Jump to content

கிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சாமானியன் said:

அது சரி மனுஷன் மாருக்கு ஐம்பது வயது வர,  ஏனப்பா எல்லாப் பொம்பிளையளும் பொல்லுப் பிடிக்கிற வயது எண்டு சொல்லி கடுப்பேத்துகினம் !

உங்களுக்கு இவையின்ரை விளையாட்டுக்கள் விளங்காது போல.

சும்மா இருங்கப்பா கையை எடுங்கோப்பா என்பார்கள் ஆனாலும் கை தடை செய்யாது.இழித்த வாயங்கள் விடமாட்டாங்கள் என்ற நம்பிக்கையில் வாய் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கும்.

10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விளக்கமாச்  சொல்லுங்கோ விளங்கவில்லை

கிரேக்கர்களின் எந்தவொரு சாப்பாடும் ஒதுக்கிவிட முடியாதவை.

நான் கிரேக்க கப்பலில் வேலை செய்து எத்தனையோ நாடுகளுக்குப் போய் வந்தாலும் கிரேக்கத்துக்கு போனது கிடையாது.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை வழங்கி எனக்கு ஊக்கம் தந்த சாமானியன், மோகன், ஜெகதா துரை, கண்மணி அக்கா ,நீர்வேலியான், ஏராளன், ராஜவன்னியன் அண்ணா, ஈழப்பிரியன் , ருல்பன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

6 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு இவையின்ரை விளையாட்டுக்கள் விளங்காது போல.

சும்மா இருங்கப்பா கையை எடுங்கோப்பா என்பார்கள் ஆனாலும் கை தடை செய்யாது.இழித்த வாயங்கள் விடமாட்டாங்கள் என்ற நம்பிக்கையில் வாய் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கும்.

கிரேக்கர்களின் எந்தவொரு சாப்பாடும் ஒதுக்கிவிட முடியாதவை.

நான் கிரேக்க கப்பலில் வேலை செய்து எத்தனையோ நாடுகளுக்குப் போய் வந்தாலும் கிரேக்கத்துக்கு போனது கிடையாது.

ஏதென்ஸில் கிரேக்க உணவுகள் என்று அவர்கள் வைத்திருப்பது கிட்டத்தட்ட துருக்கிநாட்டு உணவுகள் போன்றவைதான். மற்றும் ஐரோப்பிய உணவுகளும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா அங்குபோய் பல அறிஞர்கள் தத்துவ ஆசிரியர்கள் என்று பலர் 
திரிந்த இடங்களில் நடக்க நேர்ந்திருக்கும் பலவற்றை அறிய நேர்ந்திருக்கும் 

இவை உங்கள் வாழ்க்கையில் சிலவற்றை மாற்றவேண்டும் 
அல்லது இனி இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது புதிய 
சிந்தனைகளை தூண்டும் மாதிரி உங்களுக்கு புதிய எண்ணம் சிந்தனை 
ஏதாவது தோண்றிச்சா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

அக்கா அங்குபோய் பல அறிஞர்கள் தத்துவ ஆசிரியர்கள் என்று பலர் 
திரிந்த இடங்களில் நடக்க நேர்ந்திருக்கும் பலவற்றை அறிய நேர்ந்திருக்கும் 

இவை உங்கள் வாழ்க்கையில் சிலவற்றை மாற்றவேண்டும் 
அல்லது இனி இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது புதிய 
சிந்தனைகளை தூண்டும் மாதிரி உங்களுக்கு புதிய எண்ணம் சிந்தனை 
ஏதாவது தோண்றிச்சா? 

உங்களைப்போல் புத்திசாலிகளுக்குத்தான் புதிய சிந்தனைகள் தோன்றும்.  நான் ஒரு சாதாரண மனிசி. எனக்கு எதுவுமே தோன்றவில்லை. போக என் மனம் புதிதாக எதையும் ஏற்றுக்கொள்ளவோ மாற்றவோ முயலாது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மேலே சுற்றிவிட்டு கீழே வந்தால் பயங்கரத் தாகம்.ஒரே ஒரு சிறிய கடை தான் அங்கு. சரியான விலை. ஆனாலும் வேறு வழியில்லை என்பதனால் அங்கே வாங்கிக் குடித்துவிட்டு ஏதாவது உண்ணலாமா என்று பார்த்தால் பெரிதாக எதுவும் இருக்கவும் இல்லை. சரி ஒரு உணவகத்தைத் தேடிப் பிடிக்கும்வரை உண்ணலாம் என ஒரு பிஸ்கற்றை வாங்கி வந்து உண்டுகொண்டே கீழே நடந்துவர நாம் செல்ல வேண்டிய பஸ் போய்க்கொண்டு இருக்கிறது.

அங்கே நின்ற மஞ்சள் உடையணிந்த பெண்ணை கேட்க ஒரு பத்து நிமிடத்தில் அடுத்த பஸ் வரும் என்றாள். காலோ சரியான நோவெடுக்க இருப்பதற்கான இருக்கைகள் பக்கத்தில் எங்கும் காணவில்லை. சற்றுத் தூரத்தில் சீமெந்து இருக்கைகள் தெரிய அங்கே போய் இருப்பமோ என்று நான் கேட்கிறேன். சரியென்று போய் இருந்து கையில் வைத்திருந்த மிச்ச யூஸையும் குடித்து மிகுதி பிஸ்கற்றையும் சாப்பிட கொஞ்சம் களைப்பு அடங்குகிறது.

மத்தியானம் எங்கேயப்பா சாப்பிடுவம் என்று கேட்க, இப்ப தானே பிஸ்கற் சாப்பிட்டு முடிச்சனி. அதுக்குள்ள சாப்பாட்டுக் கதை.  கொஞ்சம் வயித்தைக் காயப்போடன். இன்னும் ஒரு இடத்தைப் பார்த்திட்டுச் சாப்பிடுவம். பட்டினி கிடந்தது பழக்கவேணும் எண்டு மனிசன் ஆரம்பிக்க, ஐயோ கடவுளே உது ஒவ்வொருநாளும் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு. கொலிடே வந்த இடத்திலயாவது நின்மதியா சாப்பிட விடுங்கப்பா என்றவுடன் மனிசன் வேறெதுவும் சொல்லாமல் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். கொஞ்சம் தள்ளி நிறைய மரங்கள் தெரிகின்றன. நான் மரங்களைப் பார்த்துவிட்டு வாறன். பஸ் வந்தால் கூப்பிடுங்கோ என்றுவிட்டு நான் சிறிது தள்ளிப் போய் பார்க்கிறேன். நிறைய மரங்களும் நடைபாதையும் கீழ்நோக்கிப் போகுது. உதில் நடந்து போய்ப் பார்த்தால் என்ன என்று எண்ணிக்கொண்டிருக்க, எங்கட பஸ் வந்திட்டுது ஓடிவா என்றபடி மனிசன் ஓடுறார். போய் எனக்கும் இடம் பிடியுங்கோ என்றபடி நான் பின்னால் நடக்கிறன்.

