Jump to content

இந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

pakistan-team.jpg

உலகக்கிண்ண தொடருக்கான சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியை பாகிஸதான் கிரிக்கெட் சபை இன்று (18) வெளியிட்டுள்ளது.

15 பேர் அடங்கிய அணியில் அபிட் அலி பாபர் அசாம், பகீஷ் அஷ்ரஃப், பகர் சமான், ஹரிஸ் சோஹைல், ஹசன் அலி, இமாட் வசீம், இமாம்-உல்-ஹக், ஜுனைட் கான், மொஹமட் ஹபீஸ், முகம்மது ஹஸ்னைன், ஷாதாப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

இந்த உலகக்கிண்ண தொடரில், இங்கிலாந்து அணியே உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிகளில் முதல்நிலை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

World-Cup-2019.jpg

 

 

http://athavannews.com/இந்தியாவுக்கு-சவால்கொடு/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான துடுப்பாட்டகாரர் ..😊

shoaib.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.