Jump to content

(படங்கள்) பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்த சோகம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

பதுளை - மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில்
10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேனில் 12 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 குழந்தைகள் உட்பட 10 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டு பாதையில் பிழையான பக்கத்தால் பயணித்தால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேனில் சென்றவர்கள் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

IMG_20190417_051044%2B-%2BCopy.jpg

IMG_20190417_051056%2B-%2BCopy.jpg

 

IMG_20190417_051122.jpgIMG_20190417_051115.jpg

 

https://www.madawalaenews.com/2019/04/10_17.html

 

IMG_20190417_051141.jpg

(2ஆம் இணைப்பு) உயிரிழந்த 10 பேரின் பெயர் விபரங்கள்!

_19307_1555489853_kjh.jpg

வாகன விபத்தொன்றில் மட்டக்களப்பைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த பேருந்தும் பதுளை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

வேனில் பயணித்த 12 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு கல்லடி , டச்பார் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் ஆவார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று பெண்களும் அங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு டச்பார் பகுதியை சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வேன் சாரதி தூக்க கலக்கத்தில் வேன் பயணிக்க வேண்டிய வழித்தடத்திலிருந்து விலகி எதிர்த்திசை வாகனங்கள் பயணிக்க வேண்டிய வழித்தடத்தில் அதிவேகமாக வேனைச் செலுத்திச் சென்றால் தான் விபத்து ஏற்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள்

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸ்,

50 வயதான சில்வியா ஜோஷப் (ஜோஷப் ரெலின்டன் ஜோப்ஸின் மனைவி)

35 வயதான லிஸ்டர் எலெக்ஸேன்டர்

27 வயதான நிஸாலின் எலெக்ஸேன்டர் (லிஸ்டர் எலெக்ஸேன்டரின் மனைவி)

04 வயதான ஹனாலி எலெக்ஸேன்டர் (லிஸ்டர் எலெக்ஸேன்டரின் மகள்)

04வயதான பய்கா எலெக்ஸேன்டர் (லிஸ்டர் எலெக்ஸேன்டரின் மகள்)

48 வயதான யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிக்

42 வயதான மரியா பென்சியா ஹென்ட்ரிக் (யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிகின் மனைவி)

10 வயதான செரேபி ஹென்ட்ரிக் (யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிகின் மகள்)

19 வயதான பிரின்ஸ் ஹெட் ஹென்ட்ரிக் (யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிகின் மகன்)

காயமடைந்தவர்கள்

13 வயதான செகானி ஹென்ட்ரிக் (யூடி பிரின்ஸ் ஹென்ட்ரிகின் மகள்)

ஞாஎல பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான ரெசானி பர்கஸால்

_19307_1555489940_chd.jpg

_19307_1555490060_hf.jpg

_19307_1555490115_dd.jpg

_19307_1555490205_ch.jpg

_19307_1555490287_dgf.jpg

http://battinaatham.net/description.php?art=19307

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

ஒன்றுமறியா பாலகர்களும் இதில் பலியாகியுள்ளார்கள்.
டிரைவருக்கு தூக்கம் வந்தால் ஒரிடத்தில் நிறுத்தி சிறிது ஓய்வெடுத்து போயிருக்கலாம். 

அனியாயமாக 10 உயிர்கள் பலியாகியுள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு பேரும் இளம் வயதினர்....ஆழ்ந்த இரங்கல்கள் .....!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹியங்கனை விபத்தில் பலியான 10 பேர்,  மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள்…

 
April 17, 2019
A

Batti-accident.png?resize=653%2C661

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பினை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (17.04.19) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரட்டைக் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளமையும், ஒருகுடும்பத்தில் அனைவரும் உயிரிழந்துள்ளமையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் மட்டக்களப்பு, கல்லடி புதிய டச்பார் இன்னாசியார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள 48 வயதுடைய ஜுட் ஹென்றிக், 42 வயதுடைய அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி அவர்களது மகன் 19 வயதுடைய ஜு.ஹெய்ட், 12 வயதுடைய மகள் ஷெரேபி ஆகியோரும் கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியை சேர்ந்த 34 வயதுடைய லிஸ்டர், அவரது மனைவி 27 வயதுடைய நிசாலி அவர்களது இரட்டைக் குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா, ஹனாலி ஆகியோரும் நிசாலியின் தாய் தந்தையரான 56வயதுடைய ரெலிங்டன் ஸொப்ஸ், 53வயதுடைய சில்பியா ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் நிசாலியின் குடும்பத்தினை சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில் ஜுட் ஹென்றிகின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று விட்டு அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வேனில் 12 பேர் சென்றுள்ளதாகவும் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வான் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டு பாதையில் பிழையான பக்கத்தால் பயணித்தால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மஹியங்கனை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://globaltamilnews.net/2019/118434/

