யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
போல்

விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை – அரசாங்கம்

Recommended Posts

maithiri-ltte.jpg

 

 

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளே காரணமென ஜனாதிபதியின் ஆலோசகர் சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.

அத்தோடு இறுதி யுத்தக் காலத்தில் கூட இதுபோன்ற தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நைஜீரியாவிலும், 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போலவே இந்த தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என அவர் கூறினார்.

எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் இருக்கக்கூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

http://athavannews.com/விடுதலைப்புலிகள்-அமைப்ப/

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

விடுதலைப்புலிகள் தொடர்பில் தற்போது புரிந்து கொண்டுள்ள மேற்குலகமும் இலங்கை அரசும்!

இலங்கையில் நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

இறுதிப் போர் உட்பட ஒரு போதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தவில்லை என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றியும் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா தெரிவிக்கையில், புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒருபோதும் அவர்கள் உத்தி கிடையாது.

பிரான்ஸ் தெரிவிக்கையில், முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல. அது விடுதலைப் போராட்டம்.

இலங்கை அரசு தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை.

https://www.ibctamil.com/srilanka/80/118356

Share this post


Link to post
Share on other sites

விடுதலைப்புலிகளுடனான மோதலின் போது கூட பொது மக்கள் இவ்வாறு இலக்கு வைக்கப்படவில்லை!

625.200.560.350.160.300.053.800.300.160.

 

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று 1மணியளவில் கூடியது.

இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ,

விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டுகால போரில் கூட இவ்வாறு பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் இனியேனும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயற்படும் பட்சத்தில் முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதியும் பிரதமரும் முரணான திசையில் இருந்து கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. அதேபோன்று தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகக்களை சாதாரண விடயமாகவும் கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/118428

Share this post


Link to post
Share on other sites

விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்!

விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு சேவையின் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், புலனாய்வு ஆலோசகருமான கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார்.

தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் எந்த எதிர்ப்புகளும் இருக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டவர்களை குறித்து தற்கொலை தாக்குதல்களை நடத்தியதில்லை. அந்த விடயத்தில் அவர்கள் கவனமாக இருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போது, வெளிநாட்டு விமான சேவைகளின் விமானங்கள் புறப்பட்டுச் செல்லும் வரையில் ஓடுதளப் பகுதிகளில் பதுங்கி இருந்து ஸ்ரீலங்கன் விமானங்கள் மீது மாத்திரமே தாக்குதல் நடத்தினர். அத்துடன் விடுதலைப் புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்.

ஆனால், தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை அவர்கள் இலக்கு வைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மக்களுக்கு பெரிய உயிர் அழிவை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம்.

வெளிநாட்டவர்களுக்கு கூடுதலான சேதத்தை ஏற்படுத்துவதும், சுற்றுலாத்துறையை மழுங்கடிக்கச் செய்வதும் இத்தாக்குதலின் பிரதான நோக்கமாக இருக்கலாம். இதேபோன்ற தாக்குதல்கள் வெளிநாடுகளிலும் நடந்திருக்கின்றன.

குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுபோன்ற தாக்கதல்களை எதிர்நோக்கியிருக்கின்றன. இலங்கையில் தற்போது இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கின்றன.

இதனைத் தவிர கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குறி வைக்கப்பட்டுள்ளதால், தாக்குதல் நடத்தியவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தாக்குதல் நடத்தினார்களா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/118660?ref=home-imp-flag

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

D4xP84-W4AUrlAf.jpg:large&key=e2be10d6a3

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

லூசுங்களாய் இருக்கிறான்கள் 
கோட்டலை என்றாலும் புலிகள் தலையில் கட்டி இருக்கலாம் 
ஒரு பரபரப்பாக இருந்து இருக்கும். 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Maruthankerny said:

கோட்டலை என்றாலும் புலிகள் தலையில் கட்டி இருக்கலாம் 
ஒரு பரபரப்பாக இருந்து இருக்கும். 

உண்மை தான்.

யாழ்களத்திலனாலும் பரபரப்பா இருந்திருக்கும்!

புலிகள் மீது வலிந்து வசைபாடும் நேயர்களுக்கு சான்ஸ் இல்லாம போச்சு!

