Jump to content

6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகத்தின்பேரில் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 10 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக தெமட்டகொடையில் இருக்கும் பிரபல முஸ்லீம் தொழிலதிபரான இப்ரஹீம் ஜாஜியார் நேற்றுப் பொலிஸாரினால் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் இன்று இறந்துவிட்டதாகவும் ஜாப்னா முஸ்லீம் எனும் முஸ்லீம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேற்படி தொழிலதிபரின் இரு மகன்கள் குண்டுதாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், குண்டுவெடிப்பின் பின்னர் இவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டதாகவும், இதன் பின்னணியிலேயே இப்ரஹீம் ஹாஜியார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

ஆகவே, இவ்வாறா முயற்சியில் அறிவார்ந்த ரீதியில் தீர்வு காண விரும்பும் சிங்களவர், முஸ்லிம்களோடு தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்

இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்று சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும்வரை மேற்கூறியது நடக்காது. 

ஈஸ்டர் ஞாயிறு அன்று மக்கள் குழுமியிருக்கும் தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் செய்யும் அளவிற்கு இஸ்லாமியத் தீவிரவாதம் இரகசியமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வளங்களையும், சித்தாந்த வழிநடத்தலையும் கொடுத்தவர்களின் அடிப்படையான நோக்கம் இனங்களை தொடர்ந்தும் பிளவுபடுத்தி வைத்திருக்கவேண்டும் என்பதே. 

தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், மலையகத்தவர் எல்லாரும் தம்மை இலங்கைநாட்டின் குடிமக்கள் என்று பெருமையாக நினைக்கும் காலம் இலங்கையில் வராது என்பதுதான் எனது அபிப்பிராயம். 

Link to comment
Share on other sites

இலங்கையில் கிறீஸ்த்தவர்கள் மீது இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல் நடத்துமளவுக்கு  இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு என்ன நெருக்கடி அல்லது அவசியமும் இருப்பதாக தெரியவும் இ;ல்லை இதனால் அவர்கள் அடையப்போகும் நன்மை அல்லது பலன் என்னவென்றும் புரியவில்லை.  இங்கே என்ன கேம் யார் விழையாடுகின்றார்கள் இதில் சிங்கள புலனாய்வுத்துறையின் பங்கு என்ன இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பேரினவாதம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம்  கேள்வியாக நிற்கின்றது.  

Link to comment
Share on other sites

9 minutes ago, சண்டமாருதன் said:

இதனால் அவர்கள் அடையப்போகும் நன்மை அல்லது பலன் என்னவென்றும் புரியவில்லை.  இங்கே என்ன கேம் யார் விழையாடுகின்றார்கள் இதில் சிங்கள புலனாய்வுத்துறையின் பங்கு என்ன இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பேரினவாதம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம்  கேள்வியாக நிற்கின்றது.  

இதுவே என் மனதிலும் உள்ள கேள்வி. இனம், மதம் தாண்டி சில தீய சக்திகளின் சுயநலம் தான் மூலகாரணமாக இருக்குமோ? உள்நாட்டு அரசியலையும் தாண்டிய வேறு ஏதேனும் சக்தியா? இன்று ஊடகங்களில் காணும், கேட்கும் நிகழ்வுகளும் உண்மைக்கும் எவ்வளவு தூரமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, சண்டமாருதன் said:

இலங்கையில் கிறீஸ்த்தவர்கள் மீது இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல் நடத்துமளவுக்கு  இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு என்ன நெருக்கடி அல்லது அவசியமும் இருப்பதாக தெரியவும் இ;ல்லை இதனால் அவர்கள் அடையப்போகும் நன்மை அல்லது பலன் என்னவென்றும் புரியவில்லை.  இங்கே என்ன கேம் யார் விழையாடுகின்றார்கள் இதில் சிங்கள புலனாய்வுத்துறையின் பங்கு என்ன இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பேரினவாதம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம்  கேள்வியாக நிற்கின்றது.  

கோத்தபாய தனது அரசியல் தேவைகளுக்காக செய்த தாக்குதல்கள் என்றும் வாட்ஸப் இரைச்சல்கள் சொல்லுகின்றன. ஆனால் உல்லாசத்துறையை ஊக்குவிக்கும் நாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வர விருப்பமுள்ளவர் மேற்குநாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி 300 பேரை பலியாக்கச் சந்தர்ப்பம் இல்லை. 

