• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

ஈழத்தின் தமிழிசை ஆற்றுகை : தழிழர்களும் தமிழும் நிகழ்காலமும் – கலாநிதி சி. ஜெயசங்கர்..

Recommended Posts

தொன்மையானதும் சமகாலத்தில் புளக்கத்தில் உள்ளதும் எதிர்கால இருப்புக்கு வாய்ப்புக்களையும் கொண்ட மொழியாக தழிழ்மொழி விளங்கி வருகின்றது.

செம்மொழியாகிய தழிழ்மொழியே என்று பாராட்டவும்படுகின்றது. இணைய மொழியாகவும் தமிழ்மொழி வாழ்வு கொண்டுள்ளது.

ஆயினும் அன்றாடாப் பாடப் பயில்வுகளில் தழிழ்மொழியின் நிலை கேள்விக்குரியதாகி வருகின்றமை மிகவும் வெளிப்படையானது. கல்வி வெளிகளிலும் வெகுசன ஊடக வெளிகளிலும் தமிழ் மொழியின் பாவனை குறைவடைந்தும் திரிபடைந்தும் வருவதும் யதார்த்தமாக இருந்து வருகின்றது.

மேலாக, தமிழில் வழிபட முடியாத கடவுளரைக் கொண்டவர்களாக தழிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழ் மொழியில் வழிபாடு நடத்த முடியாதவர்களாக தமிழ்த் தெய்வங்களும் மாற்றப்பட்டு வருகின்றார்கள்.

கறையான் தின்ற கந்தையாகத் தமிழைச் சிதைத்துச் சீரழித்து சின்னாபின்னமாக்கி வருகிறது எண்சோதிடம். ‘நண்டெழுத்து வேண்டாம்’ என்று சிங்கள சிறியை எதிர்த்துப் போராடிய இனம் சமஸ்கிருத ‘ஸ்ரீ’யுள் புளகாங்கித்துக் கிடக்கிறது.

உயர் கலைகளைக் கொண்டாடும் தழிழர் சமூகம் தமிழில் பாடமுடியாததாகவும் தழிழுக்கு ஆடமுடியாததாகவும் இருந்து வருகின்றது, இத்தகையதொரு சூழ்நிலையில் தழிழ் மொழியில் பாடவும் பயிலவும் பல இயக்கங்கள் தோன்றியும் துலங்கியும் வருவதும் வரலாறாகவும் நடைமுறையாகவும் இருந்து வருகின்றது.

ஆயினும் தழிழின் அழகியல் மரபுகள், தத்துவ மரபுகள், ஆயு;வு ஆணுகுமுறை மரபுகள், அறிவியல் மரபுகள் என்பன பற்றிய தேடுலும் உரையாடலும் தொன்மையின் தொடர் மறுக்கப்பட்டு அந்தரநிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

தமிழும் தமிழ் அறிவு மரபுகளும், திறன்களும் அறிவுபூர்வமற்றதாகவும், விஞ்ஞான பூர்வமற்றதாகவும், நாகரிகமற்றதாகவும், பாமரத்தனமானதாகவும் நவீனம் என்று அறிவிக்கப்பட்ட காலனிய அறிவுலகில் மிகவும் ஆழமாகப் பதிந்து வைக்கப்பட்டிருக்கின்றது. சட்டபூர்வமான எல்லைகளுக்குள் அனுமதிக்கப்பட முடியாதவையாகவும் வரையறை செய்யப்பட்டும் வரவிலக்கணப்படுத்தப்பட்டும்; நடைமுறை ஆக்கப்பட்டிருக்கின்றது.இத்தகையதொரு பின்னணியில் தமிழியல் அறிவு முறைகள், தமிழ் அறிவு முறைகள், தமிழ் ஆயு;வு அணுகு முறைகள், தமிழ் அழகியல் மரபுகள் தத்துவ மரபுகள் தமிழர் இசை மரபுகள் இசைக்கருவி மரபும் ஆடல் மரபுகள் ஏனைய சிற்ப தொழில்நுட்ப மரபுகள், கைத்iதாழில் மரபுகள் பற்றிய உரையாடல்களும் முன்னெடுப்புக்களும் மீளவும் மெல்ல முறைவிடத் தொடங்கியுள்ளன.

