Jump to content

ஈழத்தின் தமிழிசை ஆற்றுகை : தழிழர்களும் தமிழும் நிகழ்காலமும் – கலாநிதி சி. ஜெயசங்கர்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொன்மையானதும் சமகாலத்தில் புளக்கத்தில் உள்ளதும் எதிர்கால இருப்புக்கு வாய்ப்புக்களையும் கொண்ட மொழியாக தழிழ்மொழி விளங்கி வருகின்றது.

செம்மொழியாகிய தழிழ்மொழியே என்று பாராட்டவும்படுகின்றது. இணைய மொழியாகவும் தமிழ்மொழி வாழ்வு கொண்டுள்ளது.

ஆயினும் அன்றாடாப் பாடப் பயில்வுகளில் தழிழ்மொழியின் நிலை கேள்விக்குரியதாகி வருகின்றமை மிகவும் வெளிப்படையானது. கல்வி வெளிகளிலும் வெகுசன ஊடக வெளிகளிலும் தமிழ் மொழியின் பாவனை குறைவடைந்தும் திரிபடைந்தும் வருவதும் யதார்த்தமாக இருந்து வருகின்றது.

மேலாக, தமிழில் வழிபட முடியாத கடவுளரைக் கொண்டவர்களாக தழிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழ் மொழியில் வழிபாடு நடத்த முடியாதவர்களாக தமிழ்த் தெய்வங்களும் மாற்றப்பட்டு வருகின்றார்கள்.

கறையான் தின்ற கந்தையாகத் தமிழைச் சிதைத்துச் சீரழித்து சின்னாபின்னமாக்கி வருகிறது எண்சோதிடம். ‘நண்டெழுத்து வேண்டாம்’ என்று சிங்கள சிறியை எதிர்த்துப் போராடிய இனம் சமஸ்கிருத ‘ஸ்ரீ’யுள் புளகாங்கித்துக் கிடக்கிறது.

உயர் கலைகளைக் கொண்டாடும் தழிழர் சமூகம் தமிழில் பாடமுடியாததாகவும் தழிழுக்கு ஆடமுடியாததாகவும் இருந்து வருகின்றது, இத்தகையதொரு சூழ்நிலையில் தழிழ் மொழியில் பாடவும் பயிலவும் பல இயக்கங்கள் தோன்றியும் துலங்கியும் வருவதும் வரலாறாகவும் நடைமுறையாகவும் இருந்து வருகின்றது.

ஆயினும் தழிழின் அழகியல் மரபுகள், தத்துவ மரபுகள், ஆயு;வு ஆணுகுமுறை மரபுகள், அறிவியல் மரபுகள் என்பன பற்றிய தேடுலும் உரையாடலும் தொன்மையின் தொடர் மறுக்கப்பட்டு அந்தரநிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

தமிழும் தமிழ் அறிவு மரபுகளும், திறன்களும் அறிவுபூர்வமற்றதாகவும், விஞ்ஞான பூர்வமற்றதாகவும், நாகரிகமற்றதாகவும், பாமரத்தனமானதாகவும் நவீனம் என்று அறிவிக்கப்பட்ட காலனிய அறிவுலகில் மிகவும் ஆழமாகப் பதிந்து வைக்கப்பட்டிருக்கின்றது. சட்டபூர்வமான எல்லைகளுக்குள் அனுமதிக்கப்பட முடியாதவையாகவும் வரையறை செய்யப்பட்டும் வரவிலக்கணப்படுத்தப்பட்டும்; நடைமுறை ஆக்கப்பட்டிருக்கின்றது.இத்தகையதொரு பின்னணியில் தமிழியல் அறிவு முறைகள், தமிழ் அறிவு முறைகள், தமிழ் ஆயு;வு அணுகு முறைகள், தமிழ் அழகியல் மரபுகள் தத்துவ மரபுகள் தமிழர் இசை மரபுகள் இசைக்கருவி மரபும் ஆடல் மரபுகள் ஏனைய சிற்ப தொழில்நுட்ப மரபுகள், கைத்iதாழில் மரபுகள் பற்றிய உரையாடல்களும் முன்னெடுப்புக்களும் மீளவும் மெல்ல முறைவிடத் தொடங்கியுள்ளன.