எனினும் சிங்களப் புலனாய்வு தாக்குதல்கள் பற்றியே தெரிந்திருந்தும் அதன் தாற்பரியத்தை சரியாக எடைபோடவில்லை என்று தெரிகின்றது. பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் புரிய தேவையான திட்டங்களும், அதனைச் செயற்படுத்தத் தேவையான உறுதியையும் கூலிப்படைகளைக்கொண்டு செய்யமுடியாது. அதனால் இத்தாக்குதல்களைப் புரிந்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாகத்தான் இருக்கமுடியும். தாக்குதல்களின் நோக்கம் என்னவென்பது விரைவில் வெளிவரும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

சற்று முன் நேற்றைய குண்டு வெடிப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அதிர்ச்சிகர அறிக்கை!

நாடளாவிய ரீதியில் நேற்று காலை முதல் இடம்பெற்ற 8 வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காத்தான்குடி மற்றும் மாவனெல்லயை சேர்ந்த இருவர் தம்புள்ளையில் கைது. தவ்ஹீத் ஜமாத்தின் சஹ்ரானின் உறவினர்கள் இவர்களென தகவல்.

குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் குற்றப்புலனாய்வு திணைகளத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/118274?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

அனைத்தும் தற்கொலைத் தாக்குதல்களே! உறுதிப்படுத்தியது அரசாங்கம்!!

Image

நேற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற தாக்குதல்களுமே தற்கொலைத் தாக்குதல்கள் என்று சிறிலங்காவின் உத்தியோகபூர்வ பகுப்பாய்வாளர் ஏ.வெலியங்க சற்று முன்னர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்

https://www.ibctamil.com/srilanka/80/118305?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

4 hours ago, சண்டமாருதன் said:

இலங்கையில் கிறீஸ்த்தவர்கள் மீது இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல் நடத்துமளவுக்கு  இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு என்ன நெருக்கடி அல்லது அவசியமும் இருப்பதாக தெரியவும் இ;ல்லை இதனால் அவர்கள் அடையப்போகும் நன்மை அல்லது பலன் என்னவென்றும் புரியவில்லை.  இங்கே என்ன கேம் யார் விழையாடுகின்றார்கள் இதில் சிங்கள புலனாய்வுத்துறையின் பங்கு என்ன இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பேரினவாதம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம்  கேள்வியாக நிற்கின்றது.  

இது போன்ற நியாயமான சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்படுகின்றன!

சிங்களவர் நிறைந்த கற்றறிந்த சூழ்நிலையில் பணிபுரியும் எனது நண்பர் ஒருவரிடம் கதைத்தபோது தான் கதைத்த சிங்களவர்கள் அனைவரும் இதுவரை அரசு சொல்லும் கதைகளை நம்புவதாக இல்லையாம்.

அவர்கள் மற்றும் தமிழர் எழுப்பும் சந்தேகங்களில் சில:

  1. மகிந்த-மைத்திரி இரகசிய சந்திப்புக்களும் முன்னைய ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளும்
  2. அண்மையில் மகிந்த கும்பல் இந்தியாவுக்கு செய்த விஜயமும் சந்திப்புக்களும்
  3. அண்மையில் சுமந்திரன் இந்தியாவுக்கு செய்த விஜயமும் சந்திப்புக்களும்
  4. மைத்திரி பாதுகாப்புத் துறையை தனது பூரண கட்டுப்பாட்டில் எடுத்தது
  5. மைத்திரி புதுவருடம் பிறந்ததும் நல்ல செய்தி கிடைக்கும் என்று அடித்துச் சொன்னது
  6. அதன் பின்னர் மைத்திரியின் திருப்பதி, சிங்கப்பூருக்கான நீண்ட தனிப்பட்ட விஜயங்கள்
  7. எந்தவொரு பதில் நியமனங்களையும் மேற்கொள்ளாது மைத்திரி மேற்கொண்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டு பயணங்கள்
  8. போர்க்குற்றவாளி கோத்தபாயாவை காப்பாற்ற ஒற்றைக்காலில் நிற்கும் மைத்திரி – சிங்கள-பௌத்த பேரினவாதிகள் கூட்டு
  9. ஊழல்பேர்வழியும் மோசமான கொலைகாரன் கோத்தபாயவுக்கும் மைத்திரி – ரணிலுக்கும் இடையிலான நெருங்கிய இரகசிய நட்பு
  10. எப்பாடுபட்டாவது ஆட்சியை கவிழ்க்க ராஜபக்ச கும்பல் முயலுவது
  11. கடத்தல் கேடி கோத்தபாயாவுக்கும் சட்டவிரோத முஸ்லீம் குழுக்களுக்கும் உள்ள தொடர்புகள். கோத்தபாயா தமிழர்களைக் கடத்தி கொலைசெய்து கொள்ளையடித்த பெரும்பாலான சொத்துக்களின் பினாமிகளாக பெருமளவு முஸ்லிம்களே உள்ளனர்
  12. மோசமான ஆசாமி என்றறியப்பட்ட ஹிஸ்புல்லா கிழக்கின் ஆளுநராக ஆக்கப்பட்டது. இதன் பின்னணியில் முஸ்லீம் பயங்கரவாத அமைப்புக்களுடன் தாக்குதல்களுக்கான டீல் நடந்திருக்கலாம்.
  13. ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்ட ஆயுத அணிவகுப்பும் அதை கண்டுகொள்ளாத மைத்திரி-ரணில் அரசும்!
  14. ஈஸ்டர் படுகொலைகளை விட பல்லாயிரம் மடங்கு பெரிய பல படுகொலைகளை நடத்தி முடித்த பயங்கரவாதி கோத்தபாய, தான் எப்பாடுபட்டாவது ஜனாதிபதியாகித் தீருவது என்று ஒற்றைக்காலில் நிற்பது.
  15. கசிய விடப்பட்ட முன்னெச்சரிக்கை ஆவணங்கள், பெயர்கள், தமிழ் CNN செய்திகள்,...
  16. கிழக்கில் குண்டுத் தாக்குதல் தொடர்பாக இடம்பெற்ற ஒத்திகைகள்! அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அரச காவல்துறை.
  17. கைது செய்யப்பட்ட ஒரு முஸ்லீம் நபர் உடனடியாக கொல்லப்பட்டது.
  18. கடந்த காலங்களில் தெற்கில் நடந்த தற்கொலைத் தாக்குதல்கள் சில  (பிரேமதாச கொலை முதல் ....) தூரஇயக்கும் கட்டுபாட்டுக் கருவிகளால் குண்டை காவும் நபரின் சம்பந்தமின்றி இயக்கப்பட்டது வரலாறு! (பிரேமதாசாவின் உண்மையான கொலையாளிகள் - அயல்நாட்டு பயங்கரவாதக் கும்பல் - யார் என்பது இப்போது உலகறிந்த விடயம்).

 இவை அனைத்தும் சந்தேகங்களாக இருந்தாலும், கடந்த 30 வருட வரலாற்றை பார்க்கும் போது உண்மையாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். வழமைபோல பின்னணியிலுள்ள உண்மையான குற்றவாளிகளை தப்பவைக்கும் திசையிலேயே காய்கள் நகர்த்தப்படுவதாக நம்புவதற்கு நடந்த நடக்கும் சம்பவங்கள் காரணமாக அமைகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சண்டமாருதன் said:

இலங்கையில் கிறீஸ்த்தவர்கள் மீது இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல் நடத்துமளவுக்கு  இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு என்ன நெருக்கடி அல்லது அவசியமும் இருப்பதாக தெரியவும் இ;ல்லை இதனால் அவர்கள் அடையப்போகும் நன்மை அல்லது பலன் என்னவென்றும் புரியவில்லை.  இங்கே என்ன கேம் யார் விழையாடுகின்றார்கள் இதில் சிங்கள புலனாய்வுத்துறையின் பங்கு என்ன இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பேரினவாதம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம்  கேள்வியாக நிற்கின்றது.  

சாதாரண இஸ்லாமியருக்கு சிலவேளை இல்லாமல் இருக்கலாம் ஆனால் மதவாதிகளுக்கும் ,மதஅடிப்படைவாதிகளுக்கும் உண்டு...

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த தாக்குதலை அதிகமாக செய்கிறார்கள்

மேற்குலகில் தாக்குதல் நடத்தும் பொழுது கேளிக்கைவிடுதிகளை தெரிவு செய்கின்றனர்.....(அங்கு தேவாலயத்திற்கு செல்லும் மக்களை விட கேளிக்கை விடுதிகளுக்கு செல்லும் மக்கள் அதிகம்)அத்துடன் கேளிக்கை இஸ்லாத்திற்கு எதிரானது...