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

விடுதலைப் புலிகளுடன் தமிழர்கள் இணைய, சிங்கள அரசியல்வாதிகளே காரணம் - ரிசாத் பதியூதீன்

_106608321_7d263805-ede8-447b-b475-bb6fa

சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன், ஒப்பிடுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தது என வினவியபோதே அமைச்சர் ரிசாத் பதியூதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார்.

_106608323_rishadbadudeen-4.jpg

இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தவில்லை என கூறிய அமைச்சர், அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்திவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் லாபத்தை பெற்றுக்கொள்ளவே எனவும் ரிசாத் பதியூதீன் குறிப்பிட்டார்.

தமது சுயலாப அரசியலுக்காக இந்த பயங்கரவாத தாக்குதலை வேறொரு திசையை நோக்கி கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

_106606023_934303d8-1b6b-42db-a1c5-60128

சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் மொழியை தடை செய்ததாகவும், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும், தமிழர்களின் உரிமைகளை பறித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாகியதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.

 

தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பங்குதாரர்களாக்கிய துரோகத்தை சிங்கள அரசியல்வாதிகளே மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு என கூறிய அமைச்சர் ரிசாத் பதியூதீன், இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48067167

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும் காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0 கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர்.   அதன் நீட்சியாக, எமது சமூகத்தில் நாளாந்தம் சந்தித்து வருகின்ற நபர்களது உரையாடல்களை மய்யமாகக் கொண்டு, இந்த ஆக்கம் வெளி வருகின்றது. இவை மக்களது ஆழ்மனங்களில் புதைந்திருக்கும் எண்ணங்களையும் வலிகளையும் வெளி உலகத்துக்குக் கொண்டு செல்லச் சிறப்பாக உதவுகின்றன.   அவ்வகையில், கடந்த நாள்களில் சுகாதாரத் திணைக்களத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராகப் பணி புரிந்து வருகின்ற ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. “முன்னர் ஆயுதப் போர், ஈவிரக்கமின்றி உயிர்களைப் பலி கொண்டது. தற்போது எம்மண்ணில், தற்கொலைகளுக்கு உயிர்கள் வீணே பலி கொடுக்கப்படுகின்றதே” எனக் கவலையுடன், தனது மனப்பாரத்தைப் பகிர்ந்து கொண்டார்.  தமிழ்ச் சமூகத்தில், அன்றாடம் நடைபெற்று வருகின்ற தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் தொடர்பில், அவர் தனது ஆதங்கங்களையும் அதற்காக மிகநுட்பமாக உருவாக்கப்பட்ட காரணங்களையும் கையாலாகாத்தனத்துடன் கொட்டித் தீர்த்தார்.   இது இவ்வாறு நிற்க, அண்மையில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து, இறையருள் வேண்டினோம். பின்னர், அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்ட பின்னர், கச்சான் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆச்சியுடன் கதைத்தோம்.   “எப்படி அம்மா வியாபாரம், சனங்கள் வருகுதே” எனக் கேட்டோம்.  “அதை என்னன்டு மேனை சொல்லுறது. முந்த நாள் இரவு முழுக்கக் கண் விழித்து, வெறும் 300 ரூபாய்தான் வியாபாரம். நாளாந்த சீவியத்துக்கே பெரும்பாடு. நான் கிழவி. இன்டைக்கோ நாளைக்கோ என இருக்கின்றேன். ஆனால், என்னை நம்பி மூன்று சீவன்கள் இருக்குது” எனத் தொடர்ந்தார்.  “யார் அம்மா, அந்த மூன்று பேர்” எனக் கேட்டோம்.   “அந்தக் கதையை ஏன் பிள்ளை கேட்கின்றாய். செல்லடியில என்ர மேள் போய்ச் சேர்ந்திட்டாள். மருமேனும் காணாமல் போய் விட்டார். இப்ப பேரப் பிள்ளையளை நான்தான் பார்த்துப் பராமரித்து வாறேன்” என்றார்.  “இதில கிடைக்கிற ஐந்து பத்தைக் கொண்டுதான், எங்கள் வாழ்க்கை ஏதோ ஓடுது” என்றார். “இதுவும் இல்லாது போனால், கடவுளே ........ ”எனத் தொடர்ந்தார்.   இறுதி யுத்தம், அம்மாவின் மகளை பலி எடுத்துக் கொண்டது; மருமகனைக் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியல் சேர்த்துக் கொண்டது; பேரப்பிள்ளைகளை அம்மாவின் கையில் கொடுத்தது. உண்மையில் இன்று அம்மா, யுத்தம் போன்ற ஒருவிதமான முற்றுகைக்குள் உள்ளார்.   ‘நானும் செத்து விட்டால், என் பேரப்பிள்ளைகள் நிலை என்னாகும், அவர்களுக்கு யார் சாப்பாடு கொடுப்பது, அவர்களது பாதுகாப்பு, அவர்களது படிப்பு, அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலம், ஐயோ கடவுளே...’ என தினசரி அவருக்குள் ஓர் உளவியல் போர் நடந்து கொண்டிருக்கிறது. இது, இலங்கை அரசாங்கத்தால் நேரடியாகத் தோற்றுவிக்காத இன்னொரு விதமான உளவியல் போர். ஆனால், அன்று நேரடியாகச் செய்ய ஆயுதப் போரின் இன்றைய உளவியல் போரே இதுவாகும்.   இன்று, அந்த அம்மாவின் பிரச்சினை போதிய வருமானமின்மை ஆகும். இவ்வாறாகத் தங்களது வருமானக் குறைவுக்கு பயணிகள் வருகை குறைந்தமையே பிரதான காரணம் எனக் கூறினார் அம்மா.  “பயணிகள் வருகையை அதிகரிக்க, ஏதேனும் வழிவகைகள் உண்டோ” எனக் கேட்க, அவர் அதற்கான யோசனையையும் முன்வைத்தார்.  முறிகண்டிப் பிள்ளையாரை அண்டி, கச்சான் கடைகள், தேநீர்க் கடைகள், அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல கடைகள் உள்ளன.   முறிகண்டியில் கடவுளை வணங்குவது மட்டுமல்லாது, யாழ் - வவுனியா வீதியில் பயணிக்கையில், முறிகண்டியில் தமது கடைகளுக்கு வந்து, பொருட்கள் வாங்குவது தமது வியாபாரத்துக்குத் துணை நிற்கும். “நீங்கள் வருவீங்கள் என நம்பித்தானே, நாங்கள் நாள் முழுக்க இங்கு காத்திருக்கின்றோம்” எனக் கூறிப் பெருமூச்சு விட்டார்.   எங்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். ஆகவே, தனியே இந்து மதக் கடவுள் என்பதற்கு அப்பால், பிள்ளையாரைச் சுற்றி போரினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், ஆவலுடன் எம் வருகைக்காகக் காத்திருக்கின்றார்கள். செல்லும் வழியில், செய்யும் உதவியாக இந்தக் கைங்கரியத்தை ஆற்றுவோம்.   ஆகவே, தயவு கூர்ந்து அவ்வழியால் பயணிக்கும் தனியார் பஸ்கள், அரச வாகனச் சாரதிகள் அவர்களது பொருளாதாரம் பெருக அவர்களுக்கு ஆதாரமாக மாறுவோம். ஏனெனில், தற்கொலைக்கான பல்வேறு காரணங்களில் வறுமையே பிரதான பங்கு வகிக்கின்றது.  வேலைவாய்ப்புகள் இல்லாமை, அதனால் போதிய வருமானங்கள் இன்மை. இதனால் கடன் சுமை அதிகரிப்பு. அதுவே முடிவில் தற்கொலையில் முடிகின்றது.   பொதுவாகத் தற்கொலை செய்வோரில் ஆண்களின் விகிதாசாரமே அதிகமாகக் காணப்படுகின்றது. இதில் அதிகரித்த கடன் சுமையால் தற்கொலை செய்வோரை அன்றாடம் கண்டு வருகின்றோம். இதற்கு முறையற்ற நிதி முகாமைத்துவம், மிதமிஞ்சிப் பெற்ற கடன் எனப் பல காரணங்களைக் கூறலாம்.   கடந்த பத்து ஆண்டுகளில், யுத்தத்தால் சிதைவுற்ற வீதிகள் அமைக்கப்படுகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. ஆனால், அதே யுத்தத்தால் துண்டு துண்டாக உடைந்து நொருங்கிப் போயுள்ள மனங்களைச் சீர்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.  பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆயுதப் போருக்கு முன்னர், குனிந்து உள்ளே போகின்ற குடிசை வீட்டில் வாழ்ந்த இனிமையான வாழ்வு, தற்போது நம்மிடம் உள்ள ஆடம்பரக் கல் வீட்டில் இல்லையே என்ற ஆதங்கங்களே எங்கும் உள்ளன.    பொதுவாகச் சாதாரன மரணங்களே மனிதர்களுக்கு மனஅழுத்தம் மற்றும் நெருக்கீடு என்பவற்றை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் கண் முன்னே குண்டுத் தாக்குதலால் சிதறிய உடல்களையும் சிந்திய குருதியையும் முப்பது ஆண்டுகளாகக் கண்டு, அனுபுவித்தவர்களுக்கு அதன் தாக்கங்கள் எவ்வாறு இலகுவில் ம(கு)றையும்?   போரால் மக்களின் மனங்களும் உடைந்து இருப்பதால், தமது அன்றாட செயற்பாடுகளின்போதும் இலகுவில் உடைந்து போய்விடுகின்றார்கள். தமிழ்ச் சமூகத்தில் வெளிக்காயங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமைகள் போன்று உட்காயங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், மனிதனின் நிம்மதியைக் குழப்புவதில், இவை இரண்டுமே சம பங்குகள் வகிக்கின்றன.    ஆகவே, பெரும் சமூகவடுவுக்கு  உட்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்குள் தற்கொலை முயற்சிகள் தவிர்க்க முடியாததே. வெளிப்படையாகத் தற்கொலை முயற்சிக்கு பல்வேறு காரணங்களைக் கண்டு பிடித்தாலும் இனப்போரும் அதன் கொடிய விளைவுகளுமே பிரதான மூலவேராக அமைகின்றன.  தமிழ்ச் சமூகத்துக்குள் தற்போது ஆழ ஊடுருவி அழிவை ஏற்படுத்தி வருகின்ற தற்கொலைகளுக்கும் இலங்கை இனப் பிணக்குக்கும் பிணைப்பு உள்ளது.   