யங்களுடன்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.சிலவற்றை  அறிவால் அவிழ்த்து விடுகின்றோம்,பல இன்னும் புதிர்களாக தொடர்கின்றன......நல்ல பதிவு சாமானியன் ....!   😁

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, சாமானியன் said:

கற்பனை என்று ஒன்றில்லை….

 கற்பனை என்று ஒன்றில்லை ………..

எதுவுமே இல்லை என்பதுவும் எல்லாமே இருக்கின்றது என்பதுவும் ஒன்றே. சூனியமும் பூரணமும் ஒன்று. கேட்பதற்கு அந்நியமாய்த் தோன்றினும் சற்றுச் சிந்திக்கையில் இது மிகச்சுலபமானதாய்த் தோன்றும். அனைத்துமான ஒன்று, ஒன்றுமில்லாததைப் போன்று தான் தன்னை உணர முடியும். 

ஒரு சிறு உதாரணம். ஒரு ஒலியினை நாம் கேட்கவேண்டுமாயின், கேட்பவர், அதிர்வது, அதிர்வைக் கடத்தும் காற்றுவெளி என்ற மூன்று இருந்தால் மட்டுமே சாத்தியம். பூரணமான ஒன்று என்று ஒன்று இருந்தால், அங்கு கேட்பவர் மற்றும் கேட்கப்படுவது என்ற பிரிவு சாத்தியமில்லை. ஏனெனில் கேட்கப்படுவது என்பது கேட்பவரிற்குப் புறம்பான ஒன்றாக இருப்பின், கேட்பவர் பூரணமானதாய் இருக்க முடியாது. பூரணம் என்பது தனக்கு அப்பால் ஏதும் இல்லை என்பது. அப்படிப் பார்க்கையில், பூரணத்துவத்தில் அமைதி (silence) மட்டுமே சாத்தியம். அமைதி, சூனியம் என்று தப்பாகப் புரிந்துகொள்ளப்படக்கூடியது. 

சூனியம் என்று ஒன்று இருக்கவேண்டுமாயின் அங்கு சூனியம் கூட இருக்க முடியாது. ஏனெனில் சூனியம் என்பது இருப்பின் அங்கு இருத்தல் வந்து விடுகிறது. சூனியம் சாத்தியப்படவேண்டுமாயின் ஏதுமே இருக்கக் கூடாது. ஆனால் இருத்தல் இல்லாத இருப்புச் சாத்தியமில்லை. ஆதலால் சூனியம் சாத்தியமில்லை. பூரணம் மட்டுமே சாத்தியம். ஆனால், பூரணத்தில் பூரணம் சூனியமாகவே உணரப்படும்.

அந்தவகையில் கற்பனை என்று எதுவும் இல்லை என்ற உங்கள் கருத்தினை கற்பனை மட்டுமே இருக்கிறது என்று தான் கொள்ள வேண்டும்.

----------------------
Quantum Physics என்பது இன்று பலராலும் பலசரக்குச் சாமான் போன்று உபயோகிக்கப்படுகிறது. செவ்விலக்கியங்களை வெறும் 140 எழுத்துக்குள் சுருக்கி ருவிற்றரில் வாசித்து வளரும் சந்ததிக்குள் இது இப்படி இருப்பதில் எந்த விந்தையும் இல்லை. ஆனால் Quantum Physics போன்ற கடினமான துறைகளிற்குள் கட்டமைப்புக்கள் வாயிலாகச் செல்லாது, தனித்திருந்து அடிப்படைகளைத் தரிசிக்கையில் அனைத்து உண்மைகளும் கைப்படும். எது ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ என்று ஒன்று உண்டு. இன்னமும் சொன்னால் அது மட்டுமே உண்டு.

ஒரு சித்திரத்தை வரையவேண்டுமாயின், சித்திரம் கான்வசில் வருவதற்கு முன்னர் அதன் essense(அறிவு) மனத்தில் வந்துவிடும். எசென்ஸ் எப்போதும் existenceற்கு முந்தியது. இதனை இதற்கு முந்திய பந்தியோடு சேர்த்துப் பார்க்கையில் உலகில் அறிவு மட்டுமே இருக்கிறது.

