Jump to content

6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்


Recommended Posts

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

siyon.jpg

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 68 பேருடைய சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த மேலும் 25 பேரின் சடலங்கள் கட்டான தேவாலயத்தில் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் 27 பேருடைய சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், மேலும் 73 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 370 வரையில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/54329

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

மீண்டும் வெடிப்புச் சம்பவம் ; இருவர் பலி

நாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

dehiwala2.jpg

அதன்படி குறித்த வெடிப்பு சம்பவமானது தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 

dehiwala3.jpg

இந்த சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

இதேவேளை பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மிருகக் காட்சிசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/54340

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெமட்டகொட மஹாவில குடியிருப்புத் தொகுதியிலும் குண்டு வெடித்திருக்கிறது. மூவர் காயப்பட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

தெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம்!

கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

dematagoda.jpg

அதன்படி தெமட்டகொடை, மாவில உத்யான வீதியில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டத்திற்கு அருகிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/54343

Link to comment
Share on other sites

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயர்வு!

கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

11.JPG

அதன்படி நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன் 469 பேர் காயமடைந்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/54346

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெமட்டகொட மற்றும் தெகிவளை பகுதிகளில் தேடுதல் நடத்தப்படுவதாகவும், இதுவரை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தைப் பின்பற்ற விழையும் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு சில காலமாக வெளிப்படையாக கருத்துக்களை கூட்டங்கள் மூலம் பரப்பி வந்ததும் , இதன் அடிப்படையில் அவ்வமைப்பின் செயலாளரைக் கைதுசெய்யாவிடில் முஸ்லீம்கள்மீது தற்கொலைத்தாக்குதல் நடத்துவோம் என்று ஞானசாரவின் பொதுபலசேனா எச்சரிக்கைவிடுத்ததும் நினைவிருக்கலாம். 

இப்போது, அவ்வமைப்பே குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. பார்க்கலாம், இது எங்கே செல்லப்போகிறதென்பதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் டெய்லி மிரர் பத்திரிகை செய்திப்படி, 6 தாக்குதல்கள் தற்கொலை யாளர்களினால் நடத்தப்பட்டுள்ளன. மிகுதி 2 குறித்து இன்னும் தகவல் இல்லை.

சங்கரிலா ஹோட்டல், ஏப்ரல் 20ல் புக் செய்யப்பட்ட அறையில் இருந்து is பிரசுரங்கள் எடுக்கப் பட்டுள்ளன.

யார் பதிவு செய்தார்கள் என, cctv பதிவுகள் ஆய்வு முடியும் வரை சொல்ல மாட்டார்களாம்.  

07 suspects arrested in connection with today's coordinated bombings in Colombo, Negombo & Batticaloa. Govt has now confirmed most of the blasts were suicide bomb attacks most probably carried out by 01 group - BBC

New Breaking News: Police say the eighth Sri Lanka blast, in the Colombo district of Dematagoda, was a suicide bomb and it killed three police officers.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka explosions: More than 200 killed as churches and hotels targeted

p0772dry.jpg
Deadly explosions strike across Sri Lanka

At least 207 people have been killed and 400 hurt in explosions at churches and hotels in Sri Lanka, police say.

At least eight blasts were reported. Three churches in Negombo, Batticaloa and Colombo's Kochchikade district were targeted during Easter services.

The Shangri-La, Kingsbury, Cinnamon Grand and a fourth hotel, all in Colombo, were also hit.

A curfew has been imposed from 18:00 to 06:00 local time (12:30-00:30 GMT). Seven arrests have been made.

The government also said there would a temporary block on the use of major social media networks.

No-one has yet claimed responsibility for the attacks but the defence minister said they were probably carried out by one group.

What's the latest from the scene?

St Sebastian's church in Negombo was severely damaged. Images on social media showed its inside, with a shattered ceiling and blood on the pews. Dozens of people are reported to have died there.

There were heavy casualties too at the site of the first blast in St Anthony's, a hugely popular shrine in Kochchikade, a district of Colombo.

Among those killed in Colombo were at least nine foreign nationals, hospital sources told the BBC.

Map Presentational white space

Hospital sources in Batticaloa said at least 27 people had died there.

A hotel official at the Cinnamon Grand, near the prime minister's official residence, told AFP the explosion there had ripped through a restaurant, killing at least one person.