இந்தவகையிவ் தவநாதன் றொபேட் அவர்களின் ‘ஈழத்தின் தமிழிசை ஆற்றுகை’ முக்கியத்துவம் பெறுகின்றது. ஈழத்து பாவலர்கள் ஆக்கங்களைத் தேடித் தெரிந்து தொகுத்து இசையமைத்து ஆற்றுகைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இது ஆய்வு அணுகுமுறையும் படைப்பாக்கச் செயன்முறையும் இணைந்த ஆய்வு ஆற்றுகையாகவும் பரிணமித்து இருகு;கின்றது.

ஆற்றுகைக்கலைப் பயில்வுகளதும் ஆய்வுகளதும் முன்னுதாரணமானதொரு முறையாகவும் ‘ஈழத்தின் தமிழிசை ஆற்றுகை’ கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

தமிழிசை மரபுகளின் உருவாக்கத்திற்கு மூலாதாரமாக தென்மோடிக் கூத்திசை அமையும் என்பது பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் கருத்து இந்தச் சந்தர்ப்பத்தில் முக்கியத்துவம் உடையதாகின்றது.

தமிழ்மொழி பேசுபவர்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள். பல்வேறு மொழிகளையும் அறிந்தவர்களாகவும் பாண்டித்தியம் பெற்றவர்களாகவும் வாழ்ந்தும் ஆக்கங்களை வழங்கியும் வருகிறார்கள்.

உலகின் பல்வேறுபாகங்களிலும் வாழ்பவர்களை தமிழால் இணைக்கும் தமிழிணையம் வலிமை கண்டு வருகிறது.ஆர்வலர்களின் உயிர்வாழ்வில் இந்த நன்மைகள் எல்லாம் நிகழ்ந்தேறி வருகின்றன.

இவற்றை எல்லாம் பொதுப் போக்காக மாற்றும் இலக்குடன் இயங்கும் அறிவியல் இயக்;கங்கள் மேலேங்கும் வகை செய்யும் முன்னெடுப்புகள் வலிமை கொள்ளட்டும். வேகம் கொள்ளட்டும்.

ஈழத்தின் தமிழிசை ஆற்றுகை என்பது காலத்தை அறிந்துணர்ந்து தவநாதன் றொபேட் முன்னெடுக்கும் முக்கிய பணியாக அமைகிறது.இது இயக்கமாக பரிணமிக்கும் வகை செய்வது அறிவுடையோர் பணி.

தமிழர்தம் இசைமரபுகள் என அடையாளம் காணப்படுகின்ற அதுவும், முக்கியத்துவம் அறியாது கவனிப்பாரற்றுக் கிடக்கும் பல்வேறுபட்ட இசைமரபுகளில் தாடனம் கொண்டவராக தவநாதன் றொபேட் காணப்படுவத காலக்கொடையென்றே கொள்ள வேண்டும்.

வில்லிசை, இசை நாடகம், புராண படனம் என பல்வேறுபட்ட இசைக்கலை மரபுகளில் வாண்மையும்; செந்நெறிக் கலைமரபு உயர்ந்தது என்ற காலனிய மாயையுள் மூழ்கிக் கிடக்கும் பெருமோட்டத்திலிருந்து விலகிய யதார்த்தமான பார்வையும் பணியும் தவநாதன் றொபேட் உடையது.

கலைமரபுகள், அழகியல் மரபுகள் என்பவை உயர்ந்தவை, தாழ்ந்தவை என்ற ஆதிக்கக் கருத்தாக்கங்களில் இருந்து நீக்கம் பெற்ற கலை மரபுகள் அழகியல் மரபுகள் என்பவை பல்வகைமை கொண்டவை, வித்தியாசங்கள் நிறைந்தவை என்ற யதார்த்தமானதும் ஆதிக்க நீக்கம் பெற்றதுமான பார்வை கொண்டதுமான சமூகங்களின் உருவாக்கஙகள் நிகழ்த்தப்பட வேண்டியவை.

தவநாதன் றொபேட்டின் இருப்பும் இயக்கமும் அந்தவகைப்பட்ட வைகயில் அமைந்திருப்பது கால முக்கியத்துவமும், சமூக முக்கியத்துவமும் கொண்டதாகும்.

