• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

மதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..!'

Recommended Posts

மதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..!'

news_3236_1.jpg    img_0947.jpg

 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள "நெல்லு பேட்டை" என்ற உணவகத்தில் பழைய சோற்று கஞ்சி விற்பனை செய்து வருகின்றனர்.

இது அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.வீட்டில் மிஞ்சிய சோற்றை குப்பையில் கொட்டும் நகர்புற கலச்சாரத்துக்கு மத்தியில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழைய சோறு ஜி.எஸ்.டியுடன் மதுரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது  உணவு பழக்கங்கள் மாறிவரும் இந்த நிலையில்  மீண்டும் ஆரோக்கியமான உணவை நோக்கி மக்கள் நகர தொடங்கி இருக்கின்றனர் என்பதற்கான அறிகுறிதான் மதுரை மாட்டுதாவணியில் பழைய சோறு விற்பனை செய்து வருகின்றனர்.பழைய சோற்றில் மோர் கலந்து பச்சைமிளகாயும், வெங்காயமும் சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு சுறு சுறுப்பையும் கொடுத்தது.

கால ஓட்டத்துக்கு ஏற்ப உடல் உழைப்பு குறைந்த பணிகளில் ஈடுபடும் படித்தவர்கள் மற்றும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் நகரவாசிகள் இட்லி, தோசை என்றும் வட நாட்டு உணவான புரோட்டா, சப்பாத்தி, பூரி, பானி பூரி என்றும் அன்னிய உணவுகளான பீட்சா, பர்கர், சாண்ட்விட்ஜ் என்றும் திசைமாறினர்.இதனால் பெரும்பாலான வீட்டில் மிச்சமாகும் சாப்பாடு பழைய சோறாகி குப்பைக்கும், ஆடு மாடுகளுக்கும் உணவாக வைக்கப்பட்டு வருகின்றது.

கஞ்சிகளையத்தில் பழைய சோறு, தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய், வெங்காயம், சீனியரக்காய் வத்தல், ஊறுகாய் என உச்சி வெயிலில் வரும் வாடிக்கையாளரை குளிர வைக்கும் பழைய சோறு காம்போவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் விலை ஜிஎஸ்டி உடன் சேர்த்து50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதனை நம்மவர்கள் ஸ்பூனில் அள்ளி சாப்பிடுவதை காணும் போது, காலச் சக்கரம் வேகமாக சுழல்வதை கண்கூடாக காணமுடிகின்றது.

தங்கள் ஓட்டலில் பழைய சோறு விற்பனை செய்யபடுவதாக இணையத்தில் தகவல் பரவியவுடன் ஏராளமான படித்த இளைஞர்கள் பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து ஓட்டலுக்கு தேடி வந்து சாப்பிடுவதாகவும், இன்னும் பலர் ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், சுமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு பரிமாற்ற நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலாக வாங்கிச்சென்று சாப்பிடுவதாக ஓட்டலின் மேலாளர் பெருமை கொள்கிறார். தொடர்ந்து தன் உணவகத்தை பாரம்பரிய உணவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் தமிழ்

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மன்னாரில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின்போது நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு பாஸ் நடடைமுறையினை அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கு அமைவாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (சனிக்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக மன்னாரில் எதிர்வரும் 30ஆம் திகதியின் பின்னர் கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் அவசரத் தேவைக்காக நடமாடுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பாஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த பாஸ் நடைமுறையானது அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள், வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் வெளியில் நடமாடுவதற்காகவே வழங்கப்படவுள்ளது. இதேநேரம், மீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரின் சிபாரிசிலும் விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளரின் சிபாரிசிற்கு அமைவாகவும் பொலிஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. இந்த பாஸ் அனுமதிகள் அனைத்தும் பிரதேச செயலாளர்களின் சிபாரிசுகளுடன் அந்தந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளால் வழங்கப்படவுள்ளது என கலந்துரையாடலில் முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பொருட்கள் கொண்டு செல்வதற்கான விதிமுறைகள், நடைமுறைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து பொருட்களை மன்னாருக்குள் கொண்டு வருகின்றவர்கள் அவர்களே கிராமப் பகுதிகளுக்குச் சென்று வியாபாரத்தை மேற்கொள்ளாமல் மொத்த வியாபாரிகளிடம் கொடுத்துச் செல்வதும், அவ்வாறே இந்த மாவட்டத்தில் இருந்து கொண்டுசெல்லப்படும் பொருட்களும் அந்த நடைமுறைக்கு செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறித்த கலந்துரையாடலின்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். http://athavannews.com/மன்னார்-மாவட்டத்தில்-விச/
  • இந்த முசுலிம் செய்திகளுக்கு பதிலடிதான்...இந்த மஞ்சள்  நீராட்டுச்செதி...இந்த மடவலவும்.ஜப்ப்னா முசுலிமும் எப்படி வாந்தி எடுப்பது என்று திரியினம்...
  • இதைத்தானே தமிழ்மக்கள் கேட்டார்கள். கேட்டவர்களையும் கொடூரமாகக் கொன்றொழித்த அரசையும், அதன் படைகளையும் இன்றுவரை வாழ்த்தி ஆசியும் வழங்கிவரும் உங்களுக்கு இப்படியான எண்ணங்கள் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
  • இது போன்ற மதவெறியர்களுக்கு சில கிறிஸ்தவர்கள் பெருமளவு பணத்தை கொடுத்து அப்பாவி மக்களை பலிக்காடா ஆக்கி வருகின்றனர். வாலறுந்த நரிக் கதை போல.
  • தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. https://www.ibctamil.com/srilanka/80/140022