Jump to content

இனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

WHAT IS TO BE DONE? AN OPEN LATTER TO THE MUSLIM PARENTS - V.I.S.JAYAPALAN

இனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம்.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
உண்மையில் 2013ல் இருந்தே அடிப்படை வாதத்தை முளையில் கிள்ளக்கூடிய தகவல்களை இலங்கை அரசு வைத்திருந்தது . எனினும் அடிப்படைவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு மக்களுக்களதும் சர்வதேச சமூகத்தினதும் கோபத்தை பெறட்டுக்கும் என அரசு காத்திருந்தது. ஆனால் அடிபடை வாதிகள் பற்றிய தகவல் எதிர் நடவடிக்கைகள் உத்திகள் தயாராக இருந்தது. இது ஒருகல்லில் இரண்டு மாங்காய் உத்திதான். முஸ்லிம் தலைமையையும் மக்களையும் பணியவைப்பது என்கிற தயாராகவே இருந்தது. பாய்ந்து அமுக்குவோம் என காத்திருந்தது. அவ்வப்போது அடிப்படை வாத குற்றச்சாட்டுகளில் கைது செய்வதும் பின் முஸ்லிம் பிரமுகர்கள் தலையிடுகிறபோது விடுதலை செய்வதும் என ஒரு நாடகம் நடந்துவந்தது. இது முஸ்லிம் பிரமுகர்களை மாட்டக்கூடிய பைல்களை உருவாக்குவது அதனடிபடையில் அவர்களை பிளாக் மெயில் பண்ணி பணியவைத்துக் கட்டுப்படுத்துகிற அரசின் தந்திரோபாயம்தான்.

2013ல் இருந்து முஸ்லிம் பெற்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டிருக்கவேண்டாம் உங்கள் பிள்ளைகளை வழிதவற வைக்கும் முயற்சிகள் சில இடம்பெறுகிறது. உங்கள் பிள்ளைகளைகளைக் காப்பாற்றுங்கள் என வேண்டுதல் வைத்துக் கொண்டே இருந்தேன். இதற்காக எனக்கு காபீர் முனாபிக் பட்டங்களும் வளங்கபட்டிருக்கு,

இனியாவது முஸ்லிம் மக்கள் விழித்துக் கொள்ளவேண்டும். வீடுகளில் அடிப்படை வாதத்தின் ஆபத்துப் பற்றிய விழிப்பற்ற சூழலும் தவறான மதரசாக்களும்தான் அடிபடைவாத சொற்பொழிவுகளும்தான் பிள்ளைகளை மூளைச் சலவை செக்குள்ளாகி வழிதவற வைக்கிறது. காபீர்களை கொன்றால் சுவர்க்கமும் தேவகன்னியர்களும் காத்திருப்பார்கள் என்கிற அபத்தங்களை நம்பி இளைஞர்கள் வழிதவறுகிற சூழலின் ஆரம்ப புள்ளிகள் இவைதான்.

பெற்றோர்களே சிவில்சமூக தலைமைகளே பள்ளிவாசல் அமைப்புகளே செயல்படாமல் இருபதைவிட தாமதமாகச் செயல்படுவது சிறந்தது. உங்கள் பிள்ளைகளை நீங்கள் காப்பாற்றினால்தான் உங்கள் இனத்தை இறைவன் காப்பாற்றுவான். .,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, poet said:

island பத்திரிகை ஆசிரிய தலையங்கம் எழுதியுள்ளது.

மிக தெளிவாக சொல்கிறது. இவர்களை மூளைச்சலவை செய்தவர்கள் சமூகத்தில் இருந்து நீக்கப் படவேண்டும்.

அப்படி செய்யும் போது, உலகம் மீண்டும் யுத்த குற்றம் என்று நமது படைகளுக்கு தொந்தரவு தரக்கூடாது.

என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிகிறதா?

ஆனாலும், நியூசீலாந்து நாட்டின் தாக்குதலுக்காக, சம்பந்தமே இல்லாமல் ஒரு மூன்றாம் உலக நாட்டில் அப்பாவி கிறித்தவ, சக மனிதர்களை கொல்ல திட்டம் தீட்டிய இவர்கள் மனித குலத்தின் எதிரிகள்.

அவர்களை, ரசிய புட்டின் சொன்னது போல, அல்லாவிடம் தான் அனுப்பி வைக்க வேண்டும். 

அடுத்தவரது மத உரிமைகைள கொடுமையாக நிராகரித்த இவர்கள், இந்த ஈன செயலை செய்து விட்டு, பௌத்தர்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையில் நாளை பள்ளிக்கு எவ்வாறு சென்று நிம்மதியாக தொழுகை நடத்தப போகின்றனர்.

நீண்ட கால நோக்கில், முஸ்லீம் சமூகம் பெரும் நெருக்கடிகளை சந்திக்கப் போகின்றது என்பதே நிதர்சனம்.

காத்தான்குடியினுள் ராணுவம் முகாம் அமைவதும், அவர்களது இவ்வளவு கால கடும் உழைப்பும், உயர்வும் வீணாக்கப் போவதும் நிதர்சனமாக தெரிகிறது.

இதனை எதிர்க்க முடியாத அளவில் அரசியல் பலமும் சிதைக்கப்படும். 

இவர்களது பொருளாதாரத்தினை சிங்களம் உலக நாடுகள் வேறு பக்கம் பார்க்கும் நிலையில் அழிக்கும் அல்லது பிடுங்கும்.

தமிழர்களுக்காகவாவது வெளிநாடுகள் தஞ்சம் தந்தன. பிழைத்துக் கொள்ள முடிந்தது.

ஏழை முஸ்லிம்கள், இன்றைய நிலையில் எங்கே போக முடியும். எல்லா நாடுகளும் சந்தேகத்துடன் தானே பார்க்கின்றன.

இவர்களது அடாவடி அரசியலால், தமிழர்கள் கூட இவர்கள் பக்கம் நிற்க முடியாமல் போயுள்ளது.

வட  இந்தியாவில், இதே போன்ற நிலையில், இந்துத்துவா எழுச்சி அடைந்ததும், முஸ்லிகள் உரிமைகள் மிக மோசமாக பறிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக பெரும் வன்முறைகள் நடப்பதும் எதிர்த்தால், பாகிஸ்தான் போ என்று சொல்வதும் நிகழ்கிறது. 

இதே நிலை இலங்கையில் வரக் கூடாது என்பதே முஸ்லிகள் கவலையாக இருக்கும் என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.

கறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச்சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும் கறுப்பு அங்கியை மட்டுந்தான் கட்டாயமாக அணியவேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜூம்மாக்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமில்லை. பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊரிலும் இப்படித்தான் நடந்தது.

திடீரென்று முளைத்த சிந்தனைப் பள்ளிகளுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி வசூலாகி வந்தது. வெறும் நூறு இருநூறோ ரூபாய்களை மட்டும் நன்கொடையாக செலுத்தி நாங்கள் கற்ற குர்ஆனை மாதாந்தம் மூவாயிரம் செலுத்திக் கற்கும் நிலை உருவாக்கப்பட்டது. மத கல்வி அவசியமேயின்றி முன்னிறுத்தப்பட்டது. வியாபாரமானது. கிலாபத் பற்றிய எண்ணங்கள் இளைஞர்களிடையே விதைக்கப்பட்டு இந்த பூமி முஸ்லிம்களால் ஆழப்படவேண்டியது என்ற பிரம்மை திணிக்கப்பட்டது. சில உலமாக்கள் சொத்துக்கள் சேர்த்தார்கள். எங்களுக்குத் தெரிய பாங்கு முழங்கிக் கொண்டிருந்த சம்பளமே இல்லாத மௌலவிகள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் பாக்கிஸ்தானிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் நண்பர்கள் வந்து தங்கிச் சென்றார்கள். அவ்வப்போது ஆடு மாடு அறுத்து விருந்துகள் நடத்தினார்கள். கஞ்சாவை அம்மியில் அரைத்து இறைச்சிக் கறி சமைத்த வாசம் எங்கள் மூக்குத் துவாரங்களை அரித்துக் கொண்டு காற்றிலேறிப் போனது.

இவர்களுக்குள் இந்த சிந்தனை மாற்றங்கள் எப்படித் திடிரெனத் தோன்றின என்று சிந்திப்பதில் யாருக்கும் ஆர்வம் இருக்கவில்லை.

சிங்கள மக்கள் சீத்தையையா அணிகின்றார்கள்? அவர்களது கலாசாரத்தில் மாற்றம் உண்டாகவில்லையா, நாங்கள் அபாயா அணிந்தால் தீவிரவாதமா என்று அபாயா திணிக்கப்பட்ட அரசியலுக்கு முட்டுக் கொடுப்பதை வெட்கமேயின்றி நிகழ்த்தி வெற்றி கண்டவர்கள் முகங்கள் எல்லாம் வரிசையாக கண்களில் வந்து போகின்றன.

மதத்தின் பெயராலான இத்தகைய சின்னச்சின்ன எக்ஸ்ட்ரீம் செயல்பாடுகளின் ஊற்றுக்கண்களை ஆழமாக நோக்கத் தவறியதோடு, அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகப் பார்க்கும் சூழ்நிலையை, இஸ்லாமோபோபியா போன்ற அரசியல்களைப் பேசுவதை மனிதாபிமானச் செயற்பாடாக கருதியவர்கள் எல்லாம்கூட இன்றைய இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே.

இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசுகின்ற எழுதுகின்றவர்களை மேலைத்தேய கைக்கூலிகள் என்றவர்கள், உண்மையையை உரக்கப் பேசிய எழுதியவர்களின் கழுத்துகள் நெறிக்கப்பட்டும், சமூக ஊடகங்களிலும், வாழ்விலும் அவமானப்படுத்தப்பட்டபோதும் மௌனித்திருந்தவர்கள்கூட இதன் பின்னால் இருக்கிறார்கள்.

இப்போது வெள்ளம் தலைக்கு மேல்! நாடகங்களின் அரங்குகளை மாற்றவேண்டிய தருணம்.

இலங்கை முஸ்லிம்களின் எதிர்வினைகளை மூன்று வகையாகப் பார்க்க முடிகின்றது. 
1) தப்பிக்கும் தந்திரம்
2) குற்றஞ்சுமத்துதல் 
3) எதிர்காலம் குறித்த அச்சம்

இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். இது தப்பித்தல், அச்சம் சார்ந்தது.

குண்டு வைத்தவர்கள் தீவிரவாதிகள், கொல்லப்படவேண்டியவர்கள், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் தீவிரவாத மார்க்கமல்ல என்பதெல்லாம் தப்பித்தல் மற்றும் குற்றச் சுமத்தல் உளவியல் சார்ந்தவை.

தீவிரவாதிகளுக்கு மதமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படவேண்டும் என்று தப்பிக்க முற்படும் பச்சோந்திகளாக முஸ்லிம்கள் மாறவேண்டியது காலத்தின் தேவையாகியிருக்கிறது.

தீவிரவாதக் கருத்துக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூட தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன். சமூக ஊடகங்களில் வெளியான மத தீவிரவாத கருத்துக்களை நமக்கென்ன என்றும், யாரோ ஒருவன் உளருகிறான் என்றும் பொறுப்பற்று இருந்த நீங்கள் இப்போது நல்லிணக்கம் பேசுகிறீர்கள். தீவிரவாதிகளைக் கொல்லவேண்டும் என்கிறீர்கள். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதை, அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் செய்ய முன்வரவில்லை. கழுத்திற்கு கத்தி வந்துவிட்ட பிற்பாடே தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் வன்முறைகளுக்கு மார்க்கத்தில் இடமில்லை என்று கத்துகிறீர்கள். தேவைக்கு அதிகமாக சிந்தனைப் பள்ளிகள் வந்தபோது, அபாயா, முகமூடிகள் வந்தபோது அதனைக் கலாசார மாற்றம் என்பதாக அங்கீகரித்தவர்கள், அவற்றை எல்லாம் நம் கைகளில் கொணர்ந்து சேர்த்த அதே மனிதர்களால் தீனுக்கான போர் நடத்தப்படும்போது தனித்து நிற்கப் பார்ப்பது அறிவு முரணில்லையா? வழக்கம்போல அரசாங்கத்தின் சதி, மேலைத்தேய சதி என்றெல்லாம் புலனாய்வு விசாரணைகளை நமக்கு நாமே செய்து திருப்திப்பட்டுக் கொள்ள விளைவதால் எவ்வளவு தூரம் நம்மை நாம் நியாயப்படுத்திக் கொள்ளமுடியும்? அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்?

இந்தப் பதிவு உங்களில் பலருக்கு உவப்பாக இராதென்று தெரியும். எப்போதும்போல காட்டிக் கொடுப்பவள், கைக்கூலி என்று உங்கள் இயலாமைகளைக் கோபங்களாக கொட்டிவிட்டுக் கடந்துபோவீர்கள் என்பதை அறிந்தே இருக்கிறேன்.

இந்த உண்மைகள் கசப்பானவைதான் மருந்துகள் போல. நோய் தீரவிரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் சிகிச்சையளிப்பட்டே ஆகவேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத்துங்கள். நோய்க்கூறுகளுக்கு சிகிச்சையளிப்பதும், சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெரிவு

Sharmila Seyyid

நன்றி 
ஸர்மிலா செய்யட் முகனூல் பக்கம்

இந்த உண்மைகள் கசப்பானவைதான் மருந்துகள் போல. நோய் தீரவிரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் சிகிச்சையளிப்பட்டே ஆகவேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத்துங்கள். நோய்க்கூறுகளுக்கு சிகிச்சையளிப்பதும், சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெரிவு.

நண்பர் ஒருவரிடமிருந்து சுட்டது

Link to comment
Share on other sites

முஸ்லிம்களின் அடிப்படை வாதமும் மதத் துவேசமும் புதிதாக முளைத்தவை அல்ல. 30 வருடங்களுக்கு முன் முஸ்லிம் பாடசாலையில் நான் கல்வி கற்றபோது இவை பாடசாலையில் சாதாரணமாகக் கற்பிக்கப் படுவதை நேரில் கண்டுள்ளேன். வெளிநாடு வந்தபின்னர் பலதரப்பட்ட முஸ்லிம் சமூகத்தினருடன் பழகியுள்ளேன். பலதரப்பட்ட சமயங்களைப் பின்பற்றுபவர்களுடன் எவ்வாறு ஒற்றுமையாக வாழ முடியும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸர்மிளா செய்யத் கூறியுள்ள விடயங்களைப் பார்க்கும்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் திட்டமிட்ட வகையில் வளர்க்கப்பட்டு  வந்துள்ளது. சிங்கள அரசியல்வாதிகள் முஸ்லிம்களை அடக்குமுறை செய்ய தருணம்பார்த்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விட்டுவைத்திருக்கின்றார்கள். 

அரசியல் வெற்றிக்கு சிறுபான்மை இனங்கள் மீது தங்கியுள்ள ரணிலின் ஐ.தே.கட்சி இனிவரும் தேர்தல்களில் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதால் ராஜபக்ஸக்கள் சிங்கள மக்களின் ஆதரவோடு மாத்திரமே மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். ஆட்சியில் நிலைத்திருக்க இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்குகின்றோம் என்று சொல்லி முஸ்லிம்களை ஒடுக்கத்தான் போகின்றார்கள்.  ஒரு பாரிய புலிகள் இயக்கத்தையே இல்லாமல் செய்தவர்கள் இலகுவாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கிள்ளியெறியமுடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் சிறுகச் சிறுகச் செய்து ஒரு கொதிநிலையை முஸ்லிம்கள் மத்தியிலும் உருவாக்கக்கூடும்.

ஆக மொத்தத்தில் சிறிலங்கா சிங்களவர்களின் நாடாக மாத்திரமே இருக்கப்போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, poet said:

WHAT IS TO BE DONE? AN OPEN LATTER TO THE MUSLIM PARENTS - V.I.S.JAYAPALAN

இனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம்.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
உண்மையில் 2013ல் இருந்தே அடிப்படை வாதத்தை முளையில் கிள்ளக்கூடிய தகவல்களை இலங்கை அரசு வைத்திருந்தது . எனினும் அடிப்படைவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு மக்களுக்களதும் சர்வதேச சமூகத்தினதும் கோபத்தை பெறட்டுக்கும் என அரசு காத்திருந்தது. ஆனால் அடிபடை வாதிகள் பற்றிய தகவல் எதிர் நடவடிக்கைகள் உத்திகள் தயாராக இருந்தது. இது ஒருகல்லில் இரண்டு மாங்காய் உத்திதான். முஸ்லிம் தலைமையையும் மக்களையும் பணியவைப்பது என்கிற தயாராகவே இருந்தது. பாய்ந்து அமுக்குவோம் என காத்திருந்தது. அவ்வப்போது அடிப்படை வாத குற்றச்சாட்டுகளில் கைது செய்வதும் பின் முஸ்லிம் பிரமுகர்கள் தலையிடுகிறபோது விடுதலை செய்வதும் என ஒரு நாடகம் நடந்துவந்தது. இது முஸ்லிம் பிரமுகர்களை மாட்டக்கூடிய பைல்களை உருவாக்குவது அதனடிபடையில் அவர்களை பிளாக் மெயில் பண்ணி பணியவைத்துக் கட்டுப்படுத்துகிற அரசின் தந்திரோபாயம்தான்.

2013ல் இருந்து முஸ்லிம் பெற்றோருக்கு கண்ணை மூடிக்கொண்டிருக்கவேண்டாம் உங்கள் பிள்ளைகளை வழிதவற வைக்கும் முயற்சிகள் சில இடம்பெறுகிறது. உங்கள் பிள்ளைகளைகளைக் காப்பாற்றுங்கள் என வேண்டுதல் வைத்துக் கொண்டே இருந்தேன். இதற்காக எனக்கு காபீர் முனாபிக் பட்டங்களும் வளங்கபட்டிருக்கு,

இனியாவது முஸ்லிம் மக்கள் விழித்துக் கொள்ளவேண்டும். வீடுகளில் அடிப்படை வாதத்தின் ஆபத்துப் பற்றிய விழிப்பற்ற சூழலும் தவறான மதரசாக்களும்தான் அடிபடைவாத சொற்பொழிவுகளும்தான் பிள்ளைகளை மூளைச் சலவை செக்குள்ளாகி வழிதவற வைக்கிறது. காபீர்களை கொன்றால் சுவர்க்கமும் தேவகன்னியர்களும் காத்திருப்பார்கள் என்கிற அபத்தங்களை நம்பி இளைஞர்கள் வழிதவறுகிற சூழலின் ஆரம்ப புள்ளிகள் இவைதான்.

பெற்றோர்களே சிவில்சமூக தலைமைகளே பள்ளிவாசல் அமைப்புகளே செயல்படாமல் இருபதைவிட தாமதமாகச் செயல்படுவது சிறந்தது. உங்கள் பிள்ளைகளை நீங்கள் காப்பாற்றினால்தான் உங்கள் இனத்தை இறைவன் காப்பாற்றுவான். .,

இதை அந்த அல்லா வந்து சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு மார்க்கம் என்ற ஒன்றை திணித்துள்ளார்கள் 

சர்மிளா செய்யத் தன் பக்கமுள்ள நியாயங்களை பல வருடங்களாக எழுதிவருகிறார் அனால் இன்றே ஒரு கொச்சிக்காயை கடித்த உறைப்பில் இருக்கிறார்கள் இனி வரப்போகும் காலங்கள் உறைப்பு மிக்க காலங்களாக அமைய போகின்றன 

அதை நீங்கள் எழுதினாலும் காபீர்தான் எதுக்கும் கவனமாக இருக்கவும் கல் எறிபடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஸர்மிளா செய்யத் கூறியுள்ள விடயங்களைப் பார்க்கும்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் திட்டமிட்ட வகையில் வளர்க்கப்பட்டு  வந்துள்ளது. சிங்கள அரசியல்வாதிகள் முஸ்லிம்களை அடக்குமுறை செய்ய தருணம்பார்த்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விட்டுவைத்திருக்கின்றார்கள். 

அரசியல் வெற்றிக்கு சிறுபான்மை இனங்கள் மீது தங்கியுள்ள ரணிலின் ஐ.தே.கட்சி இனிவரும் தேர்தல்களில் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதால் ராஜபக்ஸக்கள் சிங்கள மக்களின் ஆதரவோடு மாத்திரமே மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். ஆட்சியில் நிலைத்திருக்க இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்குகின்றோம் என்று சொல்லி முஸ்லிம்களை ஒடுக்கத்தான் போகின்றார்கள்.  ஒரு பாரிய புலிகள் இயக்கத்தையே இல்லாமல் செய்தவர்கள் இலகுவாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கிள்ளியெறியமுடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் சிறுகச் சிறுகச் செய்து ஒரு கொதிநிலையை முஸ்லிம்கள் மத்தியிலும் உருவாக்கக்கூடும்.

ஆக மொத்தத்தில் சிறிலங்கா சிங்களவர்களின் நாடாக மாத்திரமே இருக்கப்போகின்றது.

சிங்களவர்களது நாடாக வேண்டுமானால் இலங்கை இருந்திட்டு போகட்டும்...கடைசி வரைக்கும் முஸ்லீம்  நாடாக வர விடக் கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

சிங்களவர்களது நாடாக வேண்டுமானால் இலங்கை இருந்திட்டு போகட்டும்...கடைசி வரைக்கும் முஸ்லீம்  நாடாக வர விடக் கூடாது 

போற போக்கைப்  பார்த்தால், 'அல்லாவை, நாம் தொழுதால், சுகம் எல்லாமே கூடி வரும்'  என்று பாடிக்கொண்டிருக்கப் போறோம் போல தான் தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

சிங்களவர்களது நாடாக வேண்டுமானால் இலங்கை இருந்திட்டு போகட்டும்...கடைசி வரைக்கும் முஸ்லீம்  நாடாக வர விடக் கூடாது 

கலைச்சது சரியெண்டு மறைமுகமாய் சொல்ல வாறீங்கள்...tw_glasses:

Link to comment
Share on other sites

On 4/23/2019 at 3:39 AM, Nathamuni said:

ஆனாலும், நியூசீலாந்து நாட்டின் தாக்குதலுக்காக, 

அதெப்படி உங்களுக்கு உறுதியாக தெரியும் இந்த தாக்குதல் நியூசீலாந்து நாட்டின் தாக்குதலுக்காக நடத்தப் பட்டதென்று?

  1. ஐ.சிஸ் அப்படி சொல்லவில்லை.
  2. நியூசிலாந்து பிரதமரே அதை மறுத்து தமது உளவுப் பிரிவு அப்படி அறியவில்லை என்று அறிக்கை விட்டார்.
  3. சிறி லங்கா பிரதமரும் அப்படி சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.

சிறிலங்கா அமைச்சர் ஒருவர் வெறும் கற்பனையில் நியூசிலாந்து தாக்குதலுக்காக தான் இது என்று சொல்ல இரு நாட்டு பிரதமரும் மறுக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஆதாரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Jude said:

உங்க ளுக்கு ஆதாரம் ரொம்ப முக்கியமாக தேவைப்பட்டால், காத்தான்குடில போனைப் போட்டு கேளுங்க.

வியாபாரிகள், விவசாயிகள் முடங்கிப்போய் உள்ளனர். ஆஸ்பத்திரி கூட போகப்பயப்படுகின்றனர். கதிகலங்கிப் போயுள்ளனர். மக்கள் அலறி விலகிச்செல்வதால், இஸ்லாமிய உடையுடன் பெண் வெளியே செல்ல முடியாத நிலை. வேலை செய்யுமிடங்களில், திடீர் சந்தேகம்.

இது போன்ற தாக்குதல்களின் பின், இப்போது ரஸ்ய, மாஸ்கோவின் வீதிகளில், முஸ்லீம் உடையுடன், தொப்பியுடன் யார் சென்றாலும் மக்கள் தாக்குவதால், தமது கலாச்சாரத்தை துறக்கவேண்டிய நிலை.

அன்று தமிழர் பட்ட அவலத்தை, இந்த ஜிகாதிக் கூட்டம் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்துள்ளது. சிங்களவர் காத்திருந்த தருணத்தை இவர்களே தங்கத்தட்டில் கொடுத்துள்ளனர்.

நாட்டின், சிங்களவரும், தமிழர்களும் சேர்ந்தே வெறுக்கும் பேரவலம்.

அல்லாவின் பெயரால், இந்த ஜிகாதிகள்  சபிக்கப்படுகிறார்கள்.

நீஙகள் ஆதாரம் கேட்கிறீர்கள். 🥵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

ஊர்பக்கம் வந்தால் நான் நேரடியாக கூட்டிசென்று காண்பிக்கிறேன் நாதா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஊர்பக்கம் வந்தால் நான் நேரடியாக கூட்டிசென்று காண்பிக்கிறேன் நாதா 

நம்ம யூட்டர், அநியாயத்துக்கு, யேசுவின், போதனைய கடைப்பிடிக்கிறார். மறு கன்னம் இதோ ஜிகாதிகளே எண்டேல்லே நிக்குது மனிசன்.

அட, கொல்லப்பட்டவர்கள், யூட்டின் ஆக்களா இருந்தாலும் அவர், உண்மையான, கிறிஸ்தவர் தான்.

இந்தக்காலத்தில இப்படி ஒருவரா?

Link to comment
Share on other sites

51 minutes ago, Nathamuni said:

அன்று தமிழர் பட்ட அவலத்தை, இந்த ஜிகாதிக் கூட்டம் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்துள்ளது. சிங்களவர் காத்திருந்த தருணத்தை இவர்களே தங்கத்தட்டில் கொடுத்துள்ளனர்.

நாட்டின், சிங்களவரும், தமிழர்களும் சேர்ந்தே வெறுக்கும் பேரவலம்.

தமிழர்களைச் சிங்களவர்கள் அவலப்படுத்திய நேரங்களிலெல்லாம் கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று, தமிழர்களின் அவலத்தில் ஆதாயம் தேடிக்கொண்டவர்களையும் கொண்டது இந்த முசுலீம் சமூகம். இருந்தும் இந்த முசுலீம்களுக்காகப் பரிந்துபேசிய எங்கள் (சுங்) சுமந்திரனையும் வாயடைக்க வைத்துவிட்டார்களே இந்த யிகாதிகள்..... 😲😲  

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

உங்க ளுக்கு ஆதாரம் ரொம்ப முக்கியமாக தேவைப்பட்டால், காத்தான்குடில போனைப் போட்டு கேளுங்க.

வியாபாரிகள், விவசாயிகள் முடங்கிப்போய் உள்ளனர். ஆஸ்பத்திரி கூட போகப்பயப்படுகின்றனர். கதிகலங்கிப் போயுள்ளனர். மக்கள் அலறி விலகிச்செல்வதால், இஸ்லாமிய உடையுடன் பெண் வெளியே செல்ல முடியாத நிலை. வேலை செய்யுமிடங்களில், திடீர் சந்தேகம்.

இது போன்ற தாக்குதல்களின் பின், இப்போது ரஸ்ய, மாஸ்கோவின் வீதிகளில், முஸ்லீம் உடையுடன், தொப்பியுடன் யார் சென்றாலும் மக்கள் தாக்குவதால், தமது கலாச்சாரத்தை துறக்கவேண்டிய நிலை.

அன்று தமிழர் பட்ட அவலத்தை, இந்த ஜிகாதிக் கூட்டம் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்துள்ளது. சிங்களவர் காத்திருந்த தருணத்தை இவர்களே தங்கத்தட்டில் கொடுத்துள்ளனர்.

நாட்டின், சிங்களவரும், தமிழர்களும் சேர்ந்தே வெறுக்கும் பேரவலம்.

அல்லாவின் பெயரால், இந்த ஜிகாதிகள்  சபிக்கப்படுகிறார்கள்.

நீஙகள் ஆதாரம் கேட்கிறீர்கள். 🥵

இவ்வளவு எழுதி இருக்கிறீர்கள் - நியூசிலாந்து பற்றிய உங்கள் கற்பனையை காணவில்லையே? அதைப் பற்றித் தானே நான் கேட்டேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Jude said:

இவ்வளவு எழுதி இருக்கிறீர்கள் - நியூசிலாந்து பற்றிய உங்கள் கற்பனையை காணவில்லையே? அதைப் பற்றித் தானே நான் கேட்டேன்?

நியூசீலாந்து ஆதாரத்தினை உங்களுக்கு தர நான் என்ன புலனாய்வு நிறுவனமா நடத்துகிறேன்.

கேக்குறாரு பாருங்க, ஆதாரம்.

ஐஸ் இணையத்தளத்தில, அவர்களே claim பண்ணி இருக்கிறார்கள். போய் பாருங்க.

மனிசன்  வீடு எரியுது எண்டு தண்ணியோட ஓட, இந்தாள் நின்றுகொண்டு பீடிக்கு நெருப்பு கேக்குதப்பா....😡

Link to comment
Share on other sites

Just now, Nathamuni said:

ஏன் பொய்யான வதந்திகள் பரப்புகிறீர்கள்? ஜஸ் இணையத்தில் நியூசிலாந்து பற்றி எதுவும் இல்லை. உங்களை போன்றவர்கள் பரப்பும் பொய்களால் தான் நாடும் வீடும் எரிகிறது.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஊர்பக்கம் வந்தால் நான் நேரடியாக கூட்டிசென்று காண்பிக்கிறேன் நாதா 

உங்கள் ஊர்ப் பக்கமா நியூசிலாந்து இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Jude said:

ஏன் பொய்யான வதந்திகள் பரப்புகிறீர்கள்? ஜஸ் இணையத்தில் நியூசிலாந்து பற்றி எதுவும் இல்லை. உங்களை போன்றவர்கள் பரப்பும் பொய்களால் தான் நாடும் வீடும் எரிகிறது.

உங்கள் ஊர்ப் பக்கமா நியூசிலாந்து இருக்கிறது?

அய்யா யூட்,

உங்கள் கிரந்தம் பிடிச்ச அலம்பரைகளுக்கு பதிலளிக்க , எனக்கு நேரம் இல்லை. வேறு யாரையும் பாருங்கள்.

உங்களுக்கு அல்லாட காவல்.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

நம்ம யூட்டர், அநியாயத்துக்கு, யேசுவின், போதனைய கடைப்பிடிக்கிறார். மறு கன்னம் இதோ ஜிகாதிகளே எண்டேல்லே நிக்குது மனிசன்.

அட, கொல்லப்பட்டவர்கள், யூட்டின் ஆக்களா இருந்தாலும் அவர், உண்மையான, கிறிஸ்தவர் தான்.

இந்தக்காலத்தில இப்படி ஒருவரா?

ஜிகாதிகள் அடித்த அடியில் அறளை பெயர்ந்து விட்டதா? கொல்லப் பட்டவர்கள் எனது ஆட்கள் என்று இன்னும் ஒரு கற்பனையை அவிழ்த்து விடுகிறீர்கள். யேசுவின் போதனையை நான் கடைப் பிடிக்கிறேன் என்று இன்னும் ஒரு புரளியை கிளப்பி விடுகிறீர்கள். நீங்களும் அல்லாவின் ஆளோ? அஸ்ஸலாமு அலைக்கும் நானா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dailymirror.lk/breaking_news/ISIS-fanatics-celebrate-SL-attacks/108-165731

ISIS fanatics celebrate SL attacks

Islamic State supporters are celebrating the Sri Lanka suicide bombings which killed 290 people on Easter Sunday and left around another 500 injured, Daily Mail Online reported.

The SITE Intelligence Group, which tracks extremist activity online, said ISIS fanatics were praising the terror attacks as revenge for the Christchurch mosques shooting.

No group has officially claimed responsibility for the blasts at five-star hotels and churches but Sri Lankan police say a previously unknown Muslim extremist group were the subject of an intelligence warning ten days before.

******

உலகத்தின் அனைத்து பெரிய ஊடகங்கள் எல்லாமே ஏன் இந்த தாக்குதல் நடாத்தப் பட்டது என்று அலசி ஆராய்கின்றன.

அவனவன் ரோட்டில நடக்க பயமா வீட்டுக்குள் முடங்கிப் போய் இருக்கிறார்கள்.

உங்க ஒருத்தர் மண்டைப் பிசகு போல கிடக்கு.... அலம்பறை  பண்ணிக் கொண்டு இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/23/2019 at 5:03 AM, poet said:

பெற்றோர்களே சிவில்சமூக தலைமைகளே பள்ளிவாசல் அமைப்புகளே செயல்படாமல் இருபதைவிட தாமதமாகச் செயல்படுவது சிறந்தது. உங்கள் பிள்ளைகளை நீங்கள் காப்பாற்றினால்தான் உங்கள் இனத்தை இறைவன் காப்பாற்றுவான். .,

On 4/23/2019 at 5:39 AM, Nathamuni said:

நீண்ட கால நோக்கில், முஸ்லீம் சமூகம் பெரும் நெருக்கடிகளை சந்திக்கப் போகின்றது என்பதே நிதர்சனம்.

 காத்தான்குடியினுள் ராணுவம் முகாம் அமைவதும், அவர்களது இவ்வளவு கால கடும் உழைப்பும், உயர்வும் வீணாக்கப் போவதும் நிதர்சனமாக தெரிகிறது.

48இன் பின்னர் தமிழர்களின் வளர்ச்சியை கல்வியை பொருளாதாரத்தை திட்டமிட்டு அழித்ததுமல்லாமல் மீண்டும் தமிழன் எழும்ப இயலாதவாறு சட்டங்களையும் படைகளையும் புலனாய்வுப் பிரிவினரையும் போட்டு இன்னமும் அடக்கி வைத்திருக்கிறார்கள்.

83க்கு முன்பு தமிழன் இருந்த இடத்தை முஸ்லீம்கள் மெதுமெதுவாக பிடித்துக் கொண்டு வந்தார்கள்.அவர்களை வைத்தே தமிழர்களின் தற்போதய நிலைக்கு முஸ்லீம்களையும் கொண்டு வருவார்கள்.
தமிழர்களை எரிக்க மூட்டிய தீயில் குளிர் காய்ந்த முஸ்லீம்கள் அதே தீக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தமிழர்களுக்கு தானே வந்தோரை வரவேற்று பழக்கமாகி விட்டதே.
முஸ்லீம்களே உங்களை வரவேற்கிறோம் வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அருமைச் சகோதரனது அன்னையே

தமிழர்மீது அடக்குமுறையைப் பிரயொகித்து இன அழிப்புச்செய்யும்போது எமது வலியை உணராது அவர்களுடன் சல்லாபித்தவர்கள் இப்போது அதே வன்முறை தங்கள்மீது பிரயோகிக்கப்படும்போதும் பொறுத்துக்கொள்ளத்தான்வேண்டும் காரணம் கடந்தகாலங்களில் சிங்களவர்களது எண்ணங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய நடைமுறையைப் பின்பற்று ஒருவித கூட்டுச் சமூகப் பழக்கவழக்கத்துக்குள் தம்மை உட்படுத்தி வாழப்பழகிக்கொண்டவர்கள். அதுவும் தமது வாழ்வை வழப்படுத்திக்கொண்டவர்கள் இலங்கையின் முஸ்லீம்கள்.

என்றாவது ஒரு நாள் இவர்கள் தமிழர்மீது நடைமுறைப்படுத்தப்பட்ட இன அழிப்பினை எதிர்த்து வாய் திறந்திருக்கிறார்களா? அது எதுவுமில்லாது குறிக்கோள் எதுவுமில்லாது சிங்கள அரசுகளால் கொண்டுவரப்பட்ட, போலி உடன்படிக்கையிலும் ஒப்பந்தங்களிலும் தமக்கான இடமும் இருக்கவேண்டும் என குளறுபடி செய்தவர்கள்தானே!

அவர்கள் எம்மைக் கொல்லும்போது பேசாமடந்தைகளாக இருந்து, ஒரு இனத்தின் அழிவுக்கு வழிவிட்டுக்கொடுத்தவர்கள். பைத்தியங்கள் செய்த சேட்டையால் இனிமேல் அவர்களுக்கு வரும் அனைத்துவிதச் சேதாரத்தையும் அனுபவிக்கத்தானே வேண்டும்.

பைத்தியங்கள் குண்டை வெடிக்கச்செய்துவிட்டு உம்மாவின் சீலை முந்தானைக்குள் ஒழிந்துகொள்ளும், ஆனால் மிகவும் வலுவாகக்கட்டமைக்கபட்ட சிங்களத்தின் இனவாதப் புலனாய்வின் பிடிக்குள்ளும் கொலைக்கூட்டத்தின் கண்களிலிருந்தும் முஸ்லீம்கள் இனிமேல் தப்பமுடியாது. இதற்காக நாம் அவர்களைப் பரிதாபத்துடன் பார்த்துக் கவலைப்படுவதுமட்டுமே முடியும்.

இனிவரும்காலங்கள் முஸ்லீம் தாய்மார்கள் ஊறுகொடவத்தைப்பாலத்தில் தமது பிள்ளைகளது பிணமும் மிதக்கிறதா எனப் பார்க்கக்கூடுவார்கள் என்பதை நினைக்கவே மனம் பேதலிக்கிறது.

எனது அருமைச் சகோதரனது அன்னையே உனக்காக நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு எதுவுமே என்னால் முடியாது.
காரணம் நாம்பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லிமாளாதவை அந்த வலிகள் எமது ஏழேழு சந்ததிக்கும் மறக்கமுடியாதவை, இத்துன்பங்களை நீ எப்படித்தாங்கிக்கொள்ளப்போகிறாய் என்பதே முதல் கேள்வி.

இதற்குக்காரணம் முஸ்லீம் தலைமைகள் தங்களுக்காகவும் இலங்கைத்தீவின் சிறுபான்மை இனத்துக்காகவும் எக்காலத்திலும் ஒன்றுபட்டுக் குரல்கொடுக்கக்கூடிய தமிழர்தரப்பைக் கையுதறிவிட்டதே காரணம். அதற்காக சம்பந்தன், சுமந்திரன் மாவையருடன் கைகோர்த்தால் அவர்கள் அக்கைகளில் விலங்குபோட்டு சிங்களவனின் கொலைக்களத்தில்தான் கொண்டுபோய் விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகம் வலி தாங்கியவர்கள் எம்மவர்தான் என்பதில் எப்போதும் மாற்று கருத்து கிடையாது, வலியை உணர்ந்தவர்கள் நாங்கள், எப்படி எங்களால்  ஒருவர் அதே போல் அவஸ்தைப்படுவதை இரசிக்கமுடியும்? ஒரு சிலரின் தவறுகளுக்கு ஒட்டு மொத்தமாக அனைத்து முஸ்லீம்களும் அவஸ்தைப்படவேண்டுமா ? முஸ்லீம் பெற்றோருக்குமட்டுமல்ல  எமக்கும் கடமையுண்டு , முஸ்லீம்கள் செய்த வரலாற்று தவறை நாமும் செய்யக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

உங்கள் ஊர்ப் பக்கமா நியூசிலாந்து இருக்கிறது?

ஹாஹா  நான் சொன்னது இலங்கையின் கிழக்கு பகுதியை   நியுசிலாந்து எது  என தெரியாமல் இந்தாள் விளையாடுது :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.