ஒரு உதாரணம். இப்போ நீங்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த கணனித்திரை இருக்கிறது. அதனை நீங்கள் அறிகிறீர்கள். அறிவது நீங்கள் என்று நீங்கள் ஒரு நிலையில் கருதினும், கணினித் திரை இது என்ற அறிவே இதனை அறிகிறது. ஓன்றும் ஒன்றும் இரண்டு என்ற ஒரு கடதாசியில் எழுதியிருப்பின் பார்த்த மாத்திரத்தில் அது நமக்குப் புரிகிறது. ஆனால் இரண்டு என்றால் என்ன என்ற அறிவே அந்தப் புரிதலிற்கு அடிப்படை.

ஆனால், அறிபவன், அறியப்படுவது மற்றும் அறிவு என்ற மூன்று பிரிவுகள் இருக்கையில் மட்டும் தான் உலகு சாத்தியப்படுகிறது. அறிபவனையும் அறியப்படுவதையும் அகற்றி அறிவை மட்டும் எடுத்து அந்தரத்தில் தொங்கவிட்டால் அங்கு அமைதி மட்டுமே சாத்தியப்படும். அறிபவர், ஒரு விடயத்தை அறிகையில் அவர் அறிவாகவே இருக்கிறார். அனுபவம் அனுபவிப்பவரிலிருந்து பிறிதல்ல. ஆனால் இவற்றைத் தனித்தனியாக உணர்கையில் மட்டுமேத இந்தக் கற்பனை உலகு பிறக்கிறது.

"ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க" என்ற வரியில் வருகின்ற ஏகனும் அனேகனும் மேற்படியே விரிகின்றன. உபநிடதங்கள் இதையே பேசுகின்றன. இந்த ஒருமையே முத்தியென்று தேடப்படுகிறது.

ஏதுமற்ற நிலையில் இருந்து உலகம் தோன்றியது என்பது வரை இன்று அறிவியல் ஏற்றுக்கொள்ளத் தலைப்படுகிறது. அறிவியலைத் தாண்டி அறிவாகவே தன்னை உணர்கையில் அமைதியில் பூரணம் உணரப்படும்.

உலகம் கற்பனை மட்டுமே.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நன்றி சாமானியன், நன்றி இன்னுமொருவன்.

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, Innumoruvan said:

எதுவுமே இல்லை என்பதுவும் எல்லாமே இருக்கின்றது என்பதுவும் ஒன்றே. சூனியமும் பூரணமும் ஒன்று. கேட்பதற்கு அந்நியமாய்த் தோன்றினும் சற்றுச் சிந்திக்கையில் இது மிகச்சுலபமானதாய்த் தோன்றும். அனைத்துமான ஒன்று, ஒன்றுமில்லாததைப் போன்று தான் தன்னை உணர முடியும். 

உலகம் கற்பனை மட்டுமே.

இன்னொருவன்,

 உண்டு இல்லை என்பதை ஒரு மிக மிக மெல்லிய தடையொன்றே பிரிக்கின்றது. இந்தப் பக்கம் பார்த்தால் உண்டு;  எதிர்ப்பக்கத்தில் இருந்து  பார்த்தால் இல்லை.

 எப்போது ஒன்று இல்லை /உண்டு என்றாகின்றதோ அப்போதே  அது உண்டு/இல்லை என்றாகி விடுகின்றது என்ற கருதுகோள் புரிந்துகொள்ளக்கூடியதே .

 அண்மைக்காலமாக கருந்துளை பற்றி பல பதிவுகள் இடம்பெற்று வருகின்றன அவரவர் தமக்குப் புரிந்த வகையில் இந்த புரியாத விடயத்தை கையாள்வது நன்றாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றது.

பல பரிமாணங்களில் இருக்கும் சகலமுமுமே ஒரு கருங்குழியினுள் உள்வாங்கப்பட்டு பரிமாணம் கெட்டு  ஒற்றை பாரிமாணமாகி  (  இந்த ஒற்றைப் பரிமாணம் பல பில்லியன் மைல்களாக  இருக்கக் கூடும் என்கின்றனர் ) , ஈற்றில் ஒரே புள்ளி ஆகின்றது என்கின்றனர்.