ஆசியா ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தேவாலயத்தை தெரிவு செய்கின்றனர்....(மக்கள் அதிகம் கூடுவதானால்)உருவ வழிபாடு இஸ்லாத்திற்க்கு எதிரானது

Link to comment
Share on other sites

தற்கொலைக் குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் கபீர் ஹாசீம்

z_pi-Kabir-Hashim-720x450.jpg

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என அமைச்சர் கபீர் ஹாசீம் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் சுமார் 295 பேர் வரையில் கொல்லப்ட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மாவனெல்ல பகுதியில் பௌத்த சிலைகள் மீது தாக்குதல் நடத்திய இயக்கமொன்றைச் சேர்ந்த நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அதன் போது உயர் அரசியல் தரப்பின் அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஒருவரும் தற்கொலைதாரியாக தாக்குதலில் பங்கேற்றிருந்தார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசியல் அழுத்தங்கள் காரணமாக குறித்த தற்கொலை குண்டுதாரி விடுவிக்கப்பட்டார் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனை விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தற்கொலைக்-குண்டுதாரி-ஏற்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சண்டமாருதன் said:

இலங்கையில் கிறீஸ்த்தவர்கள் மீது இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல் நடத்துமளவுக்கு  இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு என்ன நெருக்கடி அல்லது அவசியமும் இருப்பதாக தெரியவும் இ;ல்லை இதனால் அவர்கள் அடையப்போகும் நன்மை அல்லது பலன் என்னவென்றும் புரியவில்லை.  இங்கே என்ன கேம் யார் விழையாடுகின்றார்கள் இதில் சிங்கள புலனாய்வுத்துறையின் பங்கு என்ன இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பேரினவாதம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம்  கேள்வியாக நிற்கின்றது.  

கோயிலில் குண்டு வெடித்தால் பக்கத்தில் உள்ள இந்து நாடான இந்தியாவே திரும்பி பார்க்காது...இப்ப முழு உலகமே இந்த குண்டு வெடிப்பை பற்றித் தான் பேசுகிறது...ராஜபக்ச சகோதரர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை...இப்ப இருக்கும் இக்கட்டான நேரத்தில் இப்படியான வேலைகளை செய்ய மாட்டார்கள்...அவர்கள் தமிழ்,சிங்கள கலவரத்தை தான் தூண்டி விடுவார்கள்...இதை செய்தவர்கள் வெளியா ட்டு துணையுடன் இயங்கும் ஒரு மத வெறி பிடிச்ச அமைப்பு...இலங்கையில் இப்படியானவர்களை கூண்டோடு அழிக்க வேண்டும்...இங்கு தற்கொலை தாக்குதலில் ஈடுப்பட்டவர்களுக்கு தமிழ்,சிங்கள  கிறிஸ்தவ மக்களோடு ஒரு கோபமும் இல்லை...தங்கள் யார்?ம் தங்களது மதம் மட்டும் தான் உண்மை என்று காட்ட வேண்டிய தேவை இருந்ததால் அதை செய்து காட்டி உள்ளார்கள்...இதுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளும் தெரிந்தோ,தெரியாமலோ உதவி செய்திருக்கலாம் 
 
Link to comment
Share on other sites

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்பொழுது 8 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தாக்குதலில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி வேமுராய் துளசிராம், எஸ்.ஆர் நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா, லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் உள்ளிட்ட எண்மர் உயிரிழந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலில் 290 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 35 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கை-குண்டுவெடிப்பில்/

Link to comment
Share on other sites

தான் வெடிகுண்டோடு வந்தேன் என கூறிவிட்டு வெடிக்க செய்த தற்கொலைதாரி; சம்பவத்தை நேரில் பார்த்துகொண்டிருந்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் வெடிகுண்டு வீசியவனை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Negombo-வில் உள்ள செண்ட் செபஸ்டின் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நடந்தது.

இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

இது குறித்து திலீப் கூறுகையில், குண்டு வெடிப்புக்கு முன்னர் நேற்று காலை 7.30 மணிக்கு எனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செண்ட் செபஸ்டின் தேவாலயத்துக்கு வந்தேன்.

அப்போது அங்கு கூட்டமாக இருந்ததால் வேறு தேவாலயத்துக்கு செல்ல நானும் என் மனைவியும் முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினோம்.

அப்போது என்னுடைய இரண்டு பேத்திகள் உட்பட என் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தேவாலயத்தின் வாசலிலேயே நின்றிருந்தனர்.