A seventh explosion was later reported at a hotel near the zoo in Dehiwala, southern Colombo, with police sources reporting two deaths. The zoo has been closed.

A bomb goes off as Special Task Force personnel raid a home near Dematagoda in ColomboAFP A bomb goes off as Special Task Force personnel raid a home near Dematagoda in Colombo

An eighth explosion was reported near the Colombo district of Dematagoda. Media say it was suicide bomber and that three people, believed to be security personnel, were killed during a police raid.

Colombo resident Usman Ali told the BBC there were massive queues as he joined people trying to donate blood.

He said: "Everyone had just one intention and that was to help the victims of the blast, no matter what religion or race they may be. Each person was helping another out in filling forms."

Presentational grey line

No-one was expecting this

BBC Sinhala's Azzam Ameen at St Anthony's 

Rumours have been reported of more attacks and police have told people to stay inside their houses and remain calm. But there is some element of panic.

There is a heavy military presence in front of all major state buildings. No-one was expecting this, it was a peaceful Sunday morning - everyone was going to Easter services.

Priests at St Anthony's Shrine, KochchikadeReuters Priests at St Anthony's Shrine in Kochchikade

I've spoken to several priests who were in the church and they were really shocked, as were the police officers.

It was a well-planned, co-ordinated attack but I spoke to the security chief who was there and officials believe it's too early to say who is behind it.

After the Tamil Tigers were defeated in 2009, Sri Lanka hasn't really seen this kind of incident.

Presentational grey line

What have officials said?

President Maithripala Sirisena has issued a statement calling for people to remain calm and support the authorities in their investigations.

PM Ranil Wickremesinghe is chairing an emergency meeting. He said: "I strongly condemn the cowardly attacks on our people today. I call upon all Sri Lankans during this tragic time to remain united and strong."

Announcing the curfew, Defence Minister Ruwan Wijewardane said: "We will take all necessary action against any extremist group that is operating in our country."

He also said that "all the culprits" had been identified and would be "taken into custody as soon as possible".

Blast damage at the Shangri-La hotel in ColomboAFP Blast damage at the Shangri-La hotel in Colombo A statue of the Virgin Mary broken in St Anthony's ShrineReuters A statue of the Virgin Mary, broken in St Anthony's Shrine

Another minister, Harsha de Silva, described "horrible scenes" at St Anthony's Shrine in Kochchikade, saying he had seen "many body parts strewn all over".

Pope Francis, in his traditional Urbi et Orbi speech at the Vatican, condemned the attacks as "such cruel violence" which had targeted Christians celebrating Easter.

Cardinal Archbishop of Colombo, Malcolm Ranjith, told the BBC: "It's a very difficult and a very sad situation for all of us because we never expected such a thing to happen and especially on Easter Sunday."

p07725j0.jpg

 

 

 

Archbishop of Colombo: ''A very, very sad day for all of us"

UK PM Theresa May tweeted condolences, saying the "acts of violence against churches and hotels in Sri Lanka are truly appalling".

US President Donald Trump tweeted "heartfelt condolences" for the "horrible terrorist attacks".

What's Sri Lanka's recent history?

In the years since the end of Sri Lanka's civil war in 2009, there has been some sporadic violence, with members of the majority Buddhist Sinhala community attacking mosques and Muslim-owned properties. That led to a state of emergency being declared in March 2018.

The civil war ended with the defeat of the Tamil Tigers, who had fought for 26 years for an independent homeland for the minority ethnic Tamils. The war is thought to have killed between 70,000 and 80,000 people.

Religion in Sri Lanka

Theravada Buddhism is Sri Lanka's biggest religion, making up about 70.2% of the population, according to the most recent census.

It is the religion of Sri Lanka's Sinhalese majority. It is given primary place in the country's laws and is singled out in the constitution.

Hindus and Muslims make up 12.6% and 9.7% of the population respectively.

Sri Lanka is also home to about 1.5 million Christians, according to the 2012 census, the vast majority of them Roman Catholic.

