Jump to content

கொட்டாஞ்சேனை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

ஆழ்ந்த இரங்கல்கள் / கண்ணீரஞலிகள். 

அன்றன்று உழைத்து சாப்பிடும் வறுமையான மக்கள் இவர்கள். சிறு குழந்தைகள் / குடும்பங்கள் என்று, இன்று எத்தனை குதுகலமாக தேவாலயத்திற்கு சென்ரிருப்பார்கள்

இப்படியெல்லம் குரூரமாக சக மனிதனை கொல்ல மனம் வருமா?  

தேசியவெறி ,மதவெறி,புகழ்வெறி ,இனவெறி இதைவிட கேவலமான விடயத்தையும் செய்யும்...

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 10 ஆண்டுகளாக.. தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளையும்.. அதிகப்பிரசங்கித்தனமாக.. போர் வெற்றி மமதையில்.. கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவை.. எங்கையோ பெரிய ஓட்டையை விட்டு வைச்சிட்டு இருந்திருக்கினம்.

பலன்... அப்பாவி உயிர்களின் பலியிடல்.. மற்றும் நாட்டின் பாதுகாப்புக்குறித்து உலகமே அஞ்சி நடுங்கும் நிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலி மிரர் பத்திரிக்கை, இருப்த்ஜற்கொலைக் குண்டுதாரிகள் சனி இரவு சங்ரிலா நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து, காலையில் விடுதியின் உணவகத்தில் 25 கிலோ நிறையிள்ள பிளாத்திக் வெடிகுண்டை வெடிக்கவைத்தது சி சி டி வி கமெராவில் பதிவாகியுள்ளதாக கூறுகிறது. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பிரஜைகளைக் கொண்டு இது நடந்திருக்கலாம் என்று மேலும் கூறுகிறது.

Link to comment
Share on other sites

6 minutes ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இலங்கையில் கிறீஸ்தவர்களை முஸ்லிம்கள் இலக்குவைத்து இலகுவாக மாட்டிக்கொண்டு என்ன சாதிக்க முடியும்? இதில் எந்த நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.

இது ஒரு பெரிய சதி. சீனாவின் கை தெரிகிறது. கோத்தாவும் சீனாவும் தான் இதில் இலாபம் அடையக்கூடியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெமட்டகொடவிலும் குண்டுவெடித்திருக்கிறது. சேத விபரம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

தெகிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றிலும் குண்டுவெடிப்பு சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாகச் சிலர் முகநூலில் நிலைத்தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மைத் தன்மை தெரியவில்லை. இன்னும் தொடருமோ என்ற பயம் உள்ளது. அநாவசியமாக வெளியே நடமாடாமல் வீடுகளுக்குள் இருப்பது அல்லது இருக்கும் இடம் பாதுகாப்பாயின் அவ்விடத்திலேயே இருப்பது பாதுகாப்பானது போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்குச் சட்டம் அமுலிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, உண்மையாகவா?

Link to comment
Share on other sites

இன, மத, பதவி வெறியால் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

இப்படியெல்லம் குரூரமாக சக மனிதனை கொல்ல மனம் வருமா?  

இலங்கையில் சிங்கள அரசாட்சி ஏற்பட்டபின் இதனைவிடவும் குரூரமாகத் தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள். கொன்றவர்களையும், கொலைகாரரின் பின்னால் இயங்கியவர்களையும் அரசுக்குத் தெரியும். தெரிந்தும் அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா,? இல்லையே.?? தண்டிக்கப்பட்டிருந்தால், இன்றைய இந்தக் கொலையாளிகளுக்குக் கொல்லத் துணிவு வந்திருக்குமா.? கொலையாளிகளுக்கு உயர் பதவியும், பின்னால் இயங்கியவர்களுக்கு அரசியல் செல்வாக்கும், மந்திரிப்பதவிகளும் கொடுத்துப் போற்றி வாழவைத்தால்.... அவர்களில் உறைந்துள்ள மிருகங்கள் பயமின்றி ஆரவாரத்துடன் வெளிவரத்தான் செய்யும். அப்படிப் பயமின்றிக் காரியங்கள் செய்பவர்களாகவே இன்றைய பல அரசியல்வாதிகளும் அவர்கள் படைகளும் உள்ளன.

'பேய்கள் அரசுசொய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்' என்பது பொய்யல்ல. இன்றும் தின்றது, இப்டியே போனால்...இன்னும் தின்னத்தான் போகிறது.       

Link to comment
Share on other sites

உயிரிழந்த அப்பாவிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

இந்திய தூதரை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியும். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புனித நாளில் மரணித்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

கடந்த 10 ஆண்டுகளாக.. தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளையும்.. அதிகப்பிரசங்கித்தனமாக.. போர் வெற்றி மமதையில்.. கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவை.. எங்கையோ பெரிய ஓட்டையை விட்டு வைச்சிட்டு இருந்திருக்கினம்.

பலன்... அப்பாவி உயிர்களின் பலியிடல்.. மற்றும் நாட்டின் பாதுகாப்புக்குறித்து உலகமே அஞ்சி நடுங்கும் நிலை. 

