யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
nunavilan

உயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்?

Recommended Posts

போருக்குப் பின்னரான பூகோள அரசியல் முரண்நிலைக்குள் சிக்குண்டுள்ள இலங்கை

உயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்?

அமெரிக்க-இந்திய அணிவகுப்பு ஒருபுறம், சீன-பாகிஸ்தான் உறவு மறுபுறம்
 
 
main photomain photo
 •  
ஈழத்தமிழர் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் தாம் விரும்பிய நேரத்தில் போர்க்கப்பல்களை இத் தீவுக்கு அனுப்பக்கூடிய நிலை அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னைய சூழலில், திருகோணமலையில் மட்டுமல்ல அம்பாந்தோட்டையிலும் இலங்கைக் கடற்படையுடன் தாம் நினைத்த நேரத்தில் கூட்டுப்பயிற்சி செய்வோம் என்பதைச் சீனாவுக்கு அமெரிக்கா வெளிப்படுத்திய மூன்று நாட்களுக்குள் இலங்கையின் ஸ்திர நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சீன நட்பு நாடான பாகிஸ்தான் ஊடாக முன்னேற்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இஸ்லாமியாவாத குழு ஒன்று தொடர் பயங்கரத் தாக்குதல் ஒன்றைக் கடலால் சூழப்பட்ட தீவொன்றுக்குள்ளும் தன்னால் செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. 
 
அமெரிக்கா எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் தன்னாலும் முடியும் என்ற செய்தியை இந்தக் குண்டுத்தாக்குதலை ஏவிய தரப்பு சொல்லியிருப்பது புலனாகிறது.

 

 

மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்

 

இந்தியா-பாகிஸ்தான் முரண்பாட்டையும் சீன-பாகிஸ்தான் உறவையும் இந்தத் தாக்குதலின் பின்னணியாக ஏன் நோக்கக்கூடாது என்ற கேள்வியை ஈழத் தமிழ் அரசியல் அவதானிகள் எழுப்புகின்றனர்.

மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது.

ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமியவாதம் உலகுக்கு அறையும் பயங்கரவாதப் போர் முரசாக மட்டும் இந்தத் தாக்குதல்களை நாம் பார்த்துவிட முடியாது. இதன் பின்னால் இருக்கக் கூடிய கேந்திர, புவிசார் அரசியல் சூட்சுமங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இஸ்லாமிய அல்லது இஸ்லாமியவாதம் மீதான எதிர்ப்பு உணர்வுக்கு ஆட்பட்ட மன நிலையில் இருந்தாவாறு இதை நாம் அணுகுவது அறிவு பூர்வமான அணுகுமுறை ஆகாது.

சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம்.

இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம்.

 

சிரியாவில் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அரசு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருந்த குழு நேரடியாக இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன் தலைமைத்தளம் சிரியாவில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதே கருத்தியலுடன் இயங்கும் வேறொரு குழு, குறிப்பாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு குழு இந்த மனிதக் குண்டுகளைத் தயார் செய்திருக்கலாம். இந்த மனிதக்குண்டுகள் இலங்கையைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம்

 

எது எவ்வாறிருப்பினும், தாக்குதல் திட்டமிடலும் வழிநடத்தலும் இலங்கைத்தீவுக்கு வெளியே இருக்கும் ஒரு தரப்பால் மேற்கொள்ளப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது.

அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது.

எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலையும் கணக்கில் எடுத்தே தாக்குதலை நடத்திய வெளிச்சக்திகள் திட்டமிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

மதரீதியான தாக்குதலாக வெளிப்படும் இத்தாக்குதல் எதேச்சையான உணர்வு வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகப் புலப்படவில்லை.

திட்டமிடல், வழி நடத்தல் மற்றும் தெரிவுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் இராணுவத் தேர்ச்சியுள்ள ஒரு தரப்பே இதை நடாத்திமுடித்திருக்கிறது என்பது வெடிப்புகள் நடந்த இடங்களையும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் தெரிவுகளையும், அவற்றின் தாக்கத்தையும் வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது.

