Jump to content

'உலகத்துக்கு ஒரே கடவுள்' என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'உலகத்துக்கு ஒரே கடவுள்' என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம்

23.04.2019 பி.ப 04.45

image_91f30b826c.jpg

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு,

#. WP BCY- 2183
(Black Red TVS Scooty

#. NWP VP 7783
(Midnight Black Bajaj pulsar 150)

#. SG PH 3779
(Black Nissan Carvan Van)

#. VC 4843 (MC-Black Yamaha)

#. DAE 4197 (JAC single cab, Aluminium white Mahendra)

#. US 3740 (Honda black scooty)

#. BDM 0596 (Black scooty Honda)

144-2646 (Mc red)

இதேவேளை, உலகத்துக்கு ஒரே கடவுள் என்று எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, கொழும்பின் பல பகுதிகளிலும் பயணித்து வருவதாகவும் அதில், தான் தன்னையே கொலைசெய்துகொள்ளப் போவதாக எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான புகைப்படங்கள், தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

image_6b655919d1.jpg

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

image_7020a23233.jpg

23.04.2019 பி.ப 04.45

இலங்கை மீதான தாக்குதல்களை ஐ.எஸ் பொறுப்பேற்றது

இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை, அவ்வமைப்பின் அமாக் செய்திப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

image_01d8970165.jpg

23.04.2019 பி.ப 02.57

வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட, அலுமினியம் தகரங்களால் மூடப்பட்ட நிலையிலான லொறியொன்றும் சிறியரக வான் ஒன்றும், கொழும்பு நகருக்குள் புகுந்துள்ளதாக, பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவிக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவலை அடுத்து, கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதுடன், கொழும்புத் துறைமுகப் பொலிஸாரால், துறைமுக வாயிற் பகுதிகளில் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

23.04.2019 பி.ப 02.43

ஞாயிற்றுக்கிழமையன்று (21), நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 321ஆக அதிகரித்துள்ளதென, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

23.04.2019 பி.ப 12.42

image_65e55e5d4f.jpg

ஃபர்தாவைத் தடைசெய்ய யோசனை

இஸ்லாமியப் பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் ஃபர்தாவைத் தடை செய்வது தொடர்பில், இஸ்லாமிய மத அமைப்புகள், எதிர்வரும் நாட்களில் அறிவிக்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக, சிறிகொத்தாவில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, முஜிபூர் எம்.பி கூறினார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

23.04.2019 மு.ப 11.25

தாக்குதலுக்குள்ளான கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் ஜனாதிபதி

image_10f93607ed.jpgimage_a9b16a73b5.jpgimage_c6c1eb26a3.jpgimage_89e65be170.jpgimage_00a6d34c79.jpgimage_d8fe589799.jpgimage_b821fb7ced.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (21), வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (23) முற்பகல், அங்கு விஜயம் செய்தார்.

அங்கு, அருட்தந்தை ஸ்ரீலால் பொன்சேகா அடிகளாரைச் சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் கிறிஸ்தவ மக்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன், குறித்த தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணிகளையும் கண்காணித்த ஜனாதிபதி, அந்த நிர்மாணப் பணிகளை, வெகு விரைவில் முன்னெடுக்குமாறு, அப்பணிகளில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

23.04.2019 மு.ப 10.39

‘வீடுகளில் விளக்கேற்றவும்’

image_48cf2c6e8a.jpg

இன்று  தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சகல வீடுகளிலும் மாலை 6.15 அளவில் விளக்கேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சகல வீடுகள், வாகனங்களிலும் வௌ்ளைக் கொடியைப் பறக்க விடுமாறும் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு , பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபமானது அமைச்சால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

http://www.tamilmirror.lk/topnews/232129/உலகத்துக்கு-ஒரே-கடவுள்-என-எழுதப்பட்ட-வாகனங்கள்-நடமாட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

ஃபர்தாவைத் தடைசெய்ய யோசனை

இஸ்லாமியப் பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் ஃபர்தாவைத் தடை செய்வது தொடர்பில், இஸ்லாமிய மத அமைப்புகள், எதிர்வரும் நாட்களில் அறிவிக்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

🙏🙏 கொஞ்சமாவது சிந்திச்சு இருக்கானுகள் என்று சொல்லலாம்  இந்த ஆடையும் ஓர் மறைமுக  உதவிதான் அவர்களுக்கு 

Link to comment
Share on other sites

இலங்கை முஸ்லிம்களுக்கு, அடுத்து நடக்கப்போவது என்ன...?