தவிர, முள்ளிவாய்க்கால் அவலத்தைக் கட்சி அரசியல் மறந்து, தனிநபர் அரசியல் மறந்து, நினைவேந்தியமை ஆழ்ந்த துயரத்திலும் அங்கே சிறு நம்பிக்கை ஒளியைக் காட்டியது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல், இறுகப் பற்றிக் கொள்வோம்.  இது எமக்கான, தீர்வு நோக்கிய பயனத்துக்கான சிறப்பான முகவுரையாகக் கொள்வோம். ஆகவே, நமது அரசியல் தலைவர்கள் இனியும் அடுத்தவர் தவறுகளைக் கண்டு பிடிப்பதை நிறுத்தி ந(த)மது மக்களுக்கான தீர்வுகளைக் கண்டு பிடிக்க முயல வேண்டும்.   போர் இல்லாத பத்து ஆண்டுகளாகத் தெற்கு, வெற்று வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் தமிழர்களிடம் பேசி வருகின்றது. எந்த மாற்றமும், உள்ளிருந்து வெளிக் கிளம்பவில்லை. பேரினவாதச் சிந்தனையில், செயற்பாட்டில் தமிழ் மக்களால் எந்த மாற்றத்தையும் இதுவரை காண முடியவில்லை.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முடிவுற்ற-ஆயுதப்-போரும்-முடிவுறாத-உளவியல்-போரும்/91-233433  
  • 1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்.... கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது. * அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை 5 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. * கிண்ணத்தின் பெயர் - பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் (Benson & Hedges cup) * 18 மைதானங்களில் மொத்தமாக 39 போட்டிகள் இடம்பெற்றன. * 9 அணிகள் கலந்து கொண்டன (நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, இலங்கை மற்றும் சிம்பாப்வே) இனவெறி கொள்கையால் தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டிருந்த 21 ஆண்டு கால தடை நீக்கப்பட்டதால் அந்த அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தில் சேர்க்கப்பட்டது.  * அணி வீரர்கள் வழக்கமான வெள்ளை நிற சீருடையில் இருந்து பெயர் பொறிக்கப்பட்ட வர்ணமயமான உடைக்கு மாறினர்.  * முதல்முறையாக வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டது.  *  பகல்-இரவு ஆட்டங்கள் முதல்முறையாக அரங்கேறின.  *  முதல் 15 ஓவர்களில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் நிற்கும் விதியும் அறிமுகம்.  * 9 அணிகள் கலந்துகொண்டமையினால் போட்டி அட்டவணை மாற்றப்பட்டு ரவுண்ட் ரொபின் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதின   ரவுண்ட் ரொபின் சுற்று முடிவு : நியூஸிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 7 இல் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் முதல் இடம். இங்கிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியையும், 2 தோல்வியையும் சந்தித்து 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடம். தென்னாபிரிக்கா அணி மொத்தமாக 8 போடிகளில் விளையாடி 5 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 10 புள்ளிகளுடன் முன்றாவது இடம். பாகிஸ்தான் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 9 புள்ளிகளுடன் நான்காவது இடம். அவுஸ்திரேலியா அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம். மேற்கிந்தியத் தீவுகள் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஆறாவது இடம். இந்திய அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியையும், 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் ஏழாவது இடம். இலங்கை அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றி, 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் எட்டாவது இடம். சிம்பாப்வே அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி, 7 இல் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம். ரவுண்ட் ரொபின் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன.   1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி எடன் பார்க்கில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டி நியூஸிலாந்து - பாகிஸ்தான்   நியூஸிலாந்து 262/7 (50 overs) பாகிஸ்தான் 264/6 (49 overs) 4 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.   