ஓடிப்போன மனிசனைப் பார்த்தா பஸ்ஸில ஏறாமல் கெதியா வரச்சொல்லி எனக்கு கை காட்டிக்கொண்டு இருக்கிறார். ஏன் இந்த எளிய மனிசன் ஏறாமல் நிக்கிது. இருக்க இடம் கிடைக்காமல் இருக்கப்போகுது என்றபடி நான் போய் சேர்ந்தால், நீ டிக்கற்றை வைத்துக்கொண்டு என்னை பஸ்ஸில ஏறு எண்டால் விடுவாங்களே என்றபடி மனுசனும் நானும் பஸ்ஸில் ஏறினால் எல்லா சீற்ரும் நிறைஞ்சு போய் கிடக்கு. வேறு வழியில்லாமல் கம்பியைப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறன். ஒரு பத்து நிமிடம் பஸ் ஓடியபின் Syntagma square என்னும் இடம் வந்ததும் சனக்கூட்டம் அதிகமாக இறங்க, இங்கே இறங்கி என்ன என்று பார்ப்போமா என்றேன். சரி என்று கூற இருவரும் இறங்கி நடந்தால் அங்கும் திருவிழா போன்று கூட்டம். பல பெரிய விற்பனை நிலையங்கள், உணவகங்கள் என்பனவும் அங்கேயிருந்தன. இங்கேயே சாப்பிட்டுவிட்டு மிகுதியைப் பார்ப்போம் என்று கூற இன்னும் கொஞ்சம் நடந்து பார்ப்போம். ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று கூறியபடி மனிசன் செல்ல நானும் செல்லவேண்டியதாகிவிட்டது. தூரத்தில் ஒரு அழகிய கட்டடம் தெரிகிறது. ஏதென்ஸின் பழைய பாராளுமன்றம் என்று மப்பில் போட்டிருக்கு. லண்டனில் Buckingham palace க்கு முன்னால் நிற்கும் இருவர்போல் இங்கும் இருவர் காவலர் போல் நிற்கின்றனர். அதில் நின்று படத்தை எடுத்துவிட்டு தொடர்ந்து எதிர்ப்புறம் உள்ள வீதியில் நடக்கிறோம்.

58864872_10211912023909568_7389638850793

ஒரு சைனீஸ் உணவகத்தைக் கண்டதும் இங்கு மத்திய உணவை உண்போமா என்று கேட்டுவிட்டு நானே வேண்டாம் என்றேன். ஏனெனில் ஒரு ஐம்பதுபேர் இருக்கக்கூடிய பெரிய உணவகத்தில் ஒருவரைக்கூடக் காணவில்லை. அதனால் அதைக் கடந்து வேறு சில உணவகங்களை பார்த்துக்கொண்டு சென்றால் உணவுகள் எப்படி இருக்குமோ என்ற யோசனைவேறு. அடுத்த வீதிக்குச் சென்றால் பல சிறிய உணவகங்கள் வீதியோரமாக் இருக்க இளம் பெண்கள் நின்று போவோர் வருவோரை தமது உணவகத்துக்கு வரும்படிஅழைத்துக்கொண்டு நிற்க இரண்டு மூன்றுபேரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக அழைத்த பெண்ணின் சிரிப்பு எனக்குப் பிடித்துவிட அங்கு உண்ணலாம் என்றேன்.

சரி என்று போனால் அங்கு ஒரு மேசையில் நான்கு கதிரைகளும் இன்னொரு சிறிய மேசையில் இரண்டு கதிரைகளும் இருக்க, அந்தப் பெண் எம்மைச் சிறிய மேசையில் அமரும்படி கூற நானும் கணவரும் எதிர் எதிராய் அமர்கிறோம். சூரியவெளிச்சம் என் முகத்தில் அடிக்கிறது. வெய்யிலாக இருக்கிறது அங்கு போய் இருக்கலாமா என்று அப்பெண்ணைக் கேட்க அது நான்குபேர் இருப்பது என்று கூறிவிட்டு நிற்கிறாள்.

நான் அந்தப்பக்கம் வாறன். நீ இங்கே வா என்கிறார் கணவர்.உங்களுக்கு மட்டும் வெய்யில் அடிக்காதோ என்றுவிட்டு எனக்கு இதிலிருப்பதில் விருப்பம் இல்லை. நாம் வேறு கடைக்குப் போகிறோம் என்றுவிட்டு இன்னும் நான்கு கடைகள் தள்ளி ஓர் கடையுள் செல்கிறோம். அங்கும் எமக்குக் காட்டிய மேசைக்கு அருகில் சிகரெட் பிடித்தபடி இருவர் இருக்கின்றனர். எனக்கு அதில் இருக்க முடியாது வேறு இடம் காட்டு என்கிறேன்.  அவள் வேறு இடத்தைக் காட்ட அதில் அமர்கிறேன். ஆனாலும் எனக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை.