 
 
 

 

image_1495811226-52371a265a.jpg
குற்றம் எதுவும் செய்யாமலேயே குற்ற உணர்வோடும், குற்றவாளிகள் போன்றும் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எம்மை தலைகுனிந்து வாழ வைத்து விட்டார்கள் இந்த போலி ஜிஹாதிஸ்ட்டுகள். கிந்தோட்டைப் பிரச்சினையின் போதும், உணவுப் பொருட்களில் கருத்தடை மாத்திரை கலத்தல் தொடர்பான பிரச்சினையின் போதும் தமிழிலும், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எமது சமூகத்தின் “கற்பின் தூய்மை” யைப் பறைசாட்டி பந்திக் கணக்கில் எழுதி, சிங்களவர்களுக்கும் பகிர்ந்து விட்டு இன்று வெட்கத்தோடு அலுவலகத்தில் சிங்கள சக ஊழியர்களை சந்திக்கின்றேன்.
 
ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் சமூக வலைதளங்களில் இதைத்தான் வலியுறுத்தி வலியுறுத்தி எழுதி வந்தோம். ஆனால் பெரும்பாலானவர்கள் எம்மைக் கோழைகள் என்று எள்ளி நகையாடினார்கள். இன்று அந்த தைரியசாலிகள் முகநூலில் மன்னிப்புக் கேட்டு கெஞ்சி எழுதும் பதிவுகளைக்  காணும் போது இந்த ஆழ்ந்த துக்கத்திலும் சிரிப்புத்தான் வருகின்றது.
 
சிங்கள வெகுமக்களுக்கு ஐஸ்ஐஸ், தலிபான் போன்ற அமைப்புக்களின் உருவாக்கத்தின் பின்னணி, அதன் நோக்கம், இது போன்ற பயங்கரவாத இயக்கத்தின் உருவாக்கத்தில் உள்ள பிராந்திய அரசியல் நலன்கள், சியோனிஸ சதித்திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்ற சர்வதேச இனமல்ல. இலங்கையில் மாத்திரமே அவர்கள் வாழ்கின்றார்கள். உண்டு, களித்து சந்தோசமாக வாழ விரும்புகின்றார்கள். இப்படியிருக்க, எமது அரபு நாட்டுப் பாணியிலான கலாச்சார மாற்றங்கள்,  எமது இயக்கச் சண்டைகள் போன்றவற்றை மத்திய கிழக்கில் அரங்கேரும் அவலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் பீதியடைவதில் நியாயம் இல்லாமல் இல்லை.
 
இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை, இஸ்லாம் கடமையாக்கிய இபாதாக்கள் மூலம் அது எதிர்பார்க்கும் உன்னத சமூக மாற்றத்தை நாம் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்லவில்லை. மாற்றமாக அடையாள இஸ்லாத்திற்கே (Symbolic Islam)  அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து அந்நிய சமூகங்கள் மத்தியில் பீதிகளைக் கிளப்பினோம். எமக்கென்று ஒரு அழகான சோனக முஸ்லிம் கலாச்சாரம் இலங்கையில் இருந்தது. திடீர் திடீர் என்று புதிய புதிய மாற்றங்கள். பருவமடையாத பெண்களை எல்லாம் முகம் மூக வைத்தது, உலமாக்கள் மாத்திரம் அணிய வேண்டிய ஜூப்பா என்ற  ஆடையினை கண்ட கண்ட காவாலிகள் எல்லாம் அணியத் தொடங்கியது, தெருவுக்குத் தெரு பள்ளிவாயல்கள்,  எல்லாப் பள்ளிகளிலும் போட்டிக்குப் போட்டி ஒலிபெருக்கிகள், இருக்கின்ற எல்லா ஆங்கிலப் பெயர்களிலும் இஸ்லாமிய ? இயக்கங்கள், புதுப்புது பத்வாக்கள்,  சுவர்க்கத்துக்கான அழைப்புக்கள், வழிகேட்டுப் பட்டங்கள். கூடப் பிறந்த சகோதரனுக்கே ஆயிரம் ரூபா கொடுக்காத பச்ச  உலோபிகளெல்லாம் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று பேருக்கும், புகழுக்கும் பெரிய மாடுகளை உள்ஹிய்யா கொடுத்தல், வருடாந்தம் பல உம்றாக்கள். புற்றீசல் போல் மத்ரஸாக்கள், இஸ்லாமிய ? இன்டர்நெசனல் ஸ்கூல்கள். முஸ்லிம் பாடசாலைகளின் ஒழுக்கம், தரம், பரீட்சைப் பெறுபேரு எந்தவித அக்கறையும் இல்லாவிட்டாலும் மாணவிகள் முகம் மூட வேண்டும், மாணவர்கள் தாடிவைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சாரத்தினைத் தூக்கிக் கொண்டு மல்லுக்கு நிற்றல், கண்ட கண்ட பொருட்களுக்கெல்லாம் ஹலால் ஸர்டிபிகட்.  நாம் எப்படியான ஒரு நாட்டில், சூழலில் வாழ்கின்றோம் என்று விளங்கவில்லை. விளங்கிய உலமாக்கள் “பிக்ஹூல் அவ்லவியாத்” என்ற முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்களைக் கற்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த பட்டம் “கோழைகள், பயந்தாங்கொல்லிகள், நவீன உலமாக்கள்”.
 