 

https://www.bbc.co.uk/news/world-asia-48001720

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற 9 இடங்கள்…

April 21, 2019

 

Blast-map_10.png?resize=623%2C3731. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்

2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம்

3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம்

4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்

5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல்

6. கொழும்பு, சினமன் கிராண்ட்

7. கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன்

8. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -1

9. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -2

நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது வரையில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அவற்றில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளன

 

http://globaltamilnews.net/2019/118857/

Link to comment
Share on other sites

ஒரே பார்வையில் இலங்கையின் கறுப்பு நாள் ! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன்  450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

aa.jpg

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சியோன் தேவாலயம், கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல், கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன் , கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்காவில் இரு வெடிப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவத்தில்  29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனைய 13 பேர் இவ்வனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தெமட்டகொடைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை கைதுசெய்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 11 நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக போலந்து, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, மொறோக்கோ, மற்றும் பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தவித பயங்கரவாத அமைப்போ அல்லது எந்த அமைப்போ உரிமைகோரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு சங்கரில்ல ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சி-4 ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட 25 கிலோகிராம் நிறையுள்ள குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஹோட்டலில் இரு நபர்கள் நேற்றையதினம் (20.04. 2019) அறை இலக்கம் 616 இல் தங்கியிருந்துள்ளதாகவும் குறித்த இரு நபர்களே இவ்வாறு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

தற்கொலை தாக்குதல் தாரிகளின் செயற்பாடுகள் ஹோட்டலின் உணவகப்பகுதி மற்றும் விறாந்தைப் பகுதிகளிலுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டவரா அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்களா ஹோட்டல் தற்கொலைத்தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என இது வரை தெரியவரவில்லை.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்புக் கருதி சமூகவலைத்தளங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் சமூகவலைத் தளங்களின் செயற்பாடுகுள் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக முகப்புத்தகம், இன்ஸ்ரகிராம், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு இன்னு மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பாக கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான உயிர்ப்பு ஞாயிறு தினமான இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் உயிர்ப்பு ஞாயிறு வழிபாகளில் ஈடுபட்டிருந்த தருணம் குறித்த குண்டுத்தாக்குதல்கள் ஆலயங்களில் நடத்தப்பட்டது மிகவும் கொடூரமானதும் மிலேச்சத்தனமானதுமான செயல் என பல உலகநாடுகளும் அரசியல் தலைவர்களும்  கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பரிசுத்த பாப்ரசரும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பாடசாலைகள் நாளை 2 ஆம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறைநாளாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் தற்காலிகமாக இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள பல தேவாலயங்களுக்கு ஆயுதமேந்திய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனை இலங்கையின் அரசியல்வாதிகள் கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்னர்.

வடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை (22) விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணித்துள்ளார். 

நாட்டின் நிலைமை கருதி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கவிருந்த பல்கலைகழக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது, பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலா விடுதிகள், வைத்தியசாலைகள், தூதரகங்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், கத்தோலிக்க வணக்கஸ்தலங்கள் மற்றும் முக்கியத்துவமிக்க அரச நிறுவனங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/54362

Link to comment
Share on other sites

ஷங்கரிலால் விடுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்!!

 

Link to comment
Share on other sites

சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகளின் தொகுப்பு)

blast-colombo-1-300x200.jpg

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 450 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 66 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு,260 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீர்கொழும்பு மருத்துவமனையில், 104 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.  அங்கு 100 பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு மருத்துவமனை பணிப்பாளரின் தகவல்

போலந்து. பாகிஸ்தான்,டென்மார்க், அமெரிக்கா, இந்தியா, மொராக்கோ, சீனா, ஜப்பான், பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சடலங்களும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைப் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க கூறினார்.

அதேவேளை, கொழும்பு வடக்கு மருத்துவமனையில் 30 பேரும், மட்டக்களப்பு மருத்துவமனையில் 69 பேரும், நீர்கொழும்பு மருத்துவமனையில் 55 பேரும், லேடி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் 14 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் கூறினார்.

27 வெளிநாட்டவர்களின் சடலங்கள்

27 வெளிநாட்டவர்களின் சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் அவர் கூறினார்.

எனினும், 35 வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

 

தாக்குதலை ஒருங்கிணைத்த 7 சந்தேகநபர்கள் கைது

இன்றைய குண்டுத் தாக்குதல்களை ஒருங்கிணைத்தனர் என்ற சந்தேகத்தில் 7 பேரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் தற்கொலைக் குண்டுதாரிகளாலேயே நடத்தப்பட்டுள்ளன என்றும், ஒரே குழுவே இதனை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

உலகத் தலைவர்கள் கண்டனம்

சிறிலங்காவில் இன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு, பெருந்தொகையானோர் காயமடைந்த சம்பவத்தை உலகத் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிறிலங்காவுக்கு உதவத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

றோமில் இன்று நடந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனையின் போது, இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த பாப்பரசர் பிரான்சிஸ், பாதிக்கப்பட்டவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்த மோசமான தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.