அவள் மெனு காட்டைக் கொண்டுவந்து தர அதில் இறைச்சி வகைகளே அதிகம் இருக்கின்றன. குடிப்பதற்கு கோலா ஓடர் செய்துவிட்டு பார்த்தால் நெருப்பில் வாட்டிய பன்றி, ஆடு,கோழி மூன்றும் கலந்த உணவு ஒன்று, சலாட், அவித்த உருளைக்கிழங்கு இத்தனையும் 25 யூரோஸ் இருவருக்கு என்று இருக்க அதை ஓடர் செய்துவிட்டுக் காத்திருக்கிறோம்.

சலாட் முதலில்வருகிறது. பரவாயில்லை. வித்தியாசமான சுவை எதுவுமின்றி லண்டனில் உண்பதுபோலவே இருந்தாலும் பசிக்கு நன்றாகத்தான் இருக்கிறது. அவள் கொண்டுவந்த இறைச்சியைப் பார்த்ததும் பசி கூட எனக்கு இல்லாமற் போச்சு.புதிசாச் சுடச்சுட கொண்டுவரப்போறாள் என்று பார்த்தா பழசைச் சூடாக்கிக் கொண்டுவந்ததுபோல் சூடும் இல்லை. சுவையும் இல்லை. வேறை வழியில்லாமல் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கூட வைக்காமல் வந்திட்டம். 

59121069_10211911948827691_5080899865391

58430425_10211911942267527_5584068091710

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த மீராவுக்கு ஏராளனுக்கும். இராசவன்னியன் அண்ணாவுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா, 

நீங்கள் சுற்றிப்பார்த்த இடங்களைப் பற்றிய விபரங்களைக் காட்டிலும் கணவன் மனைவியிடையே தினமும் நடக்கும் இச்சிறு சிறு அனத்தல்களை வெளிப்படையாக விபரித்து எழுதுகிறீர்களே, அதுவே இக்கட்டுரையை வாசிக்க சுவாரசியமும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

ஏனெனில், 'நம்ம வீட்டில்தான் இப்படி நடக்குதா..?' என்ற நினைப்பிலிருந்தால், 'ஆகா.. எங்கேயுமே இப்படித்தான்..!'  என நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி..!  5.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

சுமே அக்கா, 

நீங்கள் சுற்றிப்பார்த்த இடங்களைப் பற்றிய விபரங்களைக் காட்டிலும் கணவன் மனைவியிடையே தினமும் நடக்கும் இச்சிறு சிறு அனத்தல்களை வெளிப்படையாக விபரித்து எழுதுகிறீர்களே, அதுவே இக்கட்டுரையை வாசிக்க சுவாரசியமும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

ஏனெனில், 'நம்ம வீட்டில்தான் இப்படி நடக்குதா..?' என்ற நினைப்பிலிருந்தால், 'ஆகா.. எங்கேயுமே இப்படித்தான்..!'  என நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி..!  5.gif

என்னடா இது சுமே அக்கா ஆயிட்டனா???? ஒருவேளை பயணக் கட்டுரை இப்படியெல்லாம் எழுதக் கூடாதாக்கும்.🤔 ................இவர் உண்மையிலேயே பாராட்டுறாரா ...... :innocent:  இல்லை ........ புரியுதில்லையே.🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னடா இது சுமே அக்கா ஆயிட்டனா???? ஒருவேளை பயணக் கட்டுரை இப்படியெல்லாம் எழுதக் கூடாதாக்கும்.🤔 ................இவர் உண்மையிலேயே பாராட்டுறாரா ...... :innocent:  இல்லை ........ புரியுதில்லையே.🤓

ஓமக்கா,  எனக்கும் டவுட்டாய் இருக்கு.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அன்று முதல் நாள் என்றதனால் எல்லாவற்றையும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆனாலும் இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தில் கால்போன போக்கில் நடப்போம் என்று நானும் கணவரும் கதைத்துக்கொண்டு நடந்து போக இன்னுமொரு இடிபாடுகளுடன் கூடிய கட்டடம் தெரிந்தது. மலையில் கட்டிய கோவிலுக்கு காவல் தெய்வத்துக்காக கீழேயும் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுவும் பல தூண்கள் இடிந்து வீழ்ந்து பல புதையுண்டும், இன்னும் சில தூண்கள் திருடப்பட்டும் விட்டன என்றனர்.  