இந்தவகையிவ் தவநாதன் றொபேட் அவர்களின் ‘ஈழத்தின் தமிழிசை ஆற்றுகை’ முக்கியத்துவம் பெறுகின்றது. ஈழத்து பாவலர்கள் ஆக்கங்களைத் தேடித் தெரிந்து தொகுத்து இசையமைத்து ஆற்றுகைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இது ஆய்வு அணுகுமுறையும் படைப்பாக்கச் செயன்முறையும் இணைந்த ஆய்வு ஆற்றுகையாகவும் பரிணமித்து இருகு;கின்றது.

ஆற்றுகைக்கலைப் பயில்வுகளதும் ஆய்வுகளதும் முன்னுதாரணமானதொரு முறையாகவும் ‘ஈழத்தின் தமிழிசை ஆற்றுகை’ கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

தமிழிசை மரபுகளின் உருவாக்கத்திற்கு மூலாதாரமாக தென்மோடிக் கூத்திசை அமையும் என்பது பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் கருத்து இந்தச் சந்தர்ப்பத்தில் முக்கியத்துவம் உடையதாகின்றது.

தமிழ்மொழி பேசுபவர்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள். பல்வேறு மொழிகளையும் அறிந்தவர்களாகவும் பாண்டித்தியம் பெற்றவர்களாகவும் வாழ்ந்தும் ஆக்கங்களை வழங்கியும் வருகிறார்கள்.

உலகின் பல்வேறுபாகங்களிலும் வாழ்பவர்களை தமிழால் இணைக்கும் தமிழிணையம் வலிமை கண்டு வருகிறது.ஆர்வலர்களின் உயிர்வாழ்வில் இந்த நன்மைகள் எல்லாம் நிகழ்ந்தேறி வருகின்றன.

இவற்றை எல்லாம் பொதுப் போக்காக மாற்றும் இலக்குடன் இயங்கும் அறிவியல் இயக்;கங்கள் மேலேங்கும் வகை செய்யும் முன்னெடுப்புகள் வலிமை கொள்ளட்டும். வேகம் கொள்ளட்டும்.

ஈழத்தின் தமிழிசை ஆற்றுகை என்பது காலத்தை அறிந்துணர்ந்து தவநாதன் றொபேட் முன்னெடுக்கும் முக்கிய பணியாக அமைகிறது.இது இயக்கமாக பரிணமிக்கும் வகை செய்வது அறிவுடையோர் பணி.

தமிழர்தம் இசைமரபுகள் என அடையாளம் காணப்படுகின்ற அதுவும், முக்கியத்துவம் அறியாது கவனிப்பாரற்றுக் கிடக்கும் பல்வேறுபட்ட இசைமரபுகளில் தாடனம் கொண்டவராக தவநாதன் றொபேட் காணப்படுவத காலக்கொடையென்றே கொள்ள வேண்டும்.

வில்லிசை, இசை நாடகம், புராண படனம் என பல்வேறுபட்ட இசைக்கலை மரபுகளில் வாண்மையும்; செந்நெறிக் கலைமரபு உயர்ந்தது என்ற காலனிய மாயையுள் மூழ்கிக் கிடக்கும் பெருமோட்டத்திலிருந்து விலகிய யதார்த்தமான பார்வையும் பணியும் தவநாதன் றொபேட் உடையது.

கலைமரபுகள், அழகியல் மரபுகள் என்பவை உயர்ந்தவை, தாழ்ந்தவை என்ற ஆதிக்கக் கருத்தாக்கங்களில் இருந்து நீக்கம் பெற்ற கலை மரபுகள் அழகியல் மரபுகள் என்பவை பல்வகைமை கொண்டவை, வித்தியாசங்கள் நிறைந்தவை என்ற யதார்த்தமானதும் ஆதிக்க நீக்கம் பெற்றதுமான பார்வை கொண்டதுமான சமூகங்களின் உருவாக்கஙகள் நிகழ்த்தப்பட வேண்டியவை.

தவநாதன் றொபேட்டின் இருப்பும் இயக்கமும் அந்தவகைப்பட்ட வைகயில் அமைந்திருப்பது கால முக்கியத்துவமும், சமூக முக்கியத்துவமும் கொண்டதாகும்.

எங்களின் குரலில் எங்களின் மொழியில் நாங்கள் பாடுவோம்
எல்லா மொழிகளிலும் எங்கள் குரல்கள் இசைபாடட்டும.;

கலாநிதி சி. ஜெயசங்கர்
பதில் பணிப்பாளர்
சு.வி.அ.க. நிறுவகம்

http://globaltamilnews.net/2019/118570/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.