அப்போது 30 வயதான இளைஞர் ஒருவர் கையில் கனமான பையுடன் வந்துள்ளார். பின்னர் என் பேத்தியின் தலையில் கை வைத்து விட்டு தேவாலயத்தின் உள்ளே சென்றார், அவர் தான் வெடிகுண்டோடு வந்த நபர் என கூறியுள்ளார்.

மேலும், அவரை பார்க்க அப்பாவியாக இருந்தது, அவர் எந்த விதம பயமும், பதட்டமும் இன்றி நிதானமாகவே காணப்பட்டார்.

அவர் உள்ளே சென்றவுடன் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

பின்னர் என் குடும்பத்தார் அங்கிருந்து பதறியடித்து கொண்டு ஓடினார்கள். இப்படி தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/118373?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

கோத்தபாய தனது அரசியல் தேவைகளுக்காக செய்த தாக்குதல்கள் என்றும் வாட்ஸப் இரைச்சல்கள் சொல்லுகின்றன. ஆனால் உல்லாசத்துறையை ஊக்குவிக்கும் நாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வர விருப்பமுள்ளவர் மேற்குநாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி 300 பேரை பலியாக்கச் சந்தர்ப்பம் இல்லை. 

எனினும் சிங்களப் புலனாய்வு தாக்குதல்கள் பற்றியே தெரிந்திருந்தும் அதன் தாற்பரியத்தை சரியாக எடைபோடவில்லை என்று தெரிகின்றது. பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் புரிய தேவையான திட்டங்களும், அதனைச் செயற்படுத்தத் தேவையான உறுதியையும் கூலிப்படைகளைக்கொண்டு செய்யமுடியாது. அதனால் இத்தாக்குதல்களைப் புரிந்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாகத்தான் இருக்கமுடியும். தாக்குதல்களின் நோக்கம் என்னவென்பது விரைவில் வெளிவரும் என்று நம்புகின்றேன்.

14 hours ago, putthan said:

சாதாரண இஸ்லாமியருக்கு சிலவேளை இல்லாமல் இருக்கலாம் ஆனால் மதவாதிகளுக்கும் ,மதஅடிப்படைவாதிகளுக்கும் உண்டு...

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த தாக்குதலை அதிகமாக செய்கிறார்கள்

மேற்குலகில் தாக்குதல் நடத்தும் பொழுது கேளிக்கைவிடுதிகளை தெரிவு செய்கின்றனர்.....(அங்கு தேவாலயத்திற்கு செல்லும் மக்களை விட கேளிக்கை விடுதிகளுக்கு செல்லும் மக்கள் அதிகம்)அத்துடன் கேளிக்கை இஸ்லாத்திற்கு எதிரானது...

ஆசியா ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தேவாலயத்தை தெரிவு செய்கின்றனர்....(மக்கள் அதிகம் கூடுவதானால்)உருவ வழிபாடு இஸ்லாத்திற்க்கு எதிரானது

சிங்கள புலநாய்வுத்துறையில் முஸ்லீம்களின் பங்கு மிக அதிகம். இவர்களை வைத்தே சிங்களம் தமிழர்களை உள்ளகமாக கருவறுத்தது. தென்னிலங்கையில் நடந்த காணாமல் போதல்கள் விசாரணைகள் கிழக்கு மாகாணத்தில் நடந்த தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்திலும் புலனாய்வுத்துறை முஸ்லீம்களை வைத்தே சாதித்தது.  இத் தாக்குதலில் முஸ்லீம்களை வைத்தே முஸ்லீம்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் பயன்படுத்தியிருக்கலாம்.  சற்று மிதமான மதப்பற்றுக் கொண்டவர்கள் தீவிரவாத வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.  இதனூடாக இப்போது சர்வதேச அளவில் இலங்கை முஸ்லீம்கள் பயங்கரமானவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பேரினவாதம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.  தாக்குதலுக்கான திட்டமிடலில் புலனாய்வுக்கு நிகரான புத்திசாலித்தனம் இருக்கின்றது அதை விட வேகம் சம்மந்தப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கைகளிலும் இருக்கின்றது. இந்த சம்பவம் ஒரு தொடக்கப் புள்ளி. இதிலிருந்த எதை ஆரம்பிக்க போகின்றார்கள் எப்படி முடிக்கப்போகின்றார்கள் என்பதை பார்ப்போம். 