58625847_10211918116981891_6361948748473

58463030_10211918128902189_7297018911847

57387431_10211918131782261_8548660085134

59410576_10211918135462353_6572315585206

 

தற்போழுது எதென்ஸின் முக்கிய வருமானம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினாலேயே கிடக்கின்றது என்றும் அதை வைத்தே பல புனரமைப்புப் பணிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது என்றும் ஒருவருடன் உரையாடியபோது கூறினார். சுற்றுலாப் பயணிகளுக்காக பொருட்கள் விற்கும் கடைகளுக்குச் சென்றால் அதிக விலையே கூறுகின்றனர்.

மாலை ஐந்து மணிவரை கிரேக்க வீதிகளில் திரிந்தத்தில் கால்கள் எல்லாம் பயங்கர வலியெடுத்தது. அத்தோடு சாடையாக இருளவும் ஆரம்பிக்க மீண்டும் எமது தங்குமிடத்துக்குச் செல்வதற்கு பஸ் எடுத்தால் இருட்டுக்குள் நாம் எங்கே இறங்கவேண்டும் என்பதில் குழப்பம் உண்டானது. சாரதியிடம் சென்று வரைபடத்தில் நாம் தங்கியிருந்த இடத்தைக் காட்ட அவர் எம்மை சரியான இடத்தில் இறக்கிவிட்டார். வீதியால் நடந்து எமது கோட்டலுக்குச் செல்லும் வழியில் பார்த்தால் வீதிகளின் கரைகளில் காலையில் திறக்காத கடைகள் திறந்திருக்க ஆண்கள் பலர் மது அருந்திக்கொண்டும் தேநீர் அருந்திக்கொண்டும் இருக்கின்றனர். எனக்கு பயமாக இருக்கு என்று நான் சொல்ல நீ ஏன் அங்கே பார்க்கிறாய். பேசாமல் நடந்துவா என்கிறார் மனிசன்.

ஒருவாறு ஆறுமணிக்கு கிட்ட கோட்டலை அடைந்து அறைக்குச் சென்று குளித்துவிட்டு ஒரு மணித்தியாலம் களைப்புத் தீரப் படுத்துவிட்டு இரவு உணவுக்குச் செல்லுவோம் என்றுவிட்டு கட்டிலில் படுத்ததுதான். காலை கண்விழித்தபோது ஆறுமணி. நான் சென்று பல் தீட்டி முகம் கழுவிவிட்டு வந்து மனுசனை எழுப்ப மனிசன் என்ன விடிஞ்சிட்டுதோ  என்று ஆச்சரியமாகக் கேட்கிறார். எனக்கு இரவு உண்ணாததும் சேர்ந்து பயங்கரப் பசி. ஏழுமணிவரை எதுவும் குடிக்காமல் இருக்க முடியாது என எண்ணி தொலைபேசியில் கீழே இருக்கும் வரவேற்பாளருக்கு போன் செய்து நாம் தேநீர் குடிப்பதற்கு எதுவும் இங்கில்லை என்கிறேன். அறைகளில் நாம் எதுவும் வைப்பதில்லை. நீங்கள் ஏழுமணிவரை பொறுக்கவேண்டும் என்கிறான்..அவன். சாதாரணமாக எல்லா கோட்டல்களிலும் தேநீர் ஊற்றுவதற்குத் தேவையான எல்லாம் வைத்திருப்பார்கள். இங்கு இல்லை.
ஏழுமணியானதும் உணவகத்துக்குச் சென்று காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் பஸ் எடுக்கிறோம்.