பௌத்த சிங்கள மக்கள் மீதோ பௌத்த விகாரைகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அது முஸ்லிம்களை நோக்கிய எதிர்த்தாக்குதலுக்கு வழிசமைத்திருக்கும்.

இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களில் எவ்வாறு இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்புக்களுக்கும் சம பங்கு இருப்பதாக அமெரிக்க, இந்திய அணி வாதிடுகிறதோ, அதைப் போலவே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தரப்பும் இலங்கையின் தமிழர் சிங்களவர் ஆகிய இரு தரப்புகளையும் பலிக்கடாவாக்குவதில் சம தரப்பாகப் பார்த்திருப்பது ஒரு புதிய அம்சம்.

மேற்கில் கொழும்பும் கிழக்கில் மட்டக்களப்பும் இலக்குகளாகத் தெரிவாகியுள்ளன.

சிங்கள, தமிழ் கிறிஸ்தவ மக்களும் வெளிநாட்டவர்களும் குண்டுத் தாக்குதலில் இறந்திருக்கின்றார்கள், காயமடைந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களும் வெளிநாட்டவர் தங்கும் நட்சத்திர ஹோட்டேல்களும் மற்றும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பும் தாக்குதலுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

 

அண்மைக்காலத்தில் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் சீனாவுக்கெதிரான போர்முனை அமெரிக்காவால் மிக வேகமாகத் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான முரண் நிலை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க-இந்திய உறவு பலப்படக் காரணமாகிறது. அதே போல், அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து வருவது பாகிஸ்தான்-சீன உறவு மேலும் நெருக்கமடையக் காரணமாகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அரங்கேறும் புவிசார் அரசியல் இராணுவ சர்வதேசக் கெடுபிடி அல்லது நிழற் போரின் ஒரு வடிவமாவும் இலங்கைத் தீவில் நடந்த குண்டுவெடிப்பை நோக்கலாம்

 

நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டே தாக்குதல் உரிய நேரத்தில் நடத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது வெளிச் சக்திகளின் வேலையாக இருந்தாலும் உள்ளுர் ஆதரவுத் தளம் அல்லது தளங்கள் இவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

இலங்கை ஏனைய அயல் நாடுகளோடு நிலத்தொடர்பு உடையதல்ல. இது ஒரு தீவு.

முதன் முறையாக வெளிச்சக்திகளின் இஸ்லாமியவாத பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நிலத் தொடர்பில்லாத தீவொன்றில் நடத்தப்பட்டிருக்கின்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில்தான் உண்மையான பயங்கரவாதம் இலங்கைக்கு வந்துள்ளது என்பதையும் அமெரிக்காவுக்கு இந்தத் தாக்குதல் உணர்த்தியுள்ளது.

1997 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்திருந்தது. அது ஒரு புவி சார் அரசியல் தேவையை ஒட்டி எடுக்கப்பட்ட முடிவென்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

புலிகளின் வளர்ச்சியை மழுங்கடிக்கவும் அதேவேளை இலங்கை அரசைத் தம் வழிக்குக் கொண்டுவரும் தேவையை முன்னிட்டும் இந்தத் தடை கொன்டுவரப்பட்டிருந்தது.

தற்போது, இலங்கை இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்களைச் சில நாடுகளில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவோம் என்ற அழுத்ததைத் தோற்றுவித்து இலங்கை அரசைச் சீனாவின் பக்கம் செல்லவிடாது தடுக்கும் ஒரு உத்தியை மேற்குலக நாடுகள் வகுத்திருப்பது ஜெனீவா அறிக்கைகள் ஊடாகப் புலனாகிறது.

அதேவேளை சிங்கள மக்களிடம் மேற்குலம் மீதான அதீத எதிர்ப்பு வராத வகையில், வன்னியில் இருந்து ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, வட அமெரிக்க நாடுகளுக்குச் சென்று புகலிடம் கோரியுள்ள முன்னாள் போராளிகளை, குறிப்பாகத் தளபதிகளை, போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்ற அணுகுமுறையும் ஜெனீவா நகர்வுகளின் பின்னணியில் வகுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

முன்னாள் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இலங்கை அரசுடன் ஒத்துழைத்து அபிவிருத்தி புனர்வாழ்வு வேலைகளில் இணைந்து செயற்படுமாறு மேற்கு நாடுகள் தமது திட்டங்களை வகுப்பதும் இதன் அடிப்படையிலேயே.