1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி சிட்டினியில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து   252/6 (45 overs) தென்னாபிரிக்கா 232/6 (43 overs) 20 ஓட்டத்தினால் தென்னாபிரிக்க அணியை சாய்த்து மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கான அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கிரேஹம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இறுதிப் போட்டி இடம்பெற்றது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை குவித்தது.   இம்ரான் கான் 110 பந்துகளை எதிர்கொண்டு 72 ஓட்டங்களையும், ஜாவிட் மியாண்டட் 98 பந்துகளில் 58 ஓட்டத்தையும், இன்சமாம்-உல்-ஹக் 46 பந்துகளில் 42 ஓட்டத்தையும் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்படியாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டி.ஆர். ப்ரிங்கன் 3 விக்கெட்டுக்களையும், பொத்தம் மற்றும் ஆர்.கே.இல்லிங்வொர்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 250 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் பெயர்பிரதர் 70 பந்துகளில் 62 ஓட்டத்தையும், ஏ.ஜே. லாம்ப் 31 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ‘ஸ்விங்’ பந்து வீச்சால் அசத்திய வாசிம் அக்ரம், முஸ்தாக் அகமட் தலா 3 விக்கெட்டுக்களையும், ஆகிப் ஜாவேத் 2 விக்கெட்டுக்களையும், இம்ரான் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார். இதன் மூலம் 22 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தியதுடன் இம்ரான் கானும் ( தற்போதைய பாகிஸ்தான் பிரதமர்) சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.    * போட்டியின் ஆட்டநயகனாக பாகிஸ்தான் அணியின் வசிம் அக்ரம் * அதிக ஓட்டம் - நியூஸிலாந்து அணியின் மார்ட்டின் குரோவ் ( 9 போட்டிகளில் 456 ஓட்டம்) * அதிக விக்கெட்டுகள் - பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (10 போட்டிகளில் 18 விக்கெட்)     (தொகுப்பு : ஜெ.அனோஜன்)     http://www.virakesari.lk/article/56474
  • தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்   பள்ளிவாசல்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே அங்கு வாள் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார். அத்தோடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென்றும் சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  நேற்று புதன்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அளுத்கம முஸ்லிம்கள் மீது வன்முறை நடத்தப்பட்டபோது அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் ஆட்சியை மாற்றப் போகிறோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறியதோடு அடுத்த தேர்தலில் வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இப்போது அந்த முஸ்லிம் தலைவர்கள் பூனையை விடவும் மோசமாக உள்ளார்கள். இருந்த உரிமைகளை விடவும் மேலதிகமான உரிமைகளை முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது முஸ்லிம்களுக்கு இருந்த மத உரிமைகளையும் இல்லாமலாக்கி விட்டார்கள். பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்காக இருக்கிறது என்றால் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்கள். புல்வெட்டுவதற்கு என்கிறார்கள். அவர்களால் தைரியமாக அதற்கு பதிலளிக்க முடியாது. என்னால் மட்டுமே இவர்களுக்கு தைரியமாக பதிலளிக்க முடியும். பிரதமர் ரணிலுடன் இணைந்து அழுத்கம முதல் திகன, அம்பாறை வரை பள்ளிவாசல்களை உடைத்து, அங்கு தொழுத மக்களை கஷ்ட்டப்படுத்தினீர்களே அப்போது எங்களை தற்பாதுகாத்துக்கொள்ள வாளை தவிர என்ன எங்களிடம் இருக்கிறது என கேட்கிறேன்? இப்படி தைரியமாக கேட்க எந்த தலைவனுக்கும் தைரியமில்லை. அவர்களின் அட்டூழியங்களை நாங்கள் எதிர்கொள்ள வாளுமில்லாமல் எப்படி இருக்கமுடியும்? எங்களிடம் வெடிபொருள் இருந்தால் சொல்லுங்கள். மக்கள் நாங்கள் இஸ்லாத்திலா இருக்கிறோம் என சந்தேகிக்கும் அளவுக்கு அஞ்சி ஒடுங்கிப்போயுள்ளனர். மேலும் மற்றுமொருவர் இருக்கிறார் அவருடைய சொத்துகுவிப்பு, கடத்தல், மற்றும் வேறு பல விடயங்கள் இருக்கிறது அதை சர்வதேசமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா? அது அரசியல் அனாதைகளுக்கு தவிசாளர் பதவி கொடுப்பதற்கும் வியாபாரம் செய்வதற்குமான அமைச்சு. எனவே அவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு பயன்படாத அமைச்சு பதவியை ரிஷாட் பதியுதீன் துறக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.   http://www.virakesari.lk/article/56572  