இங்கு ஒன்றுமே இல்லாமல் போகின்றது.  

இந்த ஒற்றைப் புள்ளி அப்படியே  இருக்க வாய்ப்பில்லை.

 அது வெடித்து சிதறி மீண்டும் பரிமாணங்களை எடுக்கத் தொடங்கும் . மீண்டும் ஒற்றைப்  பரிமாணம் பன் பரிமாணம் அண்ட விரிவு என்று

இங்கு  எல்லாமுமே இருக்கின்றது

நாங்கள் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் பகுதி அப்படிப்பட்ட விரிவொன்றின் மிக மிக மிக சிறிய பகுதியே.

அடிப்படை ஒன்றே;  வடிவங்கள் மாறுபடுகின்றதேயன்றி வேறொன்றுமில்லை. (எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை ! ஊழிக்  கூத்தில் சிவனுடன் சேர்ந்து தாண்டவமாடி யாராவது உணர்ந்திருக்கிறீர்களா)

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • “வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.  அதில் அவர் பேசி இருப்பதாவது: “சென்னை தன்னை பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதையிது. தடைகள் ஆயிரம் தகர்த்தவன். படைகள் ஆயிரம் பார்த்தவன். பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன். பேரலையும் கண்டவன். பேரிடரையும் கண்டவன். பெயர் மாறி உருமாறி வலுவானவன். எது வந்த போதிலும் நிறம் மாறாதவன். வந்தவர் எத்தனை? போனவர் எத்தனை? கண்டது எத்தனை? கொண்டது எத்தனை? என் பலம் எனதல்ல.      என்னில் இரண்டற கலந்து வாழும் என் மக்களே என் பலம். நீரால், நெருப்பால், நிலத்தால் காற்றால் எவ்வழி இடர் வரினும் தளர் வரினும் என் கரம் இறுக பற்றும் என் மக்களே என் பலம். என் மக்கள் மனதில் தன்னம்பிக்கையும் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலோடு.. இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு தோள் கொடுப்பர். வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன். நான் சென்னை, என்னை வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன் நான் சென்னை.” இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.   https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/07/08123031/1682438/parthiban-says-about-chennai.vpf
  • சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- சிபிஐ வழக்குப் பதிவு சென்னை: சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.   சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 10 பேரை கைது செய்தது. இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி. ஒப்படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. குழு சாத்தான்குளம் செல்கிறது.    https://www.maalaimalar.com/news/topnews/2020/07/08134525/1682464/CBI-Case-Filed-Sathankulam-Custodial-Deaths.vpf
  • ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் - ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 71-வது பிறந்ததினம் இன்று. இந்தாண்டு முதல் இந்நாள் விவசாயிகள் தினமாகக் கடைபிடிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில், மக்களுக்கு சிகிச்சையளிக்க, 79 மருந்துகள், 29 நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒரு மினி தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன் 1088 ஆம்புலன்ஸ்களை ஆந்திர மக்களுக்காக அளித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. ஒட்டு மொத்த ஆந்திரா முழுவதுமுள்ள 13 மாவட்டங்களில் இந்த ஆம்புலன்ஸ் வசதிகள் செயல்படுத்தப்படும் என்றும் கிராமங்களில் அழைத்த இருபது நிமிடங்களிலும் நகரப் பகுதிகளில் அழைத்த 15 நிமிடத்திலும் இந்த ஆம்புலன்ஸ் வந்தடையும் என்றும் அப்போது அறிவித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. இதுபோன்ற அதிரடியான மற்றும் மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களால் ஆந்திர மக்களின் மனங்களில் தனி இடம் பிடித்திருக்கிறார் ஜெகன். ஜெகனின் இந்த அதிரடிகளுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் அடிப்படை மக்களுடனான அவரின் நேரடியான சந்திப்புகளும், மக்களின் தேவையறிந்து அதற்காக உடனடியாக செயல்படும் குணமே. இந்த இரண்டு விஷயங்களையும் அவர் கற்றது, அவரின் தந்தை யும் ஆந்திர முன்னாள் முதல்வருமான மறைந்த ராஜசேகர ரெட்டியிடமிருந்துதான். ஒரு ரூபாய் மருத்துவராக, தன் சொந்த ஊரில் பொது வாழ்வைத் தொடங்கி, ஆந்திராவின் தனிப்பெரும் தலைவனாக உருவெடுத்தது வரை அவர் கடந்து வந்த பாதையைப் பற்றிய சிறு குறிப்பே இந்தக் கட்டுரை.   ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரமாநிலம், புலிவெந்துலா மாவட்டத்தில், 1949-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி, ஒய்.எஸ்.ராஜா ரெட்டி, ஜெயம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் எடுகூரி சந்தின்டி ராஜசேகர ரெட்டி . 1958-ல் ராஜா ரெட்டி ஒப்பந்தத் தொழில் நிமித்தமாக கர்நாடகா மாநிலம் பெல்லாரி செல்ல, அங்கேதான் தன் பள்ளிப்படிப்பையும் மருத்துவப் படிப்பையும் முடித்தார் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.   சிறுவயதில் இருந்தே அரசியல் தலைவனாக உருவெடுக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அப்படி அவரின், அரசியல் பயணமானது அவரது மருத்துவக் கல்லூரி வாழ்க்கையில் இருந்தே தொடங்கிவிட்டது எனலாம். கர்நாடக மாநிலம் குல்பர்கா பல்கலைக்கழகத்தில் உள்ள எம். ஆர். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும்போதே மாணவர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ராஜசேகர் ரெட்டி. தொடர்ந்து, ஆந்திராவுக்குத் திரும்பி, திருப்பதி எஸ். வி. மருத்துவக் கல்லூரியில் ஒரு வருடம் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றினார். அப்போதும் தனது தலைமைத்துவப் பண்பால் பயிற்சி மருத்துவர்கள் சங்கத் தலைவராகச் செயல்பட்டார் மருத்துவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.   மருத்துவர் பிறகு தன் சொந்த மாவட்டமான கடப்பாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவ அலுவலராகப் பணியாற்றிய வந்தார் ராஜசேகர் ரெட்டி. பிறகு மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்து, 1973-ம் ஆண்டு, தன் தந்தை பெயரில், 70 படுக்கைகளுடன் புலிவெந்துலாவில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கி, ஒரு ரூபாய்க்கு ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். அந்தப் பகுதி மக்களால் `ஒரு ரூபாய் டாக்டர்', `ஏழைகளின் மருத்துவர்' என அன்போடு அழைக்கப்பட்டார் ஒய்.எஸ்.ராஜசேஜர ரெட்டி. தன்னுடைய சேவை மனப்பான்மையால், குறுகிய காலத்திலேயே அந்தப் பகுதி மக்கள் மனதில் இடம் பிடித்த ராஜசேகர் ரெட்டி, 1978-ம் ஆண்டு தன் 29-வது வயதில், தன்னை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். அந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். 1980-ம் ஆண்டுமுதல் 1983 வரை மாநில நல்வாழ்வு மற்றும் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார் ராஜசேகர் ரெட்டி. அப்போது தனக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் போதும் என அறிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி. கடந்த ஆண்டு, முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெகன், தனக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் போதும் என அறிவிக்க, 1983-ல் என்.டிராமாராவ் செய்ததைக் காப்பியடிக்கிறார் ஜெகன் என எதிர்க்கட்சிகள் கொக்கரிக்க, காப்பியடித்தது உண்மைதான், ஆனால், என்டி.ஆரிடமிருந்து இல்லை, அவர் தந்தை ஒய்.எஸ்.ஆரிடமிருந்து என பதிலடி கொடுத்தனர் ஜெகனின் ஆதரவாளர்கள்.   ராஜீவ் காந்தி 1982-ம் ஆண்டு, ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி ராமாராவ் தெலுங்கு தேசம் எனும் கட்சியைத் தொடங்கி, கட்சி தொடங்கிய ஒரு வருடத்துக்குள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். அதுவரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த ஆந்திரப் பிரதேசத்தில் என்.