இன்று ஒரு இருப்பது நிமிடத்தில மியூசியம் ஒண்டு தெரிய அதை அடுத்ததாகப் பார்ப்போம் என்று இருவரும் இறங்கியாச்சு. தொன்மையான பொருட்களை எல்லாம் அங்கே சேமித்து வைத்திருக்கின்றனர். தோண்டி அகழ்வாய்வு செய்து அவற்றை அப்படியே வைத்தபடி மேலே கண்ணாடியால் தளம் போட்டுக் கட்டியிருப்பது பார்க்க வித்தியாசமாக இருக்கு. உள்ளே சென்று பார்ப்பதற்கு ஒருவருக்கு 5 யூரோஸ்.

மட்பாண்டங்கள் வேறு பல பொருட்கள் எல்லாம் எமது போன்றே இருக்கிறன. மூன்று மாடிகள் முழுவதும் பிரம்மாண்டமாக கண்ணாடிகளால் நவீனமாக வடிவமைக்கப்பட்டு தொண்மப் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மூன்றாம் மாடியில் எதென்ஸ்  நகரம் எப்படி அமைக்கப்பட்டது, எப்படி அழிக்கப்பட்டது என பெரிய திரையில் விவரணப் படம் ஒன்றைக் காட்டுகிறார்கள். அதையும் பார்த்துவிட்டு வெளியே வருகிறோம். எங்கு பார்த்தாலும் சனங்கள்.
 

58652568_10211918482231022_8280093679876

58717989_10211918481671008_8884621532358

58763408_10211918483671058_4763984832894

59211503_10211918484311074_8336297557487

58462415_10211918484711084_5338645250871

59394975_10211918485791111_6487276985092

 

 

 

58659860_10211918486311124_6887327710968

59157513_10211918487031142_5001730290842

58654762_10211918487431152_5956062192833

58870196_10211918489871213_2744225261644

59286058_10211918490431227_2459066238081

58443535_10211918490831237_5753419614264

59211469_10211918491151245_7762291456303

58779072_10211918493471303_9194986469146

 

58779062_10211918480870988_7165705737086

58769409_10211918459390451_2456341682627

58682394_10211918460990491_7376416587814

 

58663982_10211918462190521_8719608579608

58606460_10211918464310574_8345088943225

58441992_10211918465430602_7050870840010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னடா இது சுமே அக்கா ஆயிட்டனா???? ஒருவேளை பயணக் கட்டுரை இப்படியெல்லாம் எழுதக் கூடாதாக்கும்.🤔 ................இவர் உண்மையிலேயே பாராட்டுறாரா ...... :innocent:  இல்லை ........ புரியுதில்லையே.🤓

வாழ்க்கை பாடங்களை பகிர்வதால் "அக்கா"  என்று விளிப்பதில் தவறில்லைதானே..? 😋

பாராட்டித்தான் பச்சை இட்டுள்ளேன் அம்மணி..!

6 hours ago, suvy said:

ஓமக்கா,...    😁

நீங்களுமா..? போச்சுடா..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்து ஊக்கம்தந்த உறவுகள் மீரா, ஈழப்பிரியன், ராசவன்னியன் அண்ணா ஆகியோருக்கு நன்றி

3 hours ago, ராசவன்னியன் said:

வாழ்க்கை பாடங்களை பகிர்வதால் "அக்கா"  என்று விளிப்பதில் தவறில்லைதானே..? 😋

பாராட்டித்தான் பச்சை இட்டுள்ளேன் அம்மணி..!

 

 

10 hours ago, suvy said:

ஓமக்கா,  எனக்கும் டவுட்டாய் இருக்கு.......!   😁

நீங்கள் இருவரும் வேண்டுமானால் அம்மா என்று அழையுங்கள். அக்கா என்று சொல்லப்படாது.🤐😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியக்கா ....இனி மறந்தும் அக்கா என்று கூப்பிட மாட்டோம் .அக்காவை இனி அம்மா என்றுதான் கூப்பிட முயற்சிக்கிறோம்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

சரியக்கா ....இனி மறந்தும் அக்கா என்று கூப்பிட மாட்டோம் .அக்காவை இனி அம்மா என்றுதான் கூப்பிட முயற்சிக்கிறோம்........!   😁

