Jump to content

ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Thamarai.k said:

SHRIMP WITH MUSHROOM CHILLY FRY/இறால் காளான் சில்லி பிரை....

இந்த வீடியோவில் இறால் ,காளன், குடை மிளகாய் போன்ற பொருட்களை கொண்டு சைனீஸ் முறைப்படி ஒரு இறால் காளான் சில்லி பிரை எப்படி செய்வது என்பதை காட்டியுள்ளேன் .இது குறைந்த நேரத்தில் செய்யக் கூடியது .செய்து பார்த்து கருத்துக்களை  சொல்லுங்கள் .......

 

நன்றி......

வணக்கம் .....

இணைப்புக்கு நன்றி.
பார்க்க நல்லாத் தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

கருத்துக்களுக்கு நன்றி .....

 HOW TO MAKE  DATE CAKE.

இந்த  காணொளியில் நான்  date cake  எப்படி இலகுவாக செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .குழந்தைகள் இதை விரும்பி உண்பார்கள் .செய்து  பார்த்து  உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Thamarai.k said:

கருத்துக்களுக்கு நன்றி .....

 HOW TO MAKE  DATE CAKE.

இந்த  காணொளியில் நான்  date cake  எப்படி இலகுவாக செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .குழந்தைகள் இதை விரும்பி உண்பார்கள் .செய்து  பார்த்து  உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .

 

பேரீச்சம்பள கேக் செய்வும்... இலகுவான முறையை காட்டித் தந்த தாமரைக்கு, நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவை சுவையான இணைப்புகள் சகோதரி, பகிர்வுக்கு நன்றி.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ரெசிப்பி.

பந்தா இல்லாத, அசல் யாழ்ப்பாணத்து பேச்சுத்தமிழ்.

மைதா என்ற சொல்லு யாழ்ப்பாணத்தில் பாவனையில் இல்லை. கோதுமை மா அல்லது அமெரிக்கன் மா என்பார்கள்.

அநேகமாக இவர் தமிழகத்தில் இருந்திருக்கலாம் அல்லது தமிழகத்து சமையல் வீடியோக்களை பார்த்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

மைதா என்ற சொல்லு யாழ்ப்பாணத்தில் பாவனையில் இல்லை. கோதுமை மா அல்லது அமெரிக்கன் மா என்பார்கள்.

அது தான் நானும் யோசித்தேன்.

செய்முறை இணைப்புக்கு நன்றி தாமரை.

Link to comment
Share on other sites

கருத்துக்கள் தெருவித்த தமிழ்சிறி ,சுவி ,நாத முனி ,ஈழப்பிரியன்  எல்லோருக்கும் எனது நன்றி .உடனுக்குடன் 

கருத்துக்களுக்கு பதில்  தெரிவிக்க முடியவில்லை மன்னிக்கவும் .

 உண்மைதான் நான் சில வருடங்கள் இந்தியாவில் வசித்திருக்கிறேன் . மைதா என்பதன் விளக்கம் பின்னர் தருகின்றேன் .

Link to comment
Share on other sites

HOW TO MAKE FRENCH TOAST! EASY RECIPE.

இந்த கானொளியில் இலகுவான முறையில் எப்படி ஒரு பிரெஞ்ச் ரோஸ்ட் செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .காணொளியை முழுமையாக பாருங்கள் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்பார்கள் . இலகுவாக செய்யக்கூடியது .  செய்து பாருங்கள் .அத்துடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .

நன்றி ....

 

Link to comment
Share on other sites

இப்படி  முட்டைப் பொரியல்  செய்து பாருங்கள் . முட்டைக் கலக்கி 

சோளம்  ,வெங்காயம் ,மிளகாய் ,மிளகு ,சீரகம் ,சுக்கு பொடி,வெங்காயதாள்  இவை எல்லாம் சேர்த்து எவ்வாறு ஒரு  முட்டைப்பொரியல்  (கலக்கி) செய்வது என்பதை இந்த காணொளியில் காட்டி இருக்கிறேன் குழந்தைகளுக்கும்  பெரியவர்களுக்கும் ஏற்றபடி இரண்டு விதமாக செய்து காட்டி இருக்கிறேன் .செய்து பாருங்கள் உடனேயே  முட்டைப்பொரியல் காலியாகிவிடும்  .நீங்களும் செய்து ,சுவையுங்கள் . கருத்துக்களை பகிருங்கள் .சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் ...... நன்றி  வணக்கம் .....