மேற்கு நாடுகளின் கைகளில் இந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிக்கிக் கொள்ளும்போது அந்த நாடுகள் இலங்கை அரசுடன் பேரம் பேசுவதற்கான பகடைக்காய்காளாக அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பலர் புரிந்துகொள்வதில்லை.

மறுபுறம், ஈழப் போரின் போது இடம்பெற்றது தமிழ் இன அழிப்பா என்பதற்கான சர்வதேச விசாரணை நடத்தப்படவில்லை. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் கூட 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தை முழுமையாகத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்கும் இவ்வாறான அணுகுமுறைகளில் மேற்குலகம் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மறுபுறம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது உறவின் மூலம் இலங்கையை எப்படித் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் அல்லது அமெரிக்கா இலங்கையில் நிலைகொள்வதை எவ்வாறு குழப்பலாம் என்ற உத்திகளைக் கையாளும் என்பதும் வெள்ளிடை மலை.

 

மத சார்பான பிளவுகளை தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும்

 

இன அழிப்பு, மானுடத்துக்கெதிரான குற்றம் போன்ற பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் பொறுப்புக் கூறல் இன்றித் தப்பித்துவிடலாம் என்பது இலங்கை இராணுவத்துக்கு மாத்திரமல்ல பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடும் வெளிச்சக்திகளுக்கு உதவி, ஒத்தாசை புரியும் தரப்புகளுக்கும் சாதகமான நிலையாகிவிடுகிறது.

இதையெல்லாம் மேற்குலக நாடுகள் விளங்கிக்கொண்டாலும், அவைகளுக்கு தத்தம் கேந்திர நலன்களே பிரதானமாகப்படுகிறது.

ஆகவே ஈழத்தமிழர்கள் தமது நலன் குறித்த அரசியலைத் தாமே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இலங்கை ஒற்றையாட்சி அரசு வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தான் தனது பெரும்பாலான இராணுவ முகாம்களை அமைத்துள்ளது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து சதவீதமான இராணுவத்தை வடக்கு கிழக்கில்தான் இலங்கை அரசாங்கம் வைத்திருக்கின்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் உள்நாட்டுப் போர் ஒன்றைத் தடுத்தல் என்ற மன நிலையிலேயே இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை அபகரித்து இராணுவ முகாம் அமைத்தல், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்ற முழுக் கவனத்தையும் இலங்கை இராணுவம் செலுத்துகின்றது.

இத் தருணத்தில் தான், இலங்கை இராணுவத்தோடு ஒருபுறம் உறவு வைத்துக்கொண்டு மறுபுறம் வேறு குழுக்களை இலங்கைத் தீவுக்குள் பாகிஸ்தானில் இருந்து ஏவி விடும் நடவடிக்கைகளும் நடகின்றனவா என்ற ஐயம் வலுப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விசுவாசமாகச் செயற்படுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண்பித்து வருகின்றது. அதேவேளை சீனாவோடு அரசியல், பொருளாதார கலாச்சார உறவுகளும் பேணப்படுகின்றன.

இந்த இருதலைக் கொள்ளி நிலை பாகிஸ்தானுக்கும், அது அணிவகித்திருக்கும் சீனத்தலைமைக்கும் கசப்பானதொரு விவகாரம் என்பது வெளிப்படை.

சுருங்கக் கூறின், 2009 இன அழிப்புப் போருக்குப் பின்னர், தென்னிலங்கை ஒரு பெரிய பொறிக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறது எனலாம்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மைத்திரி - மஹிந்த முரண்பாடுகள், கோட்டாபய, பசில் ராஜபக்ச மற்றும் பிரதான அரசியல் கட்சிகளிடையேயான உள்ளக முரண்பாடுகள் என இலங்கை அரசியலில் தற்போது தலைவிரித்தாடும் குழப்பமான சூழலை சீன-பாகிஸ்தான் அணி ஒரு புறமும், அமெரிக்க-இந்திய அணி மறு புறமுமாகப் பயன்படுத்த விழையும்.

