Jump to content

தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
(எஸ்.அஷ்ரப்கான்)
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வட மாகாணத்தை தமிழீழம் என்று பெயரிட்டு அம்மக்களுக்கு 
அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிழக்கு தேசம் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் வஃபா பாருக் தெரிவித்தார்.

இவரின் சாய்ந்தமருது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பிரிக்கப்படாத இலங்கைக்குள் இன பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு குறித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

ஈழம் என்பது இலங்கையின் பெயர்களில் ஒன்றாகும். தமிழ் மக்களின் இன உணர்வோடு பின்னி பிணைந்த பெயராக தமிழீழம் உள்ளது. பிரிவினை இல்லாத இலங்கையில் தமிழீழம் என்கிற பெயருடன் உச்ச பட்ச அதிகாரங்களுடன் கூடிய அலகாக வட மாகாணத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். இந்த தமிழீழத்தின் தேசிய கொடியாக புலி கொடியை அம்மக்கள் பயன்படுத்துவதையோ, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அம்மக்கள் சிலை எடுத்து கொண்டாடுவதையோகூட அனுமதிப்பதில் எந்த தவறும் கிடையாது என்பதுடன் அவற்றுக்கு தடையிட வேண்டிய அவசியமும் இருக்காது.

அதே போல முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாணத்தை கிழக்கு தேசம் என்கிற பெயருடன் தர வேண்டும். மலையகம் என்கிற அலகை இந்திய வம்சாவளியினருக்கு கொடுக்க வேண்டும்.அதாவது பொலிஸ், காணி அதிகாரங்களுடன் மாகாண அலகுகள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு முஸ்லிம்கள், இந்திய வம்சாவளி மக்கள் ஆகியோருக்கு குறைந்த பட்சம் ஒவ்வொரு அலகாவது  உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவை அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்படவும் வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை உத்தரவாதப்படுத்தும் ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.

இலங்கையின் இறைமை, ஆட்புல எல்லைகள், அரசியல் அமைப்பு, தனிமனித சுய நிர்ணயம் ஆகியவற்றை ஏற்று கொண்ட சக வாழ்வு இன்றைய பிரிவானைவாதம் அற்ற சூழலில் கட்டி எழுப்பப்பட்டு அனைத்து மக்களினதும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும். பல்லின, பல்வித மக்களை கொண்ட இலங்கையில் காலத்துக்கு காலம் பகிர்ந்தளிக்கப்படும் வாய்ப்புகள், வளங்கள், அதிகாரங்கள் ஆகியவற்றில் ஒவ்வொரு சமூகமும் அதற்கு உரித்தான பங்கை பெற்று கொள்ள வேண்டும் என்பது எமது அபிலாஷை ஆகும்.
 
 
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை சிங்கள மக்கள் பிரதிநிதிகள் கூறவேண்டும்....அதைவிடுத்து சிறுபான்மையினர் க்கூறுவதில் பயன் ஏதுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் குறிச்சி குறிச்சியா குந்தி இருந்து கொண்டு கிழக்கு முழுமைக்கும் உரிமை கோர முஸ்லிம் வியாபாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது.

கிழக்கை விட அதிகளவில் தெற்கிலும்.. மேற்கிலும்.. வசிக்கும் இதே முஸ்லீம்கள் அங்கும் உரிமை கோரலாமே..??!

ஏலவே தென்கிழக்கு அலகு மட்டும் தான் இவர்களுக்கு வழங்கப்பட முடியும்.

தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தால்.. மொத்த தமிழீழத்திலும் சம உரிமையோடு இவர்களும் வாழலாம்.  

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

கிழக்கில் குறிச்சி குறிச்சியா குந்தி இருந்து கொண்டு கிழக்கு முழுமைக்கும் உரிமை கோர முஸ்லிம் வியாபாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது.

கிழக்கை விட அதிகளவில் தெற்கிலும்.. மேற்கிலும்.. வசிக்கும் இதே முஸ்லீம்கள் அங்கும் உரிமை கோரலாமே..??!

இலங்கைக்கு வெளியிலே தானே அதிக அளவு தமிழ் மக்கள் வாழ்கிறார்கள், அங்கே தமிழீழம் கோரலமே என்று சிங்களவர் சொல்வதை நீங்கள் நியாயமானது என்பது போல அல்லவா உங்கள் வாதம் அமைகிறது?

3 hours ago, nedukkalapoovan said:

ஏலவே தென்கிழக்கு அலகு மட்டும் தான் இவர்களுக்கு வழங்கப்பட முடியும்.

தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தால்.. மொத்த தமிழீழத்திலும் சம உரிமையோடு இவர்களும் வாழலாம்.  

உங்களிடம் இல்லாததை எப்படி மற்றவர்களுக்கு   கொடுப்பீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

அதே போல முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாணத்தை கிழக்கு தேசம் என்கிற பெயருடன் தர வேண்டும்.

CvdSpYgUEAElXNx.jpg

டிஸ்கி :

அதென்ன கிழக்கு தேசம் என்னை கேட்டால் "கிழக்கிஸ்தான்"  என்டே அழைக்கலாம்..😇

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.