 

அவசர அமைச்சரவைக் கூட்டம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.  நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயவே இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் கூட்டப்பட்டு நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

 

அவசரகாலச்சட்டம்?

அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

நாளை காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை நடத்திய பின்னரே, அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா என்று முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

 

அணைக்கட்டுக்கு பாதுகாப்பு

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு உடவளவ – தனமல்வில அணைக்கட்டு வீதி தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

விடுமுறை அறிவிப்பு

சிறிலங்காவில் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு விடுமுறை நாட்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நாளை இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகவிருந்த பாடசாலைகளுக்கான விடுமுறை, புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

blast-colombo-1.jpg

blast-colombo-2.jpg

blast-colombo-3.jpg

blast-colombo-4.jpg

blast-colombo-5.jpg

blast-colombo-6.jpg

blast-colombo-8.jpg

 
Link to comment
Share on other sites

தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி

தெமட்டகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெமட்டகொடவில் உள்ள மகாவில வீடமைப்புத் திட்ட, அடுக்குமாடிக் குடியிருப்பில், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்றை சோதனையிட முயன்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்த போது அங்கிருந்த தற்கொலைக் குண்டு தாரி என சந்தேகிக்கப்படும் நபர் குண்டை வெடிக்க வைத்துள்ளார். இதில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்தனர்.

இன்றைய குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் இங்கேயே  பதுங்கியிருந்தனர் என்றும் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் மட்டக்களப்பு தாக்குதலுக்கு குண்டு எடுத்துச் சென்றவரும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நான்கு பேர் இங்கிருந்து கைது செய்யப்பட்டனர் என்றும் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் பல சடலங்கள் அந்த வீட்டுக்குள் இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/04/21/news/37520

Link to comment
Share on other sites

இலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி - சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தினால் பெரும் சர்ச்சை எழுந்தது.

trump3.jpg

ட்ரம்ப் அந்த டுவிட்டர் பதிவில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

trump.JPG

ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் 138 பேர் என்பதற்கு பதிலாக 138 மில்லியன் (13.8 கோடி) என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து பதிவை சரி செய்யும்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரிட்வீட் செய்திருந்தனர்.

trump2.JPG

இதையடுத்து தனது பதிவை ட்ரம்ப் திருத்திக் கொண்டதுடன், உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்களையும் தெரிவித்தார்.

இதேவேளை நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களினால் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/54369

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, போல் said:

இலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி - சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தினால் பெரும் சர்ச்சை எழுந்தது.

trump3.jpg

ட்ரம்ப் அந்த டுவிட்டர் பதிவில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப்புக்கு.... ரங்கு (நாக்கு),  சிலிப்பாயி போயிட்டுது. :grin:
அது கிடக்கட்டும்... டிரம்புக்கு... சிலோன், எங்கை இருக்குது எண்டு தெரியாது.  
ஆபிரிக்காவில்  இருக்கு என்று சொன்னாலும்,  நம்புற அப்பாவி.. அமெரிக்க ஜனாதிபதி.

Link to comment
Share on other sites

தெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு

குண்டு வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மேலும் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று பகல் எட்டாவது முறையாக வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் வெடிப்பு சம்பவித்த வீட்டிலிருந்து ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டுள்ளர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் மூன்று பொலிஸார் உட்பட இதுவரை ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/54373

Link to comment
Share on other sites

சங்கரிலா விடுதியில் நடந்த குண்டுவெடிப்பில் வவுனியாவைச் சேர்ந்த இஸ்தர் முகமட் நளீம் என்ற 21 வயது முஸ்லீம் இளைஞனும் மரணம்!

Link to comment
Share on other sites

இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்

தலை நகர் கொழும்பு உட்பட  நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218  உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவபிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றிலும்  கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷங்ரில்லா, சினமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலிலும் இன்று காலை 8.45 மணிக்கும்  9.30 மணிக்கும் இடையில் குண்டுத் தககுதல்கள் இடம்பெற்றன. 

