Jump to content

பல உத்தியோகபூர்வமாக உறுதிப்படாத செய்திகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல உத்தியோகபூர்வமாக உறுதிப்படாத செய்திகள் பரவுகின்றன. இருந்தாலும் அவைகளை பகிர்வது நல்லது என்று நினைக்கிறேன்.

1. குண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது காலிமுகத்திடல் தாஜ் ஹோட்டல். தெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் அது இயங்காத காரணத்தால் அவர் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார். இந்த காட்சிகள் தாஜ் ஹோட்டல் சீசீடீவீயில் பதிவாகியுள்ளது.

கண்டி வலம்பட பகுதியைச் சேர்ந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட், தவ்கித் ஜமான் உறுப்பினர்களோடு தாக்குதலுக்காக கொழும்பு வந்து தற்கொலைக் குண்டுகளோடு முதல்நாள் இரவு தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ளார். அடுத்துநாள் காலை 9.00 -9.30 வரைப்பட்ட நேரத்தில் தாஜ் ஹோட்டலில் மக்கள் உள்ள பகுதிக்கு வந்து தனது குண்டு பையின் பெல்ட்டை பலமுறை இழுத்துள்ளார். அது செயல்படாதிருக்கவே வாடகை வாகனமொன்றில் தெகிவளையில் தங்கியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்கு வந்த பின் குண்டை செயலிழக்க முற்பட்ட வேளையில் அது வெடித்திருக்கலாம் என பாதுகாப்பு தரப்பு சந்தேகிக்கிறது.

2.  முஸ்லீம் ஜிகாடிகளின் தலைவர் உடன் காணப்படுகிறாரா ஹிஸ்புல்லா?

https://athirvu.in/wp-content/uploads/2019/04/hissbulla.jpg

இலங்கை சம்பவங்களுக்கு பொறுப்பானதாக அரசு அறிவித்த இயக்கத்தின் கூட்டம் ஒன்றில் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா - பின்னால் அந்த பதாகையைப் பார்க்கலாம். 

3. மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப் பட்டாரா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளா போன்றே, ரிஷாத்தும் தீவிர தமிழின எதிர்ப்பாளர். 90களில் அவருடன் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன். மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியிருந்தார். வார விடுமுறை நாட்களில் கொழும்பிற்கு டியூஷன் வகுப்புகளுக்கு வந்துபோவார். வெள்ளவத்தை மொட் ஸ்டடி சென்டரில் திரு பிரேம்நாத் மாஸ்ட்டரிடம் கணிதம் கற்க வரும்போது, பெரும்பான்மை யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்களுக்கும் இவருக்கும் இடையே சிலவேளைகளில் கேலியாகத் தொடங்கும் சம்பாஷணைகள் கடும் வாக்குவாதத்தில் முடியும். தமிழர்கள் இனவாதிகள் என்றும், புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அடிக்கடி கூறும் இவர், சிங்களவர்கள் தமிழர்களை அழிப்பது நியாயமானது என்று வாதாடுவார். முஸ்லீம் காங்கிரஸின் இளைஞர் அணியில் அன்று இருந்த இவர், பின்னர் அரசியல்வாதி ஆகிவிட்டார். 

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் புணர்வாழ்வமைச்சராக இருந்த காலதிலேதான் வன்னி இனவழிப்புப் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. வன்னியில் முற்றான இனவழிப்பு யுத்தத்திற்கு முகம்கொடுத்துக்கொண்டிருந்த சுமார் நான்கு லட்சம் தமிழர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே எழுபதினாயிரமாகக் குறைத்து  மதிப்பிட்ட பெரும்பங்கு இவருக்கும் இருக்கிறது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும்  மகிந்தவின் யுத்தத்தைத் தொடர்ச்சியாக நியாயப்படுத்திவந்த இவர் இனவழிப்பை நியாயப்படுத்தியதுடன், போர்க்குற்றங்களை மறைக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டவர்.

மன்னாரில், கிறீஸ்த்தவ ஆயருக்கெதிராக கொலைப் பயமுறுத்தல் விடுத்தது முதல், நீதிபதியை அச்சுருத்தியதுவரை, மன்னாரில் பெரும் பலமிக்க அரசியல் ரவுடியாகவும் வலம் வருகிறார்.