அது போதாதென்று... போர் வெற்றி களியாட்டம், கண் காட்சி  என்று....
குசியில்  திரிந்தவர்களுக்கு, இப்ப... ஒரு நாளில்  நடந்த, எட்டு  தாக்குதல்களும்...  
இன விரோதமோ, மத விரோதமோ... ஒரு நாளும் நிம்மதியான வாழ்க்கையை நாட்டிக்கு தரப்  போவதில்லை என்ற,  ஒரு பாடத்தை சொல்லி நிற்கிறது. 

இதய சுத்தியுடன்... செயல் படாத, அரசியல் வாதிகள் இருக்கும் நாட்டில்...
குண்டு வெடிப்புகள் ஒரு தொடர் கதையாகவே இருக்கும்.
ஆனால்.. பலியாவது என்னாவோ... அப்பாவி மக்களே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்; 7 பேர் கைது: அரசு தகவல் - LIVE

இலங்கை குண்டுவெடிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன, ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்தார்.

"இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்." என்றார்.

முன்பே தகவல்

அவர், "இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன. இது வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். இனவாத பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன." என்றார்.

தாக்குதல்கள் தொடரலாம் என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதை நாம் புறந்தள்ள முடியாது. மேலும் தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளது என்றார்.

இலங்கை குண்டுவெடிப்பு

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

விசேஷ ஊடக பிரிவு

இந்த தாக்குதல்களை தொடர்ந்து விசேஷ ஊடக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இருந்த இந்த அமைப்பானது 2009ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்

உளவுத் துறை இந்த தாக்குதல் குறித்து முன்பே வந்த தகவல்களில் ஒருவரின் பெயரை குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரின் பெயரும், ஷாங்ரி லா நட்சத்திர விடுதியில் இறந்தவரின் பெயரும் ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடகவியலாளர்ஜ சந்திப்பில் கூறினார். இன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 190 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்புவின் தெமடகொட பகுதியில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, குண்டு வெடித்ததில் மூன்று காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவுபடத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA

இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலை மற்றும் தெமடகொட மேலும் ஆகிய இடங்களில் மேலும் இரு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது.

இந்நிலையில் கொச்சிகடை பகுதிக்கு  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வந்திருக்கிறார்.  ''நாட்டின் பாதுகாப்பு குறைபாடு  தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தருணமிது'' என ரணில் தெரிவித்திருக்கிறார். 

https://www.bbc.com/tamil/sri-lanka-48001635

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நியூஸிலாந்தில் நடந்த தாக்குதலுக்கான பதிலடி என சில ஊடகங்கள் சொல்ல தொடங்குகின்றன.

இல்லாத புலிகளை சொல்லி, வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படைகளை வைத்திருந்து, தென்பகுதியில் கோட்டை விட்டு விட்டார்கள்.

இப்போது, வடக்கு, கிழக்கிலிருந்து அவசர, அவசரமாக படைகளை தென்பகுதிக்கு நகர்த்துகிறார்கள்.

முஸ்லீம் தீவிரவாதம் குறித்த தகவல்கள் போலீசாருக்கு வந்தும், மிக மெத்தனமாக இருந்து உள்ளனர்.

கோத்தபாய இந்த குருதி வெள்ளத்தில், குளித்து முத்து எடுக்க முனைவார். ஆனாலும் இது கொரில்லா யுத்தம் என்பதால், யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதித்திட்டக்காரர்களின் நோக்கம் குறித்து அறிய அனைவரும் உதவ வேண்டும்: சபாநாயகர்

karu-jayasoorya-720x450.jpg

நாட்டில் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ள சதித்திட்டக்காரர்களின் நோக்கம் குறித்து அறிய, அனைவரும் உதவ வேண்டுமென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வெடிப்பு சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே கருஜயசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளடன் 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சோகத்தில் உள்ளனர். ஆனால் குறித்த சம்பவம் தொடர்பில் சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு பாரிய சம்பவத்தை நிகழ்த்திய சதித்திட்டக்காரர்களையும் அவர்களது நோக்கம் குறித்து அறிவதற்கான விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அமைதியாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்” என கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/சதித்திட்டக்காரர்களின்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெமட்டகொட, எட்டாவது குண்டு வெடிப்பில், வீதி சோதனையில் இருந்த போலீசார், சிலரை தடுத்து விசாரித்த போதே குண்டு வெடித்துள்ளது. இதன்போது இரு போலீஸ்க்காரர்கள் மரணித்துள்ளனர்.

வந்த குழுவின் உறுப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாகவும், இறுதியில் இருவர் கைதானதாகவும் தெரியவருகிறது.

அனேகமாக, வட, கிழக்கில் இருந்து நகர்த்தப்படும், படைகளை கொண்டு, முஸ்லீம் பகுதி எங்கும் தீவிர செக்கிங் நடக்கும் போலவே தெரிய வருகிறது.

இலங்கை ஒரு முழு சுற்று வந்து, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குகின்றது.