டி.ராமாராவின் அலை ஆட்டம் காண வைத்தது. மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் தேவை எழுந்தது. யாரைத் தலைவராக்கலாம் என அப்போதைய தலைவர் இந்தியா காந்தி யோசித்த நேரத்தில், மிகவும் திறமையான துணிச்சலான, மருத்துவக் கல்வி பயின்ற 33 வயது இளைஞனான ராஜசேகர் ரெட்டியைப் பரிந்துரைத்தார் ராஜீவ் காந்தி. நரசிம்மராவ், சென்னா ரெட்டி போன்ற மிக மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் மிக லாவகமாகச் சமாளித்தார் ராஜசேகர் ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த இரண்டு ஆண்டுகளில் ராஜசேகர் ரெட்டி ஆற்றிய களப்பணியே, அந்தக் கட்சியை மீண்டும் 1989-ல் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தது. ஆனால், அப்போது, கடப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் முதல்வராகும் வாய்ப்பு ராஜசேகர் ரெட்டிக்கு வாய்க்கவில்லை. அப்போது மட்டுமல்ல, 1989, 1991, 1996, 1998 என தொடர்ந்து நான்குமுறை கடப்பா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் அதேபோல, 1978 முதல் 2009 வரை கிட்டத்தட்ட ஆறுமுறை புலிவெந்துலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராஜசேகர் ரெட்டி.   என்.டி.ராமாராவின் மறைவுக்குப் பிறகு தெலுங்குதேசம் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த சந்திரபாபு நாயுடு, 1995-ம் ஆண்டு ஆந்திராவின் முதல்வரானார். தன்னை விட்டால் ஆந்திராவில் யாருமில்லை என தனிப்பெரும் ஆளுமையைச் செலுத்திக்கொண்டிருந்த அவரை அவரின் ஆரம்பகால நண்பரான ராஜசேகர் ரெட்டியை வைத்து சமாளிக்க நினைத்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. மீண்டும், 1998-ல் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்றார் ராஜசேகர் ரெட்டி. 1999- சட்டமன்றத் தேர்தல் வந்தது. தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக சந்திரபாபு நாயுடுதான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துப் பிரசாரம் செய்கிறார்கள், ஆனால் காங்கிரஸ் கட்சியில் உங்களை அப்படி முன்னிறுத்தவில்லையே, நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் அடிபணிந்து நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனவே என பத்திரிகையாளர்கள் கேட்க, ``எங்கள் கட்சி தேசியக் கட்சி, எங்கள் கட்சிக்கென சில வழிமுறைகள் இருக்கின்றன. வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்தான் முதல்வரைத் தேர்தெடுக்கவேண்டும். அதுதான் ஜனநாயகம்'' எனப்பதிலடி கொடுத்தார் ராஜசேகர் ரெட்டி. அந்தத் தேர்தலில் 91 இடங்களில் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரானார் ராஜசேகர் ரெட்டி.   சந்திரபாபு நாயுடு தொடர்ந்து, 2004 தேர்தலுக்கு முன்பாக ஆந்திர மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1400 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார் ராஜசேகர் ரெட்டி. அந்த நடைப்பயணமும் மக்களின் குறைகளை நேரடியாக அவர்களின் இடத்துக்கே சென்று கேட்டதும் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை உயர்த்தியது. தொடர்ந்து, 2004-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 185 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது காங்கிரஸ் கட்சி. முதல்வரானார் ராஜசேகர் ரெட்டி. அதற்கடுத்து நிகழ்ந்தது எல்லாமே அதிரடிகள்தான்... ஏழை விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம், அவர்களின் கடன்கள் ரத்து, முதியவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ராஜீவ் காந்தி பெயரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இந்திராகாந்தி பெயரில் ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார் ராஜசேகர் ரெட்டி. ``எங்கே இருந்தாலும் யாருக்கா இருந்தாலும், ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவ வலியா, சின்னக் குழந்தைகளுக்கு காயம் பட்டுடுச்சா ஒரே ஒரு போன் கால் போதும், இருபது நிமிசத்துல உங்க இடத்துக்கு குய் குய் குய்யுன்னு நம்ம ஆம்புலன்ஸ் தேடிவரும்'' என இந்தியாவிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் வசதியை அறிமுகப்படுத்திய பெருமையும் ராஜசேகர் ரெட்டியையே சேரும்.   