Jump to content

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Deep-depression-in-Bay-of-Bengal-likely-to-intensify.jpg

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

வங்க கடலில் 29ஆம் திகதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் 25ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அது இரு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. பின்னர் 29ஆம் திகதி புயலாக மாறுகிறது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக பின்நாட்களில் நகர்வை ஆய்வு செய்கையில் தெரியவரும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் தமிழகத்தை கடந்தால் சென்னையிலிருந்து நாகைக்கு இடைப்பட்ட பகுதியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரங்களில் தமிழகத்தின் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/வங்கக்-கடலில்-புயல்-உருவ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.