சீன-பாகிஸ்தானிய அணுகுறை இவ்வாறிருக்குமென்றால் மறுபுறம் இந்திய அணுகுமுறை, குறிப்பாக வடக்கு கிழக்கில், எவ்வாறு அண்மையில் இருந்திருக்கிறது என்பதையும் நாம் நோக்கவேண்டும்.

மத சார்பான பிளவுகளை ஈழத்தமிழர் மத்தியில் ஏற்படுத்திவிடும் நோக்கில், குறிப்பாக சைவர்களையும் கிறித்தவர்களையும், தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் முரண்படச் செய்யும் கைங்கரியத்தில் இந்திய மதவாதப் புலானாய்வுத் தரப்புகள் ஈடுபடுவதும், இன்னொரு புறம் சிங்கள பௌத்தத்துக்கும் வட இந்திய இந்துத்துவவாதத்துக்கும் இடையே ஒருங்கிசைவு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் ஈழத்தமிழர்கள் உற்று நோக்கவேண்டும்.

 

வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்

 

தென்னகத் தமிழர்களை உய்ய விடக்கூடாதென்றும், அவர்களைச் சாதி மதம் என்ற அடிப்படைகளில் கூறுபோட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் வட இந்திய புலனாய்வு அணுகுமுறையும், இந்துத்துவ வாதமும் எண்ணுகின்றன.

தமிழகத்தை எவ்வாறு கூறு போடுவதில் வட இந்தியா மும்முரம் காட்டுகிறதோ அதே மும்முரத்தையே ஈழத்தமிழர் விடயத்திலும் அது செய்கிறது.

2009 இற்குப் பின்னர் இந்த அணுகுமுறை வடக்கிலும் கிழக்கிலும் சில பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு, அண்மையில் சில வெற்றிகளையும் காண ஆரம்பித்திருக்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை.

இந்தியாவின் இந்த அணுகுமுறையை பாகிஸ்தானின் புலனாய்வும் பார்த்துக் கொண்டு வாளா இருக்குமா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

ஆகவே வடக்கு கிழக்கில் வாழும் சைவத் தமிழ் மக்களும் கிறிஸ்தவத் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் இந்திய, பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்காமல் உரிமைகள் தொடர்பான மாற்று அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டுத் தாக்குதல் இந்தப் படிப்பினையைத்தான் விட்டுச் சென்றுள்ளது.

https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=906&fbclid=IwAR2f2AXL7PUVfxRL3VUl9SI05nuxNO5tkrjeZx7jW85XcqASlqkq4FB_00Y