 

 

Link to comment
Share on other sites

இலங்கை கீரைப் பிட்டு/இலங்கை கீரைப் புட்டு ./

இந்த வீடியோவில் எப்படி ஒரு கீரைப்பிட்டு  செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் . இலங்கையில் பொதுவாக பிட்டு செய்வார்கள் .கீரைப்பிட்டும் பலரும் செய்தாலும் பலருக்கு எவ்வாறு  கீரைப்பிட்டு  செய்வது என்பது தெரியாது . அவர்களுக்கானது இந்த வீடியோ .
செய்து பாருங்கள் .நன்றி 

 

 

Link to comment
Share on other sites

POTATO ONION FRY IN OVEN/உருளைக்கிழங்கு வெங்காயப் பொரியல்....

எப்படி ஓவனில் உருளைக்கிழங்கு,வெங்காயம் ,மசாலா சேர்த்து ஒரு சுவையான பொரியல் அல்லது வறுவல் செய்வது என்பதை இந்த காணொளி விளக்குகிறது .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பொரியலை சுவைத்து சாப்பிடுவார்கள் .செய்து பாருங்கள் . கானொளியில் தெளிவாக செய்முறை காட்டி இருக்கிறேன் .காணொளியை முழுவதும் பாருங்கள் .கருத்துக்களை பகிருங்கள் ....... நன்றி 

 

 

 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண முறையில் மீன் சரக்கு கறி / மீன் பத்திய கறி/FISH SARAKKU CURRY

பிள்ளை பெற்ற பெண்களுக்கு கொடுக்கக் கூடிய ஒரு சரக்கு கறி எவ்வாறு மீன் சேர்த்து செய்வது என்பதை தெளிவாக இந்த காணொளி விளக்குகிறது .பிரசவித்த தாய் மார்கள் ,கர்ப்பிணிகள் ,வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள்  ,உறைப்பு சாப்பிட  முடியாதவர்களுக்கு இந்த பத்திய கறி கொடுக்கலாம் . ஒரா மீன் ,பாரை போன்ற மீன்கள்  இதற்கு உபயோகிக்கலாம் .ஒரு மாற்றத்துக்கு இடையிடையே எல்லோரும்  செய்து சாப்பிடலாம் .இந்த  மீன் பத்திய கறி ,செய்து பாருங்கள் அத்துடன் கருத்துக்களை கூறுங்கள் .

 

முட்டை பத்திய கறி எவ்வாறு செய்வது  என்பதை முன்னர் ஒரு பதிவில்  இணைத்திருந்தேன் .பார்க்காதவர்கள்  பாருங்கள் ...

Link to comment
Share on other sites

  • 3 months later...

HOW TO MAKE SALMON FISH FRY/ சல்மன் மீன் பொரியல்

ட அமெரிக்காவில் கிடைக்கும் சிவப்பு நிற சல்மன் மீனை எப்படி சத்துக்கள் இழக்காமல் குறைந்த அளவு ஒலிவ் எண்ணெயில் எப்படி பொரித்து எடுப்பது என்பதை இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறோம் .சமன் என்றுதான் இதனை உச்சரிப்பார்கள் என்றாலும் உங்கள் புரிதலுக்காக சல்மன் என்றே இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறோம் .

நீங்களும் செய்து பாருங்கள் அத்துடன் உங்கள் சந்தேகங்களை கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .

 

 

Link to comment
Share on other sites

CHICKEN SWEET CORN SOUP/SWEET CORN CHICKEN SOUP/சிக்கன் சுவீட் கார்ன் சூப்

இந்த வீடியோ எவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டு ஒரு சுவையான CHICKEN SWEET CORN SOUP செய்வது என்பதை விளக்குகின்றது .பெரியவர்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த உணவை செய்து உங்கள் உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிரவும். நன்றி

 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

CHICKEN CAPSICUM STIR FRY IN PAN /சிக்கன் குடைமிளகாய் பிரை /சிக்கன் குடைமிளகாய் வறுவல்.

இந்த வீடியோவில் சிக்கன் ,குடைமிளகாய் கொண்டு எப்படி ஒரு இலகுவான பிரை செய்வது என்பதை விளக்கி உள்ளோம் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த உணவை செய்து நீங்களும் அசத்தலாம் .செய்து பாருங்கள் .....எனது காணொளிகள் பிடித்திருந்தால் எனது சனலை சப்ஸ்கிரைப்  செய்யவும் .அத்துடன்  பிடித்த வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .சந்தேகங்கள் இருந்தால்  தயக்கம் இன்றி கேளுங்கள் .
நன்றி 

 

Link to comment
Share on other sites

மொறுமொறுப்பான பட்டர் முறுக்கு சுலபமாக ,விரைவாக செய்யும் முறை .