இந்த ஆறு சம்பவங்களும் தற்கொலை தாக்குதல்கள் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதுடன் பின்னர் 2.30 மணியளவில், தெமட்டகொட பொலிஸ் பிரிவில் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மூவர் தெமட்டகொட மஹவில பூங்கா பகுதி சொகுசு வீட்டில் இடம்பெற்ற குன்டுவெடிப்பில் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந் நிலையில் இந்த 8 சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என  பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வனைத்து சம்பவங்கள் தொடர்பிலும்  விசாரணை செய்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொறுப்பு குற்றப் புலனயவுப் பிரிவின் (சி.ஐ.டி.) பிரதானி  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை வரை 13 பேர் கைது செய்யப்ப்ட்டிருந்தனர். 

அவர்களில் மூவர் தெமட்டகொடை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். ஒருவர் வெடிபொருள் எடுத்து வந்த வேனின் சாரதியாவார்.

ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பிலும் எத்தனை பேர் கொல்லப்பட்டரகள் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாத போதும், நேற்று மாலை வரை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை மையபப்டுத்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது வரையிலான காலப்பகுதியில் 77 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 261 பேர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் 104 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர்ந்தும் 100 பேர் வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  

அதேபோல் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் ( களுபோவில) இரு சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு  மேலும் 6 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களாவர்.

மட்டக்களப்பு குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 51 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

கொழும்பு வடக்கு போதன அவைத்தியசாலையில் ( ராகம) 7 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 32 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் கம்பஹ வைத்தியசாலையிலும் இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேதங்களில் இன்று மாலையாகும் போது 35 வெளிநாட்டவர்களின் சடல்ங்கள் இருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், மொரோக்கோ, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்தவ்ர்கள் உள்ளடங்குவதாக அந்த அதிகாரி சுட்டிக்கடடினார்.

http://www.virakesari.lk/article/54377

Link to comment
Share on other sites

நேற்று இரவில் இருந்து ஏற்பட்ட ஒரு நடுக்கம் இன்னும் மனதில் இருந்து விலகவில்லை.

கொழும்பில் இருக்கும் காலப்பகுதியில், முக்கியமாக A/L படிக்கும் காலப்பகுதியில் கொட்டாஞ்சேனை பகுதியில் தான் எல்லா ரியூசன் கிளாசுக்கும் செல்வது. அப்படி போகும் காலப்பகுதியில் ஒவ்வொரு வெள்ளியும் பொன்னம்பல வாணேச்சரர் கோவிலுக்கு போவது வழக்கம். அந்த கோயிலில் உறைந்து இருக்கும் இருளும் வெளிச்சமும் கலந்த ஒரு நிறம் மனசுக்கு மிகவும் அமைதியை கொடுக்கும். அப்படி போய்விட்டு வெளியே வந்து கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்கு முன் இருக்கும் ஒரு கடையில் பிளேன் ரீயும் வடையும் வாங்கி சாப்பிடுவது உண்டு. அத்துடன் பல தடவை அந்தோணியார் கோவிலுக்குள் போய் வணங்கி இருக்கின்றேன்.

பின் ஒரு தமிழ் கத்தோலிக்க பெண் ஒருவரை காதலித்துக் கொண்டு இருந்த இரண்டு வருடங்களில் அடிக்கடி உள்ளே அவருடன் சென்று அமைதியாக அமர்ந்து இருந்திருக்கின்றேன்.

எல்லா வழிபாட்டு தலங்களும் நேர்மறையான எண்ணங்களை அதிகமாக கொண்ட இடங்கள். வருகின்ற எந்த ஜீவனும் தம் பிரச்சனைகளுக்கு, கவலைகளுக்கு, முயற்சிகளுக்கு, நோய்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வருவர். எவரும் மற்றவர் நாசமாக போக வேண்டும் என்று வழிபட வருவதில்லை என்பதால் எப்பவும் நேர்மறையான எண்ணங்கள் கொண்ட இடமாகவே வணக்க தலங்கள் இருப்பதால் ஒரு கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ அல்லது புத்த கோவிலுக்கோ உள்ளே சென்று அமைதியாக இருக்கும் போது மனம் மிகவும் நிரம்பி போய் இருக்கும். பூசைகள் மீதும் மெழுகுவர்த்திகள் மீதும் எப்பவும் எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை என்பதால் அவற்றில் இருந்து விலகி இருப்பதுண்டு. பின்னர் கடவுள் இல்லை என்று கண்டபின்பும் கூட வழிபாட்டு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு வந்தால் மறுப்பதும் இல்லை.