1958ன் பின்னர் சிங்கள மொழி சட்டம், சிங்கள ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் என ஆரம்பித்தபோது, நசுக்கிய ராணுவம், 1972 ஜேவிபி கிளர்ச்சியின் காரணமாக ராணுவம் தென் பகுதி செல்ல, தமிழ் தீவிரவாதம் முளை விட்டது.

பின்னர், இந்திய ராணுவ காலத்தில், 1988 முதல் மீண்டும் எழுந்த ஜேவிபி கிளர்ச்சியின் காரணமாக ராணுவம் தென் பகுதி செல்ல, தமிழ் தீவிரவாதம் பேர் எழுச்சி கண்டது.

இம்முறை ராணுவம் தென்பகுதி செல்கிறது.

காலம் அடுத்ததாக என்ன வைத்திருக்கிறதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

தெமட்டகொட, எட்டாவது குண்டு வெடிப்பில், வீதி சோதனையில் இருந்த போலீசார், சிலரை தடுத்து விசாரித்த போதே குண்டு வெடித்துள்ளது. இதன்போது இரு போலீஸ்க்காரர்கள் மரணித்துள்ளனர்.

வந்த குழுவின் உறுப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாகவும், இறுதியில் இருவர் கைதானதாகவும் தெரியவருகிறது.

அனேகமாக, வட, கிழக்கில் இருந்து நகர்த்தப்படும், படைகளை கொண்டு, முஸ்லீம் பகுதி எங்கும் தீவிர செக்கிங் நடக்கும் போலவே தெரிய வருகிறது.

இலங்கை ஒரு முழு சுற்று வந்து, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குகின்றது.

1958ன் பின்னர் சிங்கள மொழி சட்டம், சிங்கள ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் என ஆரம்பித்தபோது, நசுக்கிய ராணுவம், 1972 ஜேவிபி கிளர்ச்சியின் காரணமாக ராணுவம் தென் பகுதி செல்ல, தமிழ் தீவிரவாதம் முளை விட்டது.

பின்னர், இந்திய ராணுவ காலத்தில், 1988 முதல் மீண்டும் எழுந்த ஜேவிபி கிளர்ச்சியின் காரணமாக ராணுவம் தென் பகுதி செல்ல, தமிழ் தீவிரவாதம் பேர் எழுச்சி கண்டது.

இம்முறை ராணுவம் தென்பகுதி செல்கிறது.

காலம் அடுத்ததாக என்ன வைத்திருக்கிறதோ தெரியவில்லை.

மாவையும்... இளைஞரணி மூலம் நைசாக,  காய்  நகர்த்துகின்றார். 
அடுத்த போர்... வடக்கு, கிழக்கில்  தான் ஆரபிக்கப் போகுது போலை கிடக்கு.
எதுக்கும்...
தளபதி மாவையாரை.... வடிவாக விசாரித்தால், உண்மை வெளியில் வரும்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுவெடிப்பில் பலியாகிய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் இலங்கை முஸ்லீம் அகதிகள் எனும் பெயரில் மேற்கத்தேய நாடுகளில் அசேலம் அடித்தவர்களின் பின்புலங்களை திரும்பவும் இங்குள்ள பாதுகாப்பு தரப்புக்கள்  சரி பார்ப்பது நல்லது முக்கியமான தீவிரவாதிகள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே உருவாகின்றார்கள் எனும் கருத்தை இன்றைய தாக்குதல்கள்  உடைத்து விட்டு சென்றுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இது நியூஸிலாந்தில் நடந்த தாக்குதலுக்கான பதிலடி என சில ஊடகங்கள் சொல்ல தொடங்குகின்றன.

இல்லாத புலிகளை சொல்லி, வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படைகளை வைத்திருந்து, தென்பகுதியில் கோட்டை விட்டு விட்டார்கள்.

இப்போது, வடக்கு, கிழக்கிலிருந்து அவசர, அவசரமாக படைகளை தென்பகுதிக்கு நகர்த்துகிறார்கள்.

முஸ்லீம் தீவிரவாதம் குறித்த தகவல்கள் போலீசாருக்கு வந்தும், மிக மெத்தனமாக இருந்து உள்ளனர்.

கோத்தபாய இந்த குருதி வெள்ளத்தில், குளித்து முத்து எடுக்க முனைவார். ஆனாலும் இது கொரில்லா யுத்தம் என்பதால், யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது. 

நாதமுனி அதிகளவான ஆமியும்,பொலிசும் வடக்கில் இருந்த படியால் தான் யாழ்ப்பாணம் தப்பியது...மட்டக்கிளப்பில் கூட  வழமையான கத்தோலிக்க ஆலயங்களில் இக் குண்டுத் தாக்குதல் நடக்கவில்லை... காரணம் பாதுகாப்பு…{ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் நத்தார் வழிபாட்டின் போது ஆலயத்தில் வைத்து கொல்லப்பட்ட பிறகு இப்படியான நாட்களில் கொஞ்சம் கவனமாய் இருப்பார்கள்}...மெதடிஸ்த ஆலயத்தில் தான் நடந்தது 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.