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • முன்னாள் ஜனாதிபதிக்கு எண்டு தனியா வாகனம், பட்ஜெட் புடுங்கிக் கொண்டு, சம்பந்தர் அய்யாவின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை, மைத்திரியின் திருகுதாளத்தினால் ஆட்டையை போட்டு, இப்படி குளறினா, நியாயமா? சொல்லுங்க, மகிந்த, சொல்லுங்க... 😂
  • படத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை சேர்ந்த இருவரின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட 'இராவணா 1" செயற்க்கைக்கோள் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தது. தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட 'இராவணா 1" செய்ற்கைக்கோள் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு கையளிக்கப்பட்ட 'இராணவா 1" செயற்கைக்கோளுடனான ராக்கெட், அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அதிகாலை, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிக்னுஸ் (Cygnus) என்றழைக்கப்படும் பொட்களுடனான ராக்கெட் மூலம் இந்த 'இராவணா 1" செய்றகைக்கோள் நாசாவினால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பார்ட்ஸ் 3 திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து மூன்று சிறியரக செயற்கைக்கோள்களை இன்று விண்ணுக்கு ஏவியிருந்தன. சிறிய ரகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளுக்கு, மிகவும் குறைந்தளவிலான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project 1000 சென்டி மீட்டர் அளவை கொண்டமைந்துள்ள இந்த செயற்கைக்கோள், 1.05 கிலோகிராம் எடையை கொண்டமைந்துள்ளது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக் கொள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இராவணா 1 செயற்கைக்கோளின் பயன்பாடு இலங்கை மற்றும் அதனை அண்மித்துள்ள நாடுகளின் புகைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயன்பாட்டு திட்டங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தின் காப்புரிமை Getty Images ஆர்த்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய இந்த செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு 'இராவணா 1" என பெயர் சூட்டிப்பட்டிருந்தது. இராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-48664561
  • படத்தின் காப்புரிமை Getty Images ஒரு நாயின் கண்கள் உங்களுக்கு ஏதாவது சொல்வதை போன்றோ அல்லது உங்களது கவனத்தை பறிக்கும் வகையிலோ தோன்றினால், அது உங்கள் உணர்வுகளை கையாளும் பரிணாம வளர்ச்சியின் வழியாக இருக்கலாம். அதாவது, மனிதர்களின் கவனத்தை தங்கள் மீது செலுத்த வைக்கும் அளவுக்கு நாய்களின் கண்களை ஒட்டிய தசைப்பகுதி பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிறியளவிலான முக தசை நாயின் கண்களை ஒரு "குழந்தை போன்ற" வெளிப்பாட்டைப் பிரதிபலிக்க செய்வதால், அது மனிதர்களின் உணர்வுகளை தூண்டுகிறது என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய கூட்டு ஆராய்ச்சியின் ஊடாக தெரியவந்துள்ளது. https://www.bbc.com/tamil/science-48671821
  • படத்தின் காப்புரிமை US DEPARTMENT OF DEFENSE இரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான், இரானிய படைகளின் "விரோத நடத்தைக்கு" பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஓமன் வளைகுடாவில் அண்மையில் நடந்த எண்ணெய் டேங்கர் தாக்குதலுடன் இரானுக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டுக்கும் புதிய படங்களையும் அமெரிக்க கடற்படை பகிர்ந்துள்ளது. இரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதிக்கு இனி இணங்காது என்று நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது. ஜூன் 27க்குள் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளின் பயன்பாட்டு அளவு கட்டுப்பாடு தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்பை மீறவுள்ளதாகவும் இரான் கூறியுள்ளது. கூடுதல் படை படத்தின் காப்புரிமை EPA இரானின் அறிவிப்புக்கு பிறகே, மத்திய கிழக்கு நாடுகளில் தனது படையை அதிகரிக்கும் முடிவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. "அமெரிக்கா இரானுடன் மோதல் போக்கை கையாளவில்லை", ஆனால் "எங்கள் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், பிராந்தியமெங்கும் பணியாற்றும் எங்களது இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யவும்" இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "இரானின் அரசுப் படையும், அதன் ஆதரவு படைகளும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள அமெரிக்க படை வீரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருவதாக எங்களுக்கு கிடைத்துள்ள உளவு தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இரானின் சமீபத்திய தாக்குதல் சம்பவம் அமைந்துள்ளது" என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலை குறித்த நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், தேவைப்பட்டால் படை வீரர்களின் எண்ணிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள படைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எந்த பகுதியில் நிலைநிறுத்தப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. https://www.bbc.com/tamil/global-48672257