9 hours ago, ரதி said:

இலங்கையில் இப்படியானவர்களை கூண்டோடு அழிக்க வேண்டும்...

தாக்குதலின் நோக்கம் இதுவாக இருக்குமோ என்ன ஐயம் தான் எனக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சண்டமாருதன் said:

சிங்கள புலநாய்வுத்துறையில் முஸ்லீம்களின் பங்கு மிக அதிகம். இவர்களை வைத்தே சிங்களம் தமிழர்களை உள்ளகமாக கருவறுத்தது. தென்னிலங்கையில் நடந்த காணாமல் போதல்கள் விசாரணைகள் கிழக்கு மாகாணத்தில் நடந்த தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்திலும் புலனாய்வுத்துறை முஸ்லீம்களை வைத்தே சாதித்தது.  இத் தாக்குதலில் முஸ்லீம்களை வைத்தே முஸ்லீம்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் பயன்படுத்தியிருக்கலாம்.  சற்று மிதமான மதப்பற்றுக் கொண்டவர்கள் தீவிரவாத வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.  இதனூடாக இப்போது சர்வதேச அளவில் இலங்கை முஸ்லீம்கள் பயங்கரமானவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பேரினவாதம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.  தாக்குதலுக்கான திட்டமிடலில் புலனாய்வுக்கு நிகரான புத்திசாலித்தனம் இருக்கின்றது அதை விட வேகம் சம்மந்தப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கைகளிலும் இருக்கின்றது. இந்த சம்பவம் ஒரு தொடக்கப் புள்ளி. இதிலிருந்த எதை ஆரம்பிக்க போகின்றார்கள் எப்படி முடிக்கப்போகின்றார்கள் என்பதை பார்ப்போம். 

தாக்குதலின் நோக்கம் இதுவாக இருக்குமோ என்ன ஐயம் தான் எனக்கும்

இந்த திவிரவாதம் 1987 ஆம் ஆண்டுகளிலயே உருவாகிவிட்டது ...சவுதிஅரேபியாவில் நான் பணிபுரியும் பொழுது ஒர் துண்டுபிரசுரம் கிடைத்தது அதில் தமிழ் காபிர்களை அழிக்க ஒன்றிணைவோம் என எழுதியிருந்தது.....

இலங்கையில் அன்று 1970 களில் இருந்த இஸ்லாமியரின் காலாச்சார‌த்திற்கும் தற்பொழுதைய் கலாச்சாரத்திற்க்கும்நிறையவே வேறுபாடு உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, putthan said:

57486603_2341055075958805_52427867176052

தமிழ் காபிர்கள் மற்றும் தவ்ஹீத்  என்றால் என்ன அர்த்தம்?
இஸ்லாமிய பயங்கரவாதத்தை தெரிந்து கொள்ள முதல், அரபு மொழி படிக்க வேணும் போலிருக்கே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, சண்டமாருதன் said:

சிங்கள புலநாய்வுத்துறையில் முஸ்லீம்களின் பங்கு மிக அதிகம். இவர்களை வைத்தே சிங்களம் தமிழர்களை உள்ளகமாக கருவறுத்தது. தென்னிலங்கையில் நடந்த காணாமல் போதல்கள் விசாரணைகள் கிழக்கு மாகாணத்தில் நடந்த தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்திலும் புலனாய்வுத்துறை முஸ்லீம்களை வைத்தே சாதித்தது.  இத் தாக்குதலில் முஸ்லீம்களை வைத்தே முஸ்லீம்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் பயன்படுத்தியிருக்கலாம்.  சற்று மிதமான மதப்பற்றுக் கொண்டவர்கள் தீவிரவாத வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.  இதனூடாக இப்போது சர்வதேச அளவில் இலங்கை முஸ்லீம்கள் பயங்கரமானவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பேரினவாதம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.  தாக்குதலுக்கான திட்டமிடலில் புலனாய்வுக்கு நிகரான புத்திசாலித்தனம் இருக்கின்றது அதை விட வேகம் சம்மந்தப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கைகளிலும் இருக்கின்றது. இந்த சம்பவம் ஒரு தொடக்கப் புள்ளி. இதிலிருந்த எதை ஆரம்பிக்க போகின்றார்கள் எப்படி முடிக்கப்போகின்றார்கள் என்பதை பார்ப்போம். 