Link to comment
Share on other sites

இனஅழிப்பு நடைபெற்று எம்மினம் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வாறான அழிவுகள் மனதைப்பிழிகின்றது.பயணங்களை ஒழுங்கு செய்கின்ற பெரியவர்கள் சில விடயங்களை சிந்திப்பதே இல்லை.

         தொலைதூரப்பயணங்களை  குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் போது நள்ளிரவு வேளையில்,சிறிய வாகனங்களில்,அனுபவம் குறைந்த சாரதிகளுடன். அவசர அவசரமாக ,ஓய்வு இன்றி ஒழுங்கு செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும்.

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ மிகவும் கவலை தரக் கூடிய விடயம் ...ஹொலிடே போயிட்டு திரும்பும் வழியில் இப்படி ஒரு மரணம் ...ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆத்மா சாந்தியடையட்டும்....ஊரில் போக்குவரத்து விதிமுறைகளை மிகவும் கடுமையாக்க வேண்டும்.
அது என்னவே தெரியலே விபத்தை ஏற்படுத்தும் சாரதிகள் மட்டும்  விபத்தில் இருந்து தப்பித்து கொள்கிறார்கள் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஒரு சிறிய வானில் 12 பேர் பயணம். வாகனம் திசை மாறி போனால் கட்டுப்படுத்துவது சுலபமல்ல. சாரதியின் அபாயகரமான ஓட்டம் இவ்வளவு உயிர்களை பலியாக்கி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் என்று மாத்திரம் சொல்ல முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகில், 'Tiredness kills, take a break' என்று பெரும் தெருக்களில் போட்டு வைத்திருப்பார்கள்.

பெரிய லாரி டிரைவர்கள், ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேலே ஓட முடியாது என்று சட்டமே உண்டு. சரியான பதிவுகள் மூலம் போலீஸ் கண்காணிக்கும். மீறினால் டிரைவர் அல்ல, அவரது நிறுவனமே தண்டம் கட்டிட வேண்டும் என்பதால், கவனமாக இருக்கும் நிறுவனங்கள்.

அங்கே வாடகை சாரதிகள் 8 மணிக்கு மேல் ஓட கூடாது என்று சட்டம் வரவேண்டும். சவாரி வருகிறது என்று, தூக்கம் இல்லாமல் ஓடினால் இப்படி தானே.

எனது நண்பர் குடும்பம், ஆறுதலா போகலாம் என்று யாழில் இருந்து, கட்டுநாயக்காவுக்கு நேரத்துக்கு கிளம்பி உள்ளார்கள். மெதுவாகவே செல்ல வேண்டும் என்று சொல்லியே ஏறி இருந்தார்கள். போன் ஒன்று வந்ததும் டிரைவர் வேகமா ஓடினார். காரணம் கேட்ட போது. அமெரிக்காவில் இருந்து வருற ஒரு குரூப்பினை பிக்கப் பண்ண, மூன்று மணிநேரம் முன்னதாக போக, முதலாளி சொல்லி உள்ளார்.

