யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

திருக்குறளுக்குக் கன்னக்கோல் போட்ட ஆரியக் கயவன் பரிமேலழகர் - குறள் ஆய்வு 8: பகுதி-1

Recommended Posts

திருக்குறளுக்குக் கன்னக்கோல் போட்ட ஆரியக் கயவன் பரிமேலழகர்

- குறள் ஆய்வு 8: பகுதி-1

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

 "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"

-பாவேந்தர் பாரதிதாசன்

மரபுச்சொற்கள் நம் நாட்டுடமையை நிலைநாட்டும் உரிமைப் பத்திரம்!

வீடுகள், விவசாய நிலங்கள் போன்ற அசையாச் சொத்துக்களுக்கு உரியவர் இவர்/இவர்கள் என்பதை சார்பதிவாளர் அலுவலகங்களில் தக்க சான்றாவணங்கள் கொண்டு, உடைமைப் பத்திரங்கள் எழுதி, பதிவு செய்யப்பட்டு நிறுவப்படுகின்றது. இப்பத்திரங்களே சொத்துடைமையை ஒருவருக்கு உறுதி செய்யும் காப்பாக விளங்குகின்றன. சொத்துத் தகராறுகள் ஏற்படும்போது, தக்க உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்து வழக்கறிஞர்கள் மூலம் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு இனமக்களுக்கு அவர்கள் வாழும் நாட்டின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவது அவர்தம் தாய்மொழியின் தொன்மை அம்மண்ணுக்குரியது என்பதை நிலைநாட்டுவதில்தான் அடங்கியுள்ளது.  தாய்மொழியின் தொன்மையை நிறுவும் சான்றாவணங்கள் அம்மொழியின் மரபுச்சொற்களே! மரபுச்சொற்கள் மொழி உரிமைக்கான மொழிப்பத்திரச் சான்றாவணங்கள். மரபுச்சொற்களை முறையாக மொழியியல் வழியில், அம்மொழிக்கானதுதான் என்று  நிறுவப்படும்போதுதான், அம்மொழி பேசும் மக்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டின் நாட்டுடைமை அவர்களுக்கானது என்பது நிலைநாட்டப்படும்.

மரபுச் சொற்கள் நம் அறிவுசார் சொத்துக்களின் உரிமைப் பத்திரம்!

தமிழ்நாட்டில் வந்தேறிய ஆரியர்கள் இந்த உண்மையை மிக நன்றாக அறிந்திருந்தார்கள். தமிழர்களின் அறிவுச் சொத்தைத் தமிழர் அறியாமல் திருடிச்செல்ல, தமிழர்களின் மரபுச் சொற்களுக்கு ஆரியப் பொருள் உரைக்கும் தந்திரத்தை ஆரிய உரையாசிரியர்கள் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறார்கள். காலப்போக்கில், ஆரியப்பொருளில் வழங்கப்படும் தமிழ் மரபுச்சொற்களை ஆரியச்சொற்கள் என்றே சாதிக்க இத்தந்திரம் பயன்பட்டு வந்திருக்கிறது.

திருக்குறளுக்குக் கன்னக்கோல் போட்ட ஆரியக் கயவன் பரிமேலழகர் !

அண்மைக்காலத்தில், தொல்லியல் அறிஞர் என்னும் போர்வையில் வாழும் ஒரு ஆரியக் குள்ளநரியான திரு.நாகசாமி என்பவர், தமிழரின் அறிவுச் சொத்தான திருக்குறளை ஆரிய வேதசாத்திரங்களின் சுருக்கம் என்று சொல்லிக் களவாட முயற்சி செய்ததை தமிழர்கள் அனைவரும் அறிவார்கள். திரு.நாகசாமி போன்ற ஆரியக் குள்ளநரிகள், திருக்குறள் கோட்டைக்குள் நுழைய வசதியாக  திருக்குறளுக்குக் கன்னக்கோல் போட்ட  ஆரிய முதற்கயவன் பரிமேலழகர் என்னும் திருக்குறள் உரையாசிரியர் என்பதை அறிதல் நலம். தமிழர்களின் வாழும் மரபுச் சொல் 'அங்கணம்'. தொன்றுதொட்டு, தமிழர்களின் வீடுகளில், அடுப்பங்கரையின் ஓர் ஓரம் சுமார் மூன்று அல்லது ஐந்து சதுரடியில் வாட்டமாக நீர்வடியும் வகையில் அமைக்கப்பட்ட அங்கணமே சமையல் பாத்திரங்களைக் கழுவவும், வீட்டுப் பெண்கள் குளிக்கவும் பயன்படுத்தும் இடமாகும்.  இச்சொல் இன்றும் தென்மாவட்டங்களில் வழக்கில் உள்ள சொல். செத்தமொழி சமற்கிருதத்தில், 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'முற்றம்' என்று ஆரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர். இச்சொல்லுக்கு பரிமேலழகன்  ஆரியப் பொருள் உரைக்கும் தந்திரத்தை இப்போது காண்போம்.

இன்றிலிருந்து ஏறத்தாழ 2050 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டிக் கொளல்.  - திருக்குறள்:720

என்ற திருக்குறளை எடுத்துக்கொள்வோம்.

இக்குறளுக்குப் பத்தாம் நூற்றாண்டின் உரையாசிரியர் மணக்குடவர் எழுதிய  உரை: "அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின்." என்பது.  அங்கணம் என்பது என்ன என்று தமிழர்கள் அறிவார்கள் என்பதால், அங்கணத்தை அங்கணம் என்றே சொல்லிவிட்டுப் போகிறார் மணக்குடவர்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு அழகு தமிழில் சிறந்த உரைஎழுதிய பரிமேழகன், இத்திருக்குறளின் உரையில்

"தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும்." என, 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'முற்றம்' என்ற சமற்கிருதப் பொருள் கூறுவதன் மூலம், திருக்குறளின் தமிழ் மரபுச் சொல்லான 'அங்கணம்' என்பதை, தனது ஆரிய நஞ்சைச் செலுத்தி நீக்க முயல்கிறார்.

