Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நாம் பாவிக்கும் மிளகாய்த்தூள் ஆரோக்கியமானதா?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இங்கே வந்த பல மிளகாய்த்தூள் நிரம்பிய கொள்கலன்கள் சோதனைகளின் பின்னர் தடுக்கப் பட்டுள்ளன.

அந்த கணங்களில் எல்லாம், உடனடியாக சம்பந்தப்பட நிறுவனங்கள் பணம் செலவழித்து, விளம்பரம் செய்து, செய்திகளை வெளியிடக்கூடிய ஊடங்களின் வாயை அடைத்து உள்ளன என்பதும் தெரியுமா, இல்லையா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது கிண்ணத்தில் உள்ள மிளாகாய் தூளில், மரத் தூள் கலந்து இருக்கின்றார்கள் போலுள்ளது.
உணவு சம்பந்தப் பட்ட  தொழில் என்பது, மன ஆத்ம திருப்தி தரும் சேவை என்பதற்கு அப்பால்...
வியாபாரம் என்று வரும் போது... மற்றவன் செத்தால் என்ன, 
தனக்கு பணம் வந்தால் போதும் என நினைக்கும் மனப்பான்பை...
எல்லா இடங்களிலும்.. அதிகரித்து இருப்பது, கவலைக்குரியது.
இவற்றை... கட்டுப் படுத்தும்.. அரச அதிகாரிகளும்,
அரசாங்க சம்பளத்தை வாங்கி விட்டு, தமது கடமையை செய்யாமல் இருப்பது, கண்டனத்துக்குரியது.   

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 சொந்தமாய் மிளகாய்த்தூள் அரைக்கத்தெரியாத ஆக்கள்  கறிக்கு உறைப்பு வேணுமெண்டால் இரண்டு செத்தல் மிளகாயை வறுத்தோ வறுக்காமலோ அருவல் நொருவலாக்கிப்போட்டு கறியோடை சேர்த்து சமையுங்கோ.......ஒரு பிரச்சனையுமேயில்லை.பின் விளைவு பக்க விளைவு எதுவுமேயில்லை.

கோதாரி விழுந்த உந்த  போத்தில்   தூளுகளை வாங்கி பாவிச்சு வருத்தத்தை தேடாதேங்கோ....இல்லாட்டி இரண்டு உறைப்பான பச்சைமிளகாயை வாங்கி கடிச்சு சாப்பாட்டோடை சாப்பிட்டாலோ கறிக்கை போட்டு சமைச்சாலோ நல்லாய்த்தான் இருக்கும்.


போத்தில் மிளகாய்த்தூள்..........ஐயோ பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்ட ரேஞ்சிலை நான் இருக்கிறன்.

 உங்கடை இனம் தெரியாத வருத்தத்துக்காக பின்னாலையும் முன்னாலையும் கமராவிட்டு செக்கிங் பண்ணுற அளவுக்கு உந்த போத்தில் தூளின்ரை விக்கனம் எக்கச்சக்கம் கண்டியளோ..
#அனுபவம் பேசுது#

Link to comment
Share on other sites

நானும் முன்பெல்லாம் போத்தல் தூள் தான் பாவிப்பேன். கடந்த சில வருடமாகத் தான் ஊரிலிருந்து எடுப்பித்த மிளகாய், சரக்குத் தூளைப் பயன்படுத்தி வருகிறேன். சுகாதாரமானது மட்டுமல்ல, அவற்றின் மணமும், சுவையும் தனித்துவமானது! 😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 சொந்தமாய் மிளகாய்த்தூள் அரைக்கத்தெரியாத ஆக்கள்  கறிக்கு உறைப்பு வேணுமெண்டால் இரண்டு செத்தல் மிளகாயை வறுத்தோ வறுக்காமலோ அருவல் நொருவலாக்கிப்போட்டு கறியோடை சேர்த்து சமையுங்கோ.......ஒரு பிரச்சனையுமேயில்லை.பின் விளைவு பக்க விளைவு எதுவுமேயில்லை.