இவர் கத்தி, சத்தம் போட்டு..... தம்மை வவுனியாவில் இறக்கி விடு என்று சொன்னதுமே வழிக்கு வந்தாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே.... மீண்டும் தமிழர்கள் அகால மரணம்.
படங்களைப் பார்த்தபின்... எழுத வார்த்தைகள் வரவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்து தொடர்பான தகவல்கள் நேற்று தான் கிடைக்கப்பெற்றது . வாகன ஒட்டி ஒரு நாள் முழுவதும் நித்திரையில்லாமல் வாகனம் செலுத்தியுள்ளார் , இலங்கையில் இப்படியான விமானநிலைய பிக்கப் சேவையில் ஈடுபடும் டால்பின் ரக வாகனங்களில் ஒரு சிலதே புதிய ரகம் நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை (SRS ரக AIR BAGS மற்றும் இத்யாதிகள் ) மிகுதி அனைத்துமே அரதப்பழைய றப்பியல்கள் 
போதாக்குறைக்கு வாகன உரிமையாளர்களும் அதனை ஒழுங்காக பராமரிப்பதில்லை. இந்த விபத்தில் சிக்கிய வாகனம் 1994 மாடல் -கிட்டத்தட்ட 25 வயது , இலங்கையில் மட்டும் தான் இப்படி குப்பைகளை வைத்திருப்பவர்கள் கூட லட்சக்கணக்கில் திரும்ப விற்பார்கள்.  இப்படியான நிலையில் உள்ள வாகனங்கள் இலகுவாக கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடியவை ,பிறேக் போன்றவை தேவைப்படும் நேரத்தில் ஒழுங்காக தொழிற்படாமை  , வாகன சில்லுகள் அளவுக்குமீறிய தேய்மானம் கொண்டிருத்தல் போன்றவை ஒரு சாதாரண விபத்தை கூட பாரதூரமான விபத்தாக மாற்றி விடுகின்றன .

ரதி அக்கீ ....வாகன ஓட்டுநர் 19 வயது பையன் முதல் முதலாக விசா வாங்கியது அவர்தான் அவரைத்தாண்டித்தான் Mr.எமன் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு போயிருக்கார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் மட்டக்களப்பு ஊறணிபகுதியை சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !! வேறு எதை எழுத? சாரதியின் பிழையால் எத்தனை இளம் பிஞ்சுகள் மடிந்துள்ளன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதா உன் உயிரை விட பெறுமதி மிக்கது வேறுண்டா?
கண்ணீரஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)

மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு கள்ளியங்காடு மற்றும் தன்னாமுனை பொதுமயானத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை அவர்களது சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்திருந்தனர்.

இவர்களின் சடலங்கள் இன்று காலை மட்டக்களப்பு மாமாங்கம், டச்பார், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.

அதன்பின்னர் விபத்தில் சடலங்கள் மட்டக்களப்பு புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அஞ்சலி வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியதுடன் வழிபாடுகளைத் தொடர்ந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஆறு பேரின் சடலங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

டச்பார் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களின் சடலங்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டன.

இதன்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தியதுடன் பல்வேறு இடங்களிலும் நினைவு பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Batticalao-Accident-1.jpg

Batticalao-Accident-2.jpg

Batticalao-Accident-3.jpg

watermark-10.jpg

IMG_0047-720x406.jpg

IMG_0056-720x480.jpg

IMG_0067.jpg

IMG_2439-720x480.jpg

IMG_2451-720x405.jpg

IMG_2461-720x405.jpg

photo-1-1-720x405.jpg

photo-4-720x406.jpg

மஹியங்கனை கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கு – கண்ணீரில் மட்டக்களப்பு!

 

 

மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.

இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சடலங்கள் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டன.

உயிரிழந்த பத்து பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்னஉப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தர்களுக்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 10பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10 பேரே உயிரிழந்திருந்தனர்.

தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்திருந்தது.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

57504125_445332719574562_610387826403442

4-3.jpg

 

http://athavannews.com/மஹியங்கனை-கோர-விபத்தில்/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

விபத்து தொடர்பான தகவல்கள் நேற்று தான் கிடைக்கப்பெற்றது . வாகன ஒட்டி ஒரு நாள் முழுவதும் நித்திரையில்லாமல் வாகனம் செலுத்தியுள்ளார் , இலங்கையில் இப்படியான விமானநிலைய பிக்கப் சேவையில் ஈடுபடும் டால்பின் ரக வாகனங்களில் ஒரு சிலதே புதிய ரகம் நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை (SRS ரக AIR BAGS மற்றும் இத்யாதிகள் ) மிகுதி அனைத்துமே அரதப்பழைய றப்பியல்கள் 
போதாக்குறைக்கு வாகன உரிமையாளர்களும் அதனை ஒழுங்காக பராமரிப்பதில்லை. இந்த விபத்தில் சிக்கிய வாகனம் 1994 மாடல் -கிட்டத்தட்ட 25 வயது , இலங்கையில் மட்டும் தான் இப்படி குப்பைகளை வைத்திருப்பவர்கள் கூட லட்சக்கணக்கில் திரும்ப விற்பார்கள்.  இப்படியான நிலையில் உள்ள வாகனங்கள் இலகுவாக கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடியவை ,பிறேக் போன்றவை தேவைப்படும் நேரத்தில் ஒழுங்காக தொழிற்படாமை  , வாகன சில்லுகள் அளவுக்குமீறிய தேய்மானம் கொண்டிருத்தல் போன்றவை ஒரு சாதாரண விபத்தை கூட பாரதூரமான விபத்தாக மாற்றி விடுகின்றன .

