Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எழுந்து வா மகளே எழுந்து வா-அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்து வா மகளே எழுந்து வா

அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்

நீண்ட நேரமாக தூங்குகிறாயே எழுந்து வா
கொஞ்சம் நீ தாமதமாக எழுந்தாலும் அம்மாவும் அப்பாவும் துடிதுடித்து விடுவோமே இன்று மட்டுமேன் நீண்டதோர் நேரம் தூங்குகிறாய்.
நீ தடக்கி விழுந்தால் கூட இதயம் உடைந்து விடுவாளே அம்மா நீ எப்படி விழுந்தாய் உடனே எழுந்து வா மகளே எழுந்து வா,
உனக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வாங்கி தாறேன் பால் மிட்டாய் வாங்கித் தாறேன் எழுந்து வா மகளே எழுந்து வா.
உனக்குப் பிடித்த பட்டர் சிக்கன் சாப்பிடலாம் பாம்பே ஸ்வீட் சாப்பிடலாம் எழுந்து வா மகளே எழுந்து வா.
நீ கேட்ட பாபி பொம்மை வாங்கித்தருகிறேன் குரங்கு பொம்மை வாங்கித்தருகிறேன் எழுந்து வா மகளே எழுந்து வா
பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் காலிமுகத்திடலில் பட்டம் விடுவோம் என்று கேட்டாயே இப்போதே எழுந்துவா நாங்கள் சென்று பட்டம் விடுவோம்.
தாமரை கோபுரத்தில் எப்போது ஏறுவேன் என்று கேட்டாயே இப்போதே எழுந்து வா நாங்கள் தாமரைக் கோபுரத்தை ஏறிடுவோம்.
சுற்றுலா போவோமா ஹோட்டலிலேயே தங்குவோமா என்று கேட்டாயே இப்போதே போகலாம் எழுந்து வா மகளே எழுந்து வா
அம்மாவை அதிகம் பிடிக்குமா அப்பாவை அதிகம் பிடிக்கும் என்று கேட்டால் அப்பாவை தான் பிடிக்கும் என்பாயே அப்பாவை விட உனக்கு யாரைப் பிடிக்கும் என்றால் இயேசப்பாவை பிடிக்கும் என்று கூறுவாயே எழுந்து வா மகளே எழுந்து வா. அப்பா கண்டிக்கும் போதெல்லாம் இயேசப்பாவிடம் முறையிடப் போகிறேன் என்று சொல்வாயே அப்பா உன்னை இனிமேல் கண்டிக்கவே மாட்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா.
காலையில் கூட இயேசப்பாவை பார்க்கப்போகிறேன் என்று தானே ஆவலுடன் ஓடி வந்தாய் என்ன நடந்தது எழும்பாமல் தூங்குகிறாய் எழுந்து வா மகளே எழுந்து வா.
அம்மாவையும் அப்பாவையும் உதைத்து உதைத்து தூங்குவாய் இன்று மட்டுமேன் அசையாமல் உதைக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். எழுந்து வா மகளே எழுந்து வா.
வீட்டுக்குப் போவோம் எழுந்து வா அப்பா மேலே குதிரை விளையாடலாம் அழகான பொம்மை விளையாடலாம் அப்பிளிலே கேம் விளையாடலாம் ஆன்லைனில் பாட்டு கேட்கலாம் எழுந்து வா மகளே எழுந்து வா.
மகாராணியாகவல்லா நான் கற்பனை செய்தேன் மகுடம் சூட்டி பார்க்கவல்லா நான் கற்பனை செய்தேன்.
அப்பா என்ன கஷ்டங்கள் பட்டாலும் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா
உயர்ந்த நிலையை அடைவாய் என்றும் உத்தமியாய் வாழ்வாய் என்றும் நித்தநித்தம் கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா
பட்டங்கள் பல பெறுவாய் பாரினில் சேவை செய்வாய் என நித்தம் நான் கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா
கடைகளுக்குச் சென்றால் காணுபவை எல்லாம் உனக்கு பொருந்தும் என்று கற்பனை செய்து பார்த்தேன் அத்தனையும் உனக்கு வாங்க வேண்டும் என்று கொள்ளைகொள்ளும் ஆசையினை தேக்கி வைத்திருப்பேன். திருமணச் சடங்குகளில் அப்பாவின் கையைப் பிடித்து கம்பீரமாக நடந்து வரும் மணமகளை காணும்போதெல்லாம் நீ எப்பொழுது என் கையைப் பிடித்து வரப்போகிறாய் என்று கனவு கண்டு கொண்டே இருப்பேன் நீ மகள் அல்ல தாயானாய் நாளை என் பேரப் பிள்ளைகளுக்கு தாயாகவும் இருப்பாய் என்று எத்தனை கனவுகள் கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா.
பக்கத்துவீட்டு நண்பிகளும் பாடசாலை நண்பிகளும் எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன். பால்கார மாமாவும் பணிஸ்கார மாமாவும் காலையில் எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் எழுந்து வா மகளே எழுந்து வா. உன் படுக்கை வெறுமை ஆகப்போகிறது உன் பள்ளிக்கூடப் புத்தகங்களில் அங்கங்கே கிடக்கின்றன நீ ஓடியாடி விளையாடிய இடம் எல்லாம் வெறுமையாகிவிடப்போகிறது எழுந்து வா மகளே எழுந்து வா
எங்கள் வீட்டுக்கு விளக்கேற்ற வந்த தேவதையே எழுந்து வா விரைவில் எழுந்து வா. வீடு வெறுமையாகப் போகிறது விளக்கு வைக்க யாரும் இல்லை எழுந்து வா மகளே எழுந்து வா.
நான் இத்தனை கூறியும் எழும்பாமல் இருக்கிறாயே உனக்குப் பிடித்த இயேசப்பா உடன் சென்று விட்டாயா அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் யாருடன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் அப்பா அம்மாவை நினைத்து விடவில்லையா. நானும் வருகிறேன் விரைவில் உன்னுடன் நானும் வருகிறேன்.