இதனாலேயே நாம் முகநூலில் எம்மால் முடிந்தளவில் எழுதினோம். நாம் ஒன்றும் ஆலிம்கள் இல்லை. மெத்தப் படித்த மேதாவிகளும் இல்லை. என்றாலும் பெரும்பான்மை சமூகத்தின் உளவியலை அப்போதே கற்று வரவிருக்கும் ஆபத்துக்கள் பற்றி முடிந்தளவில் எழுதினோம்.
 
சமூக வலைதளங்கள் ஆட்சி மாற்றத்தினையே ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால் எமது சமூகம் அதனை எதற்காகப் பயன்படுத்தியது?. ஆளுக்கால் சேற்றை வாரியிறைத்தோம். இயக்கங்களாகப் பிரிந்து சண்டை பிடித்தோம். சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் முர்த்த்த், முஷ்ரிக், காபிர் என்று முடிவுகளை வாரியிறைத்தோம். ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களோடு எம்மவர்கள் கொஞ்சிக் குலாவினார்கள். எச்சரித்தும் கேட்கவில்லை. அந்த  ஐஸ்ஐஸ் தரப்பில் உலமாக்கள்  என்ற போர்வையில் இருந்து கொண்டு பெரிய வீராவசனம் பேசிய “ஆதார நாயகர்” களின் பதிவுகளுக்குச் சென்று ஏதோ அவர்கள் அல்லாமா குல்லிகள் போட்டு ஹார்டிங் போட்டார்கள். தாம் விரும்பாத இயக்கத்தினரின் தனிப்பட்ட பலவீனங்கள், குறைகளை எல்லாம் பகிரங்கப்படுத்தினார்கள்.  அல்ஹம்து சூறாவுக்குப் பொருள் தெரியாத விடலைப் பசங்கள் எல்லாம் பத்வா கொடுத்த்த் துணிந்தார்கள். சகவாழ்வைக் கேவலப்படுத்தி எழுதினார்கள். குட்மோனிங் சொல்வது ஹராம், அந்நியருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறுவது ஹராம், அவர்கள் தரும் பலகாரங்களைச் சாப்பிடுவது ஹராம். இப்படி அந்நிய சமூகங்கள் மீதான வெறுப்பினை இன்னும் இன்னும் அதிகப்படுத்தினார்கள். நிர்ப்பந்தமான ஒரு சூழலில் மங்கள விளக்கில் தீப்பந்தம் ஏற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட உலமாக்களை நாட்கணக்கில் முகநூலில் கழுவி ஊற்றினார்கள். எல்லாவற்றுக்கும் “மீம்ஸ்” என்றும் பகிடி என்றும், சிரிப்பும், கூத்துமாக இருந்தார்கள். சமூகத்தின் சீரியஸான பகுதியினை நாம் எழுதினால் எம்மை நாட்கணக்கில் சீண்டுவார்கள். இப்படிக் கூத்தும் கும்மாளமுமாக காலம் கழித்தவர்கள் இன்று முகநூலில் அழுதுபுலம்புகின்றார்கள். இனி வௌளம் தலைக்கு மேலால் சென்று விட்டது.
 
இனியாவது இருக்கின்ற கௌரவத்தினைப் பாதுகாத்து மியன்மார் அளவுக்கு நாம் சென்று விடாமல் புத்தி சாதூர்யமான முடிவுகளை எடுத்து ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுப்போம். தீவிரவாதம் இல்லாத நல்ல தலைவர்களை  தெரிவு செய்வோம். அடையாள இஸ்லாத்திற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்காமல் விழுமிய இஸ்லாத்திற்கு முக்கியத்துவம்  கொடுப்போம். முஸ்லிம் பாடசாலைகளைக் கட்டியெழுப்பி கல்வித் துறையில் முன்னேறுவோம். உம்றாக்கள், ஆடம்பர வீடுகள், ஆடம்பரத் திருமணங்கள் என்று பணத்தினை விரயமாக்காமல் சமூகத்தினை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம். இல்லாவிட்டால் மியன்மார் முஸ்லிங்கள் போன்று கப்பல்களில் நாடுகளைத் தேடித் தேடி தஞ்சம் அடைய நேரிடும். இதனை நான் சும்மா சொல்லவில்லை. நாளாந்தம் சிங்கள முகநூல் பக்கங்கள், வெப்சைட்டுக்களில் உள்ள ஆக்கங்கள், அதற்கு வரும்  சிங்கள இளைஞர்களின் பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து சொல்கின்றேன். அடித்துச் சொல்வேன் சிங்கள இளம் சமுதாயத்தில் நூற்றிற்கு தொன்னூறு வீதம் எம்மை மிகவுமே வெறுக்கின்றார்கள்.
 