ரோஜா சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தை ஹைடெக் சிட்டியாக, உலக வரைபடத்தில் ஒரு முக்கிய இடமாக மாற்ற, மறுபுறம் ஆந்திராவின் அடித்தட்டு கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து செல்வாக்குமிக்க தலைவராக, விவசாயிகளின் நண்பனாக உருவெடுத்தார் ராஜசேகர் ரெட்டி. அதுவரை ஆந்திர அரசியல் வரலாற்றிலேயே, காங்கிரஸ் கட்சியின் சார்பில் எந்தவொரு முதலமைச்சரும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்ததில்லை, அதை முறியடித்தார் ராஜசேகர் ரெட்டி. 2009 சட்டமன்றத் தேர்தல்... ஏற்கெனவே ஆளும் கட்சிக்கு இருக்கும் இயல்பான சவால்களுடன் தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ் கட்சி. மறுபுறம் திரை நட்சத்திரப் பட்டாளங்களுடன் தெலுங்கு தேசம், (தற்போது ஜெகனின் வலது கரமாக சந்திரபாபு நாயுடுவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் நடிகை ரோஜாகூட அப்போது தெலுங்கு தேசம் கட்சியில்தான் இருந்தார்) மற்றொரு முனையில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் என நட்சத்திரப் பட்டாளங்கள் சூழ பிரசாரம் போய்க்கொண்டிருந்தது.   ``மற்ற கட்சிகள் எல்லாம் திரை நட்சத்திரப் பட்டாளங்களுடன் களத்தில் நிற்கிறார்கள்...அவர்களுக்கு பெருமளவு கூட்டமும் கூடுகிறது. நீங்கள் அது குறித்து கவலைப்படுகிறீர்களா'' எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, ``மக்கள் காசு கொடுத்து தியேட்டர்களுக்குச் சென்று தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களைப் பார்க்கிறார்கள். அவர்களே நேரடியாக வந்து ஷோ காமிக்கும்போது மக்கள் கூட்டம் கூடத்தான் செய்யும். ஆனால், அது கண்டிப்பாக ஓட்டாக மாறாது. பிறகு நான் ஏன் கவலைப்படணும்'' என சிரித்துக்கொண்டே பதிலளித்தார் ராஜசேகர் ரெட்டி. எதிரே திரைக் கதாநாயகர்கள் சூழ்ந்திருந்தாலும், தங்களின் நிஜக் கதாநாயகனான ராஜசேகர் ரெட்டியையே அந்த முறையும் முதல்வராக்கி அழகு பார்த்தார்கள் ஆந்திர மக்கள். ஆனால், இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற, ஒரு சில மாதங்களிலேயே விமான விபத்தில் இறந்துபோனார் ராஜசேகர் ரெட்டி. ஒட்டுமொத்த ஆந்திரமுமே கண்ணீல் கடலில் தத்தளித்தது.   Withinme... with me YSR Book Launch Photo: Facebook / YS Sharmila இன்று ஆந்திர மக்களின் காவலர் நாங்கள்தான் என தெலுங்குதேசம் கட்சியினர் ஜெகனுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, எங்களுக்குத்தான் சொந்தம் என ஜெகனுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கிறது, ஆந்திர மாநிலக் காங்கிரஸ் கமிட்டி. தற்போது ஜெகன் மோகன் அரசாங்கத்தின் மீது, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஊழல் புகார்களைப் போலவே அப்போது ராஜசேகர் ரெட்டியின் மீதும் முன்வைத்தார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி ஆந்திர மக்களின் மனங்களில் தனிப்பெரும் தலைவராக அவர் ஜம்மென்று அமர்ந்திருந்தார் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. இந்தநிலையில், இன்று, ராஜசேகர் ரெட்டியின் 71-வது பிறந்த நாளையொட்டி, ஒய்.எஸ்.ஆரின் மனைவி விஜயலட்சுமி எழுதிய நாலோ... நாத்தோ... ஒய்.எஸ்.ஆர் (Withinme... with me YSR) எனும் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார்.   https://www.vikatan.com/government-and-politics/news/a-political-journey-of-y-s-rajasekhara-reddy
  • வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