அண்மைக் காலமாக மன்னாரை அண்டிய வில்பத்துச் சரணாலயப் பகுதிகளில் முஸ்லீம்களை அடாத்தாகக் குடியேற்றியமை தொடர்பாக சிங்களவர்களின் கடுங்கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

மாவணல்ல புத்தர் சிலையுடைப்பு சந்தேக நபர்களை தனது அரசியல் செல்வாக்கினால் விடுதலை செய்ததும், அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் உயிர்ப்பு ஞாயிறுப் படுகொலைகளின் ஒரு சூத்திரதாரி என்பதும் நாம் அறிந்ததே. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

புள்ளா போன்றே, ரிஷாத்தும் தீவிர தமிழின எதிர்ப்பாளர். 90களில் அவருடன் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன். மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியிருந்தார். வார விடுமுறை நாட்களில் கொழும்பிற்கு டியூஷன் வகுப்புகளுக்கு வந்துபோவார். வெள்ளவத்தை பி. யூ. ஸி யில் திரு பிரேம்நாத் மாஸ்ட்டரிடம் கணிதம் கற்க வரும்போது, பெரும்பான்மை யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்களுக்கும் இவருக்கும் இடையே சிலவேளைகளில் கேலியாகத் தொடங்கும் சம்பாஷணைகள் கடும் வாக்குவாதத்தில் முடியும். தமிழர்கள் இனவாதிகள் என்றும், புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அடிக்கடி கூறும் இவர், சிங்களவர்கள் தமிழர்களை அழிப்பது நியாயமானது என்று வாதாடுவார். முஸ்லீம் காங்கிரஸின் இளைஞர் அணியில் அன்று இருந்த இவர், பின்னர் அரசியல்வாதி ஆகிவிட்டார். 

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் புணர்வாழ்வமைச்சராக இருந்த காலதிலேதான் வன்னி இனவழிப்புப் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. வன்னியில் முற்றான இனவழிப்பு யுத்தத்திற்கு முகம்கொடுத்துக்கொண்டிருந்த சுமார் நான்கு லட்சம் தமிழர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே எழுபதினாயிரமாகக் குறைத்து  மதிப்பிட்ட பெரும்பங்கு இவருக்கும் இருக்கிறது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும்  மகிந்தவின் யுத்தத்தைத் தொடர்ச்சியாக நியாயப்படுத்திவந்த இவர் இனவழிப்பை நியாயப்படுத்தியதுடன், போர்க்குற்றங்களை மறைக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டவர்.

மன்னாரில், கிறீஸ்த்தவ ஆயருக்கெதிராக கொலைப் பயமுறுத்தல் விடுத்தது முதல், நீதிபதியை அச்சுருத்தியதுவரை, மன்னாரில் பெரும் பலமிக்க அரசியல் ரவுடியாகவும் வலம் வருகிறார்.

அண்மைக் காலமாக மன்னாரை அண்டிய வில்பத்துச் சரணாலயப் பகுதிகளில் முஸ்லீம்களை அடாத்தாகக் குடியேற்றியமை தொடர்பாக சிங்களவர்களின் கடுங்கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

மாவணல்ல புத்தர் சிலையுடைப்பு சந்தேக நபர்களை தனது அரசியல் செல்வாக்கினால் விடுதலை செய்ததும், அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் உயிர்ப்பு ஞாயிறுப் படுகொலைகளின் ஒரு சூத்திரதாரி என்பதும் நாம் அறிந்ததே. 
 
இன்னும் இவர்க‌ளை மந்திரியாகவும் ஆளுனர்களாகவும் வைத்திருக்கும்
மத்திய அரசை என்ன என்று சொல்வது.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்...நான் ஏற்கனவே..இவர்கள் ஈருவரின் தொடர்பு பற்றி குறிப்பிட்டிருந்தேன்...இன்றூ செய்திகள் .. பார்த்தீர்கள்   தானே...இருவரு எம்மினத்தை அழிக்கவென்றே ..புறப்பாட்டவர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இன்னும் இவர்க‌ளை மந்திரியாகவும் ஆளுனர்களாகவும் வைத்திருக்கும்
மத்திய அரசை என்ன என்று சொல்வது.... 