எமது ஜிஹாதிக் குஞ்சுகளுக்கு நாம் தெரிவித்துக் கொள்வது, உங்கள் தியாகத்தினால் நாம் இப்போது மிகவும் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து ? வாழ்கின்றோம். அதற்குக் கூலியாக  நீங்கள் சுவர்கங்களில்  கன்னிகளோடு நன்கு சல்லாபியுங்கள். இங்கு எமது பெண்களுக்கு பாதையில் போக முடியவில்லை. பர்தா கொச்சைப்படுத்தப்படுகின்றது. வாழக்கையிலேயே கேட்காத தூசனங்களால் துவட்டி எடுக்கப்படுகின்றோம். எம்பெருமானார் இனி இல்லை என்ற அளவுக்கு வசைபாடப்படுகின்றார். ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகத்துடன் பார்க்கின்றார்கள். நீங்கள் சுவர்க்கத்தில் நன்கு அனுபவியுங்கள்.
 
அதே போன்று, காத்தான்குடி போன்ற தனி முஸ்லிம் ஊர் சகோதரர்களுக்கு நாம் மிக அன்போடு வேண்டிக் கொள்வது, உங்களையும், உங்கள் ஊர்களையும் நாம் நேசிக்கின்றோம். நீங்கள் மிகவும் நல்லவர்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நாம் வாழும் ஊர்கள் உங்களைப் போன்று முஸ்லிங்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊர்கள் இல்லை. சுற்றி வர சிங்கள ஊர்கள். எமக்கென்று பாராளுமன்ற உறுப்பினர் எப்படிப் போனாலும், மாகாண சபை ஏன் பிரதேச சபை உறுப்பினர்களே இல்லை. எல்லாம் சிங்களவர்கள். கிராம சேவகர் முதல் பிரதேச செயலாளர் காரியலாம், மாவட்ட செயலகம், கல்விக் காரியாலயங்கள், வைத்தியசாலைகள், அரச அலுவலகங்கள், வைத்தியசாலை டாக்டர்கள் முதல் நேர்ஸ் மார் எல்லாமே சிங்களவர்கள். ஆக, உங்கள் ஊர்களில் இருந்து சில செத்த மூளைகளால் உருவாக்கப்படும் இயக்கங்களின் குப்பைகளை எல்லா முஸ்லிம் ஊர்களுக்கும் நகர்த்துபவர்கள் தொடர்பில் அவதானமாக இருந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். இன்றோ, நாளை என்றோ எனது மனைவி பிள்ளை பெற்றெடுக்க தயாராக இருக்கின்றார். அரச வைத்தியசாலைக்குப் போகவே முடியாது. அங்கு எம்மை குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தனியார் வைத்தியசாலைக்குப் போவோம் என்கின்றார். ஒரு சாதாரண அரச ஊழியர் எப்படி தனியார் வைத்தியசாலைக்கு இலட்சங்களைக் கட்டுவது? ஓரளவு படித்த எங்களுக்கே வைத்தியசாலைகளில் இந்தக் கதியென்றால் பெரும்பான்மையாக இருக்கும் பாமர முஸ்லிம் தாய்மார்களின் நிலை என்ன ? சற்று சிந்தித்து செயற்படுங்கள்.
 
கடைசியாக, இந்தக் கொடூரத்  தாக்குதலை எம்மவர்கள் செய்திருக்கலாம். அல்லது வேறு பயங்கரவாத இயக்கங்கள், அல்லது அரசியல் குருகிய நோக்கம் கொண்டவர்கள் செய்திருக்கலாம். அல்லது பிராந்திய அரசியல் நலன்கள் பின்னணியாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், நாம் எமது சமூகத்தினை இனி வலுப்படுத்த வேண்டும். அதிக குருதி கொடை கொடுத்த சமூகம், அனர்த்தங்களின் போது எந்தவொரு இனமும் செய்யாத அளவு களப்பணி செய்ய சமூகம் இன்று கூனிக் குருகி நிற்கின்றது. நாம் எமது  பிழையான செயற்பாடுகளால் படைத்த இறைவனுக்கும்,  எம்பெருமானாருக்கும் களங்கத்தினை, கெட்ட பெயரை  வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதுவே சுதாகரித்து மீண்டும் எழும்புவதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதனை புரிந்து கொள்வோம்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.