இந்த கானொளியில் எப்படி ஒரு பட்டர் சேர்த்த முறுக்கு எளிய சுவையான முறையில் செய்வது என்பதை சொல்லி இருக்கிறோம் .100 % மொறுமொறுப்பான ,சுவையான ஒரு முறுக்கு செய்முறை இது .அத்துடன் நல்ல வெள்ளை நிறத்தில் முறுக்கு வரும்படியான செய்முறை .அளவுகள் பற்றி எந்த கவலையும் இன்றி யாவரும் இலகுவாக செய்யமுடிகிற ஒரு முறை இது

செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .எங்கள் காணொளிகள் பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிருங்கள் ,அத்துடன் எங்கள் சேனலை SUBSCRIBE பண்ணுங்கள் . நன்றி

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சுவையான வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி?

வாழைப் பழம் கொண்டு எவ்வாறு ஒரு சுவையான பணியாரம் செய்வது என்பதை இந்த காணொளி விளக்குகிறது .இந்த பலகாரம் இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்றது .இலகுவான செய்முறை இதில் கூறப்பட்டுள்ளது . நன்றி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி, தாமரை.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்சிறி .

CHRISTMAS TURKEY WITH GRAVY IN TAMIL/ வான் கோழி வறுவல் /

இந்த வீடியோவில் எப்படி ஒரு வான் கோழி சமைப்பது என்று காட்டி இருக்கிறோம் .வீடியோவை முழுவதும் பாருங்கள் அபோதுதான் நீங்களும் இப்படி சுவையான வான் கோழியை சமைக்க முடியும் .வான் கோழி சுவையாக சமைப்பதற்கு சேர்க்கும் பொருட்களின் அளவுகள் மிகவும் முக்கியம் என்பதுடன் பல மணி நேரங்கள் சமைக்க வேண்டி இருக்கும் . எனவே இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள் .அத்துடன் உங்கள் கருத்துக்களை ,சந்தேகங்களை  தெரிவியுங்கள் .செய்து பாருங்கள் இந்த விடுமுறை காலங்களை சந்தோசமாக கொண்டாடுங்கள் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது சமையல் பக்கத்தை விரும்பி பார்ப்பதுண்டு சகோதரி. விளக்கமாகவும், இலகுவாகவும் சொல்லித்தருகிறீர்கள். நன்றி சகோதரி....!

வான்கோழியை பார்த்ததும் mr .bean தான் நினைவில் வருகிறார்.....!   😂

Image associée

Link to comment
Share on other sites

துவரம் பருப்பு ரசம் செய்வது எப்படி? /THUVARAM PARUPPU RASAM/paruppu rasam

 

 

எங்களது உணவில் பெரும் பங்கு வகிப்பது ரசம் .இந்த வீடியோவில் எவ்வாறு துவரம் பருப்பு ,உள்ளி ,மிளகு சேர்த்து சுவையான ரசம் செய்வது என்பதை விளக்கி உள்ளோம் .நீங்களும் செய்து பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள் .நன்றி .
 

 

நன்றி சுவி 

உங்களை கருத்துக்கு நன்றி . கருத்துக்கள் எங்களை ஊக்க  படுத்தும் நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Thamarai.k said:

எங்களது உணவில் பெரும் பங்கு வகிப்பது ரசம் .இந்த வீடியோவில் எவ்வாறு துவரம் பருப்பு ,உள்ளி ,மிளகு சேர்த்து சுவையான ரசம் செய்வது என்பதை விளக்கி உள்ளோம் .நீங்களும் செய்து பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள் .நன்றி .

செய்முறைக்கும் இணைப்புக்கும் நன்றி தாமரை.

எனக்கு மிகவும் பிடித்த ரசம்.

உடம்பு கொஞ்சம் சுகயீனமான நேரங்களில் ரசம் செய்து குடிக்க மிகவும் தென்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறைந்த எண்ணையில் நெத்தலி மீன் பொரிப்பது எப்படி ? NETHALI FISH FRY /NETHTHALI MEEN PORIYAL/

குறைந்த எண்ணையில் எவ்வாறு நெத்தலி மீன் பொரிப்பது எவ்வாறு என்று இந்த வீடியோவில் காட்டியுள்ளேன் .நீங்களும் இந்த சுவையான உணவை செய்து பாருங்கள் .கருத்துக்களை தெரிவியுங்கள் .

 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

CURD RICE JAFFNA TEMPLE STYLE/யாழ்ப்பாண கோயில் குத்தரிசி தயிர் சாதம்.

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.