  • 10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது இந்து தமிழ் திசை கமல்ஹாசன்: கோப்புப்படம்  மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட ஓராண்டில் இந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. வேட்பாளர் தேர்வில் கல்வித் தகுதியை தகுதியாகக் கொண்டது என மக்கள் நீதி மய்யம் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், தொழிலதிபர்கள், நெருங்கிய நண்பர்களுக்கே வேட்பாளராக வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை எனவும் சர்ச்சை எழுந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான பிரச்சாரங்களை வீடியோ வடிவில் வெளியிட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நீட் தேர்வு உள்ளிட்டவற்றை விமர்சித்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் திமுக - அதிமுக பிரதான கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும், கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் நண்பகல் 12 மணி வரையிலான நிலவரப்படி, மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 3-வது இடத்தைப் பிடித்துள்ள தொகுதிகள்: மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், புதுச்சேரி முதல்முறையாக தேர்தல் களம் கண்ட அமமுகவையும், நாம் தமிழர் கட்சியையும் இத்தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் பின்னுக்குத் தள்ளியது. அதேநேரத்தில், அரக்கோணம், ஆரணி, தருமபுரி, தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளில் முதல் ஐந்து இடங்களில் கூட மக்கள் நீதி மய்யம் வரவில்லை.    https://tamil.thehindu.com/tamilnadu/article27215764.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers  
  • ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு: அரியணை ஏறுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி ஐ.ஏ.என்.எஸ்ஹைதராபாத், ஜெகன்மோகன் ரெட்டி  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. அதேசமயம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி இழக்கிறது. ராஜகசேகர் ரெட்டியிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுக்கிறார். மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 21 இடங்களிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும்  முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்துவிட்டு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் மத்தியில் பாஜகவுக்கு மாற்றாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். ஆனால் அனைத்தும் தற்போது வீணாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் வென்றது. மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் வென்றது. அதன்பின் கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் சென்ற ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி மக்களிடம் ஆதரவு திரட்டி கட்சியை வலுப்படுத்தினார். சந்திரபாபு நாயுடு    தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை பெற்றுத்தருவேன் என்று மக்களிடம் வாக்களித்தார். அதிரடி அரசியலுக்குப் பெயர்பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் களத்தில் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தார். பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய அவர் எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள், ஆந்திராவின் தலையெழுத்தை மாற்றிக் காட்டுகிறேன் என முழக்கமிட்டார். அனைத்துக்கும் மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். ராஜகசேகர ரெட்டி முதல்வராக இருந்த காலத்தில் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு 10 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்காமல் இருந்து வந்தார். இப்போது அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தனது ஆட்சியை இழந்துள்ளார்.   https://tamil.thehindu.com/india/article27215683.ece?utm_source=HP&utm_medium=hp-tslead