Sign in to follow this  
uthayakumar

உயிர்த்து எழுவேன் உனக்காகவே

Recommended Posts

உயிர்த்து எழுவேன் உனக்காகவே _the Resurrection of Jesus __________________________________________________________________________________________

 

 


மரித்தேன் என்று 
எண்ணிவிடாதீர்கள் 
மறுபடியும் 
உயிர்த்து எழுவேன் 
நான் உயிர்த்து
எழுவது உனக்காகவே 
உன் கதவுகளை 
திறந்து வை 
உன்னிடம் வருகிறேன் 
உன் அருகோடு 
இருப்பேன் 
அமைதியாயிரு 
என் இரத்தத்தை 
கழுவிவிட்டு 
உன் பாவங்களை 
கழுவ வருகிறேன் .

 


பா .உதயகுமார் /ஒஸ்லோ 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

ஈஸ்டர் வாழ்த்துக்கள். நிறைய பேரின் பாவங்கள் கழுவப்பட வேண்டும்.உலகம் சாக்கடை உலகமாகி வருகிறது.

Share this post


Link to post
Share on other sites

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! 😊

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, மல்லிகை வாசம் said:

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! 😊

வாழ்த்துக்கள் 

10 hours ago, nunavilan said:

ஈஸ்டர் வாழ்த்துக்கள். நிறைய பேரின் பாவங்கள் கழுவப்பட வேண்டும்.உலகம் சாக்கடை உலகமாகி வருகிறது.

நீங்கள் கூறுவது போல் உலகம் இன்று  நீதி நியாயம் மனிதம் எதுக்குமே மதிப்பு இல்லாமல் துன்பம் துயரம் அழிவு மனித இனத்துக்கு எதிரான இன படுகொலை என்று மனித நேயமும் மனித நாகரிகமும் தொலைந்து 

போனதோர் உலகமாக சுழற்கிறது .

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, nunavilan said:

ஈஸ்டர் வாழ்த்துக்கள். நிறைய பேரின் பாவங்கள் கழுவப்பட வேண்டும்.உலகம் சாக்கடை உலகமாகி வருகிறது.

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். அவரை 2019 ஆண்டுகளுக்கு முன் சிலுவை ஏற்றியோரின் வாரிசுகளும் காட்டிக்கொடுத்தோரின் வாரிசுகளும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளனர். அதன் பெறுதிகளை 2009 இல் நாமும் தரிசித்தோமே. 

Share this post


Link to post
Share on other sites
On 4/20/2019 at 11:26 PM, uthayakumar said:

மரித்தேன் என்று 
எண்ணிவிடாதீர்கள் 
மறுபடியும் 
உயிர்த்து எழுவேன்

மரித்தவர் உயிர்த்து எழுந்தாலும் இந்த உலகத்தைக் காப்பாற்ற முடியாது.

மனிதனே இந்த உலகை விரைவில் அழித்துவிடுவான்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வெருவருடைய தனிப்பட்ட சுதந்திரம். ஆனால், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என முன்னாள் மூத்த போராளி காக்கா அண்ணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,   https://www.ibctamil.com/srilanka/80/146274
  • மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் இன்று.! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளியிடப்பட்டதும் விவாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.vanakkamlondon.com/மனித-உரிமை-பேரவையின்-44ஆவத/
  • நுணாவிலான் நீங்கள் இணைத்த கட்டுரையில் உள்ள விடுதலை புலிகளின் நேர்மறையான விடயங்கள் குறித்து எனக்கு எந்ந கருத்து வேறுபாடும் இல்லை. தமிழீழம் உருவாக்க உலக நாடுகள் விரும்பவில்லை அவர்களின் விருப்பமில்லாமல் அது சாத்தியமில்லை என்பது கறுப்பு வெள்ளையாக தெரிந்த நிலையில் அதற்கு அடுத்த alternative  எதுவும் செய்யாமல்  இறுதிவரை போராடி தாம் அழிந்து போனது மிக மோசமான அரசியல் முடிவாகவே நான் பார்க்கிறேன்.  சிறப்பாக செயற்பட்டிருந்தால் அந்த நிர்வாகத்தை அமைத்த விடுதலை புலிகளின் ஆளுமைகள் இன்று தமிழரின் தலைமை அரசியலை கொண்டு நடத்தி இருக்கலாம். அதை விடுத்து  தாம்  அழிக்கபட்ட பிறகு,  தமது வீரமான போராட்டதின் மூலம்  கொம்பு சீவப்பட்டு ஆக்ரோஷத்துடன் இருக்கும் ஒரு  எதிரி எவ்வளவு மோசமாக தமிழ் மக்களை நடத்துவான் என்பதை சிந்திக்காது  செயற்பட்டு  அழிந்து போனது தமிழரின் போராட்டத்தில் மிக பெரிய தவறு என்பதே எனது கருத்து. 
  • கொழும்பில் மீண்டும் கொரோனா! மூடப்பட்டது ஜிந்துபிட்டி வீதி..!   கொழும்பு − ஜிந்துபிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், வீட்டில் 14 நாள் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது. இங்கு 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.   https://newuthayan.com/கொழும்பில்-மீண்டும்-கொரோ/
  • சிறப்புற நடைபெற்ற நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தினது இரதோற்சவம்!   வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசணி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன், வள்ளி – தெய்வானை என சகதெய்வங்களுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியூடாக வலம் வந்து காலை 06 மணியளவில் வெளிவீதி வந்து 07 மணியளவில் மஹோற்சவ தேரில் வீற்று அருள்பாலித்தனர். இம் மஹோற்வத் திருவிழா, கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகியது. இன்று இரதோற்சவம் நடைபெற்றது. நாளை தீர்த்த உற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவடையும் தற்போது நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் ஆலயத்தில் கலந்துகொள்ளவில்லை. தீவக மக்களும், மற்றும் ஆலய சுற்றுப்புற மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/வரலாற்று-சிறப்பு-மிக்க-ஸ/