தாக்குதலின் நோக்கம் இதுவாக இருக்குமோ என்ன ஐயம் தான் எனக்கும்

இந்த தாக்குதல் மூலம் மாகாணசபைகள் கலைக்கப்படலாம்,மாகாண ஆளுனர் அரச உத்தியோத்தராக‌ இருக்க வேண்டும் என்ற சட்டம் வரலாம் மத்திய அரசு நேரடியாக ஆளுனர் மூலம் ஆட்சி செய்யும்...மாவட்டங்களுக்கு அரசாங்க அதிபர் போன்று மாகாணங்களுக்கும் அரசாங்க ஆளுனர் நியமிக்கப்படுவார்கள்....இளைப்பாரிய உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகள் ஆளுனராக வ‌ரும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும் ..
காத்தான்குடி தனியாக அபிவிருத்தி செய்வது கடின்மாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

57486603_2341055075958805_52427867176052

தமிழ் காபிர்கள் மற்றும் தவ்ஹீத்  என்றால் என்ன அர்த்தம்?
இஸ்லாமிய பயங்கரவாதத்தை தெரிந்து கொள்ள முதல், அரபு மொழி படிக்க வேணும் போலிருக்கே...

இஸ்லாத்தை தழுவாதோர் காபீர்கள் ,என நான் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

57486603_2341055075958805_52427867176052

தமிழ் காபிர்கள் மற்றும் தவ்ஹீத்  என்றால் என்ன அர்த்தம்?
இஸ்லாமிய பயங்கரவாதத்தை தெரிந்து கொள்ள முதல், அரபு மொழி படிக்க வேணும் போலிருக்கே...

தவ்ஹீத் என்பது ஏக இறைவனை வழிபடுவது என்று நினைக்கிறேன். காபிர்கள் என்பது வேறு நம்பிக்கைகள் கொண்டவர்கள். வகாபிகளின் பார்வையில் ஷியா முஸ்லிம்களும் காபீர்கள் மாதிரிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, putthan said:

இஸ்லாத்தை தழுவாதோர் காபீர்கள் ,என நான் நினைக்கிறேன்

28 minutes ago, நீர்வேலியான் said:

தவ்ஹீத் என்பது ஏக இறைவனை வழிபடுவது என்று நினைக்கிறேன். காபிர்கள் என்பது வேறு நம்பிக்கைகள் கொண்டவர்கள். வகாபிகளின் பார்வையில் ஷியா முஸ்லிம்களும் காபீர்கள் மாதிரிதான்

நன்றி... புத்தன் &  நீர்வேலியான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் விடுதலைபுலிகள் பற்றிய செய்திகளுக்கு லைக் போட்டாலே நாலாம் மாடிக்கு அழைத்து புலன் விசாரணை செய்யும் அரசாங்கம், முஸ்லீம் அல்லாதவர்களை இரக்கமின்றி கொல்லவேண்டுமென்று இதுபோன்று பல வீடியோக்களை வெளியிட்ட இவரை ஏன் கண்டுக்கவே இல்லை?

மத சமூக வன்முறையை அப்பட்டமாக போதிக்கும் இவர்பற்றி பேஸ்புக் நிர்வாகத்துக்கூட யாரும் புகார் செய்யவில்லை என்பதும் ஆச்சரியம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி... புத்தன் &  நீர்வேலியான்.

தவ்ஹீத் என்பது ஏக இறைவனை குறிக்கும். (அல்லா)
லாகிலாலா இல்லல்லா மொகமது ரசூலுல்லா.(கலீமா)
அல்லாவே ஏகஇறைவன் அவனது தூதர் மொகமது.

இதை யாரெல்லாம் ஏற்றுக்கொள்ளாதவர்களோ, அவர்கள் எல்லோரும் காபீர்கள். (முஸ்லீம் பேர் கொண்டு, இஸ்லாத்தை பின்பற்றினாலும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, colomban said:

தவ்ஹீத் என்பது ஏக இறைவனை குறிக்கும். (அல்லா)
லாகிலாலா இல்லல்லா மொகமது ரசூலுல்லா.(கலீமா)
அல்லாவே ஏகஇறைவன் அவனது தூதர் மொகமது.

இதை யாரெல்லாம் ஏற்றுக்கொள்ளாதவர்களோ, அவர்கள் எல்லோரும் காபீர்கள். (முஸ்லீம் பேர் கொண்டு, இஸ்லாத்தை பின்பற்றினாலும்) 

எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இது 

என்ன கொழும்பான் மடவள செய்திபக்கம் போகவில்லை போல🧐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.