 

அண்ணை, 
தனி செத்தல் மிளகாயை கூட போட்டால், பக்க விளைவு இருக்குமோ இல்லையோ தெரியாது, ஆனால் அடுத்த நாள் "பின் விளைவு" கடுமையாக இருக்கலாம்😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எனது பிறந்தநாளுக்கு உளம்கனிந்து  வாழ்த்திய சொந்தங்கள் தமிழ் சிறி அண்ணா, புங்கையூரன் அண்ணா, சகோதரர் நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, கிருபன் ஜீ, சகோதரி ஜெகதா துரை, புரட்சிகர தமிழ்தேசியன் அண்ணா, சுவீ அண்ணா, வாத்தியார் ஐயா, சகோதரர் நுணா, வாதவூரான் அண்ணா, சகோதரி ரதி, சகோதரர் நொச்சி, குமாரசாமி அண்ணர், சகோதரர் பெருமாள்,  நிலாமதி அக்கா , சகோதரர் துல்பென், சகோதரர் ஓணாண்டியர், சகோதரர் கந்தையா,  சகோதரர் சுவைப்பிரியன், சகோதரர் சபேஸ், சகோதரர் எப்போதும் தமிழன், சகோதரர் கோஷன், சகோதரர் ஏராளன், நிழலி சாமியார்  மற்றும்  அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.  உங்கள் வாழ்த்துக்களில் அகம் மகிழ்ந்து கரைந்து போகிறேன். 🙏
  • அப்படின்னா இனி தமிழ் அரசியல்வாதிகளின் பாடு?
  • கண்மணி , தமிழினி குடும்பத்தினருக்கு எமது  ஆழ்ந்த அனுதாபங்கள்.......! 
  • அடியும் இல்லை நுனியும் இல்லை. ☹️ யாரப்பா இதை இணைத்தது..🤣
  • கிரிப்டோ கரன்சி எனக்கு நீண்ட நாளாக அறிமுகம் ஆனாலும் சென்ற மாதம்தான் ஒரு 150 யூரோ முதலீடு செய்தேன் ஆரம்பத்தில் 0.0000034 என ஒரு நாணயத்தை வாங்கி காத்திருப்புக்குப் பின்பு 0.00005490 என்னும் அளவுக்குக் கூடியது வித்த வகையில் ஒரு 150 யூரோ இலாபம் அதுக்குப் பின்புதான் பிரச்சனை கண்டதையெல்லாம் வாங்கிப்போட்டால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைச்சு வாங்கியவிடத்தில் கால்வாசி அடிபட்டுட்டு. பின்பு கொஞ்சம் இலாபம் வந்தது பிற்காயின் விலை அதிகரிக்குது என இருந்த 300 யூரோவை அதில் போட இலாபம் என்பது கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் கணக்குக்கு வரவில்லை காரணம் 56000 த்தை பிற்காயின் தாண்டியதால எனது பணம் அதுக்குப் புழுதியாகத் தெரிந்தது. பின்பு அதை வித்திட்டு யூ எஸ் டி ரீ ஆக வைத்திருக்கிறேன் எங்காயாவது சந்தர்ப்பம் கிடைத்தால் இறக்கிப்பார்க்கலாம் என. சரி அதைவிடுங்கோ வீ ஆர் ஏ  எனும் காயின் வாங்கும்போது அரைமனத்தில வாங்கினேன் இப்போ அது கொங்சம் ஏறி நிற்குது ஒருத்தன் சொல்லுறான் அண்ணை அவசரப்பட்டு விற்காதையுங்கோ இன்னும் ஏறும் என பாப்பம் இன்னுமொரு விடையம் இதில் கூடய அளவு ஈடுபாடு காட்டவேண்டாம் பிறகு கசிணோ விளையாட்டாக மாறிவிடும். முக்கிய தகவல் இன்னுமொருதர் ரோபோ ஒன்றைச் செற் பண்ணிவைத்திருக்கிறார் 5000 யூரோகளை முதலிட்டு, ஒருநாளைக்கு 25 டாலர் தருகுது நீங்கள் ஒப்போ இதலை போடவேண்டாம் இப்பதான் ரோபோவைச் செற்பண்ணிணான் ஒருமாதத்துக்குப் பின்பு சொல்லுறன் இலாபமா நட்டமா என அதுக்கு பிறகு நீங்கள் செற் பண்ணுங்கோ என எதோ சின்ன வீடு செற் பண்ணுமாப்போல் சொல்லுறான் நல்லா வந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறன். மீண்டும் சொல்லுறன் ஆயிரம் தடவை யோசிச்சுச் செய்யுங்கோ இது கசிணோ விளையாட்டு மாதிரி இரவு பகலாக நித்திரை கொள்ளவும் விடாது. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.