அடுத்ததா தீவிரவாத்த் தாக்குதல் உங்கட ஏரியாதான்😎

பச்சைக்கு நன்று சுவி அண்ணா அண்ணா அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பசி பொறுக்க மாட்டீங்கள் போல அக்கா.😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் பசி பொறுக்க மாட்டீங்கள் போல அக்கா.😀😀

பெற்றோல் போட்டா தானே வண்டி ஓடும்.
சிலபேருக்கு புது சாப்பாடு பிரச்சனையாகி கொட்டலில் படுத்த படுக்கையாகி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'அம்மா'க்கா, என்ன  தொடரை தொபுக்கடீர்னு நிறுத்திப் போட்டியள்..? 😋

கெதியா எழுதுங்கோ..! எங்களுக்கும் பசிக்கும்ல..!! :)

images?q=tbn:ANd9GcTioYs67IaSg17V6AFziNm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் பசி பொறுக்க மாட்டீங்கள் போல அக்கா.😀😀

ஏன் பொறுக்கவேணும்?????😆😄

19 hours ago, ஈழப்பிரியன் said:

பெற்றோல் போட்டா தானே வண்டி ஓடும்.
சிலபேருக்கு புது சாப்பாடு பிரச்சனையாகி கொட்டலில் படுத்த படுக்கையாகி விடுவார்கள்.

எங்களுக்கு எல்லாச் சாப்பிடும் ஓகேதான். ஆனா பட்டினி மட்டும் நோ..,,,,,,😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

'அம்மா'க்கா, என்ன  தொடரை தொபுக்கடீர்னு நிறுத்திப் போட்டியள்..? 😋

கெதியா எழுதுங்கோ..! எங்களுக்கும் பசிக்கும்ல..!! :)

images?q=tbn:ANd9GcTioYs67IaSg17V6AFziNm

🙄🤥

எத்தனை வேலை வில்லங்கங்கள் வீட்டில. அதெல்லாம் முடிச்சு நேரம் இருந்தாத்தானே எழுதலாம் மகனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் நாள் காலையில் கணவர் எழும்பு எழும்பு என்று கரைச்சல் படுத்தியும் இன்று ஒன்பது மணிக்கு முன்னர் எழும்பவே மாட்டேன் என்று அடம்பிடித்தபடி படுத்துக்கிடக்க, மனிசனோ மந்திரம் சொல்வதுபோல தொடர்ந்து எழும்பு என்று கூறிக்கொண்டே என்னைத் தூங்க விடாது தொல்லை செய்தபடியே இருக்க, வேறு வழியில்லாது ஒன்பதுக்கு எழும்பிக் குளித்து முடித்து காலை உணவுக்குப் போனால் பல உணவுகள் முடிந்த நிலையில் பாணும் சீஸ், சொசேஜ் போன்ற சிலவும் ஒலிவ், வாழைப்பழம் போன்றவையுமே எஞ்சியிருந்தன.

உன்னாலதான். வெள்ள வந்திருந்தால் நல்ல உணவுகள் உண்டிருக்கலாம் என்று மனிசன் புறுபுறுக்க நீங்கள் தனியா சாப்பிட வந்திருக்கலாமே. நானோ வேண்டாம் எண்டனான்? என்று அவரின் வாயை அடைத்துவிட்டு. இருப்பதை வேறு வழியின்றி உண்ண ஆரம்பித்தோம்.

நாம் பார்த்துக்கொண்டு இருக்கவே பலர் ரிசுப் பேப்பரில் பாண், சலாமி,சீஸ் எல்லாம் வைத்து சுற்றிக்கொண்டு தம்முடன் எடுத்துச் செல்ல ஒரு பணியாள் அவர்களிடம் நீங்கள் எடுத்துக்கொண்டு போக்க கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர்கள் எவரும் அவரை அலட்சியம்  செய்தபடி போய்க்கொண்டிருந்தனர்.