ஆட்சியை தக்க வைக்க... இவர்களின் தயவு தேவை என்பதால், விட்டு வைத்திருக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

Image may contain: 2 people, people sitting

Image may contain: 1 person, sitting

கொழும்பு, தெமட்ட கொடவில் நேற்றைய தினம் போலிசாரால் கைது செய்யப்பட்டவரான... குண்டுவெடிப்பில் ஈடுபட்ட முஸ்லிம் பயங்கரவாதி, அமைச்சர் ரிசாத் பதியுதின் நெருங்கிய சகா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிறி இணைத்துள்ள படங்களில் ரிசாத்திற்குப் பக்கத்திலிருப்பது இப்ராஹீம் ஹாஜியார். இவரது மகன்கள்தான் சினமன் கிராண்ட் ஹொட்டேல் மற்றும் கிங்ஸ்பெரி ஹொட்டேல் ஆகியவற்றில் அப்பாவிகளைக் கொன்ற கொலைகாரர்கள். இவரது மகன்களில் ஒருவர் தங்கியிருந்த வீட்டைத்தான் தெமெட்டகொடையில் விசேட பொலீஸ்படை சுற்றிவளைத்தபோது, இவரது மருமகள் குண்டை வெடிக்கவைத்து தன்னையும், குழந்தைகளையும் இன்னும் மூன்று பொலீஸ்காரர்களையும் கொன்றிருக்கிறார்.

அப்படியான ஒருவருடன் ரிஷாத்திற்கு இருக்கும் தொடர்பென்ன? எதற்காக ரிஷாத்தின் அமைச்சரவைக் கூட்டங்களில் ஒரு வியாபாரி பங்கெடுக்க வேண்டும்? 

ரிஷாத் எதற்கு ஒரு கொலிகார அமைப்பின் உறுப்பினர்களை முன்னின்று விடுதலை செய்யவேண்டும்?

இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடைதான், இந்தக் கொலைகார அடிப்படைவாதிகளின் போஷகரே ரிஷாத்தாகவிருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

இப்ராஹீம் ஹாஜியார்   ,இவரது இறப்பு தமிழ்  படங்களை நினைவு படுத்துகின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடிக்கப்போவதாக முதல் நாளே எச்சரித்த தமிழக உளவுத்துறை... அலட்சியம் காட்டிய இலங்கை..!

Srilanka-Bomb-Blast_1200x630xt.jpg

இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தமிழக உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர தாக்குதலில், ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 310-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் உலகையே உலுக்கிய இந்த நாசவேலையை நடத்தியவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முப்படைகளுக்கும், போலீசாருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக, தீவிரவாத தடைச்சட்டத்துடன் சம்மந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கான அவசர நிலையை பிரகடனப்படுவதாக அதிபர் சிறிசேனா கூறினார். இதன்படி அவசரநிலை பிரகடனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், இலங்கை குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்னதாகவே இந்திய உளவுத்துறை இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக கடந்த 20-ம் தேதியே தமிழக உளவுத்துறை எச்சரித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தமிழக உளவுத்துறை ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதில் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று முக்கிய இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு நடத்த சதி நடைபெறுவதாக தமிழக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளனர். எனவே தமிழக உளவுத்துறை கொடுத்த அறிக்கையை தொடர்ந்து மறுநாள் காலையில் தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. எப்போதும் இந்திய உளவுத்துறை தான் அருகில் உள்ள நாடுகளுக்கு இதுபோல எச்சரிக்கை கொடுப்பது வழக்கம். ஆனால் முன்கூட்டியே ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில் இலங்கையில் தாக்குதல் நடத்தப்போவது தமிழக உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.

https://tamil.asianetnews.com/world/sri-lanka-attacks-tamil-intelligence-pqedvw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தெரிந்தாலும் சொல்லாமல் இருந்திருப்பார்கள் ஏனென்றால் பக்கத்தில் வீட்டில் எரிந்தால் அவர்களுக்கு லாபம் தான்  வெடித்த பிறகே எல்லோரும்  கொதித்தெழுவது  இறந்தவர்கள் வரவா போகிறார்கள் 

இப்படி புலனாய்வு செய்கிறவர்கள்தான் காஸ்மீரில் அடி வாங்குவது  நாம் காண்கிறோமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

கொழும்பினுள், வெடிபொருட்களுடன்... பார ஊர்தி மற்றும் சில வாகனங்கள் நுழைந்துள்ளதாக காவற்துறை எச்சரிக்கை.

நிறுவனங்களை மூடி மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு உத்தரவு.பல நிறுவனங்கள் மூடப்படுவதாக கொழும்பு நண்பர்கள் தகவல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.