Jump to content

ஐபாட் பயிற்சி குறிப்புகள்; iPad Working Tips


Recommended Posts

ஐபாட் பயிற்சி குறிப்புகள்; iPad Working Tips-1

அப்பிள் கம்பனியாரால் அலைபேசியை இயக்குவதற்காக 2007 ஆண்டில் iphone OS (இயங்குதளம்) பாவனைக்கு கொண்டுவரப்பட்டது.பின்னர் ipod அதே ஆண்டில் பாவனைக்கு  வந்தது. அடுத்து 2010 சித்திரை 3ந் திகதி, iphone OS 3.3 இயங்கு தளத்துடன் ipad வெளிவந்தது. இதன் பின்னர் எத்தனையோ ரகங்களிலும், அளவுகளிலும் மேம்படுத்தப்பட்ட இயங்குதளங்களுடனும் iPad Mini. IPad Pro, iPad Air என்ற வகைகள் வெளிவந்தன.

2018 ஆண்டளவில் அப்பிளின் களஞ்சியத்தில்  21 லட்சம் செயலிகள் Apps குவிந்துகிடந்தன. அதில் பத்து இலட்சம் iPad சார்ந்தது. இந்த செயலிகள் 130,000,000,000 (130 Billion) தடவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.  2019 பங்குனி 18 ல் இயங்குதளம் 12.1.3 iPad மினி 2019 வெளிவந்தது. Android இயங்குதளம் தான் உலகில் அதிகம் பிரபல்யமானது (80%). இரண்டாவதாக நிற்பது iOS தான்.(12%)

எந்த ஆண்டில் எது வெளி வந்தது, எந்த ஆண்டு வரை அதற்கு ஆதரவு இருந்தது   என்ற விபரத்தை கீழே காணலாம்.

iPad                                         Released with     Release date         Final supported OS       Support ended

iPad                                            iPhone OS 3.2      April 3, 2010                iOS 5.1.             Septr 18, 20121

iPad 2                                         iOS 4.3                  March 11, 2011           iOS 9.3.            Septr 12, 20165                                                          

iPad (3rd generation)               iOS 5.1                  March 16, 2012           iOS 9.3.            Septr 12, 20165                                                          

iPad mini                                    iOS 6.0.1               November 2, 2012       iOS 9.3.            Sept 12, 20165                                                          

iPad (4th generation)                  iOS 6.0   November 12, 2012              iOS 10.3.             Sept 18, 20173                                                         

iPad Air                                              iOS 7.0.3               November 1, 2013       latest iOS                (current)

iPad mini 2 (Retina display)               iOS 7.0.3               November 12, 2013     latest iOS              (current)

iPad Air 2                                           iOS 8.1                  October 22, 2014        latest iOS                  (current)

iPad mini 3                                        iOS 8.1                  October 22, 2014        latest iOS                   (current)

iPad mini 4                                        iOS 9.0                  September 9, 2015      latest iOS                  (current)

iPad Pro (1st, 12.9'')                          iOS 9.1                  November 11, 2015     latest iOS                 current)

iPad Pro (1st, 9.7'')                            iOS 9.3                  March 31, 2016           latest iOS                   (current)

iPad (2017)                                        iOS 10.2.1             March 24, 2017           latest iOS                   (current)

iPad Pro (2nd, 12.9'')                        iOS 10.3.2             June 13, 2017             latest iOS                   (current)

iPad Pro (2nd, 10.5'')                        iOS 10.3.2             June 13, 2017             latest iOS                   (current)

iPad (2018)                                        iOS 11.2.6             March 27, 2018           latest iOS                   (current)

iPad Pro (3rd, 11")                            iOS 12                   October 30, 2018        latest iOS                   (current)

iPad Pro (3rd, 12.9")                         iOS 12                   October 30, 2018        latest iOS                   (current)

iPad Air (2019)                                  iOS 12                   March 18, 2019           latest iOS                   (current)

iPad mini (2019)                                iOS 12                   March 18, 2019           latest iOS                                               

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி தேவகுரு அண்ணா. முன்னர் ஒரு திரியில் படங்கள் இணைப்பது பற்றி கேட்ட நினைவு.

ஐபாட்டில் safari உலாவியில் Reader View ஐத் தெரிவு செய்து அப்படியே வெட்டி ஒட்டும்போது படங்களும் தானாகவே ஒட்டுப்படும். அது வேலை செய்யாவிட்டால் படங்களை அழுத்தும்போது (3D touch) copy என்று காட்டும். அதனைச் கிளிக்செய்து பதியும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media எனும் பட்டனை கிளிக் செய்து insert image from URL என்பதைத் தெரிவு செய்து தோன்றும் பெட்டியில் paste செய்தால் படத்தின் url ஒட்டுப்படுவதால் படம் சரியாக இணைக்கப்படும்.

Link to comment
Share on other sites

ஐபாட் பயிற்சி குறிப்புகள்; iPad Working Tips—2

ஐபாட்டின் பெயரை மாற்றுவது எப்படி?

Hom buttonஐ தட்டி Settings buttonஐ தட்டி General என்ற சொல் மேல் தட்டி  About என்ற சொல் மேல் தட்டி, Name என்ற சொல்லிற்கு வலப்பக்கதில் தட்டி ஏற்கனவே உள்ள பெயரை அழித்து விட்டு புதிய பெயரை தட்டச்சிடுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.