Sign in to follow this  
போல்

இலங்கை குண்டு வெடிப்பு: இந்திய ஊடகங்களை ட்விட்டரில் வறுத்தெடுக்கும் இலங்கை மக்கள்

Recommended Posts

இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு குறித்து இந்திய ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கையை சேர்ந்த பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

அதனை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெஹிவலாவிலும், கொழும்புவின் தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

இந்த தாக்குதல்களை நடத்தியது யார் என்பது குறித்த தகவல்களை இலங்கை அரசே அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், பல்வேறு இந்திய செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்ட மதத்தையும், அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்திற்காக இலங்கையை பயன்படுத்திக்கொள்வதாக அருணி என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"இந்திய ஊடகங்கள் மற்றும் சில இந்திய அரசியல்வாதிகள் தங்களது சொந்த அரசியல் நலனுக்காக இலங்கையின் துயரத்தைப் பயன்படுத்துவதை கண்டு அதிர்ச்சியும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது."

Shocked and disappointed to note Indian media and certain Indian politicians using Sri Lanka's tragedy for their own political advantage. #EasterSundayAttackLK
— Aruni Abeyesundere (@aruni_t) 21 ஏப்ரல், 2019

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @aruni_t

"இந்தியர்கள் போலிச் செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்களது ட்விட்டர் பதிவுகள் குறித்து புகாரளியுங்கள்" என்று டக்ஷிகா என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Indians spreading fake news. Report all tweets! #SriLanka
— Dhakshika (@Dhakshika) 21 ஏப்ரல், 2019

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Dhakshika

"இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை பார்க்கையில் எனது வயிறு கோபத்தில் எரிகிறது" என்று பயாஸ் என்பவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"இந்திய ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இன்றி இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முஸ்லிம்களை குற்றம் சாட்டுவதன் மூலம், இந்திய ஊடகங்கள் எவ்வாறு இஸ்லாமியத்திற்கு எதிரான மனநிலையுடன் இயங்குகின்றன என்பதும், இந்தியாவில் பத்திரிகைத் துறை எவ்வாறு சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பதும் அம்பலப்படுகிறது"என்று இந்தியாவை சேர்ந்த ஒருவரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

This haste by Indian news channels and journalists to implicate Muslims in Sri Lanka blasts without any credible source, exposes once again how deep the Islamophobia runs in the Indian media and how compromised is the journalism industry in India. #SriLanka
— علي (@Musanghism) 21 ஏப்ரல், 2019

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Musanghism

https://www.bbc.com/tamil/sri-lanka-48012477

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள்-ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர், பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள், அத்துமீறிய குடியேற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   http://valampurii.lk/valampurii/content.php?id=19316&ctype=news  
  • 90களின் இளைஞர்களின் காதல் தேசிய கீதம்: ஒரு பூ எழுதும் கவிதைசிறு தேன் துளியாய் உருளும்நதி நீர் எழுதும் கவிதைஅலை ஒவியமாய் விரியும்உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலேஇளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்அழகிய இதழ் கொண்டு வாமுத்தம் என்பது நாம் காணும் தியானம்அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்ஒரு பூ எழுதும் கவிதைசிறு தேன் துளியாய் உருளும்ஊசி துளைத்த குமிழிகள் போலே உடைவது உடைவது வாழ்வுகாற்று துரத்தும் கடல் அலை போல தொடர்வது தொடர்வது காதல்உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலேஉடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலேகாலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமாகாலங்கள் தீருமிடத்தில் புது ஜென்மம் கொள்வோமாஉன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமாஒரு பூ எழுதும் கவிதைசிறு தேன் துளியாய் உருளும்நதி நீர் எழுதும் கவிதைஅலை ஒவியமாய் விரியும்கண்கள் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்காதல் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியக்குடும்பம் சொந்தம்உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை காணத்தான்உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேட தான்நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதிஉன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா
  • நிச்சயமாக, தொடருங்கள்... ஆவலாயுள்ளோம். 😊
  • இவற்றை விடவும் கிரிட்டிக்கலன வேறு பல பரிமாணங்களும் இங்கே இருக்கு , பதிவு 2 ஒப் 2 இல் அவற்றை தொட்டுச் செல்வேன் ..
  • தமிழ் மக்கள் ஒன்றுபட்டாலே இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற முடியும்-முன்னணியும் எம்முடன் இணைவார்கள் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியீடு   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக் னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டின் தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தற்போது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப் பலரும் பிரயத்தனத்துடன் செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால் தான் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையினை ஏற்கும் எந்த கட்சியும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். கொள்கைகள் என்பது வருங்கால தமிழ் மக்கள் பற்றிய தொன்றாகும். ஆகையால் அதனை எவ்வாறு அமை க்க வேண்டும். அரசியல் ரீதியாக எவ்வா றான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது எமது மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து எழுக தமிழ் பேரணியில் பேசவுள்ளோம். இதேவேளை கொள்கைரீதியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்முடன் சேர்ந்தவர்கள்.  சில தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது விடுபட்டு நிற்கின்றனர். எதிர்வரும் காலத்தில் அவர்களும் எம்முடன் வந்து இணைவார்கள் என நம்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.           http://valampurii.lk/valampurii/content.php?id=19314&ctype=news