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன், மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ்     படத்தின் காப்புரிமை Getty Images சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், புதிய நீர் ஆதாரங்களைத் தேடுகிறது சென்னைக் குடிநீர் வாரியம். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதும் ஏற்கனவே இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்துவதும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. பொதுவாக ஒரு மாதத்தில் 20-30 வரை ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் ஒரு நிறுவனம், கடந்த இரு மாதங்களாக 40 ஆழ்துளை கிணறுகள் வரை அமைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை நகரைப் பொறுத்தவரை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளுமே முற்றிலுமாக வறண்டுவிட்டன. மே மாதத் துவக்கத்தில் சோழவரம் ஏரியிலிருந்தும் செங்குன்றம் ஏரியிலிருந்தும், மே மாத மத்தியில் பூண்டி ஏரியிலிருந்தும், தண்ணீர் எடுப்பதை சென்னைக் குடிநீர் வாரியம் முழுமையாக நிறுத்திவிட்டது. இதற்குப் பிறகு சென்னைக்கு அருகில் உள்ள குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது சிக்கராயபுரம், எருமையூர் குவாரிகளில் இருந்து சிறிதளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டுவருகிறது. தற்போது வீராணம் ஏரியிலிருந்து சுமார் 150 மில்லியன் லிட்டர் அளவுக்கு நீர் பெறப்பட்டுவருகிறது. மேலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும் சென்னைக் குடிநீர் வாரியம் முடிவுசெய்திருக்கிறது. மழை எனும் மீட்பன் "தற்போது மேலும் சில குவாரிகளை அடையாளம் காணும் பணிகள் நடந்துவருகின்றன. மழை மட்டுமே இந்தச் சிக்கலில் சென்னை நகரை மீட்க முடியும்"   என்கிறார் சென்னைக் குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். படத்தின் காப்புரிமை Getty Images சென்னை நகரைப் பொறுத்தவரை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த 15 மண்டலங்களிலிலும் சேர்த்து, ஒரு நாளைக்கு 880 மில்லியன் லிட்டர் தண்ணீரை சப்ளை செய்வதாக சொல்லப்பட்டாலும் பொதுவாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீரே வழங்கப்பட்டுவந்தது. தற்போது கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக சென்னைக் குடிநீர் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது. ஆனால், விநியோகத்தின் போது ஏற்படும் இழப்பீடு ஆகியவற்றை கணக்கிட்டால், விநியோகிக்கப்படும் நீரின் அளவு சுமார் 425 - 450 மில்லியன் லிட்டர் அளவே இருக்கும். இதன் காரணமாக சென்னை நகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் இருந்து தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் பல இடங்களில் பொதுமக்களுக்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படுவது வழக்கமாகியிருக்கிறது. ஐ.டி நிறுவனங்கள், உணவகங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன.  மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றன.  ஆனால், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். புகைப்பட காப்புரிமை @Muthan_ @Muthan_ <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @Muthan_: #தவிக்கும்தமிழ்நாடு #தாகத்தில்தமிழகம் #TNCriesforWater Save Water. Plant More Trees. Stop Sand Mining. Now there is no water for agriculture. Very Soon it's gonna be no enough water to Drink. Wake up #TamilNadu " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/Muthan_/status/1139529614068350982~/tamil/india-48667964" width="465" height="503"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @Muthan_</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@Muthan_</span> </span> </figure> "வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், வாய்ப்பிருப்பவர்களை வீட்டில் இருந்தப்படி பணி செய்ய சொல்லி இருக்கிறது மென் பொருள் நிறுவனங்கள். ஆனால், வீட்டிலும் நீர் இல்லாத போது எங்கிருந்து பணி செய்ய?" என்கிறார் தகவல் தொழிநுட்ப பணியாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் விநோத் களிகை. தாகமும், வன்முறையும் தண்ணீர் பிரச்சனை தனி மனித உறவுகளிலும் தாக்கம் செலுத்தி