போன வருடம் மகள் இயலினியை கூட்டிக் கொண்டு கொழும்பு போய் அங்கு தங்கிய 5 நாட்களில் ஒரு நாள் பொன்னம்பல வாணேச்சரர் கோவிலுக்கு கூட்டிச் சென்று காட்டியபின், அடுத்ததாக கொண்டு சென்றது கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்குதான். எம்முடம் வந்த அம்மா, இயலை கூட்டிக் கொண்டு சென்று சொரூபங்களை எல்லாம் தொட்டு கண்ணில் வைத்து வழிபட்டுக் கொண்டு இருந்தார். நான் வழக்கம் போல அமைதியை நிரப்பிக் கொண்டு இருந்தேன். இந்த இரண்டு கோவில்களும் மனசுக்குள் அத்தனை நல்ல நினைவுகளை கொண்டவை

நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இந்த கோவிலும் பாதிக்கப்பட்டு அதில் பலர் இறந்தமையை கேட்டதில் இருந்து எனக்கு வந்த மெல்லிய நடுக்கம் இந்த நல்ல நினைவுகளின் மீது இழைக்கப்பட்ட கொடூரத்தின் குரூரத்தின் பேரால் வருகின்றது. ஏனைய இடங்களிலிருந்து வரும் இழப்புகளின் செய்திகள் மனதை வெறுமைக்குள் தள்ளி விடுகின்றது.

அனைத்து வழிபாட்டு தலங்களின் மீதான தாக்குதல்களும் மானிடத்தின் பெயரால் கண்டிக்கபட வேண்டியவை. தம் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காக, மன அமைதிக்காக வரும் அப்பாவிகள் மீது கட்டவிழ்த்தப்படும் இந்த மாதிரியான வன்முறைகளால் மக்களை எப்பவும் ஒரு 'நடுக்கத்தில்' வைத்திருக்க செய்யும் உளவியல் போரிற்காக நூற்றுக்கணக்கானோரை கொன்று குவிக்கின்றனர். அவர்கள் எல்லாரையும் கொல்கின்றனர். ஆண் பெண் குழந்தைகள் என்று எந்த வேறுபாடும் இன்றி வழிபட வந்தவர்களை, ஆயுதம் எதுவுமற்ற அப்பாவிகளை குறிவைத்து கொல்கின்றனர். மனிதர்களை கொல்கின்றனர், போர் ஒன்றில் இலக்கு வைக்கப்படக் கூடாது என்று வரையறை செய்த இடங்களை இலக்கு வைத்து கொல்கின்றனர். அவர்களின் தேவை மனித சதையும், இரத்தமும், அது சிந்தும் போது வரும் அந்த நெடியும்.

துயரமும் யதார்த்தமும் என்னவெனில், இது இத்துடன் முடியப் போவது இல்லை என்பதுதான்.

தன் தாயை இழந்து, தன் குழந்தையின் முத்தங்களை இழந்து, பிரார்த்தனை செய்வதற்காக சென்ற அப்பாவை இழந்து, தனக்காவும் பிரார்த்தனை செய்ய போன துணையை இழந்து வாடும் உயிர்களுக்காகவும் மற்றும் காயம்பட்ட அத்தனை உறவுகளுக்காகவும் மனம் வருந்துகின்றேன்.

சபிக்கப்பட்ட உலககில் இருந்து வெறுமனே வருந்துவதை தவிர வேறு எது செய்ய முடிகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வைக்கிறவனை விட மதசுதந்திரம் என்று சொல்லி மக்களுக்கு தேவையற்ற கருத்துக்களை பரப்புபவ‌ர்களை முதலில் விசாரணை செய்ய வேண்டும்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
11 minutes ago, நிழலி said:

எப்பவும் நேர்மறையான எண்ணங்கள் கொண்ட இடமாகவே வணக்க தலங்கள் இருப்பதால் ஒரு கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ அல்லது புத்த கோவிலுக்கோ உள்ளே சென்று அமைதியாக இருக்கும் போது மனம் மிகவும் நிரம்பி போய் இருக்கும்.

ஆலயத்துக்கு சென்றால், நேர்மறை எண்ணம் உண்டாகி அமைதி அடைகிறோம்.

ஆனாலும், சில ஆன்மிக நிலையம் என்ற பெயரில் அமைதியுடன் வருபவரை, வெறியூட்டி அனுப்பும் நிலைமை உள்ளதே என்பதே எனது கவலை.