எங்களின் குரலில் எங்களின் மொழியில் நாங்கள் பாடுவோம்
எல்லா மொழிகளிலும் எங்கள் குரல்கள் இசைபாடட்டும.;

கலாநிதி சி. ஜெயசங்கர்
பதில் பணிப்பாளர்
சு.வி.அ.க. நிறுவகம்

http://globaltamilnews.net/2019/118570/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • (செ.தேன்மொழி) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று முதலாவது நினைவுதின நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கபட இருப்பதாக தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, உயிர்த் ஞாயிறுதின தாக்குதல்களின் போது 300 அளவிலானோர் உயிரிழந்துள்ளதுடன் , 500 பேர் வரை காயமடைந்திருந்தனர். இதன்போது நாடுபூராகவும் பதற்றநிலைமை ஏற்பட்டிருந்தது. பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறான சந்தரப்பத்திலே நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டிருந்ததுடன்,பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவித பேதமுமின்றி உதவி ஒத்தாசைகளையும் வழங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்று ஒருவருட பூர்த்தி இன்னும் இரு மாதங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் கத்தோலிக்க திருச்சபையினால் நினைவு தினத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 , 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அனைத்து தேவாலயங்களிலும் இரவு 7 மணி தொடக்கம் 8 மணிவரை விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதுடன் , 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புனித ஜொசப் வித்தியாலயத்தில் தியானம் மற்றும் ஆராதனை பாடல்கள் இடம்பெறவிருப்பதுடன் , இறந்தவர்களுக்கு ஆத்மசாந்தியை வேண்டி இலத்தின் மொழியிலான பாடல்களும் பாடப்படவுள்ளன. இதன்போது சுமார் 2000 மாணவர்கள் நிகழ்வுகளில் பங்குப்பற்றவிருக்கின்றனர். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மாதம்பிட்டி மயானத்திலும் , 5 மணிக்கு கனத்த மயானத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுத் தூபிகள் திறக்கப்படவுள்ளன. மறுநாள் தொடக்கம் கொச்சிகடை மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் இவை 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 8.45 மணியளவில் ஆரம்பிக்கப்படும் நிகழ்வுகள் மறுநாள் 21 ஆம் திகதி காலை 8.45 வரை இடம்பெறும். பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிமுக நிகழ்வு இடம்பெறுவதுடன் , இதனையடுத்து உயிரிழந்தவர்களை நினைவு படுத்தும் வகையில் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்படும். இதன்போது நாட்டிலுள்ள அனைவரையும் இந்த செயற்பாட்டுடன் இணைநச்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் , ஆலையங்கள் மற்றும் விகாரைகளிலுள்ள மணிகளை ஒலிக்கச் செய்து ஏனையோருக்கு விழிப்பு ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன். இதற்கு பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றுதல் , ஆராதனை பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன. கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இவ்வாறான ஆராதனைகள் இடம்பெறவிருப்பதுடன் , சீயோன் தேவலாயத்திலும் இவ்வாறான நினைவுதின நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.இதுபோன்ற அழிவு மீண்டும் நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதேவேளை உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் உண்மைத்தன்மையை அரசாங்கத்தினர் தனது அரசியல் இலாபத்திற்காக மறைத்து வருகின்றார்களோ என்ற எண்ணம் எமக்கு எழுந்துள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளை கட்டறிய வேண்டும். தாக்குதல் தொடர்பாக முன்னரே தகவல் கிடைத்திருந்த பொதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை  தொடர்பான காரணம் தொடர்பிலும் கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/75943
  • (எம்.ஆர்.எம்.வஸீம்) அமெரிக்காவினால் விசா வழங்கமால் மறுக்கப்பட்டதில் முதலாவதாக நானே பாதிக்கப்பட்டேன். அப்போது இதுதொடர்பாக பேசாதவர்கள் தற்போது சவேந்திர சில்வா விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு அது பற்றி பேசுவது அரசியல் இலாபம் தேடுவதற்காகும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். எவ்வாறாயினும் தற்போதைய இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல. அவருக்கு ஏற்பட்டுள்ள நிலையை நானும் எதிர்க்கின்றேன் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிணை முறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/75942          
  • காலத்தால் அழியாத.... பொப்பிசை பாடல்களை பாடிய, எஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கு, ஆழ்ந்த அஞ்சலிகள்.
  • நன்றி சகோதரி.... முடிந்தவரை நல்லதை கோர்த்து வாக்கியமாக விரல் நுனியில் கதைக்கிறேன்...