• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

விடுமுறையைக் கொண்டாட... இலங்கைக்கு ஏன் வந்தான்?

Recommended Posts

Image may contain: 2 people, people standing, people walking, shoes and outdoor

விடுமுறையைக் கொண்டாட
வீட்டை விட்டுப் புறப்பட்டவன்,
எத்தனையோ நாடிருக்க 
இலங்கைக்கு ஏன் வந்தான்..

ஈழத்தின் பேரழகை
இணையத்தில் பார்த்திருப்பான்,
அமைதியான தேசமென்று
அடிமனதில் நினைத்திருப்பான்..

கடற்கரையில் குளிக்கலாம்,
காற்று வாங்கிக் களிக்கலாம்,
மலைத்தொடரை ரசிக்கலாம்,
மழைத்துளியைப் பிடிக்கலாம்,
மனைவியோடு பிள்ளையை
மகிழ்வித்து சிரிக்கலாம்
என்றெல்லாம் எண்ணியே,
இலங்கைக்கு வந்திருப்பான்..

குருவியோடு குஞ்சுதனைக்
கூட்டிக் கொண்டு வந்தவனை,
குலைத்துவிட்ட பாதகரே
கொதிக்குதையா என் மனது..

கொண்டு வந்த உறவுகளைக்
குண்டு தின்று போனதனால்,
கண்டு வந்த கனவெல்லாம் 
கண்ணீராய்ப் போனதனால்..

நேற்றுவரை இவனுக்கு 
நிலவாகத் தெரிந்த பூமி,
ஈனர்களின் வன் செயலால்
இடுகாடாய்த் தெரிந்திருக்கும்..

இதற்கு மேலும் எழுதினால்,
என்விழி நீர் வடிந்தே
என் எழுத்து மறைந்துவிடும்..

மண்டியிட்டுக் கேட்கின்றோம் 
மன்னித்து விடும் ஐயா..!

கவிதையாக்கம்: மயூ அருண்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஆமாம் அந்த நேரத்தில் அவர்கள் அப்படி கூறியது உண்மை। தினேஷ் இப்போது அடக்கி வாசிப்பதட்கு காரணம் உண்டு। பொது தேர்தல் வரப்போகின்றது, மனித உரிமைகள் கூடடம் நடக்கப்போகின்றது எனவே இவர்களை கவனமாக கையாள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது। சோழியன் குடுமி சும்மா ஆடாது।
    • அரச அதிகாரிகள் நடுநிலைமையாக செயல்பட்டால் பாதிப்புக்குள்ளாக வேண்டிய அவசியமில்லை। இருந்தாலும் நாட்டின் சாபக்கேடு அரசியல் கட்சி , ஆளும் கட்சி சார்பாக செய்யல்படவேண்டி உள்ளது। எனவே இது சம்பந்தமாக கட்சி சார்பாக வேலை செய்பவர்களுக்கு எதிராக சடடநடவடிக்கை எடுக்கவும் , நீதிமன்றத்தை நாடவும் இருக்கிறதான சடடத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்। இருந்தாலும் ரஞ்சன் லீக் மூலமாக நீதிமன்றங்களில் இருந்த நபிக்கையும் இல்லாமல் போய் விட்ட்து। எனவே நடைமுறை சிக்கல்கள் இருக்கவே செய்யும்।மக்களும் அதனுடன் ஒத்துப்போக வேண்டியதுதான்। கோத்தபாய சடடம் ஒழுக்கத்தில் தீவிரமாக இருப்பதால் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்।  
    • யார்...மடையர்கள்? ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை" மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. . வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது. வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும். மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம். மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா? எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா? இனி யாரையாவது, மடையா.. என்று திட்ட முன் யோசிக்க வேண்டியது தான்..... படித்ததில் பிடித்தது.