ரதி அக்கீ ....வாகன ஓட்டுநர் 19 வயது பையன் முதல் முதலாக விசா வாங்கியது அவர்தான் அவரைத்தாண்டித்தான் Mr.எமன் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு போயிருக்கார்

 

ஓ...தனிய டிரைவரை மட்டும் குறை சொல்ல முடியாது...அட்லீஸ்ட் முன்னுக்கு டிரைவருக்கு பக்கத்தில் இருந்து வந்தவர்களாவது டிரைவரோடு உரையாடிக் கொண்டு வந்திருக்க வேண்டும்...நான் நினைக்கிறேன் எல்லோரும் நித்திரை போல டிரைவரையும் சேர்த்து 😢

 

Link to comment
Share on other sites

வடக்கு- கிழக்கு உள்ளிட்ட

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 42 பேர் பலி

சில தினங்களில் பன்னிரெண்டு தமிழர்கள் உயிரிழப்பு
 
 
main photomain photo

 

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கொழும்பில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே ருவன் குணசேகர இவ்வாறு தெரிவித்தார். கடந்த 13ஆம் திகதி காலை ஆறு மணியிலிருந்து இன்று புதன்கிழமை காலை ஆறு மணிவரை வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை ழுமுவதிலும் முப்பத்தியொரு வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார். 
 
இந்த விபத்துக்களில் 42 பேர் பலியானதோடு மேலும் பலர் காயமடைந்து அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார். காயமடைந்தவரிகள் பலரின் உடல் அவயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கவீனமடைந்திருப்பதாகவும் கூறினார்.

 

வாகனச் சாரதிகளின் கவனயீனத்தாலேயே இந்த விபத்துகள் இடம்பெறுவதாகவும் கூறிய அவர், வீதி விபத்துக்களைத் தடுக்க புதிய நடைமுறைகள் அமூல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு- கிழக்கு மற்றும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் ஹயேஸ் வாகனங்களில் பயணம் செய்யும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களே கூடுதலாகப் பலியாவதாகக் கூறப்படுகின்றது.

சில நாட்களில் பன்னிரண்டு தமிழர்கள் வாகன விபத்துக்களில் பலியாகியுள்ளனர். இன்று புதன்கிழமை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பத்துப்பேரும், சென்ற சனிக்கிழமை அதிகாலை லன்டனில் இருந்து கொழும்புக்கு வந்த யாழ் நயினாதீவைச் சேர்ந்த 48 வயதான இளம் குடும்பப் பெண்ணொருவரும் கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 65 வயதான குடும்பஸ்த்தரும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=897&fbclid=IwAR1cACGzbUJn4M1jFPyoV6pl7mRlAYRg4-LIVwHTCy8RfIvht8yl_LSAhiE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி)

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் ஆயிரம் கணக்காணவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று மாலை மண்ணுடன் சங்கமமாகின.

Mahiyanganaya-Accident-Funeral.jpg

 மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில்  மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று அதிகாலை  இடம்பெற்ற  வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட  10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த  சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

 

 

 

 

இந்த நிலையில் உடல்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டன.

பத்து பேரின் உடல்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.

Mahiyanganaya-Accident-Funeral-1.jpg

அங்கு நாட்டின் பல பிரதேசங்களிலும் இருந்து திரண்டு வந்த ஆயிரம் கணக்கான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதனால் மட்டக்களப்பு நகரம் எங்கும் சோகமயமாக காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் மற்றும்  இறுதி ஆராதனைகளுக்காக மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் உடல்கள் வைக்கப்பட்டன.

இதன் பின்னர் சடலங்கள் புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இறுதி அஞ்சலி வழிபாடு ஒப்புகொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு பேரின் உடல்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு டச்பார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களின் உடல்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டன.

Mahiyanganaya-Accident-Funeral-2.jpg

மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், மாணவர்கள், இளைஞர்கள், கிராமத்தவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர்.

 

http://www.virakesari.lk/article/54185

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.