இருக்கிறது. தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் சண்டைகளும் நடந்துள்ளன. படத்தின் காப்புரிமை Getty Images தமிழக சட்டசபை சபாநாயகர் ப. தனபாலின் வாகன ஓட்டுநர் ஆதிமூலம் ராமகிருஷ்ணன் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்மணியை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கி உள்ளார். இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். மாநில தலைநகரில் மட்டும் அல்ல தண்ணீர் பிரச்சனை. காவிரி நதி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலையும் இதுதான். அங்கு தண்ணீர் பிரச்சனையில் ஆனந்த் பாபு எனும் நபர் கொல்லப்பட்டிருக்கிறார். "தஞ்சாவூர் மாவட்டம் விளார் பகுதியில், தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த குமார் எனும் நபர் அதிக குடங்கள் பிடிக்க, இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் ஆனந்த் பாபு. இதனால் கோபமடைந்த குமார் மற்றும் அவரது இரு மகன்கள் ஆனந்த் பாபுவை தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார்கள்" என்கின்றனர் போலீஸார். நிலத்தடி நீர்மட்டம் 'மழைக்காலத்திற்குப் பிறகு, ஏரிகள் எல்லாம் நிறைந்திருக்கும்போது குடிநீர் வாரியம் ஒரு நாளைக்கு சராசரியாக 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குகிறது என்றால், அந்த நேரத்தில் நிலத்தடி நீர்மட்டமும் நன்றாக இருக்கும். அதனால், குடிநீர் வாரியத்தின் பணிகள் எளிதாக இருக்கும். ஆனால், தற்போது நகரின் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டமும் வற்றிவிட்ட நிலையில், முழுக்க முழுக்க மக்கள் குடிநீர் வாரியத்தையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இது நிலைமையை மேலும் கடுமையாக்கியிருக்கிறது' என்கிறார் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர். படத்தின் காப்புரிமை Getty Images சென்னையில் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் குறையவில்லை, ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாத காலக்கட்டத்தில் மட்டும் தூத்துக்குடி திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 0.87 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் அளவு குறைந்திருக்கிறது என்று தரவுகள் கூறுகின்றன. குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதுபோக, லாரிகள் மூலமும் தண்ணீர் விநியோகம் செய்கிறது குடிநீர் வாரியம். ஒரு நாளைக்கு 9,000 லாரிகள் நீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்குப் பணம் செலுத்தி லாரி நீரைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும், பதிவுசெய்தால் குறைந்தது 20 நாட்களாவது காத்திருக்க வேண்டியிருக்கிறது.  வரும் நாட்களில் இந்தக் காத்திருப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். "இப்போதுதான் பேரழிவு துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டும் மழை பெய்யாவிட்டால் முழுமையான பேரழிவை சந்திப்போம்" என்கிறார்கள் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள். மாற்றம் வேண்டும் இப்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நிலத்தடி நீரை மேம்படுத்துவதே ஆகும் என்கிறார் நீர் செயற்பாட்டாளர் நக்கீரன். படத்தின் காப்புரிமை Getty Images "இதற்கு முன்பும் இவ்வாறு மழை இல்லாமல் இருந்திருக்கிறது. இது போன்ற வறட்சியை சென்னை சந்தித்து இருக்கிறது. அப்போதெல்லாம், நிலத்தடி நீர் கை கொடுத்தது. இப்போது நிலத்தடி நீரும் கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. பெய்கின்ற மழையில் 16 சதவீதமாவது நிலத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் 5 சதவீதம் கூட நிலத்திற்குள் செல்வதில்லை. அதற்கு காரணம், முழுக்க முழுக்க கான்கிரீட்மயமான கட்டுமானம். இதில் மாற்றம் கொண்டுவராமல் நிலத்தடி நீரை மேம்படுத்துவதும் சாத்தியமில்லை" என்கிறார் நக்கீரன். கழிவு நீர் ஏரிகளை முழுமையாகத் தூர்வாருவது, கடல் நீரைச் சுத்திகரிக்கும் மையங்களை அமைப்பது போன்றவை நிரந்தரமான தீர்வாக இருக்காது என்கிறார்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள். ஏற்கனவே பயன்படுத்திய நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதே சரியான, நீடித்த தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் அவர்கள். சென்னை நகரின் கழிவு நீரைச் சுத்திகரித்து வழங்கும் திட்டத்திற்கான முதற்கட்ட தொழில்நுட்ப அங்கீகாரத்தை சென்னை ஐஐடி மே 30ஆம் தேதி வழங்கியிருக்கிறது.  இதையடுத்து இதற்கான இயந்திரங்களை வடிவமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வர ஜனவரி மாதம் ஆகிவிடும். இந்த கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில் சென்னை நகரின் கழிவுநீரில் 70 சதவீதத்தை மீண்டும் குடிநீராக்கி விநியோகிக்க முடியும். https://www.bbc.com/tamil/india-48667964