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முதன்முதலில் கிரேக்கத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததுதான். அன்றைய நாள் அங்கு செல்வதென முடிவெடுத்து பதினோரு மணிபோல் கிளம்பினோம். அன்று பார்த்து 25 o செல்சியஸ். வெய்யில் சுட்டெரிக்காவிட்டாலும் வெப்பம் கொஞ்சம் அதிகமாகவே இருக்க மனிசன் என்மீது சிவபுராணம் பாடத் தொடங்கினார்.

ஐம்பதாயிரம் இருக்கைகளுடன் கி .மு 300 ஆண்டளவில் கட்டப்பட்டதாக (Panathenaic Stadium)மிகவும் பிரமாண்டமானதாக இல்லாவிட்டாலும் இருக்கைகள் அத்தனையும் வெண் சலவைக் கற்களால் ஆக்கப்பட்டிருந்தமை பார்ப்பதற்கு வியப்பை அளித்தாலும் வெய்யிலின் கொடுமையில் அதிக நேரம் அதை நின்று இரசிக்க முடியவில்லை.  அதன் ஒரு ஓரத்திலேயே குகை போன்று நிலத்தைக் குடைந்து சிறிது தூரத்தில் ஒரு சுரங்கக்  கட்டடத்தையும் அமைத்து அதில் ஒலிம்பிக் பற்றிய பல அரிய புகைப்படங்கள், பொருட்கள் போன்றவற்றைப் பாதுகாத்துப் பார்வைக்காக வைத்துள்ளனர்.

எனோ தெரியவில்லை இந்த ஸ்டேடியத்தைப் பார்ப்பதற்கு ஒன்றிரண்டு பேர்தான் வந்திருந்தனர்.

 

57441801_10211879703261572_9216167873460

57579953_10211879704381600_2307264772237

 

57426244_10211879703981590_2072660666254

57459288_10211879704901613_2745825051063

57216660_10211879705341624_6726591772551

58721791_10211927747062637_2153441562208

59301661_10211927749262692_7260520571824

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமோ...இன்றைக்கு தான் வாசிக்க மனமும்,நேரமும் வந்தது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டேடியத்தைப் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த கடையில் யூஸ் வாங்கி  பக்கத்தில் இருந்த குந்தில் இருந்து குடித்துவிட்டு மீண்டும் அருகில் இருந்த சில இடிபாடுகளை பார்த்துக்கொண்டு வர நேரம் நான்கு மணியாகிவிட்டது.

59543529_10211927812104263_4903140733902

 

59704832_10211927813704303_5317188165490

 

59087183_10211927814184315_1077210753120

58873514_10211927814544324_3874551845250

59087048_10211927815264342_1224887371028

58707894_10211927815504348_7044398745202

59565466_10211927815904358_9049844556253

59121046_10211927816304368_5603648680109

58906001_10211927816584375_2528362851047

59419267_10211927812664277_7667931033399

59004747_10211927813384295_3366263562648

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே,
நன்றாக உள்ளது. முடிந்தால் இத்துடன், அங்குள்ள இப்போதைய அரசியல் பொருளாதார நிலை , மக்கள் என்ன பேசுகிறார்கள், வாழ்க்கைத்தரம் எப்படி உள்ளது  என்பது பற்றியும்  எழுதுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/30/2019 at 9:49 PM, நீர்வேலியான் said:

சுமே,
நன்றாக உள்ளது. முடிந்தால் இத்துடன், அங்குள்ள இப்போதைய அரசியல் பொருளாதார நிலை , மக்கள் என்ன பேசுகிறார்கள், வாழ்க்கைத்தரம் எப்படி உள்ளது  என்பது பற்றியும்  எழுதுங்கள் 

ம் எழுதிட்டால் போச்சு

On 4/30/2019 at 8:30 PM, ரதி said:

தொடருங்கள் சுமோ...இன்றைக்கு தான் வாசிக்க மனமும்,நேரமும் வந்தது 
 

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருந்தினர்கள் வருவதால் ஒருவாரத்துக்கு எழுத முடியாதுள்ளது. மன்னியுங்கள் உறவுகளே🥴

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.