Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ்ப்பாண‌ம் செல்லும் புலம் பெயர்ந்து வாழும் மக்களிற்கு முக்கிய செய்தி!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ko-1.jpg

யாழ்ப்பாண‌ம் வ‌ந்து ஒரு மாத‌ம் குடி கூத்த‌ன‌ம், விழா, ப‌ண்டிகை, காதுகுத்து, க‌ல்யாண‌ம், க‌ருமாதி எல்லாத்தையும் செல‌வு ப‌ண்ணிட்டு போகும் போது ம‌ட்டும் ஏதோ நிமிட‌த்துக்கு ச‌ம்ப‌ள‌ம் எடுக்கும் பில்கேட்ஸ் மாதிரி நினைத்து நேர‌ம் மிச்ச‌ம் பிடிச்சு சாம‌ம் சாம‌மாக‌ வான் ரைவ‌ர் ஓட‌ச் சொல்லி அவ‌னோ காலை 3 ம‌ணிக்கு புத்த‌ள‌ம் தாண்ட‌ எங்காவ‌து கொண்டு அடிச்சு அவ‌னும் செத்து நீங்க‌ளும் செத்து இதுக்கு ப‌தில் ஒரு நாளைக்கு முன்ன‌ர் கிள‌ம்பி கொழும்பில் எங்காவ‌து த‌ங்கிட்டு ப‌க‌ல் பிர‌யாண‌ம் செய்தால் அடுத்த‌ வேக்கேச‌னுக்கு உயிரோடையாவ‌து நாட்டுக்கு வ‌ர‌ முடியும் புரிந்தால் ச‌ரி.

 • நீங்கள் நினைப்பது போல் 5 மணி நேரத்திலேயே அல்லது 6மணி நேரத்தில் air port செல்ல முடியுமா? சிந்திப்போம் இது ஒன்றும் வெளிநாட்டு high way இல்லை.
 • அவ்வளவு அனுபவம் கூடிய ஓட்டுநர்களும் இங்கு இல்லை.
 • வாகனங்கள் booked பண்ண முதல்ல விசாரியுங்கள்.
 • ஓடும் போது தொலைபேசியில் இருப்பார்கள் சில ஓடுனர்கள்.
 • வெற்றிலிலை போடுவது போல போதை பொருள்கள் போடுவார்கள்.
 • சற்று விசாரியுங்கள் பிறகு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.
 • சற்று சிந்திப்போம் எம் அருமை உறவுகளே, உயிர் இழப்பினை தடுப்போம்.

முக்கியமான ஒரு விடயம் சில இளைஞர்கள் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் இடம் வான் எடுத்து தரும் படியும் மாதாந்தம் பணத்தினை தாங்கள் செலுத்துவதாகவும், அவர்களும் உழைப்பதற்க்கு ஒரு வழி என உதவுகிறார்கள், ஆனால் அனுபவம் இல்லாத அந்த இளைஞர்கள் படும்பாடு உயிர் மாயும் வரை தொடர்கிறது.

http://www.tamilarnet.com/யாழ்ப்பாண‌ம்-செல்லும்-பு/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான அறிவுரை ........ கடைபிடிக்கிறது சற்று சிரமம்தான்......!   😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

போனமாதம் சிலோனுக்கு போட்டு வந்த ஒருத்தர் சொன்னார்.......தமிழ் றைவர்மாரை விட சிங்கள றைவர்மார் பறவாயில்லையாம்- இல்லாட்டி சொகுசு வசுக்கள் தாராளமாய் யாழ்ப்பாணத்துக்கு ஒடுதாம்.அதிலை பாதுகாப்பாய் போய் வரலாமாம்.

உந்த தமிழ் றைவர்மார் ஒழுங்காய் படிச்சு லைசன்ஸ் எடுக்காதவங்கள் எண்டு கோபமாயும் சொன்னார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜனாதிபதியும், பிரதமரும்... எள்ளென்றால்,  நான்... எண்ணெய்யாக இருப்பேன் – டக்ளஸ் ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (புதன்கிழமை) ஒலுவில் துறைமுக வளாகத்தை பார்வையிட்டதுடன், துறைமுக குளிர்சாதன வசதிகள் மேம்பாடு, மீன் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பில் ஆராய்ந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பிரதமர் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். கடந்த காலங்களில் இந்த அரசின் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற தயாராக உள்ளேன். இந்த ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பியும் கரிசனைகொண்டு என்னிடமும், ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் மஹிந்தவுடனும் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். மீனவர்கள் இன்று என்னை சந்தித்து முன்வைத்த பிரச்சினைகளை நான் கூடிய விரைவில் தீர்த்து வைக்க தயாராக உள்ளேன். யாருக்கும் பயப்பட தேவையில்லை. மீனவர்களுக்கு தேவையாக உள்ள ஒலுவில் துறைமுகம் யாருக்கும் பாதில்லாத வகையில் பிரச்சினைகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் அட்டாளைசேனை பிரதேச செயலாளர், கடற்தொழில் திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர் நடராஜா ஸ்ரீரஞ்சன், முன்னாள் மாகாண அமைச்சர் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா, கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படை அதிகாரிகள், கடற்தொழில் திணைக்கள உயரதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மீன்பிடி அமைப்புக்கள், மீன்பிடி சம்மேளனம், மீன்பிடி சங்கங்களின் சமாசம் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், மீனவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். https://athavannews.com/2021/1247060
  • சீனாவின் எல்லை சட்டம் : மத்திய அரசு கண்டனம்! சீனாவின் புதிய எல்லை சட்டத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ‘இந்த சட்டம் எல்லை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த எல்லை பிரச்சினையில் தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இது கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்துள்ளார். புதிய நில எல்லை சட்டத்தை காரணம் காட்டி இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக்கூடிய நடவடிக்கைகளை சீனா தவிர்க்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதில் இரு நாடுகளும் ஏற்கனவே எட்டியுள்ள உடன்படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். எல்லை பகுதிகளில் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் விதமாக புதிய நில எல்லை சட்டத்தை சீனா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் ஜனவரி முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247085
  • ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் – அமித் தேவ் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என விமானப் படையின் மேற்கு கமாண்டப் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்திய விமானப் படையும், இராணுவமும் இணைந்து 1947 ஒக்டோபர் 27 இல் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இப்போதுள்ள ஜம்மு – காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்களை அந்நாடு சரியாக நடத்துவதில்லை. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட ஜம்மு – காஷ்மீர் முழுவதும் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1247108
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் . . .
  • இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது எனக் கோரிக்கை! ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரு முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன்படி இந்தியா நம்முடைய மிகச் சிறந்த நட்பு நாடு. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் நாட்டின் நலனையும் நட்பையும் கருத்தில் கொண்டு இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது. காட்சா சட்டத்தின் படி இந்தியாவிற்கு விலக்களிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் காட்சா சட்டத்தின்படி அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நாடுகளுடன் இராணுவ மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க முடியும். ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியாவிற்கும் பொருளாதார தடைகளை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையிலேயே கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1247099
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.