Jump to content

மட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம், மற்றும் மூவர் இன்று மாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக புலன் விசாரணை நடத்தும், குற்றவிசாரணை பிரிவினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்குள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமட் காசிம் முகமட் றில்வான் என்பவன் குண்டை வெடிக்க வைத்து, 29 பேரை கொன்றான்.

தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவனிற்கு உதவியவர்கள் தொடர்பாக புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த விசாரணைகளிலேயே, நால்வர் கைதாகியுள்ளனர்.

தற்கொலைதாரிகளிற்கான வாகன ஏற்பாடுகளை செய்தார்கள் என்ற சந்தேகத்திலேயே நால்வர் கைதாகினர். கைதானவர்களில் ஒருவர் வாகனம் வாங்கி விற்பதை தொழிலாக கொண்டவர் என்றும் தெரிகிறது.

கொழும்பிலிருந்து சென்ற விசேட புலனாய்வுகுழுவினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுடன் தவ்ஹித் ஜமாத்திற்கு தொடர்பில்லை எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு நடத்தியதாக சுமத்தபடும் குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா மறுத்துள்ளார்.

தாக்குதலுக்குடன் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மலேசிய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே ஹிஸ்புல்லா இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டில் நடந்த குண்டு தாக்குதலுடன் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்திருந்தார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்படியான தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என புலனாய்வு சேவைகள் கடந்த 4 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் எச்சரித்திருந்தன. பாதுகாப்பு பிரதானிகள் மட்டுமல்லாது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

புலனாய்வு சேவைகளின் அறிக்கை கிடைத்திருந்த போதிலும் இப்படி பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய புலனாய்வு சேவைகளும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தியிருந்தது.

https://www.tamilwin.com/srilanka/01/212919?ref=rightsidebar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கேனைத்தனமான முறையில்   அப்பாவி உயிர்களை சாகடித்துவிட்டு பேசுற பேச்சை பாருங்க  இதையெல்லாம் சொறிலங்கா போலிஸ் பார்த்துக்கொண்டுதானே இருக்கு  இவர்களுக்கு வக்காலத்து வாங்க நம்மவர் கூட்டம் கொஞ்ச பேர் இருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் ரத்தத்தில் ஊதிய பயங்கரவாதம், அநியாயமாக அடிவாங்கி அழியப்போகிறார்கள்.

அப்பாவிகளைக் கொன்றுவிட்டு அல்லாவின் கடமை முடித்தார்களாம். 

சிங்களவர்கள் இவர்களை அடிப்பது தப்பேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கே.உங்கள் அழிவு  ஆரம்பம்.123 ok.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த தாக்குதல்களை பற்றி  இவன்  என்ன சொல்லுறான்
 கண்டிக்கிறானா இல்லை தடவி கொடுக்கிறானா?

என்ன அறிக்கையையும் விடுங்கோ எங்கள் இனிய தமிழிலே வேண்டாம். சிங்களத்தில் விடுங்கள் (விட்டு பாருங்கள்) அல்லது ஆங்கிலத்தில், அரபி.

Link to comment
Share on other sites

இரண்டு நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருந்து வீராவேசமாக வீடியோவை வெளியிட்ட பின் இன்று அப்படியே பல்டி அடித்து இலங்கை விமான நிலையத்தில் இருந்து சவூதிக்கு போகும் முன் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.