Jump to content

Recommended Posts

சந்தேகத்துக்கு இடமான பொதிகள்  மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர்.

பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இது தொடர்பில் தெரிவிக்கையில்,

சந்தேகத்துக்கு இடமான பொதி, மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் கிடைத்ததும் முதலில் அங்கு வரும் அதிரடிப் படையினர் அப்பகுதியில் இருந்து முதலில் அனைத்து பொது மக்களையும் அப்புறப்படுத்துவர். பின்னர் எக்ஸ் ரே கதிர்வீச்சு தொழில்னுட்பத்தை பயன்படுத்தி அந்த சந்தேகத்துக்கிடமான பொதியை ஆராய்வர். 

அதன் பின்னர் அப்பொதியை திறக்க  Detonation எனும் முறையை பயன்படுத்துவர். இதன்போது அது வெடிப்புச் சத்தம் போன்ற சத்தத்தை தோற்றுவித்து  திறந்துகொள்ளும். 

D45MSbbU0AAp75q.jpg

அதன்பின்னர் சோதனைகள் இடம்பெறும். அந்த சத்தத்தையே மக்கள் குண்டு வெடிப்பு என நினைக்கின்ரனர்.' என்றார்.

சுற்றியுள்ள உயிர்களுக்கும் அதனை சோதனையிட அனுப்பப்படுவோருக்கும் உயிர் அச்சுறுத்தலாய் விளங்கும் சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டால், அதிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற இராணுவ அதிகாரிகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே Controlled Explosion (கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு ) அல்லது Detonation (வெடிக்கச்செய்யும் அதிர்வேட்டு) என அழைக்கப்படுவதாக இராணுவம் குறிப்பிடுகின்றது. 

எனினும், Controlled Explosion அல்லது Detonation முன்னெடுக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்களாய் அர்த்தப்படாது.

அச்சுறுத்தல் விடுக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படும் பட்சத்தில், அதிகாரிகளால் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை தந்திரோபாயமே Controlled Explosion அல்லது Detonation எனப்படும்.

http://www.virakesari.lk/article/54610

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விமானத்திலிருந்து போடும் குண்டுகளும் அப்படித்தான்....மக்கள் இருந்தால் வெடிக்காது ஆயுதங்களுடன் யாராவது நடமாடினால் வெடித்து அந்த மக்களையே அழித்துவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவைட கெட்டித்தனத்தை இதில் காணலாம்.

https://www.bbc.co.uk/news/av/world-asia-48012576/sri-lanka-bomb-explodes-as-police-try-to-defuse-it

அதுபோக.. பொதுமக்களை குண்டு இருக்கு என்று சந்தேகிக்கும் இடத்துக்கு அருகில் அனுமதிக்கும்.. இந்த வெங்காய இராணுவத்தின் நோக்கம் என்ன..??1 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

நாங்கள் விமானத்திலிருந்து போடும் குண்டுகளும் அப்படித்தான்....மக்கள் இருந்தால் வெடிக்காது ஆயுதங்களுடன் யாராவது நடமாடினால் வெடித்து அந்த மக்களையே அழித்துவிடும்

ஆயுதங்கள்?  யூ மீன் உலக்கை  or கொட்டன்..:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.