World-Press-Freedom-Index-300x200.jpg

2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.

பாரிசை தலைமையிடமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில், சிறிலங்கா 126 ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 131 ஆவது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கிறது.

ஊட்க சுதந்திர சுட்டியில் இம்முறை நோர்வே முதலிடத்திலும், அதையடுத்து பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் உள்ளன.

கடைசி 180 ஆவது இடத்தில் துர்க்மெனிஸ்தான் உள்ளது. அதனுடன் கடைசி இடங்களில்  வடகொரியா, எரித்ரியா, சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளன.

 

http://www.puthinappalakai.net/2019/04/19/news/37409