எங்கோயோ இருக்கும் நியூஸிலாந்து நாட்டில் கொல்லப் பட்ட வேறு நாட்டு இஸ்லாமியனுக்காக, சொந்த நாட்டு, வேறு மதத்தினை சேர்ந்தவர்களை கொன்று பழி  தீர்க்கலாம் என்ற எண்ணத்தினை என்பது?

5 minutes ago, putthan said:

குண்டு வைக்கிறவனை விட மதசுதந்திரம் என்று சொல்லி மக்களுக்கு தேவையற்ற கருத்துக்களை பரப்புபவ‌ர்களை முதலில் விசாரணை செய்ய வேண்டும்... 

கெனியாவில் இதேபோல ஒரு பெரிய அங்காடி ஒன்று மீது பெரும் தாக்குதல் நிகழ்ந்தது.

போலீசார் இங்கே போராடிக்கொண்டிருந்த போது, அங்கே மீடியா வெளிச்சம் புகுந்திருந்த சந்தடி சைக்கிள், அடிப்படை வாதத்தினை பரப்புபவர்கள் என்று சந்தேகம் கொண்டிருந்த 7 பேரை போலீசார் ரகசியமாக சுட்டு தள்ளி இருந்தனர்.

இப்போது அங்கே பிரச்னை இல்லை.

Link to comment
Share on other sites

50 minutes ago, நிழலி said:

நேற்று இரவில் இருந்து ஏற்பட்ட ஒரு நடுக்கம் இன்னும் மனதில் இருந்து விலகவில்லை.

........

சபிக்கப்பட்ட உலககில் இருந்து வெறுமனே வருந்துவதை தவிர வேறு எது செய்ய முடிகின்றது?

நிழலி, மனம் தளர வேண்டாம். இலங்கை பிரச்சினை மிகவும் சிக்கலான பிரச்சினை. ஆனால் மனித அறிவையும் புத்தியையும் பயன்படுத்தி எத்தனையோ சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. இது தான் மனிதகுலத்தின் வரலாறு. இந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அதை செய்ய நாங்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறன முயற்சிக்கு அறிவுக்கு முதலிடம் வழங்காமல் உணர்ச்சிக்கு முதலிடம் வழங்குவது தடையாக அமைகிறது. அறிவு ரீதியாக சாத்தியம் அற்றது என்று தெரிந்தும் உணர்வு ரீதியாக இது தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் போது பிரச்சினை தொடரும்.

மேலும் தமிழர்கள் தனித்து இந்த பிரச்சினையை தீர்ப்பது சாத்தியம் அற்றது. இதற்கு காரணம் தமிழர்கள் தமது சமுதாயத்துக்கு அப்பால் உள்ள நிலைமைகளையும் சிக்கல்களையும் அறிந்து இருக்கும் சாத்தியம் குறைவு. ஆகவே, இவ்வாறான முயற்சியில் அறிவார்ந்த ரீதியில் தீர்வு காண விரும்பும் சிங்களவர், முஸ்லிம்களோடு தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும். 

தளர்ந்து போகாதீர்கள். சரியான பாதையில் தேடுங்கள். மற்றவர்களுடன் இணைந்து தீர்வை தேடுங்கள் - கிடைக்கும்.

Link to comment
Share on other sites

3 hours ago, நிழலி said:

வருகின்ற எந்த ஜீவனும் தம் பிரச்சனைகளுக்கு, கவலைகளுக்கு, முயற்சிகளுக்கு, நோய்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வருவர். எவரும் மற்றவர் நாசமாக போக வேண்டும் என்று வழிபட வருவதில்லை

மிகவும் எதார்த்தமான வரிகள்!
ஆனால் இது ஜும்ஆ தொழுகைக்கு (வெள்ளிக்கிழமை தொழுகைக்கு) பொருந்தாது என நினைக்கிறன்!

Link to comment
Share on other sites

குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

bomb-720x450.jpg

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, தெஹிவளை மற்றும் கொழும்பின் பிரபல நட்சத்திர விடுதிகளும் இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஹோட்டல்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு கொழும்பு கட்டுநாயக்க விமானநிலைய நுழைவாயில் வீதியில், குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகத்தின்பேரில் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 10 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

http://athavannews.com/குண்டுத்தாக்குதலில்-உயி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.