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாபர் மசூதி இடிப்பு: விடுதலைக்கு நீதிமன்றம் சொன்ன காரணங்கள்! மின்னம்பலம்   28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 30) தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேர் மீது கிரிமினல் சதி, பகைமையை ஊக்குவித்தல், பேச்சின் மூலம் ஒரு செயலை செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சிபிஐ முன்வைத்தது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு என்பது தன்னிச்சையாக நடைபெற்றது, அது முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்றும், அதன் பின்னால் எந்த கிரிமினல் சதியும் இல்லை எனவும் தனது 2000 பக்க தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், “குவிமாடம் மீது ஏறியவர்கள், மசூதியை இடித்தவர்கள் சமூக விரோத சக்திகள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது கண்டறியப்படவில்லை. உண்மையில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் இடித்த கும்பலைத் தடுக்க முயன்றனர். அவர்களை இடிப்பதற்கு தூண்டவில்லை” என்று கூறியுள்ளார்.   அசோக் சிங்கால் மற்றும் பிற சங் பரிவார் தலைவர்கள் ராம் லல்லா சிலைகள் உள்ளே இருந்ததால் மசூதியை இடிப்பதிலிருந்து காப்பாற்றவே விரும்பியதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, “டிசம்பர் 6 ஆம் தேதி எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்று உள்ளூர் உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறது. ஆனால், அது கவனிக்கப்படாமல் விடப்பட்டது” என்று கூறினார். பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னதாக வினய் கட்டியாரின் வீட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அங்கு கட்டமைப்பை இடிப்பதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பது ஆதாரமற்றது எனக் குறிப்பிட்ட நீதிபதி, “கூட்டத்தின் வீடியோ ஆதாரமாக வழங்கப்பட்டது. எந்தவொரு சதித்திட்டமும் நடந்ததாக வீடியோ சான்றுகள் நிரூபிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ அளித்த ஆடியோ, வீடியோ ஆகியவற்றின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. வீடியோ கேசட்டுகள் சீல் வைக்கப்படவில்லை மற்றும் வீடியோக்கள் கூட தெளிவாக இல்லை. ஆடியோவில் இருக்கும் உரைகள் தெளிவாக கேட்கவில்லை” என்றும் குறிப்பிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி. “இதுதொடர்பான புகைப்படங்களின் ஒரிஜினல் நெகட்டிவ்களை சமர்பிக்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ நெகட்டிவை சமர்பிக்கவில்லை. மேலும் வீடியோ பதிவுகள் புனையப்பட்டு சிதைக்கப்பட்டன. 65 ஆதாரச் சட்டத்தின் விதிகளை சிபிஐ பின்பற்றவில்லை, அதனால்தான் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர் "என்று சாக்ஷி மகாராஜின் வழக்கறிஞர் பிரசாந்த் சிங் அடல் கூறினார்.   https://minnambalam.com/politics/2020/09/30/32/babri-mosque-demolition-case-all-acquitted-key-points-of-verdict
    • குருக்கள் ** விட்டால் தப்பில்லை, யாரும் கேட்கவும் கூடாது 😜
    • அதை நான் சொல்லவில்லை  துல்பனே ஒருதடவை தனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை என்று சொன்ன ஞாபகம்.  இணையவன் மற்றும் நிழலி கூட ஒரு மதத்தை மட்டும் சாடியவர்கள் தானே 😁
    • அப்படியென்றால் ஏன்  ஒரு குறிப்பிட்ட மதத்தை  மட்டுமே விமர்சிக்கிறார்??
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.