திருக்குறளுக்கு பரிமேலழகர் வைத்த கண்ணிவெடி

பரிமேலழகர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழுக்கும், திருக்குறளுக்கும் எதிராக வைத்த ஆரியக் 'கண்ணிவெடி' 'இருபதாம் நூற்றாண்டில் பலமாக தன் வேலையைக் காட்டியது. திருக்குறள் உரை என்றால் பரிமேலழர் உரைதான் என்று ஏழு நூற்றாண்டுகள் மயங்கியிருந்த தமிழ்ச் சமூகத்தின் தாக்கம் பெரும் தமிழறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை.

பரிமேலழகரிடம் ஏமார்ந்த கலைஞரும் மு.வ.வும்

திருக்குறளுக்கு உரையெழுதிய புகழ்பெற்ற உரையாசிரியர்களான தமிழறிஞர்கள் முனைவர். மு.வரதராசனார், கலைஞர் கருணாநிதி போன்றவர்களும், பரிமேலழகர் உரையைப் பின்பற்றி, 'அங்கணம்' என்பதற்கு முற்றம் என்றே உரைஎழுதிச் சென்றார்கள் என்றால், தமிழ்ப் பகைவர்களான ஆரியர்களுக்குச் சொல்லவா வேண்டும்?

'அங்கணத்து அழுக்குத் தின்னும் நரியே! நாயினும் கடைப்பட்டோனே!' பரிமேலழகரைத் திட்டிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்!!

கவிச்சக்கரவர்த்தி கம்பரும், பரிமேலழகரும் சம காலத்தவர்கள். கம்பர் எவ்வாறு தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பாட்டில் வைத்துப் புகழ்ந்தாரோ, அவ்வாறே, தமிழ்த் துரோகியான குள்ளநரி பரிமேலழகரையும் தம் பாட்டில் வைத்து இகழ்ந்து தள்ளியிருக்கிறார். வள்ளுவரின் 'அங்கணம்' என்ற சொல்லையே அப்பாட்டில் எடுத்தாண்டுள்ளார்.

சீதாபிராட்டி இராவணனை 'அங்கணத்து அழுக்குத் தின்னும் நரியுடன் வாழ்வதுண்டோ? நாயினும் கடைப்பட்டோனே!' என்று  திட்டித் தீர்ப்பதாக அமைத்த அப்பாடல், உண்மையில், 'அங்கணம்' என்பதற்கு 'முற்றம்' என்ற ஆரியப்பொருள் உரைத்த நயவஞ்சகப் பரிமேலழகனைக் குறிக்கவே பாடியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உள்ளது. வாசகர்களுக்காக கம்பனின் முழுக்கவிதையும் இங்கே தரப்பட்டுள்ளது:

'வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்

எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற

அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்

நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே! 68

 

கவிச்சக்கரவர்த்தியல்லவா? கவி நயத்துக்குச் சொல்லவா வேண்டும்?

 

தொல்லியல் நாகசாமியின் ஆரியக் குள்ளநரித் தொல்லையியல்!

ஆரிய நச்சுப்பாம்பான திரு.நாகசாமி இப்போது திருக்குறள்: ஆரிய வேதசாத்திரங்களின் சுருக்கம்' 'Tirukkural: an Abridgement of Sastras' என்று புத்தகம் எழுதியே வெளியிட்டுவிட்டார். 'அங்கணம்' போன்ற வாழும் தமிழ் மரபுச் சொற்களே திருக்குறள் உள்ளிட்ட அழியாப் புகழ்பெற்ற நம் அறிவுச் சொத்துக்களைக் காக்க வல்லவை. ஆரியர்களின் குள்ளநரித்தனத்தை தமிழர்களுக்குத் தொடர்ந்து எழுதியும், பேசியும் விளக்கவேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. தக்க சான்றுகள் கைக்கொண்டே ஆரிய நச்சுப் பரப்புரையை எதிர்கொண்டு, நம் மொழியையும், மக்களையும் காக்க இயலும். தமிழகத்தை ஆள்பவர் தமிழ்ப்பற்றுள்ள தமிழனாக இருந்தால் மட்டுமே இது இயலும் என்பதைத் தமிழர்கள் உணர்தல் வேண்டும்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலி னால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

செய்தி அருமை. ஒரு காலத்தில் பரிமேலழகரைத் தமிழறிஞர் பெருமக்கள் தலையில் தூக்கிக் கொண்டாடியதுண்டு. தற்போது இனம் கண்டு கொண்டனர். இப்போதும், திருக்குறளைத் தொகுத்துப் பகுத்தமைக்குப் பரிமேலழகருக்கும், பழந்தமிழ்ச் செல்வங்களை வெளிக்கொணர்ந்தமைக்கு உ.வே.சா வுக்கும் தமிழ்ச் சமூகம் நன்றிக் கடன் பட்டுள்ளது. அவர்களும் தேவ பாடையைத் தூக்கித் திரிந்ததும், ஆரியத்தைத் தூக்கிப் பிடித்ததும் அரவம் தன் பண்பை மறப்பதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு. நாகசாமியின், தமிழுக்கு எதிரான பொய்யுரைக்காக அவருக்கு பாஜக அரசு பத்மபூஷன் விருதளித்தது வன்மம் நிறைந்தது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு