யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  

Recommended Posts

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட்  செய்தி வெளியிட்டுள்ளது

ஐஎஸ் அமைப்பின் அமாக்  பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ் அமைப்பின் போர்வீரர்கள் என அமாக் தெரிவித்துள்ளது

அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரஜைகளையும் இலக்குவைத்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/54510

’நாமே இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்! கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

இலங்கையில் தாமே தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது.

இந்த தகவலை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ செய்தி முகவரமைப்பான AMAQ அறிவித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த செய்து அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் இதனை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களை இன்னமும் வெளியிடவில்லை என்றும் ரொய்டர் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நாளான உயிர்த்த ஞாயிறு அன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து ஆறு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், தேசிய தாவீத் ஜமாத் என்ற உள்ளூர் கடும்போக்கு முஸ்லீம் அமைப்பொன்றே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கமும், படையினரும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐ.எஸ் என்ற சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் சில பிரதேசங்களை இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தி இயங்கிவரும் ஐ.எஸ் என்ற இஸ்லரிய ஆயுதக் குழு தாங்களே சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாக உரிமை கோரியிருக்கின்றது.

ஐ.எஸ் ஆயுததாரிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளமாக ஹமாக் இதனை அறிவித்துள்ளது. எனினும் இந்தத் தாக்குதல்களை அவர்கள் எவ்வாறு மேற்கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தப்படுத்தக் கூடிய எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை.

எவ்வாறாயினும் நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து நடத்தப்படட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே சிறிலங்காவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச்சிலுள்ள இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் கிறைஸ்சேர்ச் தாக்குதலுக்கும் – சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு விபரங்களையும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/118437?ref=bre-news

Share this post


Link to post
Share on other sites

"இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது" - அமைச்சர் ரூவன் விஜயவர்த்தனே

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாதக் குழுவான ஜே எம் சி-யும் இணைந்து இத்தாக்குதலை தாக்குதலை நடத்தியிருக்கின்றன என்று அவர் தமது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பான மேற்கொண்டு எந்தவித தகவலையும் அவர் அளிக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில், பாதுகாப்புத் துறை ராஜீய அமைச்சரும், பிரதமருமே பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள். ஆனால், இத்தகைய தாக்குதல் நடக்க இருப்பது தொடர்பாக கிடைத்த தகவல்கள் பாதுகாப்புத் துறை துணை அமைச்சரான (ராஜீய அமைச்சர்) தம்மிடமும், பிரதமரிடமும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழு (ஐ.எஸ். குழு) இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தமது ஊடகப் பிரிவு மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றிருப்பதை சற்று கவனமாக அணுகவேண்டும் என்று இலங்கையில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார். "வழக்கமாக தாக்குதல் நடந்த உடனே, தாக்குதல் நடத்தியவரின் புகைப் படத்தை தமது ஊடகத் தளமான 'அமாக்'கில் வெளியிட்டு பொறுப்பேற்பதே ஐ.எஸ். குழுவின் வழக்கம்" என்று அவர் கூறுகிறார்.

தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிரியாவை சேர்ந்தவர் ஒருவரும் அடக்கம். உள்ளூர் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு

இலங்கையில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில் இன்று மதியம் நாடாளுமன்றம் கூடியது.

அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தேவை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48023635

Share this post


Link to post
Share on other sites

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐ எஸ் இஸ்லாமிய மதப் பயங்கரவாதிகளின் படங்களை ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு அதன் பிரச்சார ஊடகம் ஊடாக வெளியிட்டுள்ளதாக.. பிரித்தானிய மிரர் ஊடகம் படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.mirror.co.uk/news/world-news/breaking-isis-release-picture-sri-14478035

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, ரதி said:

 

ஆளுக்கு  72 பேரோட, சரியான பிஸியா இருப்பினம்....
 

Share this post


Link to post
Share on other sites

தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்

தலைநகர் கொழும்பு உட்பட  நாட்டில் நடத்தப்ப்ட்ட  8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

isis.jpg

அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.

5108534479431379201.jpg

4263086595842077274.jpg

http://www.virakesari.lk/article/54536

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, Nathamuni said:

ஆளுக்கு  72 பேரோட, சரியான பிஸியா இருப்பினம்....
 

அதெல்லாம் இருக்கட்டும் உதில பின்னுக்கு ஒருத்தர் மறைந்து இருக்கிறார். வீடியோவில் அவர் தெரியவில்லை. ஆனால் படத்தில நிக்கிறார் 8 வது ஆள் ஒருத்தர்...அவர் உப்ப எங்கே?

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, ரதி said:

அதெல்லாம் இருக்கட்டும் உதில பின்னுக்கு ஒருத்தர் மறைந்து இருக்கிறார். வீடியோவில் அவர் தெரியவில்லை. ஆனால் படத்தில நிக்கிறார் 8 வது ஆள் ஒருத்தர்...அவர் உப்ப எங்கே?

ஜெர்மனி போய் அசைலம் அடிக்கப் போறார்.

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, போல் said:

’நாமே இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்! கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

உந்த ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா எண்டுதானே முந்தி கனபேர் கதைச்சவையள்.

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, குமாரசாமி said:

உந்த ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா எண்டுதானே முந்தி கனபேர் கதைச்சவையள்.

சிஐஏ யின் வேலை தான் என்ன?

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, ஈழப்பிரியன் said:

சிஐஏ யின் வேலை தான் என்ன?

ஏன் சிஐஏ யே ஐஎஸ்சை துவக்கி வைச்சது?

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, nunavilan said:

58381805_10211331910573272_4151893147867

இவர்கள் அவ‌ர்கள் அல்ல என்று யாராவது வந்து சொன்னாலும் சொல்லுவினம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, putthan said:

இவர்கள் அவ‌ர்கள் அல்ல என்று யாராவது வந்து சொன்னாலும் சொல்லுவினம்

 

இவர்கள் அவர்கள் அல்ல என்று ஐஎஸ் அறிக்கை விடும்வரை மழுப்பியத சிங்கள அரசுதான்.. உள்ளுர் இஸ்லாமிய அமைப்புகள் தான் செய்தது என்றும் வெளியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு தெடர்பிருப்பதாக தெரியவில்லை என்றுதான் இங்கை அரசு முடிந்தவரை இந்த தாக்குதல் குறித்து மழுப்பப்  பார்த்தது. ஆனால் இப்போது அறிக்கையும் வீடியோவும் வெளியிட்டு விட்டார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தாக்குதலில் தெடர்புடைய இஸ்லாமிய அமைப்பினர் இலங்கை இராணுவத்தில் இருந்தமை, புலனாய்வுதுறையில் இருந்தமை, இலங்கை அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தமை. என பல இருக்கலாம். இந்த இஸ்லாமிய தீவிராதத்துடன் சிங்கள பேரினவாதம் ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தப்படுகின்றது. அதுதான் இங்கு மிகப் பிரதானமானது.  தாக்குதலோடு தொடர்புடையவர்களின் பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் மேலும்  அவர்கள் எங்கு தாக்கப் போகின்றார்கள் என்ற இலக்கு உட்பட அனைத்தும் ஏற்கனவே தெரிந்திருந்தும் இந்த தாக்குதலை ஏன் சிங்களம் தடுக்கவில்லை என்பதுதான் தற்போதைய கேள்வி.   ஒரு வேளை இந்திய தூதரக தாக்குதலை உள்ளால கதைத்து தடுத்துவிட்டார்களோ தெரியாது. 

 

Share this post


Link to post
Share on other sites
42 minutes ago, சண்டமாருதன் said:

இஸ்லாமிய அமைப்பினர் இலங்கை இராணுவத்தில் இருந்தமை, புலனாய்வுதுறையில் இருந்தமை, இலங்கை அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தமை. என பல இருக்கலாம். இந்த இஸ்லாமிய தீவிராதத்துடன் சிங்கள பேரினவாதம் ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தப்படுகின்றது.

ஐக்கிய இலங்கை என்ற சொல்லை பாவித்தே பல தீவிரவாத செயல்களை செய்துள்ளனர்...சிங்களம் பிரிவினை என்றால் கசக்கும் ஐக்கியம் என்றால் இனிக்கும் என கனவு கண்டு கொண்டிருக்கும் பொழுது...மதவாதிகள் ஆப்பை இருக்கிவிட்டனர்... 

இந்த பேரினவாதிகள் இன்னும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ எனையோரை விசாரிக்க முன்வரவில்லை .....அப்பாவிகளை பிடித்து விசாரித்து போட்டுத்தள்ளுவார்கள்....அந்த அமைப்பை கூட தடை செய்யவில்லை....

Share this post


Link to post
Share on other sites

Image result for mccain with isis leader

 

Image result for mccain with isis leader

ஐஸ்ஸ் என்பது மழைக்கு வந்த ஈசல் அல்ல ...
அப்படித்தான் திடீரென வந்தாலும் பல  அரசுகளின் 
குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் நீண்ட வடிவைப்பில் வந்ததாகும்.

இதில் சேரும் முஸ்லீம் இளைஞர்களும் பலியாடுகள்தான் 
நாடுகளில் பஞ்சம் பொருளாதார தடை போன்றவற்றை உருவாக்கி 
இளைஞர்களை வேலை இல்லாதவர்கள் ஆக்குவது பின்பு சவூதி மூலம் 
குன்டுகள் வீசி அவர்களை கொடிய கோபத்துக்கு ஆள் ஆக்குவது 
பின் பெருத்த இஸ்லாமிய மத போதகர்கள்போல் உருவாக்கி வைத்திருக்கும் 
ஆட்களை அனுப்பி மூளையை தற்கொலைதாரியாகும் வரை கழுவி ஊதுவது. 

யார் மிக தீவிர இஸ்லாமிய போக்கு மன அழுத்தம் போன்றவர்களாக 
இருக்கிறார்கள் என்ற விபரங்களை பேஸ்புக்   கூகிள்  ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் 
சி ஐ எ வுக்கு தகவல் கொடுக்கும். 
நான் இங்கு எழுதி பதியும் ஒவ்வரு கருத்தும் உடனடியாகவே ஆங்கிலத்தில் மொழியாக்கி 
கூகிளால் சேமிக்கபடுகிறது. ஓவருவருவரின் அசைவுகளும் நகர்வுகளும் நீங்கள் தொலைபேசி 
கையில் வைத்த்திருந்தால் ஜிபிஸ் மூலம் கண்காணித்து சேமிக்க படுகிறது. 
சில வருடம் முன்பு நான் இங்கு ஒரு பதிவை எழுதினேன் ..... நீங்கள் ஒரு ஸ்மார்ட் போனை கையில் 
வைத்திருந்தால் உங்களுக்கு தெரியாமலே உங்கள் போனில் இருக்கும் மைக்கை ஆன் செய்து நீங்கள் 
இருக்கும் அறையில் நடக்கும் சம்பாஷணையை அப்படியே கேட்க்கிறார்கள் என்று. அதுக்கு அவுசில் இருக்கு 
ஒருவரும் இன்னும் சிலரும் பல் இளித்தனனர் ..... நான் என்க்ரிப்ட் பண்ணி வைத்திருக்கிறேன் கிளிக்கிறேன் என்று  பதில் எழுதினார்கள். டெக்னாலஜி எங்கு இருக்கிறது இவர்கள் என்ன சிறுபிள்ளைத்தனமாக 80ஆம் ஆண்டுபோல்  என்க்ரிப்ட் பற்றி பேசுகிறார்கள் என்று யோசித்தேன். பின்பு சில வருடம் கழித்து யாரோ அதை செய்தியாக  இங்கே இணைத்திருந்தார். 

இப்போது நீங்கள் டிவி வாங்க போனால் குப்பை மலிவில் மிகவும் தரம் வாய்ந்த டிவிகளை 
வாங்க முடியும் ... டிவி தயாரிப்பாளர்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகிறது? என்று யாரவது யோசித்து 
இருக்கிறீர்களா? இப்போ சம்சுங் ல்ஜி போன்ற நிறுவனங்களுக்கு உங்களுக்கு இலவசமாக தந்தாலே 
கட்டுப்படியாகும் ஆனால் மக்கள் ஊர்வலம் அது இது என்று அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்றுதான் மலிவு விலையில் தருகிறார்கள். அவர்களது இலக்கு தமது டிவியை உங்கள் லிவிங் அறைக்கு அனுப்பி வைப்பதுதான். டிவி விற்பனையில் பணம் பார்ப்பது கடினம் சேகரிக்கும் டேட்டாவில் கோடி  கோடியாக சம்பாதிக்கிறார்கள். 

இனி தலைப்புக்கு வருவோம் ...
இந்த தாக்குதல் இந்திய ராவின் உள் வீட்டு வேலை உதவியவர் மூத்தவரும் மொஸாட்டும் 
இலங்கைக்கு கிடைத்த தகவல் இப்போ வரும் ஐஸ்ஸ் உரிமை கோரல் எல்லாம் ஒரே திட்டத்தின் கீழ் 
வந்தவைதான். இலங்கைக்கு தகவல் இப்படி நடக்கலாம் இது பற்றி மேலும் அறியும்போது தெளிவாக 
தெரிவிக்கிறோம் என்றுதான் தகவல் வந்திருக்கும். இலங்கையின் ஆளுமைக்கு அவர்கள் அறியும்போது 
கூறுவர்கள்தானே என்றுதான் இருக்க முடியும். இங்கே மூன்றாவது மாங்காய் தான் இலங்கை போலீசு 
இவர்களுக்கு உதவத்தான் ..... உதவி என்ற பெயரில் அவர்கள் காலம் இறங்க போகிறார்கள். இலக்கு சீனா 
ஈரான் மீது முழுமையான பொருளதாதர தடை வரும் மே முதலாம் திகதி அமுல் ஆகிறது. சீனா எவ்ளவு எண்ணையை  பெறுகிறது எவ்வாறு கொண்டு செல்கிறது போன்ற தகவல் சேகரிக்க இலங்கை துறைமுகம் சார்ந்த அனைத்து தகவலும் தேவை ...... இப்போ உதவ வந்தவர்களுக்கு என்ன கொடுக்கிறோம் என்று தெரியாது எல்லாவற்றையும் தூக்கி கொடுக்க இலங்கை போலீஸ் தயார். 
இங்கு சிக்கல் சீனாவுக்கு எல்லாமே தெரியும் எண்பத்துதான் .... அவர்களுக்கு சிங்கள போலீசின் ஆளுமையும் 
தெரிந்துதான் செயல்படுவார்கள்.

எங்கோ யாருக்கோ ஏகாபத்திய போட்டி 
பாவம் அப்பாவிகள் சாகிறார்கள். 

 

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, Maruthankerny said:

இந்த தாக்குதல் இந்திய ராவின் உள் வீட்டு வேலை உதவியவர் மூத்தவரும் மொஸாட்டும் 
இலங்கைக்கு கிடைத்த தகவல் இப்போ வரும் ஐஸ்ஸ் உரிமை கோரல் எல்லாம் ஒரே திட்டத்தின் கீழ் 
வந்தவைதான்.

வேறு ஒருவர் பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து செய்த சதி திட்டம் என்று சொல்கிறார் ....எதை நாங்கள் நம்புவது... 

எது எப்படியோ புலிகளுக்கு பிறகு நாடு அந்த மாதிரி இருக்கு போகலாம் என்று சொன்ன எங்களுக்கு ....நாடு அந்தமாதிரி இல்லை எதுவும் எப்பவும் நடக்கலாம் ....விரும்பினால் போங்கோ என்ற செய்தியை செல்லி நிற்குதுவா.

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில்.. முஸ்லீம்  பெண்களின் உடைக்குள்... ஆண் கைது.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, putthan said:

வேறு ஒருவர் பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து செய்த சதி திட்டம் என்று சொல்கிறார் ....எதை நாங்கள் நம்புவது... 

எது எப்படியோ புலிகளுக்கு பிறகு நாடு அந்த மாதிரி இருக்கு போகலாம் என்று சொன்ன எங்களுக்கு ....நாடு அந்தமாதிரி இல்லை எதுவும் எப்பவும் நடக்கலாம் ....விரும்பினால் போங்கோ என்ற செய்தியை செல்லி நிற்குதுவா.

கேள்விகள் தான் விடைகளை நோக்கி நகர்த்தும் ....

ஏன் செய்தார்கள்?

ஏன் இப்போது செய்கிறார்கள்?

இதனால் அடையப்போகும் நன்மை தீமை?

சேர்ச்சில் குண்டு வெடிப்பதால் சீனாவுக்கு என்ன லாபம்? 

ஐஸ்ஸ் யார் வீட்டு பிள்ளை?

காணொளிகளை பரப்புவார்கள் யார்? ஏன் பேஸ்புக் யூடூப் தடை செய்வதில்லை? 

இப்படியே நிறைய இருக்கு.... 

 

இன்னும் இரு கிழமையில் உலகில் முக்கிய விடயம் 
ஈரான் மீதான தடை.
யாரும் ஈரானிடம் இருந்து எண்ணெய்  வாங்க முடியாது 
அப்படி மீறினால்? என்ன ஆகும் என்பதையும் 
அமேரிக்க அடாவடிதனத்துக்கு வேறு விடிவே இல்லையா 
என்பதையும் வரும் கிழமை நிர்ணயிக்க போகிறது.

உலகின் எரிபொருள் விலை அதிகரிக்க போகிறது .... அதை சவூதி 
நிர்ணயிக்கும் பல பில்லியன் டொலர்களை சவூதி சம்பாதிக்க போகிறது 
இவர்களுக்கு பல பில்லியன் டொலருக்கு ஆயுத ஒப்பந்தம் செய்த அமெரிக்க 
நிறுவனங்களின் வங்கி கணக்குகள் நிறைய போகிறது. 

சீன - ரசிய - இந்தியாவில் பொருளாதார மந்தம் தோன்ற சாத்தியம் உண்டு.

சீனா பெரும்பலாலும் இலங்கை போன்ற ஒரு ரிஸ்க் ஆனா நாடுகளில்தான் முதலீடுகளை 
செய்கிறது இதில் இரண்டு லாபம் உண்டு ஒன்று வேறு யாரும் போட்டிக்கு வர மாட்டார்கள் என்பதால் 
போட்டி இல்லை ..... மற்றது வேறு யாரும் போக முடியாது என்பதால் குறித்த நாட்டு அரசுடன் பேசி மிக தூர நோக்கு லாபாத்தை குத்தகை அடிப்படையில் பெற முடிகிறது.

இதுக்கும் ஐஸ்ஸ் சை வைத்து எந்த நாட்டிலும்  ஒரு குழப்ப நிலையை எம்மால் உருவாக்க முடியும் 
என்ற செய்தி சீனாவுக்கு கொழும்பில் இருந்து அனுப்பிவைக்க பட்டிருக்கிறது.  
 

 

 

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, Maruthankerny said:

சீனா பெரும்பலாலும் இலங்கை போன்ற ஒரு ரிஸ்க் ஆனா நாடுகளில்தான் முதலீடுகளை 
செய்கிறது இதில் இரண்டு லாபம் உண்டு ஒன்று வேறு யாரும் போட்டிக்கு வர மாட்டார்கள் என்பதால் 
போட்டி இல்லை ..... மற்றது வேறு யாரும் போக முடியாது என்பதால் குறித்த நாட்டு அரசுடன் பேசி மிக தூர நோக்கு லாபாத்தை குத்தகை அடிப்படையில் பெற முடிகிறது.

ஆனால் சிறிலங்கா வல்லர‌சுகள் வந்து போகக்கூடிய நாடு என்று சீனா வுக்கு நன்றாக தெரியும் தானே....

மேற்குலகு சீனாவுக்கு செய்தி அனுப்பியிருக்கா அல்லது
சீனா மேற்குலகுக்கு செய்தி அனுப்பியிருக்கா ....

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, putthan said:

ஆனால் சிறிலங்கா வல்லர‌சுகள் வந்து போகக்கூடிய நாடு என்று சீனா வுக்கு நன்றாக தெரியும் தானே....

மேற்குலகு சீனாவுக்கு செய்தி அனுப்பியிருக்கா அல்லது
சீனா மேற்குலகுக்கு செய்தி அனுப்பியிருக்கா ....

சீனா ஒருபோதும் நான் ரவுடி என்று ஜெயிலுக்கு போகும் வேலையை பார்ப்பதில்லை 
அவர்கள் பொருளாதார வளர்ச்சியைத்தான் பார்க்கிறார்கள். யுத்தத்தில் பொருள் பணம் 
இழக்கும் குறுகிய எண்ணம் அவர்களுக்கு இல்லை 

அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்க அரசு இஸ்திரேல் சியோனிஸ்ட்டுக்களால் கட்டுப்படுத்த பட்டு 
வருவதால் கடந்த 30 வருட காலமாக பெரும் பொருள் இழப்பில் அமெரிக்கா யுத்தம் செய்து வருகிறது 

ஐஸ்ஸ் க்கும் சீனாவுக்கும் எந்த தொடப்பும் இல்லை 

அடுத்த வார உலக மாற்றத்தை நோக்கியே சீனா இப்போது சிந்திக்கும் 
ரசியாவுக்கு பெருத்த தலையிடி ஒருபக்கம்  எண்ணெய் விற்பனையில் இலாபம் 
மறுபக்கம்  என்பதால்  ரசியாவின் போக்கு எப்படி இருக்கும் என்பது இங்கு முக்கியம்.

குண்டுவைத்து இலங்கைக்கு வரவேண்டிய தேவை இப்போ சீனாவுக்கு இல்லை. 

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, Maruthankerny said:

 

குண்டுவைத்து இலங்கைக்கு வரவேண்டிய தேவை இப்போ சீனாவுக்கு இல்லை. 

போர்ட் சிற்றியை கையகப்படுத்த  ராஜாபக்ச கோஸ்டியினர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் சீனாவுக்கு இருக்கும்தானே...

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, putthan said:

போர்ட் சிற்றியை கையகப்படுத்த  ராஜாபக்ச கோஸ்டியினர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் சீனாவுக்கு இருக்கும்தானே...

 

 
 

 

 •  
 •  
 
 

The construction of Port Cityis being funded via the largest single foreign direct investment in Sri Lankan history.  The construction of Port Cityis being funded via the largest single foreign direct investment in Sri Lankan history. Photograph: Atul Loke/Bloomberg via Getty Images

Iron cannons installed by the Dutch to ward off colonial rivals still line Galle Face Green, a grassy, mile-long promenade along the Colombo seafront. Further out to sea, within range of the guns, a new world power is leaving its mark on Sri Lanka’s capital.

Currently, Port City is just a flat expanse of blank land jutting out into the ocean, growing a fraction larger each day, as dredging ships pour what will eventually amount to 65 million cubic metres of sand.

Within a few years, however, Port City will be the site of glass skyscrapers, a busy financial district, hospitals, hotels and even a theme park. Across the world, Chinese companies are developing President Xi Jinping’s Belt and Road Initiative by building new roads, ports and bridges – but in Sri Lanka they are building a whole new metropolis.

Q&A

Cities of the New Silk Road: what is China's Belt and Road project?

Show

“It is a completely new city that will nearly double the size of Colombo right now,” says Janaka Wijesundara, a former director at Sri Lanka’s Urban Development Authority. “It is going to drastically change the entire landmass.”

Built on 665 acres (2.6 sq km) of land being reclaimed from the Indian Ocean, the city is designed to be a smaller Singapore, with its own business-friendly tax regime and regulations – and possibly a different legal system to the rest of Sri Lanka.

About 80,000 people are expected to live in the city, with another quarter of a million commuting in every day.

 

நீங்கள் தமிழ் (அரைகுறை) ஆய்வாளர்களின் கட்டுரைகளை வாசித்து 
குழம்பி இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் 

ஸ்ரீலங்கா இப்போது சீனாவுக்கு வட்டி கூட கொடுக்க கூடிய நிலைமையில் இல்லை 
இப்போ புதிதாக ஐஎம்எப் வங்கிக்கு பொறுப்பத்திரியாக தமிழ் பெண் கீதா கோபிநாத்தை 
கொண்டுவரும்போது இவர் மூலம் சில ப்ரொஜெக்ட்டுக்களை தெற்கு ஆசியாவில் கொண்டுவர 
ஐரோப்பா முனையும் என்று எண்ணினேன் ... ஸ்ரீலங்கா கடனை பார்த்துவிட்டு அங்கு வரும் எண்ணம் இல்லை 
ஆனால் போர்ட் சிட்டியில் பல முதலீடுகளை நிச்சயம் ஐஎம்எப் முதல்கொண்டு எச்ஸ்பி போன்ற தனியார் வங்கிகள் கூட முன்னின்று செய்யும் காரணம் வரி ஏய்ப்பு (ஐஎம்எவ் க்கு அந்த தேவை இல்லை என்றாலும் 
தெற்கு ஆசியாவில் கால் ஊன்ற ஐரோப்பியா வுக்கு நல்ல சந்தர்ப்பம் தழுவ விட மாடார்கள்.

போர்ட் சிட்டி ஒப்பந்தம் 2014லேயே முடிந்து விட்ட்து 
சில குத்தகை கொடுக்கல் வாங்கலில்தான் இழுபறி இருந்து வந்தது.

இவை எமது அரைகுறை தமிழ் ஆய்வாளர் எழுத்துவதுபோல் அங்கும் இங்கும் மாறுவது அல்ல 
பல பில்லியன் டொலர் ப்ரொஜெக்ட்டுக்கள் பெரும்பாலும் (சீன) தனியார் நிறுவனங்களால் நிர்ணயிக்க படுபவை சரியான வகையில் கையெழுத்து இட்ட பின்னர்தான் ஒரு செங்கல் என்றாலும் நடுவார்கள். 

இது சிசிசிசி என்ற சீன தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட இருக்கிறது 
(சீன கொமேனிக்கேஷன் கொன்ஸ்ரக்சன் கொம்பனி) 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் குடள் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images "அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்," என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார். படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது. MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, "எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஜே.ஜே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம். "மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்" என்று அவர் கூறுகிறார். "அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார். பேரிழப்பு மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், "திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார். மேலும் அவர், "சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்" என்கிறார்.. https://www.bbc.com/tamil/india-48415043  
  • ஒருவர் மனதை ஒருவர் அறிய .....!  😁
  • பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து: கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள்? ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா? நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா? ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள்? ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம்? ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம்? இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள்? ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம். 2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை. 2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு. இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்கூட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம். கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.. https://www.bbc.com/tamil/india-48422301
  • May 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/122828/
  • May 27, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் காவல்துறையினர் மற்றும் படையினர் ஈடுபட்டதுடன் பாடசாலை சூழல் மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் அனைவரது பொதிகளும் சோதனையிடப்பட்டன. 21ம்திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #கிளிநொச்சி  #பிரபல #பாடசாலைகளில் #விசேட சோதனை #kilinochchi #checking http://globaltamilnews.net/2019/122791/